இலக்கண பிழையால் ஏற்படும் நன்மைகள்; பாஸ்வேர்டு ஆய்வில் தகவல்.

rexfeatures_1216695b

இலக்கண பிழையில்லாமல் எழுதுவது தான்
நல்லது.ஆனால் இலக்கண பிழையும் சில நேரங்களில் நல்லது தான் தெரியுமா? அது மட்டுமா,இலக்கண பிழை என்பது தனித்தன்மை வாய்ந்த‌து. உங்கள் இலக்கண பிழையை இன்னொருவர் உருவாக்க முடியாது என்று கூட சொல்லலாம்.

எதற்கு இந்த திடிர் வில்லங்கமான இலக்கண ஆராய்ச்சி? எல்லாம் பாஸ்வேர்டு பாதுகாப்பிற்காக தான்!. ஆம் பிழையான இலக்கணம் பாஸ்வேர்டுக்கு பாதுகாப்பு அரணாக அமையலாம் என்று தெரிய வந்துள்ளது.அதாவது இலக்கண பிழையோடு உருவாக்கப்படும் பாஸ்வேர்டு ஆபத்தில்லாதவை என்று ஆய்வு ஒன்று தெரிவிக்கிறது.

பாஸ்வேர்டில் உள்ள பிரச்சனையே தாக்காளர்கள் நினைத்தால் அவற்றை எளிதாகதிருடி விடலாம் என்பது தான். இப்படி பாஸ்வேர்டை யூகித்து கண்டுபிடிக்க ஏராளமான வழிகளை வைத்திருக்கின்றனர்.பாஸ்வேர்டுக்கு என்று சில எழுதப்படாத இலக்கணத்தை எல்லோரும் பின்பற்றுகின்றனர். பாஸ்வேர்டு எளிதில் நினைவில் கொள்ளத்தக்கதாக இருக்க வேண்டும் என்பதற்காக அதற்கு அடையாளமாக விளங்க கூடிய வகையில் பிறந்த நால், மனைவியின் பெயர் போன்ற தனிப்பட்ட விவரங்களை கொண்டே பாஸ்வேர்டை அமைக்கின்றனர்.

ஆக உங்கள் பாஸ்வேர்டை அறிய வேண்டும் என்றால் உங்களுடைய தனிப்பட்ட விவரங்களை தெரிந்து கொண்டு அவற்றை கொண்டு சாப்ட்வேர் மூலம் யூகித்தறியும் படலத்தை அரங்கேற்றினால் உங்கள் பாஸ்வேர்டு தாக்காளர் கையில்.

இப்படி தான் பாஸ்வேர்டு களவு போகின்றன.அதனால் தான் எளிதில் யூகிக்க கூடிய எந்த விவர‌த்தையும் பாஸ்வேர்டில் பயன்படுத்தாதீர்கள் என்கின்ற‌னர்.

பாஸ்வேர்டு என்ற பெயரிலேயே பாஸ்வேர்டு அமைப்பது முட்டாள்தனம் என்கின்ற‌னர்.இருந்தும் இது தான் உலகின் பிரபலமான பாஸ்வேர்டுகளில் ஒன்றாகவும் இருக்கிறது. இங்கு தான் இலக்கண பிழை வருகிறது. பாஸ்வேர்டை யூகிக்கும் தாக்காளர்கள் அவற்றில் உள்ள பொதுத்தன்மையை வழிகாட்டுதலாக கொள்கின்றனர்.அதாவது பாஸ்வேர்டு உருவாக்கப்படும் போது பின்பற்றப்படும் இலக்கணமே பாஸ்வேர்டு கண்டறியப்படவும் வழி செய்கிறது.

ஆனால் அதே பாஸ்வேர்டு இலக்கண‌ பிழை கொண்டதாக இருந்தால் தாக்காளர்களின் சாப்ட்வேரால் அதில் எந்த பொதுத்தன்மையையும் கண்டுபிடிக்க முடியாது. எனவே பாஸ்வேர்டு பாதுகாப்பாக இருக்கும்.
அமெரிக்காவில் உள்ள காரனகி மெலன் பலகலையில் பணியாற்றும் அஸ்வினி குமார் தலைமையிலான ஆய்வுக்குழு ஆய்வு நடத்தி இதை நிருபித்துள்ளது.

இந்த குழு நடத்திய ஆய்வில் ,பாஸ்வேர்டை யூகிக்க பயன்படுத்தப்படும் கிராகிங் என்ற முறையில் இலக்கண சுத்தமாக உருவாக்கப்பட்டுள்ள பாச்வேர்டுகள் எளிதாக கண்டுபிடிக்கப்படக்கூடிய்வை என தெரிய வந்துள்ளது.இடையே எண்கள் ,பெரிய எழுத்து போன்றவ்ற்றை கொன்டு பாஸ்வேர்டை சிக்கலானதாக ஆக்கியிருந்தாலும் கூட அவற்றில் உள்ள இலக்கண தன்மையை கொண்டு கிராகிங் சாப்ட்வேர்கள் வெற்றி பெற்று விடுகின்றன.

ஆனால் அதே பாஸ்வேர்டு இலக்கண சுத்தமாக இல்லாவிட்டால் இந்த சாப்ட்வேர் அவற்ரை யூகிக்க முடியாமல் தோற்றுள்ளன. யூகிப்பதற்கான பொதுத்தன்மை எதுவும் இல்லாததே இதற்கு கார்ண. எனவே தான் நல்ல பாஸ்வேர்டுக்கான இலக்கணத்தில் இலக்கண பிழையயும் சேர்த்து கொள்ள சொல்கிறது இந்த குழு.

அதிலும் பாஸ்வேர்டாக சொற்றோட்ரை வைத்து கொள்ளும் போது அது இலக்கண சுத்தமாக இல்லாமல் இருப்பது தான் அதற்கு பாதுகாப்பு.ஆகவே இலக்கண பிழை செய்யுங்கள் பாஸ்வேர்டில் மட்டும்.

பாஸ்வேர்டு ஆய்வு குறித்த செய்திக்கு: http://www.newscientist.com/blogs/onepercent/2013/01/bad-grammar-make-good-password.html

பாஸ்வேர்டு ஆய்வு குறித்த அறிய: http://www.cs.cmu.edu/~agrao/

Advertisements

One response to “இலக்கண பிழையால் ஏற்படும் நன்மைகள்; பாஸ்வேர்டு ஆய்வில் தகவல்.

  1. அன்பின் சிம்மன் – இலக்கணப் பிழைகளை ஏற்படுத்தி கடவுச் சொற்களை உருவாக்குவது எளிது – ஆனால் நினைவில் கொள்வது கடினமில்லையா – பழக வேண்டும் – நினைவாற்றலைச் செயல்படுத்தி திறமையை மெம்படுத்த வேண்டும். அதிக திறனுடன் தக்காளர்களை குழப்ப வேண்டும். சற்றே கடினமான செயல் தான் – முயன்றால் முடியாதது ஏதுமில்லை. நல்வாழ்த்துகள் சிம்மன் – நட்புடன் சீனா

மறுமொழியொன்றை இடுங்கள்

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  மாற்று )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out /  மாற்று )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  மாற்று )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  மாற்று )

w

Connecting to %s