இதயத்துடிப்பு பாஸ்வேர்டாகும் அதிசயம்.

heartbeat

எதிர்காலத்தில் பாஸ்வேர்டு எந்த வடிவத்தில் வேண்டுமானாலும் இருக்கலாம். உங்கள் கை ரேகை பாஸ்வேர்டாகலாம்.முக குறிப்புகள் கடவுச்சொல்லாகலாம்.பாஸ்வேர்டாக ஒரு மாத்திரியை முழுங்கி கொள்ளலாம். இன்னும் என்ன என்ன ஆச்சர்யங்கள் வேண்டுமானால் நிகழலாம். இவற்றை சாத்தியமாக்குவதற்கான ஆய்வுகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. பல்வேறு நிடுவங்கள் சார்பில்,விஞ்ஞானிகள் சார்பில் என தனித்தனியே இந்த ஆய்வுகள் மேற்கொள்ளப்பட்டாலும் இவற்றுக்கு பொதுவான இலக்கு இருக்கறது. தற்போது நடைமுறையில் உள்ள பயனர்சொல் மற்றும் ரகசிய சொல் முறைக்கு மாற்றாக விளங்க கூடிய நம்பகமான பாஸ்வேர்டு முறையை உருவாக்குவது தான் அது.

எவ்வள‌வு தான் கவனமாக பாஸ்வேர்டுக்கான ரகசிய சொல்லை தேர்வு செய்தாலும் தாக்காளர்கள் அதை யூகித்து விடும் ஆபத்து இருப்பதே மாற்று பாஸ்வேர்டுக்கான தேடலை தீவிரமாக்கியுள்ளது. இந்த நோக்கில் நடைபெறும் பலவேறு ஆய்வுகளில் ஒன்று மனித இதயத்துடிப்பை பாஸ்வேர்டாக மாற்றும் முயற்சி.

தைவான் நாட்டை சேர்ந்த சுன் லியாக் லின்(Chun-Liang Lin  )  என்பவர் தலைமையிலான ஆய்வுக்குழு இந்த ஆய்வில் ஈடுபட்டுள்ளது. இந்த குழுவின் ஆய்வு ஒருவரது இதயத்துடிப்பை அவருகான டிஜிட்டல் உலக நுழைவுச்சீட்டாக அதாவது பாஸ்வேர்டாக மாற்ற முடியும் என நிருபிக்கும் வழிமுறையை உருவாக்கியுள்ளது.originalஇதற்கான ஆய்வுக்கட்டுரையும் சமர்பிக்கப்பட்டுள்ளது.

இதயத்துடிப்பு பாஸ்வேர்டாகும் என்பது ஆச்சர்யமளிக்கலாம். இதில் உண்மையில் ஆச்சர்யம் அளிக்க கூடியது நமது இதயத்தின் தனித்தன்மை தான். ஒருவரது கைரேகை தனித்தன்மையானது என கேள்விபட்டிருக்கிறோம் அல்லவா? அதே போல இதயத்துடிப்பும் தனித்தன்மை வாய்ந்தது.ஒருவரின் இதயத்துடிப்பு போல் இன்னொருவரின் இதயத்துடிப்பு இருக்காது என்ப‌து மட்டும் அல்ல உங்கள் இதயத்துடிப்பே ஒரு முறை கேட்டது போல் இன்னொரு முறை கேட்காது என்கின்றனர் விஞ்ஞானிகள்.அந்த அளவுக்கு இதயத்துடிப்பு தனித்தன்மையாது.

இதயத்துடிப்பின் இந்த முத்திரையை தான் பாஸ்வேர்டாக்க முடியும் என தைவான் குழு நம்புகிறது. சவோஸ் தியரி எனப்படும் கணித கோட்பாட்டின் அடிப்படையில் இதயத்துடிப்பின் ஆரம்பத்தையும் அதனடிப்படையில் உருவாகக்கூடிய எண்ணற்ற சாத்தியங்கள் குறிப்பிட்ட நபருக்கு மட்டுமே உரியது என்பதால் அந்த தன்மையை பாஸ்வேர்டாக மாற்றி கம்ப்யூட்டர் ஹார்ட்வேர் போன்றவற்றில் சேமித்து விடலாம். அதன் பிறகு கம்ப்யூட்டரை இயக்க முற்படும் போது கம்ப்யூட்டர் பயனாளியின் இதயத்துடிப்பை வைத்தே அவர் உரிய நபர் தானே என்று உணர்ந்து கொண்டு உள்ளே அனுமதிக்கும்.
எந்த அளவு நடைமுறை சாத்தியம் கொண்டது என்பது தெரியாவிட்டாலும் கோட்பாடு அளவில் மிகவும் நம்பிக்கையானது.

பாஸ்வேர்டு ஆய்வுகள் தொடரும்.

இணைப்புகள்: http://gizmodo.com/5884650/your-heartbeat-could-be-your-password

http://www.dvice.com/archives/2012/02/soon-your-heart.php

மறுமொழியொன்றை இடுங்கள்

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out / மாற்று )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out / மாற்று )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out / மாற்று )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out / மாற்று )

Connecting to %s