நீங்களூம் ஜினியசாகலாம்!.

சுட்டிஸ் எந்த கேள்வியாக இருந்தாலும் அதற்கான பதிலை பளிச் என்று சொல்ல வேண்டும் என்ற ஆர்வம் இருக்கிறதா? எல்லா தகவல்களையும் விரல் நுனியில் வைத்திருக்க வேண்டும் என்ற விருப்பம் இருக்கிறதா? வினாடி வினா போன்ற நிகழ்ச்சிகளில் பங்கேற்று வெளுத்து வாங்க வேண்டும் என்ற துடிப்பும் இருக்கிறதா? அப்படி என்றால் இணையம் மூலமே நீங்கள் தயாராகலாம்.இதற்கு கைகொடுக்க கூடிய அருமையான இணையதளங்களை பார்க்கலாம்.

முதலில் நாம் பார்க்கப்போகும் தளம் அறிவியல் குழந்தைகள் (http://www.sciencekids.co.nz/   ) . சிறுவர்கள் அறிவியம் ஆர்வத்தை வளர்த்து கொள்ள உதவக்கூடிய பயனுள்ள தகவல்கள் அடங்கிய இந்த தளத்தில் வினாடி வினாவுக்கு என்று தனிப்பகுதி இருக்கிறது. இந்த பகுதியில் பல்வேறு வகையான விஞ்ஞான வினாடி வினாக்களை பார்க்கலாம். நாடுகள் தொடர்பான வினாடி வினா, மனித உடல் தொடர்பான வினாடி வினா, பூமி வினாடி வினா , வேதியல் வினாடி வினா என பல்வேறு தலைப்புகளில் கேள்விகள் கொடுக்கப்பட்டுள்ளன.இவற்றை கிளிக் செய்து எத்தனை கேள்விகளுக்கு உங்களுக்கு பதில் தெரிந்திருக்கிறது என பரிசோதித்து பார்த்து கொள்ளலாம். பின்னர் கீழே கொடுக்கப்பட்டுள்ள பதில்களை வைத்து உங்கள் பதில்கள் சரி தானா என்று பார்த்துக்கொள்ளலாம்.

இந்த கேள்விகள் எல்லாமே சுவாரஸ்யமானவை. பல கேள்விகள் நீங்கள் பள்ளியில் படித்த பாடங்கள் தொடர்பானவை. எனவே இவற்றுக்கு பதில் அளிக்க முற்படுவது சுவாரஸ்யமாக இருக்கும். கேள்வி பதில் பகுதி தவிர இந்த தளத்திலேயே அறிவியல் பரிசோதனைகள் மற்றும் விஞ்ஞான விளையாட்டுக்களும் இருக்கின்றன. அறிவியல் தகவல்களை தெரிந்து கொள்வதற்கான பகுதியும் இருக்கிறது.அது மட்டுமா அறிவியல் புகைப்படங்கள் ,வீடியோக்கள் மற்றும் பாடங்களும் இருக்கின்றன.இந்த தளத்தின் மூலம் உங்கள் அறிவியல் ஆர்வத்தையும் திரமையையும் சுலபமாகவும் சுவாரஸ்யமாகவும் வளர்த்து கொள்ளலாம்.

இதே போலவே சிறுவர்களுக்கான இந்திய தளமான பித்தாரா.காமிலும் ( http://www.pitara.com/activities/quiz.asp) வினாடி வினா பகுதியை பார்க்கலாம். அறிவியல் மட்டும் அல்லாமல் எல்லாவிதமான தலைப்புகளிலும் கேள்வி பதில்கள் இருக்கின்றன. ஒவ்வொரு கேள்விக்கான பதிலும் தெளிவாக விரிவாக கொடுக்கப்பட்டுள்ளதால் புதிய விவரங்களை தெரிந்து கொள்ளலாம்.இந்த தளத்திலும் கேள்வி பதில் தவிர பல்வேறு பயனுள்ள விஷயங்களை காணலாம்.

அடுத்த தளம் கிட்ஸ்வேர்ல்டுஃப்ன் ( http://www.kidsworldfun.com/quizzes.php). இந்த தள‌த்தில் பொது அறிவு வினாடி வினாவுடன் இணைய பாதுகாப்பு தொடர்பான வினாடி வினாவும் இடம் பெற்றுள்ளது.இணையத்தில் உலாவும் போது சிறுவர்கள் செய்யக்கூடியவை மற்றும் செய்யக்கூடாதவை பற்றி சரியாக அறிந்திருக்கின்றனரா என்று பரிசோதித்து கொள்ள இந்த பகுதி உதவுகிறது.

சரி, நம்முடைய தாய்நாடான இந்தியா பற்றி எந்த அளவுக்கு தெரிந்திருக்கிறது என தெரிந்து கொள்ளவும் ஒரு இணையதளம் இருக்கிறது ( http://knowindia.gov.in/knowindia/quiz_india.php ) . இந்தியாவை அறிந்து கொள்ள உதவுவதற்காக அரசால் அமைக்கப்பட்டுள்ள இந்த தளத்தில் இந்தியா தொடர்பான கேள்வி பதில் பகுதியும் இருக்கிற‌து. இதில் உள்ள மற்ற தலைப்புகளின் வாயிலாக இந்தியா தொடர்பான விவரங்களை நன்றாக தெரிந்து கொள்ளலாம்.

இந்த தளங்கள் எல்லாமே நீங்கள் ஜினியாசாக உதவும் தளங்கள் என்றால் இதே பெயரிலேயே ஒரு இணையதளம இருக்கிறது ( http://www.makemegenius.com/gk_level.php) .

இந்த தளத்திலும் விதவிதமான கேள்வி பதில் பகுதிகளை பார்த்து பயிற்சி எடுத்துக்கொள்ளலாம். விஞ்ஞான வீடியோக்களும் இருக்கின்றன.பொது அறிவை வளர்த்துக்கொள்ள இந்த தளம் கைகொடுக்கும்.

இந்த தளங்கள் எல்லாமே ஆங்கிலத்தில் அமைந்தவை. தமிழில் கேள்வி பதில்களை தெரிந்து கொள்ள ஆர்வம் இருந்தால் மாடர்ந்தமிழ் ( http://www.moderntamilworld.com/childrenscorner/q&a_siruvar_part1.asp) தளத்தில் அதற்கான பகுதி இருக்கிறது. இந்த தளத்தில் உள்ள சிறுவர் பக்கத்தில் நீதிக்கதைகள் மற்றும் குழந்தகள் பாடல்களும் இருக்கின்றன.இதே போல கணித வினாவுக்கான பேஸ்புக் பக்கமும் இருக்கிரது. ( https://www.facebook.com/KanitaVinatiVina?ref=stream)

இந்த தளங்கள் இணையத்தில் உலாவுவதை சுவாரஸ்யம் ஆக்குவதோடு அறிவியல் மற்றும் பொது அறிவு தகவல்களையும் கற்றுக்கொள்ள வைக்கின்றன.

ஆக அடுத்த முறை பள்ளியில் வினாடி வினா போட்டி வந்தால் தைரிய்மாக பெயர் கொடுத்து விட்டு இந்த தளங்களின் உதவியோடு உற்சாகமாக தயாராகுங்கள்.

 

 

———–

நன்றி:சுட்டி விகடன் ( நெட்டிசம் தொடருக்காக எழுதியது)

Advertisements

5 responses to “நீங்களூம் ஜினியசாகலாம்!.

 1. தமிழ் வலைப்பூவிற்கு ஆங்கில எழுத்துகளில் பெயரா? குழப்பமா இருக்கே

  //திடீரென ஒரு ஞானோதயம்.

  ATM-ல் தமிழைத் தொடுவோம்! எழுதிய நானா என் பெயரை ஆங்கில எழுத்துகளில் Menporul Prabhu என்று வைத்திருக்கிறேன் என்று.

  Menporul Prabhu-வை மென்பொருள் பிரபு என்று தமிழ் எழுத்துகளில் மாற்றிவிட்டேன்.

  உங்களில் பலருக்கு தமிழ் தாய்மொழியாக இருக்கலாம். உங்கள் பெயரை ஆங்கில எழுத்துகளிலிருந்து தமிழ் எழுத்துகளுக்கு மாற்றிவிடுங்களேன்.

  தமிழுக்கு நம்மால் இதைக்கூட செய்யமுடியாதா?

  • பிரபுவுக்கு வாழ்த்துக்கள்.

   தமிழில் பெயர் மாறுவது நல்ல விஷ்யம் தான்.ஆனால் இதில் எனக்கு சில மாற்று கருத்துக்கள் உள்ளன். பெயர் மாற்றம் என்பது பலநேரங்களில் வெறும் அடையாளமாக மட்டுமே மாறிவிடுகிறது. தவிர பேஸ்ப்புக் மற்றும் டிவிட்டர் போன்ற நிறுவன பெயர்களை முகநூலாகவோ அல்லது வதன புத்தகமாகவோ அல்லது கீச்சுக்கள் என குறிப்பிடுவதோ தேவையா என யோசிகிறேன். இது முடிவில்லாத விவாதம். என்னை பொருத்தவரை தமிழில் உள்ள ஆர்வத்தால் தான் இணையம் மற்றும் தொழில்நுட்பம் சார்ந்த விஷ்யங்களை தழிழில் எழுதி வருகிறேன்.

   மேலும் சைபர்சிம்மன் என்பதே தமிழ் பெயர் தானே. சைபர் என்னும் புது சொல்லை ஏன் அப்படியே தமிழில் ஏற்க கூடாது.

   அன்புடன் சிம்மன்

மறுமொழியொன்றை இடுங்கள்

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  மாற்று )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out /  மாற்று )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  மாற்று )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  மாற்று )

w

Connecting to %s