கருத்து சுதந்திரத்துக்கு கைகொடுக்கும் கூகுலின் புதிய சேவைகள்.

Google_Digital_Attack_Map_610x413கூகுல் மூன்று புதிய சேவைகளை அறிமுகம் செய்துள்ளது. மூன்றுமே வெகுஜன சேவை இல்லை என்றாலும் முக்கியமானது.
முதல் சேவை பிராஜக்ட் ஷீல்ட் எனும் திட்டத்தின் கீழ் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. இணையத்தில் கருத்து சுதந்திரத்தை கட்டிகாப்பதற்கான சேவையாக இது அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. இந்த சேவையின் கீழ் கூகுல் டினைல் ஆப் சர்வீஸ் என்று சொல்லப்படும் இணைய முற்றுகைக்கு ஆளாகும் தளங்கள் தொடர்ந்து இணையத்தில் நீடிக்க கைகொடுக்கும்.
ஒரு இணையதளம் ஒரே நேரத்தில் பல்லாயிரக்கணக்கானோரால் பார்க்கப்படுவது போன்றதொரு முற்றுகையை ஏற்படுத்தி அந்த தளத்தை வேறு யாரும் பார்க்க முடியாதபடி செய்யும் தாக்குதல் டினைல் ஆப் சர்வீஸ் (டி.ஒ.எஸ்) என்று குறிப்பிடப்படுகிறது.அரசியல் நோக்கத்திற்காகவும் தளங்கள் இப்படி தாக்கப்படலாம்.
இந்த தாக்குதலில் இருந்து மீள இணையதளங்களுக்கு சில காலம் ஆகலாம். ஆனால் அந்த அவகாசத்திற்குள் குறிப்பிட்ட அந்த தளத்தின் செய்தியை முடக்கிவிடலாம்.
இது போன்ற தாக்குதலுக்கு ஆளாகும் தளங்கள் இணைய இருப்பை இழக்காமல் இருக்க வழி செய்வதற்காக கூகுல் அவற்றை தானே ஹோஸ்ட் செய்யும் வச்தியை அறிமுகம் செய்துள்ளது. சோதனை முறையிலான இந்த சேவையை அழைப்பின் பேரில் கூகுல் வழங்குகிறது. ஏற்கனவே பாகிஸ்தானில் உள்ள பலடாரின் மற்றும் கென்யாவில் உள்ள தேர்தல் கண்காணிப்பு சேவை உள்ளிட்ட தளங்களை இதை பயன்படுத்துகின்றன.
கூகுல் உலகம் முழுவதும் சர்வர் பண்ணைகளை அமைத்து தனது இணைய இருப்பை வலுவாக்கி உள்ளது. இப்போது இந்த ஆதார பலத்தை தாக்குதலுக்கு ஆளாகும் தளங்கள் பயன்படுத்தி கொள்ள வழி செய்துள்ளது.

இந்த திட்டம் தொடர்பான நொக்கத்தை கூகுல் பிராஜக் ஷீல்ட் பகுதியில் விரிவாக விளக்கியுள்ளது.: http://projectshield.withgoogle.com/
இரண்டாவது சேவை முதல் சேவையின் நீட்சி என சொல்லலாம்.டிஜிட்ட்ல அட்டாக் மேம் எனும் இந்த சேவையின் மூலம் கூகுல் உலகம் முழுவதும் தாக்குதலுக்கு இலக்காகும் இணையதளங்களை வரைபடத்தின் மீது அடையாளம் காட்டுகிறது. : http://www.digitalattackmap.com/#anim=1&color=0&country=ALL&time=15999&view=map
மூன்றாவது சேவை உலகம் முழுவதும் உள்ள இணைய போராளிகளுக்கானது. கண்காணிப்பு மற்றும் தணிக்கைக்கு உள்ளாகும் நாடுகளில் உள்ளவர்களுக்கு கைகொடுக்கும் சேவை இது. கண்காணிப்புக்கு ஆளாகும் தளங்களை கண்காணிப்பு விழிகள் மீது மண்ணை தூவி பார்க்க இது வழி செய்கிறது. அதாவது தடை செய்யப்பட்ட தளங்களை இதன் வாயிலாக பார்க்கலாம். யூபிராக்ஸி எனும் இந்த சேவைக்காக நீங்கள் உங்கள் இனைய இணைப்பை பகிர்ந்து கொண்டு இணைய சுதந்திரத்துக்கு உதவலாம் என்கிறது கூகுல். :http://uproxy.org/
கூகுல் செயல்படுத்தி வரும் ஐடியா லேப்ஸ் திட்டம் மூலம் இந்த சேவைகள் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. இந்த சேவைகள் பொது நல்ன நோக்கிலானவை மற்றும் இணைய சுதந்திரம் காப்பவை என்பதால் இவை பற்றி அறிந்து கொள்ளுங்கள்; http://www.google.com/ideas/events/

Advertisements

மறுமொழியொன்றை இடுங்கள்

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  மாற்று )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out /  மாற்று )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  மாற்று )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  மாற்று )

w

Connecting to %s