இணையத்தில் காப்புரிமை பற்றி நீங்கள் அறிந்திருக்க வேண்டிய 5 அம்சங்கள்.

1mythiஇணையத்தில் காப்புரிமை பற்றி யாரும் கவலைப்படுவதாக தெரியவில்லை.புகைப்படங்களையும், தகவல்களையும் அனுமதி இல்லாமல் பயன்படுத்துவது பலருக்கு வழக்கமாக இருக்கிறது. இணையத்தில் பார்க்கும் மற்றும் படிக்கும் சுவாரஸ்யமான தகவல்களை வலைப்பதிவிலும் பேஸ்புக் கிலும் வெளியிடுவது இணையவாசிகளுக்கு இயல்பாக இருக்கிறது. ஒரு சிலர் கட் காபி பேஸ்ட் முறையில் மற்றவகள் பதிவுகளையும் தகவல்களையும் தங்களுடையது போல பயன்படுத்தி கொள்கின்றனர் என்றாலும் எல்லோருமே இத்தகைய காப்புரிமை திருட்டில் ஈடுபடுவதில்லை.ஆனால் தெரிந்து செய்தாலும் சரி தெரியாமல் செய்தாலும் சரி காப்புரிமை மீறல் என்பது மீறல் தான்.சில நேரங்களில் அறியாமல செய்யும் காப்புரிமை மீறில் பிரச்ச‌னையை கூட ஏற்படுத்தலாம்.

எனவே இணையத்தில் காப்புரிமை தொடர்பான முக்கிய அம்சங்களை அறிந்திருப்பது நல்லது. லீகல்123.காம் எனும் இணையதளம் இணைய காப்புரிமை தொடர்பாக இன்போகிராம் எனப்படும் வரைபட சித்திரத்தை வெளியிட்டுள்ளது. காப்புரிமை தொடர்பாக பரவலாக நிலவும் ஐந்து தவறான க‌ருத்துக்களை குறிப்பிட்டு அதற்கான விளக்கத்தையும் இந்த வரைபடத்தில் வழங்கியுள்ளது.

காப்புரிமை குறித்து ஐந்து மாயைகளும் அதற்கான விளக்கங்களும் என்னும் தலைப்பிலான இந்த வ‌ரைபடத்தின் (http://legal123.com.au/how-to-guide/copyright-infringement-myths-vs-facts-infographic/ ) விவரம் வருமாறு: 

1. இணையத்தில் வெளியானவுடன் ஒரு படைப்பின் காப்புரிமை பறிபோய்விடுகிறது.

இது முற்றிலும் தவறான கருத்து. இணையத்தில் ஒருவர் வெளியிடும் தகவல்,புகைப்படம்,வீடியோ மற்றும் இசையை நீங்கள் அனுமதி இல்லாமல் பயன்ப‌டுத்தவோ நகல் எடுக்கவோ முடியாது.அந்த படைப்புகள் அவற்றை உருவாக்கியவர்களுக்கே சொந்தமானது. படைப்புகளை உருவாக்கியது முதல் அவை மீதான காப்புரிமையை அவர்கள் ஒருபோதும் இழப்பதில்லை.

2. உருவாக்கியவரின் பெயரை குறிப்பிட்டு அல்லது அவரது படைப்புக்கு இணைப்பு கொடுத்து விட்டால் அதை பயன்படுத்திக்கொள்ளலாம்.

 இல்லை,ஒருவரது அனுமதி பெறாமல் அவர் படைப்பை பய்னபடுத்த முடியாது.ஒரு சில இணையதளங்களில் இணைப்பு அல்லது உருவாக்கியவர் பற்றி தகவல கொடுத்து பயன்படுத்தலாம் என குறிப்பிடப்பட்டிருக்கும். ஒருவரது பாஇப்பை பயன்படுத்தும் போது அந்த தளத்தில்இது போன்ற அறிவிப்பு இருக்கிறதா என பார்த்து கொள்ளுங்கள். இல்லை என்றால் முறைப்படி அனுமதி கோருங்கள். எப்படியும் முறைப்பட அனுமதி பெற்று பயன்படுத்துவது எப்போதும் நல்லது.

3.ஒரு படைப்பை மாற்றி அல்லது அதன் ஒரு பகுதியை மட்டுமே ப‌யனப்டுத்துவது காப்புரிமை மீறல் இல்லை.

 இதுவும் காப்புரிமை மீறல் தான்.ஒரே விதிவிலக்கு ஒரு படைப்பு குறித்து நீங்கள் விமர்சனம் அல்லது அறிமுகம் எழுதும் போது இவ்வாறு பயன்படுத்தலாம்.இது ஏற்றுக்கொள்ள கூடியதாக கருதப்படுகிறது.அதே போல கல்வி சார்ந்த விஷயங்களிலும் இவ்வாறு பயன்படுத்துவது ஏற்றுகொள்ளப்படுவதாக கருதப்படுகிறது.

4.இணையதளத்தில் காப்புரிமை அடையாளம் அல்லது அற்ஃபிவிப்பு இல்லாவிட்டால அதில் உள்ளவ‌ற்றை த‌டையின்றி பயன்படுத்தலாம்.

 காப்புரிமை பற்றிய அறிவிப்பை வெளியிட்டு தான் காப்புரிமை பாதுகாப்பு கோர வேண்டும் என்றில்லை.ஒரு ப‌டைப்பு உருவாக்கப்பட்டவுடன் அதற்கு காப்புரிமை உண்டாகி விடுகிறது. காப்புரிமை அறிவிப்பு வெளியிடாததால் அந்த உரிமையை உருவாக்கிய்வர் இழந்த்தாக ஆகிவிடாது. எனவே காப்புரிமை அடையாளம் இல்லாவிட்டாலும் அனுமதி இல்லாமல் பயன்படுத்துவது தவறு தான். அதே போல் காப்புரிமைய பதிவு செய்வது கட்டாயம் இல்லை என்றாலும் முக்கிய படைப்புகள் என்றால் உருவாக்கியவர் காபுரிமை பதிவு பெறுவது நல்லது.இது கூடுதல் பாதுகாப்பு தரும்.

5.பொருளாதார நோக்கில் பயன் பெறாத வரையில் ஒருவரது ப‌டைப்பை பயன்ப‌டுத்தலாம்.

பொதுவாக இவ்வாறு கருதப்பட்டாலும், லாபம் அடைந்தாலும் சரி இல்லாவிட்டாலும் சரி ஒருவரது படைப்பை அனுமதி இல்லாமல் பயன்படுத்திபால் அது மீறலே.படைப்பை உருவாக்கிய்வருக்கு நீங்கள் விளம்ப்ரம் தேடித்தருவ‌தாக சொல்லக்கூடிய வாதமும் ஏற்றுக்கொள்ள தக்கதல்ல.

இங்கு ப‌டைப்பு என்னும் சொல் இனைய கட்டுரை,புகைப்படம்,பாட‌ல்,வார்த்தைகள்,குறிச்சொற்கள் (டேக் லைன்) போன்ற எல்லாவற்ரையும் குறிக்கும்.

ஆக நீங்கள் உங்களை அறியாமலேயே எப்போதாவது காப்புரிமை மீறலில் ஈடுபடலாம். இதனால் சிக்கலுக்கும் ஆளாகலாம்.எனவே காப்புரிமை குறித்த இந்த அடிப்படை விஷய்ங்கலை அறிந்திருப்பது நல்லது.அதோடு ஒரு படைப்பை உருவாக்கியவரின் முன் அனுமதி பெற்று அதை பயன்படுத்துவது தான் எப்போதும் சிறந்த ந‌டைமுறை. நீங்கள் படைப்பாளியாக இருந்தாலும் அதை தான் எதிர்பார்ப்பீர்கள்.

 

Advertisements

3 responses to “இணையத்தில் காப்புரிமை பற்றி நீங்கள் அறிந்திருக்க வேண்டிய 5 அம்சங்கள்.

  1. அன்பின் சிம்மன் -தகவல் பகிர்வினிற்கு நன்றி – காப்புரிமையைப் பொறுத்தவரை எச்சரிக்கையாக இருப்பது நல்லது. எச்சரிக்கைக்கு நன்றி – நல்வாழ்த்துகள் – நட்புடன் சீனா

  2. அன்பின் சிம்மன் -தகவல் பகிர்வினிற்கு நன்றி – அன்பின் சிம்மன் -தகவல் பகிர்வினிற்கு நன்றி – காப்புரிமையைப் பொறுத்தவரை எச்சரிக்கையாக இருப்பது நல்லது. எச்சரிக்கைக்கு நன்றி – நல்வாழ்த்துகள் – நட்புடன் சீனா

    • மகிழ்ச்சி நண்பரே.ஆனால் இனையத்தில் நம்முடைய காப்புரிமை படும் பாட்டை நினைத்தால் தான் கஷ்டமாக் இருக்கிரது.

      அன்புடன் சிம்மன்

மறுமொழியொன்றை இடுங்கள்

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  மாற்று )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out /  மாற்று )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  மாற்று )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  மாற்று )

w

Connecting to %s