கூகுல் கண்ணாடியால் அபராதம்.

ceceiliaஅமெரிக்காவின் சிசிலியா அபடே , போக்குவரத்து விதிமீறலுக்காக அபராதம் பெற்று வரலாற்றில் இடம் பெற்றிருக்கிறார். அதாவது இணைய வரலாற்றில். ஏனெனில் அவருக்கு அபராதம் விதிக்கப்பட்ட காரணம் , கூகுல் கண்ணாடி அணிந்து காரோட்டியதாக குறிப்பிடப்பட்டுள்ளது.

கூகுல் கண்ணாடி ( கூகுல் கிலாஸ்) பற்றி நீங்கள் கேள்விபட்டிருப்பீர்கள். இந்த கண்ணாடியை கூகுல் முதல் கட்டமாக தேர்ந்தெடுக்கப்பட்ட சிலருக்கு வழங்கியிருக்கிறது. அவர்கள் கூகுல் கண்ணாடி அணிந்து,அதன் பயன்பாடு மற்றும் சாத்தியங்களை பரிசோதித்து வருகின்றனர்.இவர்கள் கூகுல் கண்ணாடி ஆய்வாளர்கள் என குறிப்பிப்படுகின்றனர்.

சிசிலியாவும் இத்தகைய ஆவாளிர்களில் ஒருவர். சாண்டியாகோ நிறுவனம் ஒன்றில் பணியாற்றி வரும் சிசிலியா சமீபத்தில் கலிபோர்னியாவில் காரோட்டி சென்ற போது போக்குவரத்து அபராத சீட்டு பெற்றிருக்கிறார். அவர் செய குற்றங்கள், 65 கி.மீ வேகத்துக்கு மேல் சென்றது மற்றும் கூகுல் க்ண்ணாடி அணிந்து சென்றது. கூகுல் கண்ணாடி அணிந்து காரோட்டியத்ற்காக அபராதம் என போக்குவரத்து காவலர் குறிப்பிட்டுள்ளார்.

இந்த செய்தியை சிசிலியா தனது கூகுல் பக்கத்தில் பகிர்ந்து கொண்டு கூகுல் கண்ணாடி அணிந்து காரோட்டுவது குற்றமா? என கேட்டுள்ளார். அநேகமாக வருங்காலத்தில் இந்த கேள்வி பல முறை கேட்கப்படலாம். கூகுல் கண்ணாடி பயன்பாடு இது போன்ற மேலும் பல கேள்விகளை எழுப்பலாம்.

இப்போதைக்கு கூகுல் கண்ணாடியால் முதல் அபராத சீட்டு பெற்றவர் எனும் பெருமை சிசீலியாவுக்கு கிடைத்திருக்கிறது. கூகுல் கண்ணாடி வரலாற்றில் அவருக்கு சின்ன இடம் நிச்சயம் உணடு.

சிசீலியாவின் கூகுள் பிலஸ் பக்கம்.https://plus.google.com/+CeciliaAbadie/posts

கூகுல் கண்ணாடி அனுபங்கள் தொடர்பாக அறிய; https://plus.google.com/s/%23throughglass

மறுமொழியொன்றை இடுங்கள்

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  மாற்று )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  மாற்று )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  மாற்று )

Connecting to %s