அசத்தலான ஆன்லைன் கலைக்களஞ்சியங்கள்!

factஉலகில் உள்ள நாடுகளின் மொத்த எண்ணிக்கை தெரியுமா? 196!. இவற்றில் ஐ.நா சபையில் உறுப்பினராக உள்ள நாடுகள் 192. இந்த நாடுகளிலேயே இளைய நாடு, அதாவது மிகவும் சமீத்தில் உதயமான நாடு எது தெரியுமா? தெற்கு சூடான்!.2001 ம் ஆண்டு ஜூலை மாதம் ஆப்பிரிக்க தேசமான சூடானில் இருந்து பிரிந்து தெற்கு சூடான் தனி நாடானது.1990 ம் ஆன்டுக்கு பிறகு உலகில் 29 புதிய நாடுகள் உதயமாகியிருக்கின்றன.

 

இது போன்ற தகவல்களை தெரிந்து கொள்ள விரும்பினால், ஃபேக்ட்மான்ஸ்டர் ( http://www.factmonster.com/) இணையதளம் உங்களுக்கு வழிகாட்டும்.இந்த தளத்தை தகவல் சுரங்கம் என்று சொல்லலாம்.ஆன்லைன் கலைக்களஞ்சியம் என்றும் சொல்லலாம்.

 

ஆன்லைன் களஞ்சியம் என்றதுமே விக்கிபீடியா உங்கள் நினைவுக்கு வரலாம்.விக்கிபீடியா பொதுவான களஞ்சியம் என்றால் ஃபேக்ட்மான்ஸ்டர் சிறுவர்களுக்கானது.ஆர்வம் உள்ள சுட்டீஸ் இந்த தளத்தை தங்கள் பொது அறிவை வளர்த்து கொள்ள பயன்படுத்தி கொள்ளலாம்.அதே போல மாணவர்கள் வரலாறு,பூகோளம் மற்றும் அறிவியல் பாடங்களில் வீட்டுப்பாடம் அல்லது அசைன்மென்டை செய்வதற்கான தகவல்களை திரட்ட இந்த தளத்தை பயன்படுத்தலாம்.

 

ஃபேகட்மான்ஸ்டர் தளத்தின் முகப்பு பக்கமே அசத்தலாக இருக்கிறது.வழக்கமான களஞ்சியங்கள் போல இதன் வடிவமைப்பு இல்லாமல், சிறுவர்களை கவரும் வகையில் அழகான சித்திரங்களோடு இதில் உள்ள கட்டுரைகள் மற்றும் தகவல்களுக்கான இணைப்புகள் கொடுக்கப்படுள்ளன.

 

முதலில் உலகம் பற்றிய விவரங்களும் தொடர்ந்து அமெரிக்கா பற்றிய விவரங்களும் இடம்பெற்றுள்ளன.உலகம் பகுதியை கிளிக் செய்து உள்ளே சென்றால் உலகில் உள்ள நாடுகள்,அவற்றின் தேசிய கொடிகள்,உலக வரலாறு,இடு வரை நடைபெற்ற போர்கள் உள்ளிட்ட தகவல்களை அவற்றுக்குறிய தலைப்புகளை கிளிக் செய்து தெரிந்து கொள்ளலாம்.அதே போல அமெரிக்கா மாற்றிய விவரங்களை அமெரிக்கா பகுதியில் உள்ள தலைப்புகளில் தெரிந்து கொள்ளலாம்.

 

மூன்றாவதாக உள்ளது மனிதர்கள் பகுதி.இதில் புகழ் பெற்ற மனிதர்களை அறிந்து கொள்வதோடு சுயசரிதை எழுதுவது எப்படி என்றும் கற்றுக்கொள்ளலாம். புகழ் பெற்ற தலைவர்களின் சுய‌சரிதையை தேடும் வசதியும் இருக்கிறது.

 

தொடர்ந்து விளையாட்டு ,விஞ்ஞானம் ஆகிய பகுதிகள் இருக்கின்றன.இவ்வளவி ஏன் வீட்டுப்பாடத்திற்கு உதவுவதற்கு என்றே தனிப்பகுதியும் இருக்கிற‌து.சுட்டிசை உற்சாகத்தில் ஆழ்த்தக்கூடிய புதிர்கள் மற்றும் வினாடி வினா பகுதியும் இருக்கிறது.

 

பாடம் படிக்கும் போது அட்லெஸ் தேவைப்பட்டாலோ அல்லது புரியாத வார்த்தைக்கு அர்த்தம் தெரிந்து கொள்ள விரும்பினாலோ அட்லெஸ் மற்றும் இணைய அகராதியும் இதில் உள்ளது.இந்த தளத்தை நீங்களே ஒரு முறை சுற்றிப்பாருங்கள் இதன் அருமை எளிதாக புரியும்.

 

இதே போலவே கிட்ஸ்.நெட் (http://encyclopedia.kids.net.au/ ) தளமும் சிறுவர்களுக்கான களஞ்சியமாக விளங்கிறது.இதன் முகப்பு பக்கம் வண்ணமயமாக கவர்ந்திழுக்கிறது.இதில் இருந்து சிறுவர்களுக்கான இணையதளங்கள்,இணைய அகராதி ஆகியவற்றுக்கு செல்லாம்.கலைக்களஞ்சியத்திற்கான தனிபப்பகுதியும் இருக்கிறது.களஞ்சியத்தில் ஒவ்வொரு பிரிவாக தனித்தனி தலைப்புகளில் தகவலகள் தொகுக்கப்பட்டுள்ளன.தேவையானதை கிளிக் செய்து பார்க்கலாம்.தேடியந்திர வசதியும் தனியே இருக்கிற‌து.

 

அட்லாபீடியா தளமும் (http://www.atlapedia.com/ ) உங்களுக்கு தேவையான பொது அறிவு தகவல்களை தருகிறது.எளிமையாக காணப்படும் இந்த தளத்தில் உலக நாடுகள் மற்றும் அவற்றின் வரைப்படங்களை காணலாம்.

 

இவை தவிர உயிரியலுக்கு என்றே தனியே ஒரு களஞ்சியம் இருக்கிறது( http://www.botany.com/index.16.htm).இதில் தாவிரங்கள் பற்றிய அகராதியும் இடம் பெற்றுள்ளது.

 

பிடிக்ஷனரி ( http://www.pdictionary.com/) தளத்தில் எல்லாவற்றையும் புகைப்படங்களாக காணலாம்.

 

மேலும் புகழ்பெற்ற பிரிட்டானிகா கலைக்களஞ்சியத்தின் ( http://kids.britannica.com/) இணையதளமும் இருக்கிறது.ஆனால் இது கட்டண சேவை.

 

இதே போலவே யாஹுபார்கிட்ஸ் தளமும் தகவல் சுரங்கமாக விளங்கிய‌து.இணைய உலகில் பிரபலமாக உள்ள போர்டலான யாஹூவின் சிறுவர் பகுதியாக செயல்பட்டு வந்த இந்த பிரிவு இப்போது இல்லை.ஆனால் இணைய தேடலில் இதில் இடம்பெற்றிருந்த தகவல்களை அணுகலாம்.( http://web.archive.org/web/20130426200557/http://kids.yahoo.com/)

 

 ———

நன்றி:சுட்டி விகடன்

 

 

Advertisements

5 responses to “அசத்தலான ஆன்லைன் கலைக்களஞ்சியங்கள்!

  1. குட்டீஸ் க்கு மட்டுமல்ல, பெரியவர்களுக்கும் இந்த இணைப்புகளில் பல விவரங்கள் கிடைக்கும் போலிருக்கிறதே. உங்கள் இந்தப் பதிவை புக்மார்க் செய்து கொள்ளுகிறேன்.
    உங்களை இந்த முறை பதிவர் சந்திப்பில் சந்தித்தது மிகவும் சந்தோஷம்! தொடரட்டும் உங்கள் சமூகப்பணி!

    • நான் தேர்வு செய்து முன் வைக்கும் பதிவுகள் பயனுள்ளதாக இருப்பது மகிழ்ச்சி. தங்களை நேரில் பார்த்து பேசியது எனக்கும் மகிழ்ச்சி.

      அன்புடன் சிம்மன்

  2. அன்பின் சிம்மன் – சுட்டீஸ்களுக்குத் தேவையான பல தளங்கள் உள்ளன் – வயது வாரியாக கணக்கு – திறமைகளைச் சோதிக்கும் தளம் நன்று – சில தளங்கள் சென்று பார்த்தேன் – அருமை அருமை – குழந்தைகளுக்கு அறிமுகம் செய்து வைக்க வேண்டும் – நன்று – நல்வாழ்த்துகள் – நட்புடன் சீனா

மறுமொழியொன்றை இடுங்கள்

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  மாற்று )

Google photo

You are commenting using your Google account. Log Out /  மாற்று )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  மாற்று )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  மாற்று )

Connecting to %s