அறிவியல் சில கேள்விகள்!

1. உங்கள் பார்வையில் அறிவியல் என்றால் என்ன?

2. நீங்கள் முதன் முதலில் அறிவியலில் ஈர்க்கப்பட்டது எப்போது? எப்படி?

3. அறிவியல் கட்டுரைகள் எப்படி இருக்க வேண்டும்?

4. நீங்கள் படிக்க விரும்பும் அறிவியல் சார்ந்த விஷயங்கள் என்ன?

5. அறிவியலால் என்ன பயன்? அறிவியல் கட்டுரைகளை படிப்பதால் என்ன பயன்?

6. அறிவியல் ஆய்வு உலகில் இப்போது என்ன நடக்கிறது என்பதை அறிவ‌தில் நாட்டம் உண்டா?

7.புதிய கண்டுபிடிப்புகளை அறிமுகம் செய்து கொள்வது உங்களுக்கு உற்சாகம் அளிக்குமா?

8. அறிவியல் அறித‌லும் புரிதலும் என்ன செய்யும்?

9. தமிழில் தற்போது அறிவியல் தகவல் வெளியீடு எப்படி உள்ளது?

10. நீங்கள் படித்த மிகச்சிறந்த அறிவியல் கட்டுரை அல்லது புத்தகம்.

அன்புள்ள வாசக நண்பர்களுக்கு , நான் ஏற்கனவே குறிப்பிட்டிருந்தபடி நானும் பத்திரிகையாளர் நண்பர்கள் சிலரும் இணைந்து தமிழில் புதிய அறிவியல் இதழ் ஒன்றை கொண்டு வர திட்டமிட்டுள்ளோம்.

இதழ் என்று குறிப்பிட்டாலும் இது பத்திரிகை அல்ல. புத்தக வடிவில் குறிப்பிட்ட பருவ வெளியீடாக இந்த இதழ் இருக்கும். அதாவது உள்ளடகத்திலும் அது முன்வைக்கும் முழுமையான சித்திர‌த்திலும் புத்தகத்தின் தன்மையை கொண்டிருக்கும். அதே நேரத்தில் எழுத்து நடை மற்றும் வடிவமைப்பில் பத்திரிகையின் தன்மையை கொண்டிருக்கும். ஒரு புத்தகத்தை கையில் வைத்து கொண்டு ஒரு பத்திரிகையை புரட்டுவது போன்ற உணர்வை இது தரும். உள்ளடகத்திலும் இதே அனுபவம் கிடைக்கும்.

அறிவியல் உலகில் இப்போது என்ன நடக்கிறது? சமீபத்தில் என்ன நடந்தது? வருங்காலத்தில் என்ன மாயங்கள் நிகழப்போகின்றன? என்பதை படம் பிடித்து இந்த புத்தக இதழ் விவரிக்கும்.

அறிவியலில் நாட்டம் கொண்டவர்களை உற்சாகத்தில் ஆழுத்தும் வகையில் இந்த புத்தக‌ இதழ் இருக்க வேண்டும் என்பது எங்கள் விருப்பம்.

அறிவியல் என்றால் அறிவியல் மட்டும் அல்லாது பொறியியல் ,தொழில்நுட்பம்,கணிதம் ஏன் பொருளாதாரம் என அறிவின் சகல துறைகளையும் தொட்டுக்காட்டுவதாக இதன் உள்ளடக்கம அமைந்திருக்கும்.

இந்த புத்தக இதழின் மைய நோக்கம் இவை. ஆனால் இதில் என்ன கட்டுரைகள் , தகவல்கள் இடம் பெறப்போகின்றன என்பதை இன்னும் தீர்மானிக்கவில்லை. காரணம் அதை தீர்மானிக்க உதவப்போவது நீங்கள் தான்.

நீங்கள் படிக்க விரும்பும் அறிவியல் கட்டுரைகள் மற்றும் நீங்கள் அறிய விரும்பும் விஞ்ஞான தகவல்களை தேடிப்பிடித்து திரட்சியாக தர வேண்டும் என்பதே எங்கள் விருப்பம். அந்த வகையில் வாசகர்கள் பங்களிப்போடு வாசககள் ஆர்வத்துக்கு தீன் போடுவதாக இது அமைந்திருக்கும். இதற்காக தான் மேலே உள்ள கேள்விகள்.

இந்த கேள்விகளுக்கு பதில் அளிக்க சிறிது நேரம் ஒதுக்கி உங்கள் கருத்துக்களை பகிர்ந்து கொண்டீர்கள் என்றால் இந்த புதிய திட்டத்தை அடுத்த கட்டத்திற்கு கொண்டு செல்ல முடியும். எனவே உங்களிடம் இருந்து ஆர்வத்துடன் பதில்களை எதிர்பார்க்கிறேன்.

இதில் இல்லாத கேள்விகள் இருந்தாலும் நீங்கள் பதில் தரலாம்.பதில்களை விரிவாக தனியே இமெயிலிலும் அனுப்பலாம்.

இந்த புத்தக இதழ் அச்சு வடிவில் ஆனால் முழுக்க முழுக்க இணையத்தின் மூலம் வெளியாக உள்ளது.

அன்புடன் சிம்மன்.

Advertisements

6 responses to “அறிவியல் சில கேள்விகள்!

  • நன்றி நண்பரே.முதல் ஆதரவு குரல் ஊக்கம் அளிக்கிறது. அறிவியல் குறித்த தங்கள் எதிர்பார்ப்புகளை பகிர்ந்து கொள்ளலாமே.

   அன்புடன் சிம்மன்

  • சுவாரஸ்யமான சிந்தனைக்குறிய கேள்வி. நிச்சயம் இந்த கேள்வியும் கருத்தில் கொள்ளப்படும் . நியூட்டன் துவங்கி நவீன அறிவியல் பிதாமகன் ஐச்ன்ஸ்டீன் வரை பலரும் கடவுள் மற்றும் ஆன்மீகம் குறித்து பதில் அளிக்க முற்பட்டுள்ளனர். இந்த கேள்வியை மையமாக கொண்ட தகவல்களும் தேடப்படும்.

   அன்புடன் சிம்மன்

   • கடவுள் துகள் மட்டும் அல்ல ,அறிவியலில் பிரபஞ்சத்தின் தோற்றத்தை விளக்கும் பல விஷயஙகள் இருக்கின்றன. ஆன்மிகம் என்பது நபிக்கை சார்ந்த்தாக கருதப்படுகிறது. அறிவியலோ தரக்ம சார்ந்த்தாக அமைகிறது. ஆன்மிகத்தை முற்றிலும் புறந்தள்ளாமல் அறிவியல் மூலம் புரிந்து கொள்ள முடியுமா?
    ஆனால் வானவியல், முடிவிலலா தன்மை , அணுவுக்குள் இருக்கும் உலகு என்றெல்லாம் போனால் பிரம்மிக்க கூட முடியவில்லை.

    அன்புடன் சிம்மன்

மறுமொழியொன்றை இடுங்கள்

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  மாற்று )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out /  மாற்று )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  மாற்று )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  மாற்று )

w

Connecting to %s