பாஸ்வேர்டை பாதுகாக்க பொய் சொல்லுங்கள்!

பொய் சொல்ல சொல்வது நல்ல அறிவுரை அல்ல; ஆனால் பாஸ்வேர்டு விஷ‌யத்தில் பாதுகாப்பிற்காக நீங்கள் பொய் சொல்ல வேண்டும் என்று நிபுணகள் சொல்கின்றனர்.அதாவது பொய்யான பதிலை சொல்லுங்கள் என்கின்றனர்.

எப்படி? ஏன்? பார்க்கலாம்!.

புதிதாக இமெயில் முகவரி கணக்கை துவக்கும் போதோ அல்லது வேறு இணைய சேவையில் பதிவு செய்யும் போதோ பயனாளர் பெயர் மற்றும் பாஸ்வேர்டு உள்ளிட்டவற்றை தேர்வு செய்து கொள்ள‌ வேண்டும்.அப்படியே உங்களிடம் சில கேள்விகள் கேட்கப்படும்.உங்கள் பிறந்த தேதி என்ன?, உங்களூக்கு பிடித்த உணவு என்ன? உங்கள் மனைவி பெயர் என்ன? என்பது போல இந்த கேள்விகள் அமைந்திருக்கும். ஒரு வேளை உங்கள் பாஸ்வேர்டு உங்களுக்கே மறந்து போனால் அவற்றை மீட்டெடுக்க இந்த கேள்வி பதில் உதவும்.அதாவது கேள்விக்கான பதிலை சொல்வதன் மூலம் அந்த முகவரி கணக்கிறகு உரியவர் நீங்கள் தான் என்று நிருபிக்கலாம்.

நோக்கம் நல்லது தான்,என்பதால் நீங்களும் இத்தகைய கேள்விகளுக்கு உரிய பதிலை சமர்பித்து விடுவீர்கள்.ஆனால் இது போன்ற கேள்விகளுக்கு உண்மையான பதிலை சொல்லக்கூடாது என்கின்றனர்.

எனெனில்  பாஸ்வேர்டை களவாட முயற்சிப்பவர்கள் அதற்காக பல வழிகளை கையாள்வார்கள். அவற்றில் ஒன்று உங்களை பற்றி சிறிது ஆய்வு செய்து உங்கல் தனிப்பட்ட விவரங்களை சேகரித்து அதன் மூலம் இந்த கேள்விகளுக்கு விடையளித்து உங்கள் கணக்கினுல் நுழைய வாய்ப்பிருக்கிறது.

எப்படியும் நீங்கள் பேஸ்புக் போன்ற தளங்களில் தனிப்பட்ட தகவல்களை பகிர்ந்து கொன்டிருப்பீர்கள் என்பதால் இது சாத்தியமே. எனவே தான் பாஸ்வேர்டு மீட்புக்காக கேட்கப்படும் கேள்விகளுக்கு உங்களைப்பற்றிய உண்மையான தகவல்களை தெரிவிக்காமல் பொய்யான தகவல்களை தாருங்கள் என்கின்றனர். அந்த தகவல்கள் நினைவில் இருக்குமாறு மட்டும் பார்த்து கொண்டால் போதுமானது.அதிலும் குறிப்பாக பயனாளிகள் தங்களுக்கான நினைவூட்டல் கேள்விகளை உருவாக்கி கொள்ள வாய்ப்பு தராமல் பொதுவான கேள்விகளை முன்வைக்கும் தளங்களில் இதை கட்டாயம் கடைபிடிக்க வேண்டும் என்கின்றனர்.

சில தளங்கள் உங்களுக்கான கேள்வி பதிலை நீங்களே உருவாக்கி கொள்ள வாய்ப்பு தருகின்றன.அவற்றிலும் உங்களை பற்றிய உண்மையான தகவலை பகிர்ந்து கொள்ள அவசியமில்லாத கேள்வி பதிலை உருவாக்கி கொள்ள வேண்டும் என்கின்றனர். உங்களை பற்றி எவராலும் எளிதில் ஊகிக்க முடியாத தகவலை பதிலாக கொண்டுள்ள கேள்விகள் கச்சிதம் என்று ஆலோச‌னை சொல்கின்றனர்.

உதாரணத்திற்கு, உங்களின் திருமண‌ நாள் , செல்லப்பிராணியின் பெயர் போன்றவ‌ற்றை எல்லாம் பதிலாக இல்லாமல், பத்தவது வகுப்பில் நீங்கள் பெற்ற மதிப்பெண்ணை அல்லது 3 வது படிக்கும் போது உங்கள் பக்கத்து இருக்கை தோழன் பெயரையோ பதிலாக கொண்ட கேள்வியை உருவாக்கி கொள்ளலாம்.இந்த தக்வல் உங்களுக்கு நன்றாக நினைவிருக்கும்.ஆனால் மற்றவர்களால கொஞ்சம் கூட ஊகிக்க முடியாது. ஒரு நல்ல பாஸ்வேர்டின் லட்சனமும் அது தானே!.

 

Advertisements

மறுமொழியொன்றை இடுங்கள்

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  மாற்று )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out /  மாற்று )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  மாற்று )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  மாற்று )

w

Connecting to %s