அர‌சியல் சாசன இணையதளம் ; ஒரு விளக்கம்.

கூகுல் நிதியுதவியுடன் அமைக்கப்பட்டுள்ள உலக நாடுகளின் அரசியல் சாசன‌ங்களை அறிந்து கொள்வதற்கான இணையதளம் குறித்து சக வலைப்பதிவாளரான வாரன்ட் பாலா பின்னூட்டம் வாயிலாக அந்த தளத்தில் உள்ள சில தகவல் பிழைகளை சுட்டிக்காட்டியிருந்தார்.இது குறித்து மேலும் விரிவாக எழுதுமாறு கேட்டு கொண்டதை அடுத்து அவர் இமெயில் மூலம் எழுதியதை அப்படியே இங்கே பகிர்ந்து கொள்கிறேன்.
பதிவில் உள்ள கருத்துக்கள் வாரன்ட் பாலாவுனுடையவை.

(வாரன்ட் பாலா சட்டம் தொடர்பான விழிப்புணர்வை ஏற்படுத்தும் வகையில் வலைப்பதிவு செய்து வருகிறார். நீதியை தேடி எனும் அவரது வலைப்பதிவு நியாயம் தான் சட்டம்,அதை யாரும் எடுத்து சொல்லி வாதாடலாம் எனும் கருத்தை முன்வைக்கிறது. நீதியை தேடி தலைப்பில் அவர் ஐந்து புத்தகங்களையும் எழுதியுள்ளார்.ஆறாவது புத்தகத்திற்கான முயற்சியில் இருப்பதாக அவரது வலைப்பதிவில் குறிப்பிட்டுள்ளார்.)

———-

இந்திய அரசமைப்பு உலகிலேயே மிகப்பெரிய அரசமைப்பு என்பார்கள். இது எந்தஅளவிற்கு சரியானது என சரி பார்க்கும் பொருட்டு, உலகளாவிய நாடுகளின்அரசமைப்பு மட்டுமல்லாது, மற்ற சட்டங்களையும் தேடித்தேடி சேகரித்து வந்தஎனக்கு, அனைத்து நாட்டு அரசமைப்புகளையும் ஒருங்கே தொகுத்து கொடுக்கும்வலைதளம் பற்றிய இப்பதிவு பார்த்ததும் மகிழ்ச்சியை அளித்தது.

ஆனால், படிக்க படிக்க இதில் உள்ள தகவல்கள் எந்த அளவிற்கு சரியாக
இருக்கும் என்கிற சந்தேகம் ஏற்பட்டது. காரணம் இந்திய அரசமைப்பு
உருவாக்கப்பட்ட ஆண்டு 1949 என்றும், அதில் 2002 வரை திருத்தங்கள்
மேற்கொள்ளப்பட்டு உள்ளன என்கிற செய்தியே!

ஓருவேளை இப்பதிவில்தான் தவறாக குறிப்பிடப்பட்டு விட்டதோ என நினைத்து அந்தபக்கத்திற்கே சென்று பார்த்தால், தவறு நடத்துள்ளது பதிவில் அன்று.பதிவில் சொல்லப்பட்டுள்ள வலைத்தளத்திலே என்பது புரிந்தது.

சரி, உள்ளே உள்ள விசயங்களாவது சரியாக இருக்கிறதா என்று சில முக்கிய
அடிப்படை கூறுகளைப் பார்த்தால் அங்கும் சொதப்பலே. இதுபற்றி ரத்தின
சுருக்கமாக விளக்கவே இப்பதிவு.

நம்மைப் போலவே ஒவ்வொரு சட்டமும் அமலுக்கு வந்த நாளே, அதன் பிறந்த நாள்.
இந்த வகையில் இந்திய அரசமைப்பு அமலுக்கு வந்தது 26-01-1950. இந்த
நாளைத்தாம் நாம் ஒவ்வொரு வருடமும் குடியரசுத் தினமாக கொண்டாடுகிறோம்.
இதனை 1949 என்றது தவறு.

இந்திய அரசமைப்பில் 2011 ஆம் ஆண்டு வரை திருத்தங்கள்
மேற்கொள்ளப்பட்டுள்ளன என்பதை மத்திய சட்ட அமைச்சகத்தின் வலைப்பக்கம் தெரிவிக்கிறது.

இதனை பார்க்க இங்கு சொடுக்கவும்.
http://indiacode.nic.in/coiweb/welcome.html திருத்த உண்மை
இப்படியிருக்க 2002 ஆம் ஆண்டு என்பதும் அடிப்படை தவறு.

தேசிய மொழிகள் 18 என்று குறிப்பிடப்பட்டுள்ளது. ஆனால், உண்மையில் அமலில்
உள்ள தேசிய மொழிகள் 22.

பொதுவாக எந்தவொரு சட்ட திருத்தம் வந்தாலும் அது, ‘‘கூடுதல் பிரிவுகளாக
குறிப்பிடப்படும்’’.

குறிப்பாக இந்திய அரசமைப்பில் கோட்பாடு 368 இல், அதன் உட்பிரிவுகளாக 1),
2), 3) என இருக்கும். 368 இல் ஏதாவது திருத்தம் வந்தால் 368 அ என்று
‘‘கூடுதல் உட்பிரிவாகதாம்’’ கொண்டு வர வேண்டுமே ஒழிய 368 இல் 4), 5) என
‘‘உட்பிரிவாக சேர்க்க கூடாது’’.

கோட்பாடு 368 இல் 4), 5) ஆகிய, ‘‘இரண்டு உட்பிரிவுகளை’’ தவிர, மற்றபடி
இதுவரை கொண்டு வரப்பட்ட கணக்கில் அடங்காத திருத்தங்கள் எல்லாமே,
‘‘கூடுதல் உட்பிரிவாகத்தாம் கொண்டு வரப்பட்டு உள்ளன’’.

பின் கோட்பாடு 368 இல் 4), 5) மட்டும் ஏன் உட்பிரிவாக கொண்டு வரப்பட்டது
என்று கேட்டால், நமது மத்திய ஆட்சியாளர்கள் தங்கள் மனம் போன போக்கில்
திருத்தங்களை செய்தும், சட்டங்களை இயற்றியும் நமக்கு வழங்கப்பட்டுள்ள
அடிப்படை உரிமைகளை பறிக்கவே.

அதாவது, இந்திய அரசமைப்பு கோட்பாடு 368 இன் 1), 2) ஆனது எந்த ஒரு
பிரிவையும் திருத்த அனுமதிக்கிறது. ஆனால் 368 இன் 3) ஆனது எக்காரணம்
கொண்டும் கோட்பாடு 13 ஐ திருத்தக் கூடாது என தடை விதிக்கிறது.

கோட்பாடு 13 ஐ திருத்தக் கூடாது என்றால், மூன்றாவது அத்தியாயத்தில் உள்ள
கோட்பாடு 12 முதல் 35 வரை திருத்த முடியாது. இதனை உடைப்பதற்காக
திருட்டுத்தனமாக உட்பிரிவாக சொருகப்பட்டதே கோட்பாடு 368 இல் 4), 5)
ஆகியன.

1976 இல் ஆட்சியில் இருந்தவர்கள் 42 வது திருத்தத்தின் மூலம் செய்த
திருட்டுத்தனங்களை அப்போது இருந்த குடியரசுத் தலைவரும் அமல்படுத்தி
விட்டார்.

ஆனால், இத்திருட்டு திருத்தம் செல்லாது என உச்சநீதிமன்றம் தீர்ப்புரைத்துள்ளது.

ஆனால், இத்தளத்தில் உள்ள எழுத்துருமாறா கோப்பிலோ திருத்தங்கள்
நீக்கப்படாமல் அப்படியேத்தாம் உள்ளன. இதெல்லாம் மேலோட்டமாக பார்த்ததில்
கிடைத்த தகவல். ஆராய்ந்தால் எவ்வளவு தவறுகள் இருக்கும் என உறுதியாக சொல்ல
முடியாது.

இது போன்ற திருட்டுத்தனங்களை சாதாரணமாக கண்டறிந்து விட முடியாது.
ஆராய்ச்சியாளர்கள் கூட கண்டு பிடிப்பது அவ்வளவு எளிதன்று.

எனக்கு நன்றாக தெரிந்த இந்திய அரசமைப்பு கோப்பிலேயே இப்படி குளறுபடிகள்
இருக்கின்றன என்னும் போது, இதில் உள்ள தெரியாத நாடுகளின் கோப்புகளில்
உள்ள பிழைகளை கண்டு பிடிப்பது சாத்தியமில்லாத ஒன்று.

நமது சட்டங்களைப் பற்றி எளிதாகவும், மிகச் சரியாகவும், எளிய தமிழில்
நீங்கள் தெரிந்து கொள்ள விரும்பினால் நான் எழுதியுள்ள ஐந்து
நீதியைத்தேடி… நூல்களை படிக்கலாம். இதற்கு முன்னோட்டமாக
http://www.neethiyaithedy.org என்கிற வலைப்பக்கத்திற்கு வரலாம்.

—————

தொடர்புடைய முந்தைய பதிவு;அர‌சியல் சாசங்களை அறிவதற்கான அசத்தலான இணையதளம்:https://cybersimman.wordpress.com/2013/10/04/%E0%AE%85%E0%AE%B0%E2%80%8C%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%9A%E0%AE%BE%E0%AE%9A%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B3%E0%AF%88-%E0%AE%85%E0%AE%B1%E0%AE%BF%E0%AE%B5%E0%AE%A4%E0%AE%B1/

Advertisements

மறுமொழியொன்றை இடுங்கள்

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  மாற்று )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out /  மாற்று )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  மாற்று )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  மாற்று )

w

Connecting to %s