உங்களுக்கு தேவையான செயலிகளை தேட உதவும் தேடியந்திரங்கள்.

இது ஸ்மார்ட்போன்களின் காலம்.ஸ்மார்ட்போன் வைத்திருந்தால் அவற்றின் நம் தேவைக்கேற்ற செயலிகளை (அப் எனப்படும் அப்ளிகேஷன்) டவுண்லோடு செய்து பயன்படுத்தி கொள்ளலாம்.தினசரி நடவடிக்கைகளை திட்டமிடுவதில் துவங்கி புதிய விளையாட்டுக்களை ஆடி மகிழ்வது வரை எல்லாவற்றுக்குமான செயலிகள் இருக்கின்றன.இவற்றைத்தவிர தினமும் புதிய செயலிகள் உருவாக்கப்பட்டு வருகின்றன. ஆப்பிலின் ஐபோனுக்கான செயலிகள்,ஆன்ட்ராய்டு போனுக்கான செயலிகள் டேப்லெட் கம்ப்யூட்டர்களுக்கான செயலிகள் என்று புதிய செயலிகள் அறிமுகமாகி கொண்டே இருக்கின்றன. இந்த புதிய செயலிகளில் சில உங்கள் தேவையை தீர்த்து வைப்பதாக அல்லது உங்கள் பிரச்சனைக்கான தீர்வாகவோ இருக்கலாம். அட இதை தான் நான் எதிர்பார்த்திருந்தேன் என என்று நீங்கள் வியந்து போக கூடிய அருமையான புதிய செயலிகளை தொழில்நுட்ப தளங்களோ அல்லது உங்கள் நண்பர்களே அறிமுகம் செய்து வைக்கும் வரை ஏன் காத்திருக்க வேண்டும்.நீங்களே புதிய செயலிகளில் உங்களுக்கு பயன் தரக்கூடியவற்றை தேடி கண்டுபிடித்து விடலாம். இதற்கு உதவுவதற்காக என்றே பிரத்யேக தேடியந்திரங்கள் இருக்கின்றன. அப் எஞ்சின் என்று சொல்லப்படும் இந்த வகை செயலி தேடியந்திரங்களை பார்க்கலாம்:

 

1. மிம்வி.காம்(http://www.mimvi.com/ )

 

மிம்வியை தேடியந்திரங்களுக்கான கூகுல் என்று சொல்லலாம்.இதற்கு காரணம் இதன் முகப்பு பக்கமும் கூகுல் போலவே எந்த கவனச்சிதறலும் இல்லாமல் மிக எளிமையாக இருக்கிற‌து. அதில் உள்ள தேடல் கட்டத்தில் உங்களுக்கு எந்த வகையான செயலி தேவையோ அதற்கான கீவேர்டை டைப் செய்தால் தொடர்புடைய செயலிகளின் பட்டியல் தோன்றுகிறது.தேடல் பட்டியல் செயலியின் ஸ்கிரின்ஷாட்களோடு அவை பற்றிய விவரங்களை தொகுத்தளிக்கின்றன. குறிப்பிட்ட அந்த செயலி இலவசமானதா? கட்டணம் செலுத்த வேண்டியதா? போன்ற தகவல்களோடு அவற்றை டவுண்லோடு செய்து கொள்வதற்கான இணைப்பும் வழங்கப்பட்டுள்ளது. இது கூகுல் போன்றது என்று சொன்னோம் அல்லவா? கூகுல் தேடல் முடிவுகளை அவற்றின் பொருத்தமான தனமைக்கேற்ப பட்டியலிடுவது போல இந்த தேடியந்திரமும் செயலிகளை அவை உங்கள் தேடலுக்கு எந்த அளவுக்கு பொருந்துகிறது என்பதன் அடிப்படையில் பட்டியலிடுகிறது. இதற்கான மதிப்பீடு புள்ளிகளும் கொடுக்கப்பட்டுள்ளன.

 

புதிய செயலிகளை தேடும் போது கவனிக்க வேண்டிய விஷயம் நீங்கள் தேடும் செயலிகள் உங்கள் வசம் உள்ள ஸ்மார்ட்போன் வகைக்கு ஏற்றதாக இருக்க வேண்டும் என்பது தான்.அதாவ‌து நீங்கள் வைத்திருப்பது ஆன்ட்ராய்டு போன் என்றால் ஆன்ட்ராய்டு செயலிகள் மட்டும் தான் உங்களுக்கு தேவை.ஐபோன் செயலிகளால ஏந்த பயனும் இல்லை. மிம்வியில் இதை நீங்கள் மிகவும் சுலபமாக தேர்வு செயது கொள்ளலாம். தேடல் பட்டியலின் மேலே ஐபோன்,ஆன்ட்ராய்ட்,விண்டோஸ் என வரிசையாக செயலி வ‌கைகள் குறிப்பிடப்ப்ட்டுள்ளன. அவற்றில் தேவையான பிரிவை கிளிக் செய்து கொண்டால் அந்த வகை செயலிகளை மட்டுமே பார்க்கலாம். இனையத்திற்கான செயலி பிரிவும் உள்ளது.

 

தோற்றம் தான் எளிதாக இருக்கிறதே தவிர இதன் செயல்பாடு சிறப்பாக இருப்பதை பயன்படுத்தி பார்க்கும் போது உணரலாம்.

 

2.குவிக்சே(https://www.quixey.com/ ) 

 

செயலிகள் உங்கள் தினசரி வாழ்க்கையில் கைகொடுக்க கூடும், அந்த வழிகளை தெரிந்து கொள்ளுங்களேன் என செயலிகளின் அருமையை சொல்லி வரவேற்கும் குவிக்சே பயனுள்ள செயலிகளை அடையாளம் காட்டுகிற‌து. குவிக்சேவில் புதிய செயலிகளை கீவேர்டு குறிப்பிட்டு தேடலாம். அதோடு ஏற்கனவே பட்டியலிடப்பட்டுள்ள செயலிகளையும் ஆராய்ந்து பார்க்கலாம். பொதுவான செயலிகள் மற்றும் பிரபலனான செயலிகள் என இரண்டு வகையில் இந்த பட்டியல் உள்ளது. இந்த பட்டியல்களில் விளையாடுவதற்கான செயலியா? பணி சார்ந்த பயன்பாட்டுக்கு உதவும் செயலியா? கற்பதற்கு கைகொடுக்கும் செயலியா? என நம்க்கேற்ற வகைகளை தேர்வு செய்து கொண்டும் தேடலாம்.செயலிகளை குறித்து கொள்ளும் புக்மார்க் வசதியும் இருக்கிற‌து.

 

3.லுக் இட் அப் (http://lookitap.com/ )

 

லுக் இட் அப் ஐபோன் செயலிகளுக்கான பிரத்யேக தேடியந்திரம். ஐபேடுகளுக்கான செயலிகளையும் தேடலாம்.உங்கள் தேடலில் உதவுதற்காக அதிகம் தேடப்படும் கீவேர்டுகளும் தேடல் கட்டத்தின் கீழ் கொடுக்கப்பட்டுள்ளன. அவற்றை கிளிக் செயதும் செயலிகளை பார்க்கலாம். அல்லது உங்கள் தேவைக்கான கீவேர்டு மூலமும் தேடலாம்.ஐபோன் அபிமானிகளுக்கான தேடியந்திரம் இது. செயலிக்கான அறிமுகத்தோடு அது இலவசமானதா? என்ற விவரமும் கொடுக்கப்பட்டுள்ளது.செய‌லிகளை பட்டியலிடுவதற்கான பிர‌த்யேக வழிமுறை வைத்திருப்பதாக இந்த தேடியந்திரம் தெரிவிக்கிறது.

 

4.ஆப்கர்ல் (http://www.appcurl.com/ )

 

வண்ணமயமான முகப்பு பக்கத்துடன் வரவேற்கும் ஆப்கர்ல் ஆன்ட்ராய்டு ,ஐபோன் என எல்லா வகையான செயலிகளையும் தேடித்தருகிற‌து. மற்ற தேடியந்திரங்கள் போலவே கீவேர்டு மூலம் தேடலாம் என்பதோடு பொருத்தமான செயலிகளை தேடுவதற்கான வண்ணமயமான வழியும் இருக்கிறது. இதில் உள்ள செயலிகளை அடையாளம் (எக்ஸ்பிலோர்) பகுதியை கிளிக் செய்தால் ஏற்கனவே பட்டியலிடப்பட்டுள்ள செயலிகல் அவற்றின் வகைகளுக்கு ஏற்ப தொகுக்கப்பட்டுள்ளன்.புதிய செயலிகள் பிரப்லமான செயலிகள் அடையாளம் காட்டப்படுவதோடு செயல்கள் அவற்றின் குறிச்சொற்களுக்கு ஏற்பவும் வகைப்படுத்தப்பட்டுள்ளன. குறிச்சொற்கள் பரந்து விரிந்து இருக்கின்றன. இதனால தேடல் நுட்பமாகும் வாய்ப்பிருக்கிறது. செயலிகளுக்கான அறிமுகமும் மிகவும் விரிவாக இருக்கிறது. செயலிகளை பயன்படுத்தியவர்கள் தரும் கருத்துக்களை அறியும் வசதியும் இருக்கிறது. நீங்களும் பயனாளராக இதில் சேர்ந்து கொள்ளலாம். செயலிகளை இந்த தளத்தின் வாயிலாக வாங்கி கொள்ளும் வசதியும் இருக்கிறது.

 

5.அப் எக்ஸ்பிலோரர்(http://www.appexplorer.com/ )

 

 அப் எக்ஸ்பிலோரர் தேடியட்ந்திரம் ஐபோன் மற்றும் ஐபேடு உள்ளிட்ட ஆப்பில் சாதங்களுக்கான செயலிகளை தேடித்தருகிறது. செயலிகளுக்கான வகைகளும் கொடுக்கப்பட்டுள்ளன. பொருத்தமான செயலியை தேடித்தருவதாக உறுதி அளிக்கிறது. நீங்களும் முயன்று பார்க்கலாம்.

 

6. அப்கிராவிட்டி(http://appgravity.com/android-apps?todaysPicks=1 )

 

அப்கிராவிட்டி தளத்தில் தேடாமலே கூட செயலிகளை எளிதாக அடையாளம் காணலாம்.அதற்கேற்ப முகப்பு பக்கத்திலேலே நடுநாயகமாக புதிய செயலிகலின் பட்டியல் கவர்ந்திழுக்கிறது. ஐபோன்,பேஸ்புக்,ஆன்ட்ராய்டு என எல்லாவற்றுக்குமான செயலிகளை பார்க்கலாம்.செயலியின் வகையும் அருகிலேயே குறிப்பிடப்பட்டுள்ளது.அவற்றுக்கான மதிப்பீடும் இருக்கிற‌து.

 

7.அப்ஜிட்டொ (http://www.appszito.com/ )

 

ஆன்ட்ராய்டு ,ஐப்பின்,ஐபேட் என எல்லா வகையான செயலிகளையும் தேடுவதற்கான தேடியந்திரம் அப்ஜிட்டொ. தேடல் கட்டத்தின் கீழேயே எந்த இயங்குதளத்திற்கான செயலி தேவை என தேர்வு செய்து கொள்ளும் வச‌தி இருக்கிற‌து.ஆன்ட்ராய்ட் செயலி தேவையா விண்டோஸ் செயலி தேவையா என குறிப்பிட்டு தேடிக்கொள்ளலாம்.

 

8. யுகுவரி (http://uquery.com/ )

 

மிகவும் எளிமையக தோன்றும் தேடியந்திரம் செயலிக்கான தேடலை மேம்படுத்தி  த‌ருவதாக சொல்கிறது. செயலிகளை அவற்றின் வகைகள் மற்றும் அதிகம் பயன்படுத்தும் தன்மைகேற்ப தேடிப்பார்க்கும் தொகுப்பு வசதியும் இருக்கிறது. இந்த பகுதி அதிகம் உறுத்தாத வகையில் தளத்தின் மேலே இடம்பெற்றுள்ளது. செயலிகளுக்கான செய்திகளையும் இந்த பகுதியில் காணலாம்.

 

 

Advertisements

One response to “உங்களுக்கு தேவையான செயலிகளை தேட உதவும் தேடியந்திரங்கள்.

மறுமொழியொன்றை இடுங்கள்

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out / மாற்று )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out / மாற்று )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out / மாற்று )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out / மாற்று )

Connecting to %s