சற்றே விலகி நில்லேன் கர்சரே !

cursorகர்சர் படுத்தும் பாடு என்று புலம்பிய அனுபவம் உங்களுக்கு உண்டா?

கர்சர் என்ரால் மவுஸ் கர்சர்.

இணையத்தில் அதிகம் டைப் செய்யும் பழக்கம் கொண்டவர்கள் அடிக்கடி இப்படி புலம்ப நேரலாம்.

அதாவது டைப் செய்யும் போதெல்லாம் எந்த இடத்தில் டைப் செய்கிறோமோ சரியாக அந்த இடத்தில் மவுசின் கர்சர் கோடு போலவே கைகாட்டி கொண்டிருக்கும்.

சுட்டிக்காட்டுவது தான் இதன் நோக்கம் என்றாலும் டைப் செய்யும் போது மட்டும் இது இடையூறாக தோன்றலாம்.டைப் செய்த எழுத்து சரியானது தானா இல்லையா என்ற சந்தேகத்தை இது உண்டாக்கலாம்.சில நேரங்களில் பார்த்தால் தவறான எழுத்து போல தோன்றும் ஆனால் கர்சரை நகர்த்தி விட்டு கவனித்தால் எந்த பிழையும் இருக்காது.

இது தேவையில்லாத‌ இடையூறு மட்டும் அல்ல கவனச்சிதறலும் கூட!.அதிலும் தீவிர கவனம் கொண்டவர்களுக்கு இது மிகுந்த எரிச்சலை தரும்.

இது போன்ற நேரங்களில் தான் கர்சர் புலம்ப வைப்பதோடு சற்றே விலகியிறேன் பிள்ளாய் என்று நவீன நந்தனாராக கெஞ்ச வைக்கும்.

இதற்கு அழகான தீர்வாக‌ கர்சரை அப்படியே  ஓரங்கட்டி செல்லும் சேவை ஒன்று இருக்கிறது.

பார்க் கர்சர் அசைடு என்னும் அந்த சேவை மூலமாக டைப் செய்யும் போது கர்சர் இடையூறாக இல்லாத அளவுக்கு அதனை இணைய பக்கத்தின் ஏதாவது ஒரு மூளைக்கு நகர்த்தி சென்று விட இந்த சேவை உதவுகிறது.

இந்த சேவை மூலம் கரசரை நகர்த்த முடிவதோடு அது எந்த இடத்தில் நிற்க வேண்டும் என தீர்மானிக்கும் வசதியும் இருக்கிறது.(ஐந்து விதமான இடங்களில் நிறுத்தலாம்).அதோடு மீண்டும் கரசரை பழைய நிலைக்கு கொண்டு வர எத்தனை விசைகள் தேவை என்பதையும் தீர்மானித்து கொள்ளலாம்.

கர்சர் எவ்வளவு தொலைவில் இருக்க வேண்டும் என்றும் தீர்மானிக்கலாம்.எதையும் டவுண்லோடு செய்து இன்ஸ்டால் செய்யும் அவசிய‌ம் இல்லாமலே இதனை பயன்படுத்தலாம்.

சின்ன சேவை தான்.ஆனால் இணையத்தின் பயன்பாட்டை மேலும் மெருகேற்றும் சின்னஞ்சிறிய சேவை.

இந்த சேவைய உருவாக்கியிருப்பது கொல்கத்தாகாராரான அனில் குப்தா என்பவர்.

குப்தா இத்தகைய பயன் சார்ந்த சின்னஞ்சிறிய செயலிகளை உருவாக்குவதில் திறமையும் ஆர்வமும் மிக்கவராக இருக்கிறார்.

ஸ்டிக் எ நோட் உள்ளிட்ட வேறு பல செயலிகளையும் இவர் இணைய சேவைகளாக உருவாக்கியுள்ளார்.

ஸ்டிக் எ நோட் செயலி விண்டோஸ் கோப்புகளின் மீது குறிப்புகளை எழுதி ஓட்ட வைக்க உதவுகிறது.இந்த குறிப்பு சீட்டு அந்த கோப்பில் மட்டும் தான் காணப்படும்.குறிப்பின் பின்னணி நிறம் மற்றும் சுற்றுப்புற அலங்காரத்தை விருப்பத்திற்கேற்ப மாற்றிக்கொள்ளலாம்.

இதே போல ‘டெல் வென் டன்’ என்னும் செயலி பயன்பாட்டில் இருக்கும் புரோகிமாகள் எப்போது முடிவு பெறுகின்றன என்ப‌தை உணர்த்துகிறது.ஏதாவது டவுண்லோடு செய்வதில் ஈடுபட்டால் இந்த சேவையை கண்காணிக்க வைத்து விட்டு மற்ற வேலைகளை கவனிக்கலாம்.

பார்ஷியல் டவுன்லோடு செயலியும் டவுன்லோடு தொடர்பானது தான்.இந்த செயலி எந்த கோப்பையும் அதன் ஒரு பகுதியை மட்டுமே டவுன்லோடு செய்து முன்னோட்டம் பார்க்க கை கொடுக்கிறது.மிகப்பெரிய கோப்புகளை டவுன்லோடு செய்யும் போது அது தகுதியானது தானா என்பதை சோதித்து பார்க்க அதன் ஒரு பகுதியை மட்டும் டவுன்லோடு செய்து பார்த்து கொள்ளலாம்.

மற்றொரு செயலி வால்பேப்பர் மீது நமக்கு பிடித்த புகைப்படத்தை ஒட்ட வைப்பதற்கானது.(ஓவர்லேப் வால்பேப்பர்)

பிழைப்புக்காக பல புரோகிராம்களை உருவாக்கினாலும் ஆதம் திருப்திக்காக சின்னஞ்சிறிய புரொகிராம்களை ஓய்வு நேரத்தில் உருவாக்குவதில் இன்பம் காண்பதாகவும் இந்த புரோகிராம்கள் அன்றாட இணைய செயல்களை மேம்படுத்த உதவுவதாகவும் குப்தா குறிப்பிடுகிறார்.

 

இணையதள முகவரி;https://sites.google.com/site/aghappy/

Advertisements

2 responses to “சற்றே விலகி நில்லேன் கர்சரே !

    • நன்றி நண்பரே, நாமே கூட விருப்பமான வடிவில் கர்சர்களை வடிவமைத்து கொள்ளலாம் ,அதற்கும் இணைய சேவைகள் உள்ளன.

      அன்புடன் சிம்மன்

மறுமொழியொன்றை இடுங்கள்

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  மாற்று )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out /  மாற்று )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  மாற்று )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  மாற்று )

w

Connecting to %s