அர‌சியல் சாசங்களை அறிவதற்கான அசத்தலான இணையதளம்:

இணையத்தில் அனைத்து வகையான தகவல்களையும் தேட உதவும் கூகுல் இப்போது உலக நாடுகளின் அரசியல் சாசனங்களை தேடுவதற்கான வசதியை அறிமுகம் செய்துள்ளது. கூகுலின் நிதி உதவியோடு கம்பேரட்டிவ் கான்ஸ்டிடியூஷன் பிரஜக்ட் எனும் அமைப்பு இதற்கான இணையதளத்தை அமைத்துள்ளது.

உலக நாடுகளின் அரசியல் சாசனங்களை ஒப்பிட்டு பார்ப்பதற்கான வசதியை அளிக்கும் இந்த தளத்தில் இந்தியா 160 நாடுகளின் அரசியல் சாசன‌ங்களை எளிதாக தேடிப்பார்க்கலாம்.

கான்ஸ்டிடியூட் பிரஜக்ட்.ஆர்ஜி (https://www.constituteproject.org/#/ ) பெயரில் இதற்கான இணையதளம் அமக்கப்பட்டுள்ளது. உலக நாடுகளின் அரசியல் சாசங்களை படிக்க, ஒப்பிட்டு பார்க்க, அவற்றில் உள்ள விவரங்களை தேடிப்பார்ப்பதற்கான தளம் என்று இந்த தளம் அழைப்பு விடுக்கிறது.

இந்த தளத்தின் மூலம் அரசியல் சாசன பிரதிகளை தேடிப்பார்ப்பது எத்தனை எளிதாக இருக்கிறது என்பதை பார்த்தால் நிச்சயம் வியப்பாக இருக்கிறது. நாடுகளில் தேட என கொடுக்கப்பட்டுள்ள பகுதியில் கிளிக் செய்தால் வரிசையாக உலக நாடுகளின் பட்டியல் வருகிறது. அவற்றில் எந்த நாட்டின் அரசியல் சாசனம் தேவையோ அதை கிளிக் செய்து கொள்ளலாம்.அரசியல் சாசனத்தின் பிரதி பிடிஎப் கோப்பு வடிவில் டவுண்லோடு செய்து கொள்ள கிடைக்கிறது. தேவைப்பட்டால் எச்டிஎமெல் விடிவிலும் பார்க்கலாம்.

ஒவ்வொரு நாட்டுக்கு அருகிலும் அதன் அரசியல் சாசனம் எந்த ஆன்டு உருவாக்கப்பட்டது என்ற தகவலும் இடம்பெற்றுள்ளது. இந்திய சாசனம் 1949 ம் ஆண்டு உருவாக்கப்பட்டு 2002 ம் ஆண்டு திருத்தப்பட்டது என்ற விவரம் கொடுக்கப்பட்டுள்ளது.

இந்த பட்டியலை மேலோட்டமாக பார்த்தாலே உலக நாடுகளின் அரசியல் சாசங்கள் எந்த ஆண்டில் உருவாக்கப்பட்டவை, அவற்றில் முக்கிய திருத்தம் எப்போது மேற்கொள்ளப்பட்டன போன்ற தகவல்களை தெரிந்து கொள்ளலாம்.

பொதுவாக அரசியல் சாசனங்களை அணுக விரும்புகிறவர்கள் அதற்காக தனியே தேட வேண்டும் . குறிப்பிட்ட நாடுகளின் அதிகார்பூர்வ இணையதளத்தில் அதற்கான இணைப்பு இருக்கிறதா அல்லது அதற்கான தனி இணையதள‌ம் இருக்கிறதா என்று தேடிப்பார்க்க வேண்டும். இந்த இணைய தேடலை மிச்சமாக்கி ஒரே இடத்தில் 160 நாடுகளின் சாசங்களையும் இந்த தளம் வழங்குகிறது. அதிலும் எளிதாக தேடும் வசதியுடன்.

ஒவ்வொரு நாட்டின் சாசன பிர்தியையும் பார்க்க முடியும் என்ப‌தோடு அவற்றில் குறிப்பிட்ட தலைப்புகளிலும் தேடிப்பார்க்கலாம் என்பது கூடுதல சிறப்பு. உதாரணத்திற்கு தேர்தல் தொடர்பான ஷரத்துகளை மட்டும் தேடிப்பார்க்கலாம்.அதே போல நீதித்துறை அல்லது சட்டமன்றம் போன்ற தலைப்புகளிலும் தேடலாம்.

நிச்சயமாக சட்ட வல்லுனர்களுக்கும் அரசியல் சாசன ஆய்வில் ஈடுபடுபவர்களுக்கும் கருத்து கருவூலமாக விளங்கும் தளம் என்பதில் சந்தேகமில்லை.வரலாறு மற்றும் மக்களின் அடிப்படை உரிமைகளில் ஆர்வம் உள்ள சாமான்யர்களும் அரசியல் சாசன்ம் தொடர்பான தங்கள் அறிவை விரிவாக்கி கொள்ள இதை பயன்படுத்தலாம்.

ஆனால் உண்மையில் உலகில் புதிய அரசியல் சாசனங்களை உருவாக்கும் பணியில் ஈடுபட்டுள்ள வல்லுனர்களுக்கு உதவுவதற்காகவே இந்த தளம் அமைக்கப்பட்டுள்ளது. ஆம் உலகில் ஒவ்வொரு ஆண்டும் புதிய அரசியல் சாசங்கள் உருவாக்கப்ப்ட்டு கொன்டிருக்கின்ற‌ன என்பது உங்களுக்கு தெரியுமா?இந்த பணியில்  ஈடுபட்டுள்ள சட்ட வல்லுனர்கள் தங்கள் நாட்டுக்கு ஏற்ற சாசன் ஷரத்துக்களை உருவாக்க மற்ற நாடுகளின் சாசனங்களை ஒப்பிட்டு பார்ப்பது அவசியம். அதை தான் இந்த தளம் சாத்தியமாக்குகிறது.தளத்தின் அறிமுக பகுதியில் இது குறிப்பிடப்பட்டுள்ளது.

கூகுல் நிறுவனத்தின் அதிகார பூர்வ வலைப்பதிவிலும் இந்த திட்டத்தில் ப்ங்கேற்பதற்கான காரணம் அழகாக விளக்கப்பட்டுள்ளது. ஒவ்வொரு நாட்டுக்கும் தனித்தன்மை வாய்ந்ததான அரசியல் சாசனங்கள் பல காலமாக இருந்து வந்தாலும் உலகில் தற்போது ஆன்டுதோறும் ஐந்து புதிய அரசியல் சாசங்களாவது உருவாக்கப்படுகின்றன ,20 அல்லது 30 சாசங்கள் திருத்தப்படுகின்றன என்னும் தகவலை குறிப்பிடப்பட்டு, புதிய சாசங்களை உருவாக்கும் முயற்சியில் மற்ற நாடுகளின் சாசன அமசங்களை ஒப்பிட்டு பார்த்து சிறந்த சாசனத்தை உருவாக்கி கொள்ள இந்த தேடல் வசதி உதவும் என கூகுல் பெருமையுடன் குறிப்பிட்டுள்ளது.

ஆப்பிரிக்காவில் உள்ள 39 நாடுகளில் 19 நாடுகளின் அரசியல் சாசங்கள் 2000 மாவது ஆண்டுக்கு பிறகு தான் உருவாக்கப்பட்டன என்ற தகவலும் இந்த பதிவில் குறிப்பிடப்பட்டுள்ளது.இப்படிப்

பட்ட இளைய சாசனங்களுக்கு கைகொடுப்பது இந்த திட்டத்தின் நோக்கம்.

இந்த திட்டத்தின் மூலமான கம்பேரட்டிவ் கான்ஸ்டிடியூஷன் பிரஜக்ட் அமெரிக்காவின் இல்லினாய்ஸ் பலகலைகழகத்தில் இருந்து பிறந்தது. அந்த பலகலையில் பணியாற்றிக்கொண்டிருந்த பேராசிரியர்கள் எல்கின்ஸ் மற்றும் கின்ஸ்பர்க் ஈராக மற்றும் ஆப்கானிஸ்தானில் மேற்கோள்ளப்பட்ட அரசியல் சாசன சீர்த்திருத்தங்களின் போது அங்குள்ள அரசியல் மற்றும் சட்ட வல்லுனர்கள் அரசியல் சாசன‌ நிர்ணய சபைகளுக்கு சரியான ஆலோசனைகளை வ‌ழங்க போதுமான விவரங்களை பெற முடியாமல் அல்லல்பட்டதை பார்த்து இது போன்ற முயற்சிகளில் உதவுவதற்காக உலக நாடுகளின் அர‌சியல் சாசங்களை இணையத்தின் மூலம் எளிதாக ஒப்பிட்டு பார்க்கும் வகையில் இந்த திட்டம் உருவாக்கப்பட்டது. கூகுல் நிறுவன உதவியுடன் இப்போது அரசியல் சாசங்களை அனைவரும் அணுகும் வகையில் செய்துள்ளது.

மூல இணையதளம் : http://comparativeconstitutionsproject.org/about-ccp/

Advertisements

4 responses to “அர‌சியல் சாசங்களை அறிவதற்கான அசத்தலான இணையதளம்:

 1. அன்பரே நல்ல பதிவு.

  இந்திய அரசமைப்பை பொருத்த வரை அடிப்படை தவறுகள் நிறைய இருக்கின்றன.

  இந்திய அரசமைப்பு அமலுக்கு வந்தது. 26-01-1950 இதைத்தாம் நாம் குடியரசு நாளாக கொண்டாடுகிறோம். எனவே 1949 என்பது தவறு.

  மேலும், 2002 க்கு பிறகும் பல திருத்தங்கள் செய்யப்பட்டு உள்ளன. இப்படி செய்யப்பட்ட பல திருத்தங்களில், உச்சநீதிமன்றத்தால் செல்லாது என அறிவிக்கப்பட்ட மிக மிக முக்கியமான உட்பிரிவுகள் நீக்கப்படாமல் உள்ளன.

  தற்போது அமலில் உள்ள தேசிய மொழிகள் 22. ஆனால், இதில் 18 என்று உள்ளது. இதெல்லாம் மேலோட்டமாக பார்த்தவைகளே. ஆதலால், இதனை கொண்டு ஆய்வு செய்தால் குழப்பமே மிஞ்சும்.

  எனக்கு நன்றாக தெரிந்த இந்திய அரசமைப்பிலேயே இப்படி குளறுபடிகள் என்றால், தெரியாதவைகளில் பிழைகளை எப்படி கண்டு பிடிப்பது?

  நமது சட்டங்களைப் பற்றி நீங்கள் சரியாக தெரிந்து கொள்ள விரும்பினால் நான் எழுதியுள்ள ஐந்து நீதியைத்தேடி… நூல்களை படிக்கலாம்.

  இதுபற்றிய மேலும் விபரங்களை http://www.neethiyaithedy.org

  • தகவலுக்கு நன்றி. இது பற்றி விரிவாக ஒரு பதிவை எழுதுங்களேன். விருந்தினர் பதிவாக வெளியிட உதவியாக இருக்கும்,

   அன்புடன் சிம்மன்

 2. தி இந்து வலைத்தளத்தின் ‘வலைஞர் பக்கம்’ பகுதிக்காக கட்டுரைகளை அனுப்ப விரும்புவோர் webadmin@kslmedia.inஎன்ற மின்னஞ்சல் முகவரிக்கு படைப்புகளை அனுப்பலாம். உங்களின் முழுப் பெயர், தொடர்பு எண், வலைப்பதிவுத் தள முகவரி அவசியம். ஏற்கெனவே வெளியிடப்படாத கட்டுரைகளுக்கே முன்னுரிமை அளிக்கப்படும் தி இந்து வலைத்தளத்தின் ‘வலைஞர் பக்கம்’ பகுதிக்காக கட்டுரைகளை அனுப்ப விரும்புவோர் webadmin@kslmedia.inஎன்ற மின்னஞ்சல் முகவரிக்கு படைப்புகளை அனுப்பலாம். உங்களின் முழுப் பெயர், தொடர்பு எண், வலைப்பதிவுத் தள முகவரி அவசியம். ஏற்கெனவே வெளியிடப்படாத கட்டுரைகளுக்கே முன்னுரிமை அளிக்கப்படும்

மறுமொழியொன்றை இடுங்கள்

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  மாற்று )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out /  மாற்று )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  மாற்று )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  மாற்று )

w

Connecting to %s