பேஸ்புக் பயன்படுத்த முடியாததால் தற்கொலை செய்து கொண்ட இளம்பெண்.

facebook_laptop_generic_295பேஸ்புக் எந்த அளவுக்கு தாக்கத்தை ஏற்படுத்துகிறது என்பதை உணர்த்தும் திகைக்க வைக்கும் சம்பவம் இது. பேஸ்புக பயன்படுத்த பெற்றோர் தடை விதித்தால் 17 வயதான அந்த இளம்பெண் தனது வாழ்க்கையையே முடித்து கொண்டிருக்கிறார். இந்த சோக சம்பவம் நிகழ்ந்திருப்பது இந்தியாவின் மகாராஷ்டிரா மாநிலத்தில்.
மகாராஷ்டிராவில் உள்ள பர்பானி எனும் இடத்தை சேர்ந்த ஐஸ்வர்யா தஹிவால், இரண்டாம் ஆண்டு கல்லூரி மாணவி. புதன் கிழமை இரவு பேஸ்புக் பயன்படுத்த ஐஸ்வர்யா பெற்றோர் அனுமதி கேட்டிருக்கிறார். பெற்றோரோ , அவர் பேஸ்புக்கிலும் ,போனிலும் நேரத்தை வீணடித்து படிப்பை கவனிக்கவில்லை என்று கடிந்து கொண்டுள்ளனர். பேஸ்புக் பயன்பாட்டிற்கும் அனுமதி மறுத்துள்ளனர்.

மறுநாள் ஐஸ்வர்யா பிணமாக கண்டெடுக்கப்பட்டார். பேஸ்புக்கை பயன்படுத்த முடியததால் அவர் தற்கொலை செய்து கொண்டுள்ளார். “ பேஸ்புக் என்ன அத்தனை மோசமானதா? இது போன்ற கட்டுப்பாடு உள்ள வீட்டில் என்னால் இருக்க முடியாது.பேஸ்புக் இல்லாமல் என்னால் வாழ முடியாது’ என்று அவர் தற்கொலைக்கான காரணத்தை எழுதி வைத்து விட்டு தற்கொலை செய்து கொண்டுள்ளார்.

மகளின் இந்த விபரீத முடிவால் ஐஸ்வர்யா பெற்றோர்கள் அதிர்ச்சி அடைந்துள்ளனர். ’ இதை எங்களால நம்ப முடியவில்லை. இன்னும் அதிர்ச்சியாக இருக்கிறது. அவளை படிப்பில் கவனம் செலுத்த தான் சொன்னோம்.  இப்படி ஒரு விபரீத முடிவு எடுப்பாள் என நினைத்து கூட பார்க்கவில்லை’ என ஐஸ்வர்யா தந்தை சுனில் தஹிவால் வேதனையோடு கூறியுள்ளார்.

பேஸ்புக் பழக்கம் மோகமாக மாறுவதற்கு பல உதாரணங்கள் இருக்கின்றன. இது பல விபரீதங்களுக்கு வித்திடலாம் என்பதற்கான வேதனையான உதாரணம் இந்த சம்பவம்.
பேஸ்புக் பயன்பாட்டில் பெற்றோர் கட்டுப்பாட்டைவிட சுயகட்டுப்பாடே சிறந்தது என்பதை பயனாளிகள் உணர்ந்து கொண்டால் நல்லதஉ

———–

http://blogs.wsj.com/indiarealtime/2013/10/25/indian-teen-barred-from-facebook-kills-herself/


http://www.ndtv.com/article/cities/prevented-from-using-facebook-maharashtra-girl-ends-life-436973

Advertisements

4 responses to “பேஸ்புக் பயன்படுத்த முடியாததால் தற்கொலை செய்து கொண்ட இளம்பெண்.

 1. வயதின் வேகம் அவரை இவ்வாறு செய்ய தூண்டியிருக்கலாம், பக்குவப்படாத இளசுகளிடம் பக்குமுள்ளவர்கள் (தாய், தந்தையர்) பார்த்து தான் பேச வேண்டியிருக்கிறது. இது சமுதாயத்தினருக்கு பெருத்த கவலையும், வேதனையும் தரக்கூடிய விஷயம். இளைஞர் தங்களை திறமைக்குகேற்ப வாழ கற்றுக்கொள்ள வேண்டும். வீழ்ந்து விடுவதற்கு வாழ்வல்ல, வாழ்ந்து காட்டவே வாழ்க்கை.

  • மிகச்சரியான கருத்து நண்பரே. பெற்றோர்களும் கவனமாக இருக்க வேண்டும். இளைஞ்ர்களும் விவேகத்துடன் இருக்க வேண்டும்.

 2. அன்பின் சிம்மன் – இளைய சமுதாயத்திடம் புரிதலுணர்வு குறைவாகவே இருக்கிறது – அதே சமயம் பெற்றவர்களும் பிள்ளைகளின் உணர்வுகளை புரிந்து கொள்வதோ மதிப்பதோ கிடையாது. என்ன செய்வது – இருவரையும் இணைக்கும் பாலம் எங்கே ? இருவருமே சிந்திக்க வேண்டும்.

  நல்வாழ்த்துகள் – நட்புடன் சீனா

  • ஆம் ,உண்மை தான். பேஸ்புக் பகிர்வு கலாச்சாரம் பின் உள்ள தேவை மற்றும் அது பூர்த்தி செய்யும் உளவியம்,சமூக பயன்பாடு ஆயு செய்யப்பட வேண்டும். பேஸ்புக்கை நிந்திப்பதோ ,கொண்டாடுவதோ தீர்வாகாது.

   அன்புடன் சிம்மன்

மறுமொழியொன்றை இடுங்கள்

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  மாற்று )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out /  மாற்று )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  மாற்று )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  மாற்று )

w

Connecting to %s