உங்கள் வெப்கேமை பாதுகப்பது எப்படி?

கம்ப்யூட்டரில் இணைக்ககூடிய வெப்கேமிராவை எப்படி எல்லாம் பயன்படுத்தலாம் என நீங்கள் அறிந்திருக்கலாம்.ஆனால் வெப்கேம் வழியே நீங்கள் உளவு பார்க்கப்படும் ஆபத்து இருக்கிறது என்பது உங்களுக்கும் தெரியுமா? இணையம் வழியே நண்பர்களின் முகம் பார்த்தப்படி வீடியோ அரட்டையில் ஈடுபடக்கூடிய வெம்கேம் வசதியை எங்கோ உள்ள விஷமிகள் கைப்பற்றி உங்கள் வீட்டுக்குள் நடக்கும் காட்சிகளை கண்காணிக்கும் அபாயம் இருப்பது தான் திடுக்கிட வைக்கும் நிஜம்.

நமது கம்ப்யூட்டரில் இருக்கும் வெப்கேம் வழியே வேறு யாரோ எப்படி உளவு பார்க்க முடியும் என நீங்கள் குழம்பலாம்.

உங்கள் கம்பயூட்டர் மீது வைரஸ் தாக்குதல் நடத்தப்படுவது சாத்தியம் தானே.இதே போன்ற முறையை கையாண்டு தான் தாக்காளர்கள் உங்கள் வெப்கேமையும் தங்கள் கட்டுப்பாட்டில் எடுத்துக்கொள்ளும் ஆபத்து இருக்கிறது.

வெம்கேம் சாப்ட்வேர் மூலம் மால்வேர்களை புகுத்தி அல்லது வெப்கேமில் உள்ள குறைபாட்டை பயன்படுத்தி என் பல வழிகளில் விஷமிகள் அதை இயக்க முடியும். இப்படி வெப்கேமை தங்கள் கட்டுப்பாட்டில் எடுத்து கொண்டு அதன் வழியே உங்கள் வீட்டில் என்ன நடக்கிறது என உளவு பார்க்க முடியும்.நீங்கள் அறியாமலே உங்கள் வீட்டில் நிகழும் காட்சிகளை படம் பிடித்து பார்த்து விட முடியும். மேலும் பலவிதமான விபரீதங்கள் நிகழலாம்.

ஆக, நீங்கள் வெப்கேம் பயன்படுத்துபவர் என்றால் எச்சரிக்கையாக இருப்பது நல்லது. இமெயில் வாசகங்கள் மூலம் ஏமாற்றி எப்படி நாசாகார வைரஸ்களை டவுன்லோடு செய்ய வைக்கின்றனரோ அதே போலவே வெப்கேம் விஷயத்திலும் உங்கள் கண்ணில் மண்ணைத்தூவி விடுகின்றனர்.

உதாரணத்திற்கு இணையத்தில் உலா வரும் போது திடிரென பிலேஷ் செயல்பாடு ஒன்று திரையில் தோன்றி கிளிக் செய்ய தூண்டும். நீங்களும் அதை கிளிக் செய்து விட்டு குறிப்பிட்ட அந்த இணையதளத்தை பயன்படுத்துவீர்கள். ஆனால், உங்கள் வெப்கேமை படமெடுத்து அனுப்பி வைக்க செய்வதற்கான வைரஸ் விளையாட்டு என்பதை நீங்கள் அறிந்திருக்க மாட்டீர்கள் .விளைவு உங்களுக்கு தெரியாமலே உங்கள் வீட்டு காட்சிகள் படம் பிடிக்கப்பட்டு பார்க்கப்படும்.

வைரஸ் மற்றும் மால்வேர்கள் மூலம் இவ்வாறு நிகழலாம். சில நேரங்களில் வெப்கேம் ஹார்ட்வேரில் உள்ள ஓட்டயை கொண்டும் இவ்வாறு உளவு பார்ப்பது சாத்தியம். குறிப்பிட்ட நிறுவனம் ஒன்றின் வெப்கேமில் இருந்த குறைபாட்டை பயன்படுத்தி அந்நிறுவன வெப்கேம் ஹேக் செய்யப்பட்டு அவற்றில் பதிவான காட்சிகள் எல்லாம் இணையத்தில் பதிவேற்றப்பட்ட சமபவமும் உண்டு. இந்த குறைபாட்டை அம்பலப்படுத்துவதற்காக கூகுலில் உல்க வரைபடத்தின் மீது ஹேக் செய்யப்பட்ட வீடுகளை எல்லாம் சுட்டிக்காட்டி அதில் கிளிக் செய்தால் அந்த வெப்கேம் காட்சிகளை காணும் படி செய்திருந்தனர்.

இது விதிவிலக்கான சம்பவம் என்றாலும் வெப்கேம் பின்னே காத்திருக்கும் கண்ணுக்கு தெரியாத ஆபத்தை உணர்த்தக்கூடியது. எனவே வெப்கேம் விஷயத்தில் எச்சரிக்கையாக இருப்பதே நல்லது. வைரஸ் மூலமே அல்லது வேறு ஏதேனும் வழிகளிலோ உங்கள் வெம்கேம் ஹேக் செய்யப்படாமல் இருக்க என்ன் செய்ய வேண்டும்?

————–

வெப்கேம் தொடர்பான முந்தைய பதிவுகள் சில;

1.உயிர்காத்த வெப்கேம் காட்சி;https://cybersimman.wordpress.com/2010/02/04/webcam-2/

2.கூகுலில் தெரியும் வெப்கேம் காட்சிக‌ள்; https://cybersimman.wordpress.com/2009/04/26/webcam/

Advertisements

மறுமொழியொன்றை இடுங்கள்

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out / மாற்று )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out / மாற்று )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out / மாற்று )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out / மாற்று )

Connecting to %s