பாஸ்வேர்டு; தவிர்க்க வேண்டிய பத்து வழிகள்.

1passfault-350px

உங்கள் பாஸ்வேர்டு திருடப்பட முடியாத வகையில் இருக்க வேண்டும் என்றால் அவற்றை உருவாக்கும் போதே கொஞ்சம் கவனமாக இருக்க வேண்டும்.நல்ல பாஸ்வேர்டை உருவாக்குவதற்காக பின்பற்ற வேண்டிய விஷ‌யங்கள் அநேகம் இருக்கின்றன.அதே போலவே பாஸ்வேர்டு உருவாக்கும் போது செய்யக்கூடாத விஷய‌ங்கள் என்று சில இருக்கின்றன.

இப்படி தவிர்க்க வேண்டியவ‌ற்றை செய்தாலே பாஸ்வேர்டின் பாதுகாப்பு 50 சத்வீதம் உறுதியாகிவிடும். புதிய பாஸ்வேர்டை அமைக்கும் போது பொதுவாக பலரும் பின்பற்றும் நடைமுறைகள் என்று சில கண்டறியப்பட்டுள்ளன. அநேகமாக அவற்றை தான் எல்லோரும் மேற்கொள்கின்றனர்.இந்த விஷயம் ஆய்வாளர்களுக்கும் தெரியும் . திருட்டுப்பயல்களுக்கும் தெரியும்.ஆக, பாஸ்வேர்டை களவாட முயலும் போது இந்த தகவல்கள் அவர்களுக்கு ஆயுதமாக மாறிவிடும்.எப்படியும் நீங்கள் இந்த உத்திகளை வைத்து தான் பாஸ்வேர்டை உருவாக்கியிருப்பீர்கள் என்று யூகித்து பாஸ்வேர்டை யூகித்து வெற்றி பெற்றுவிடும் வாய்ப்பும் இருக்கிறது.

எனவே தான் பரவலாக பாஸ்வேர்டு உருவாக்க உல‌கம் முழுவதும் பயன்படுத்தப்படும் வழிகளை பின்பற்ற வேண்டாம் என்கின்றனர்.இவற்றில் பத்து வழிகளை உலகின் மோசமான ப‌த்து பாஸ்வேர்டாக கூகுல் பட்டியலிட்டுள்ளது.கூகுல் அப்ஸ் நடத்திய ஆய்வின் அடைப்படையில் வெளியிடப்பட்ட அந்த பத்து வழிகள் இதோ:

1:செல்லப்பிராணிகளின் பெயர்கள்.
2:திருமண நால் போன்ற முக்கிய நிகழ்வுகள்.
3;குடும்ப உறுப்பினரின் பிறந்த நாள்.
4;உங்கள் குழந்தையின் பெயர்.
5;குடும்ப உறுப்பினரின் பெயர்.
6:பிறந்த‌ ஊர்.
7:பிடித்த சுற்றுலாத்தளம்.
8:அபிமான விளையாட்டு குழு தொடர்பானவை.
9;வாழ்க்கைத்துணையின் பெயர்.
10:பாஸ்வேர்டு.
யோசித்து பாருங்கள், பாஸ்வேர்டு நினைவில் இருப்பதற்காக இவற்றில் ஒரு வழியை நீங்களும் நினைத்திருக்கலாம்.உலகம் முழுவதும் பலரும் இப்படி தான் நினைக்கின்றனர்.

பாஸ்வேர்டு இலக்கனம் என்ன அது தனித்தன்மையாக இருக்க வேண்டும் தானே. அப்படி என்றால் பொதுவான வழிகளை ஏன் பின்பற்ற வேன்டும்? எனவே புதிய பாஸ்வேர்டு உருவாக்கும் போது இந்த வழிகளை தவிர்த்து விடுங்கள். ஏற்கனவே உருவாக்கிய பாஸ்வேர்டுகள் இப்படி உருவாக்கப்பட்டவை என்றால உடனே மாற்றுங்கள்.எப்படியும் உங்கள் பாஸ்வேர்டை அடிக்கடி மாற்றிக்கொண்டிருப்பது நல்லது தான் என்கின்ற‌னர்.

‍‍‍‍‍‍‍‍‍‍‍

பாதுகாப்பான பாஸ்வேர்டு உருவாக்க: http://www.techlicious.com/how-to/the-easy-way-to-make-strong-passwords/

Advertisements

2 responses to “பாஸ்வேர்டு; தவிர்க்க வேண்டிய பத்து வழிகள்.

  1. அன்பின் சிம்மன் – அரிய பயனுள்ள தகவல் – நாம் மாற்ற வேண்டும் – பலப்பல ஆலோசனைகள் கடவுச் சொல் அமைப்பதெப்படி என்பதைப் பற்றி – தங்களீன் வெவ்வேறு பதிவுகளின் மூலம் அறிந்தேன் – மிக்க நன்றி – நல்வாழ்த்துகள் – நட்புடன் சீனா

மறுமொழியொன்றை இடுங்கள்

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  மாற்று )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out /  மாற்று )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  மாற்று )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  மாற்று )

w

Connecting to %s