கம்ப்யூட்டர் சிப்புக்குள் இருக்கும் ஓவியம்!

1415447கலை ஆர்வம் எங்கெல்லாம் மறைந்து கிடக்கிறது என தெரிந்து கொண்டால் ஆச்சர்யமாக இருக்கும். ஆம் கம்ப்யூட்டர் சிப்புக்குள்ளும் கலை ஆர்வத்தை காணலாம் தெரியுமா? இது கம்ப்யூட்டர் உலகம் அதிகம் அறிந்திரதா ரகசிய அதிசயம்.

மைக்ரோசிப்பை கம்ப்யூட்டரின் மூளை என்கின்றனர். அந்த சிப்பின் ஏதோ ஒரு மூலையில் தான் சிப் வடிவமைப்பாளர்களின் நுண் ஓவியங்கள் ஒளிந்திருக்கின்றன. அதாவ்து சிப்பில் இருக்கும் சர்க்யூட்டில் வரையப்பட்ட ஓவியங்கள் .

இப்படி சிப்புக்குள் ஓவியம் இருப்பது அநேகமாக யாருக்குமே தெரியாது.ஏன் என்றால் இந்த ஓவியங்களை வெறும் கண்களால் பார்க்க முடியாது.மைக்ராஸ்கோப் எனப்படும் நுண்நோக்கி வழியே மட்டுமே இவற்றை காணலாம். நகக்கணு அளவிலான இடத்தில் சிப் செயல்பாட்டிற்கு தேவையான முழு சர்க்யூட்டையும் உருவாக்கிவிடும் தொழில்நுட்ப கலையில் கைதேர்ந்த பொறியியல் வல்லுனர்கள் இதே திறமையை பயன்படுத்தி சிப்பின் பயன்படுத்தப்படாத ஒரு மூலையில் ஒரு சித்திரத்தை வரைந்து வைத்து விடுகின்றனர்.

ஓவியர்கள் தாங்கள் வரைந்த படைப்பின் கீழ் உரிமையுடனும் பெருமித்த்துடனும் கையெழுத்திடுவது போல் சிப் வடிவமைப்பாளர்களும் தங்களது முத்திரையாக மைக்ரோ ஓவியங்களை வரைவதை வழக்கமாக கொண்டுள்ளனர்.

இந்த ஓவியங்கள் எந்த அளவு சிறியவை தெரியுமா? நமது தலை முடி இருக்கிறது அல்லவா? அதன் அகலத்தில் பாதி தான் இவற்றின் அளவு இருக்கும்!

சாதரணமாக சிப்பை பார்க்கும் போது இந்த ஓவியங்கள் இருப்பதே தெரியாது.அதனால் தான் சிப்புக்குள் இருக்கும் இந்த ஓவியங்களும் உலகம் அறியாத ரகசியமாகவே இருந்தன.

யாரும் பார்க்க முடியாத இந்த ஓவியங்களை வடிவமைப்பாளர்கள் வரைந்து வைத்தது ஏன்? இதை ஒரு வித சுய திருப்தி எனலாம். சுய வெளிப்பாடு ஏன்றும் சொல்லலாம்.முழுமையான ஒன்றை உருவாக்கிய மகிழ்ச்சியில் ஒரு படைப்பாளியாக வடிவமைப்பாளர்கள் தங்கள் முத்திரையை பதிக்கும் வழியும் கூட!’

ஆரம்ப காலத்தில் இவற்றிக்கு நடைமுறை பயனும் இருந்தது. சிப் வடிவமைப்பை வேறு ஒரு நிறுவனம் காபி அடித்து விட்டால், அவை எங்களுடையவை என்று அடையாளம் காட்டுவதற்கான வழியாகவும் இந்த ஓவியங்கள் அமைந்திருதன. ஆனால் 1984 ல் அறிமுகமான காப்புரிமை சட்டத்திருத்தம் இந்த பழக்கத்தை தேவையில்லாமல் செய்து விட்டது.

இந்த ஓவியங்களை சிப் கலை, சிலிக்கான் கலை, சிலிக்கான சித்திரம் என்று பல பெயர்களில் குறிப்பிடுகின்றனர். நாம் சிப்போவியம் என்றும் வைத்துக்கொள்ளலாம்.

கம்ப்யூட்டர் சிப் உருவாக்கப்பத்துவங்கிய காலத்தில் இருந்தே இந்த மைரோ ஓவியங்கள் வரையப்பட்டிருக்கின்றன. அன்றைய மைக்ரோசாப்டான டெக்சாஸ் இன்ஸ்ட்ருமென்ட் உருவாக்கிய ஆரம்ப கால சிப்களில் சிப்போவியத்தை காணலாம். பொதுவாக சிப் வடிவமைப்பாளர்கள் தங்களுக்கு பிடித்த கார்ட்ட்டுன் பாத்திரம், செல்லப்பிராணிகள், வாகனங்கள் போன்றவற்றை வரைத்து வைத்துள்ளனர். டெக்சாஸ் இன்ஸ்ட்ருமென்ட் நிறுவன வடிவமைப்பாளர்கள் நிலவில் கால் பதித்த சாதனை போன்றவற்றையும் சிப்போவியமாக தீட்டியுள்ளனர்.

இந்த ஓவியங்கள் பெரும்பாலும் சிப் செயல்பாட்டில் குறுக்கிடாதவையாக இருக்கும் என்றாலும் இவற்றால் சிப் செயல்பாட்டில் குழப்பம் ஏற்பட்ட சம்பவங்களும் உண்டு.

வடிவமைப்பாளர்கள் தங்கள் குழுவில் உள்ள சக வடிவமைப்பாளர்களை கேலி செய்யவும் இந்த ஓவியங்களை பயன்படுத்தியதுண்டு. எது எப்படியோ இவற்றை பெரும்பாலும் யாரும் பார்த்து ரசிக்க முடியாது. சிப்பை மேம்படுத்தும் போது இவை வடிவமைப்பாளர்கள் கண்ணில் படலாம். ஒரு சில வடிவமைப்பாளர்கள் இந்த மைக்ரோ ஓவியங்களை பெரிதாக்கி தங்கள் அலுவலகங்களில் மாட்டி வைத்ததும் உண்டு.ஆனால் அவற்றை அலுவலக ஊழியர்கள் மட்டுமே பார்க்க முடியும்.

நவீன குகை ஓவியங்களாக மறைந்திருந்த இவற்றை உலகின் பார்வைக்கு வெளிச்சம் போட்டு காட்டியது மைக்கேல் டேவிட்சன் என்பவர். அவருக்கு மட்டும் இந்த ஓவியங்கள் கண்ணில் பட்டது எப்படி?

அது உண்மையிலேயே சுவாரஸ்யமான கதை அந்த கதை நாளை….

( சைபர்சிம்மன் கையேட்டிற்காக பழைய பதிவுகளை அப்டேட் செய்து செப்பனிட்டு வருகிறேன்.அவற்றில் ஒன்று தான் இந்த பதிவு. 2008 ம் ஆண்டு வாக்கில் எழுதிய இந்த பதிவு இன்னும் சுவாரஸ்ய்மாக இருப்பதாக கருதுகிறேன். அதோடு இன்னும் கூட யாரும் இந்த சிப்போவியம் பற்றி எழுதவில்லை என்றே கருதுகிறேன். ஒருவேளை சுஜாதா தனது சில்லு புரட்சி நூலில் இதை குறிப்பிட்டிருக்கலாம். படித்தவர்கள் சரி பார்த்து சொல்லுங்கள். அன்புடன் சிம்மன் )

Advertisements

2 responses to “கம்ப்யூட்டர் சிப்புக்குள் இருக்கும் ஓவியம்!

  1. Pingback: கம்ப்யூட்டர் சிப்புக்குள் இருக்கும் ஓவியம் – 2 | Cybersimman's Blog·

மறுமொழியொன்றை இடுங்கள்

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  மாற்று )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out /  மாற்று )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  மாற்று )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  மாற்று )

w

Connecting to %s