இணையத்தில் அடிக்கடி ஏற்படும் விபத்து கிளாஸ்பைட்ஸ் தளத்திற்கும் ஏற்பட்டிருக்கிறது. ஆங்கிலம் கற்க உதவி வந்த இந்த இணையதளம் மூடப்பட்டு விட்டது. ஆங்கிலம் கற்க அருமையான இணையதளம் எனும் தலைப்பில் இந்த தளம் பற்றிய அறிமுகத்தை 2011 ஜூலை மாதம் எழுதியிருந்தேன். இன்றளவும் தேடியந்திரங்கள் மூலமாக இந்த இணைப்பை பலர் வந்தடைகின்றனர். ஆனால் ஏமாற்றம் தரும் வகையில் இந்த தளம் தற்போது மூடப்பட்டது விட்டது. கிளாஸ்பைட்ஸ் இணைப்பை கிளிக் செய்தால் ,வெற்று விளம்பர இணைப்புகளை கொண்ட தளம் தான் வெறுப்பேற்றுகிறது.
இணையத்தில் கிளாஸ்பைட்ஸ் தடயத்தை தேடிச்சென்றாலும் அதிக சுவடுகள் இல்லை.
பின்னர் , கிளாஸ்பைட்சின் பேஸ்புக் பக்கம் கண்ணில் பட்டது. அதில் பார்த்தால் இந்த தளத்தின் ஆங்கில பாடங்கள் யுடேமி தளத்திற்கு மாற்றப்பட்டு விட்டதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இனி யுடேமியில் கற்றுக்கொள்ளலாம் என்றும் குறிப்பிட்டுள்ளது.
யுடேமி இணையம் வழி கல்வியில் முன்னணியில் இருக்கிறது. எனவே கிளாஸ்பைட்ஸ் பாணியில் கற்க விரும்புகிறவர்கள் இந்த தளத்தை பயன்படுத்தலாம். ஆனால் இது முற்றிலும் இலவசமானது இல்லை. இலவசம் கட்டனம் இரண்டும் கலந்தது. ஆனால் ஏன் எல்லாவற்றையும் இலவசமாக எதிர்பார்க்க வேண்டும். கற்று கொள்வதென்றால் கட்டணம் செலுத்தலாமே. ;https://www.udemy.com/draft/58483/
–
பி.கு: சைபர்சிம்மன் கையேட்டிற்கான தயாரிப்பு முயற்சி பற்றி குறிப்பிட்டிருந்தது நினைவில் இருக்கலாம். இதற்காக பழைய பதிவுகளை எல்லாம் படித்து அப்டேட் செய்து கொண்டிருக்கிறேன். தொடர்ந்து உயிர்ப்புடன் இருக்கும் தளங்கள், மற்றும் இப்போதும் பயன்படகூடிய தளங்களை மட்டுமே தொகுப்பில் சேர்க்க விரும்புகிறேன். இந்த முயற்சியின் போது தான் கிளாஸ்பைட்ஸ் காணாமல் போனது தெரிய வந்தது. இப்போதும் கூட இந்த இணைப்பை ஆர்வத்துடன் தேடி வருபவர்கள் ஏமாறக்கூடாது என்பதற்காக இந்த பதிவு.
அன்புடன் சிம்மன்.
Your Email Newsletter looks like this:
Pls correct.
Normal 0 false false false MicrosoftInternetExplorer4 /* Style Definitions
*/ table.MsoNormalTable {mso-style-name:”Table Normal”;
mso-tstyle-rowband-size:0; mso-tstyle-colband-size:0; mso-style-noshow:yes;
mso-style-parent:””; mso-padding-alt:0in 5.4pt 0in 5.4pt;
mso-para-margin:0in; mso-para-margin-bottom:.0001pt;
mso-pagination:widow-orphan; font-size:10.0pt; font-family:”Times New
Roman”; mso-ansi-language:#0400; mso-fareast-language:#0400;
mso-bidi-language:#0400;} இணையத்தில் அடிக்கடி ஏற்படும் விபத்து கிளாஸ்பைட்ஸ்
தளத்திற்கும் ஏற்பட்டிருக்கிறது. ஆங்கிலம் கற்க உதவி வந்த இந்த இணையதளம்
மூடப்பட்டு விட்டது. ஆங்கிலம் கற்க அருமையான இணையதளம் எனும் தலைப்பில் இந்த
தளம் பற்றிய […]
மேலும் வாசிக்க
மன்னிக்கவும், மிகவும் முயனறும் இதை சரிசெய்ய இதுவரை முடியவில்லை. முயற்சிக்கிறேன்.
அன்புடன் சிம்மன்
all the best for the magazine
thank u very much