பேஸ்புக் நிறுவனருக்கு எதிராக போராடும் மனிதர்.

zuckerberg-640x426மைக்ரோசாப்ட் அதிபர் பில் கேட்சுக்கு கூட அப்படி ஒரு இணையதளம் இல்லை. ஆப்பில் பிதாமகன் ஸ்டீவ் ஜாப்சுக்கு கூட கிடையாது. ஆனால் பேஸ்புக் நிறுவனர் மார்க் ஜக்கர்பர்கிற்காக ஒரு  பிரத்யேக இணையதளம் உருவாக்கப்பட்டுள்ளது.

ஜக்கர்பர்கிற்காக என்றே ஒரு தளம் என்றவுடன் அவரை கொண்டாடும் நோக்கத்திலானது என்று நினைத்து விட வேண்டாம்! ஜக்கர்பர்க் பைல்ஸ் (http://zuckerbergfiles.org/ ) எனும் அந்த தளம் பேஸ்புக் நிறுவனரை விசாரணை கூண்டில் ஏற்றுவதற்கானது. விசாரணை என்பது கொஞ்சம் கடினமான சொல் . உண்மையில் இந்த தளத்தின் நோக்கம் ஜர்க்கர்பர்கை ஆய்வுக்குள்ளாக்குவது.

ஜக்கர்பர்க் பற்றி ஆய்வு செய்ய விரும்பினால் என்ன தேவை? அவர் என்ன எல்லாம் சொன்னார் ,சொல்லி வருகிறார் என்று தெரிய வேண்டும் அல்லவா? ஆதை தான் இந்த தளம் செய்கிறது.

பேஸ்புக் நிறுவனர் என்ற முறையில் ஜக்கர்பர்க் இது வரை பேசிய பேச்சுக்கள் , அளித்த பேட்டிகள் வெளியிட்ட செய்தி குறிப்புகள் எல்லாவற்றையும் இந்த தளம் தொகுத்து வைத்திருக்கிறது. இவ்வாறு ஜக்கர்பர்க தொடர்பாக நூற்றுக்கும் மேற்பட்ட கோப்புகள் இந்த தளத்தின் தொகுப்பில் இருப்பதாக குறிப்பிடப்பட்டுள்ளது. ஜக்கர்பர்கின் பதிவுகளும் இதில் அடங்கும்.

இவை அனைத்துமே ஜக்கர்பரக் பொது மேடைகளில் பகிர்ந்து கொண்டவை. இணையத்தில் பொதுவெளியில் இருப்பவை. இவை அனைத்தும் ஒரே இடத்தில் எளிதாக தேடப்படக்கூடிய வகையில் இந்த தளத்தில் தொகுத்து வைக்கப்பட்டுள்ளன. முழு அள்விலான தொகுப்பு என குறிப்பிடப்பட்டுள்ளது. அதாவது , ஜக்கர்பர்கின் பேட்டி என்றால் அதற்கான முழு வரி வடிவம், பேட்டி என்றால் எப்போது பேசினார், என்ன குறிப்பிட்டார் என்பது போன்ற துணை விவரங்கள் அனைத்தும் இருக்கின்றன. குறிப்பிட்ட பேட்டி அல்லது பேச்சின் நோக்கத்தை புரிந்து கொள்ள கூடிய மெட்டா டேட்டா எனும் மேலதிக விவரங்களும் தொகுப்பில் உள்ளன.

ஜக்கரபர்கை ஆய்வுக்கு உட்படுத்த விரும்புகிறவர்களுக்கு தேவையான எல்லா தகவல்களையும் இந்த தளம் வழங்கும். தனியே கோரிக்கை சமர்பித்து இந்த வசதியை பயன்படுத்த வேண்டும்.

ஜக்கர்பர்க் என்ன ஆய்வு செய்யப்படும் அளவுக்கு பெரிய நபரா என்று கேட்கலாம். ஜக்கர்பர்க் பெரிய நபரா ? என்பது வேறு விஷயம். ஆனால் பேஸ்புக் பெரிய தளம் !. அந்த காரணத்தினால் ஜக்கர்பர்க் ஆய்வுக்குட்படுத்தப்பட வேண்டிய நபர். அப்படி தான் மைக்கேல் ஜிம்மர் சொல்கிறார்.

யார் இந்த ஜிம்மர்!

அமெரிக்காவின் விஸ்கான்சின் பல்கலைகழகத்தில் ஸ்கூல் ஆப் இன்பர்மேஷன் ஸ்டடீஸ் உதவி பேராசிரியர் ஜிம்மர். இவர் தான் ஜக்கர்பர்க் பைல்ஸ் இணையதளத்தை அமைத்திருக்கிறார். பேஸ்புக் நிறுவனரும்,சி.இ.ஓவுமானஜக்கர்பர்கின் அனைத்து பொது கருத்துக்களையும் தேடக்கூடிய டிஜிட்டல் கோப்புகளாக இந்த தளத்தை இவர் அமைத்திருப்பதாக பாஸ்ட் கம்பெனி (http://www.fastcompany.com/3020831/most-creative-people/the-man-turning-the-privacy-tables-on-mark-zuckerberg ) வர்ணித்துள்ளது.

பேஸ்புக்கிறகு எதிராக அந்தரங்க மேஜையை ஜிம்மர் திருப்பி போட்டிருப்பதாகவும் இந்த இதழ் பாராட்டியுள்ளது.

எனக்கும் இந்த கட்டுரைக்கும் என்ன சம்பந்தம்?

எனக்கும் இந்த கட்டுரைக்கும் என்ன சம்பந்தம்?

குடியிருக்கிற வீட்டை இடிப்பது என்றால் என்ன என்று சேட்டுக்கு காட்டுவோம் ‘ என்பது போல நாயகன் படத்தில் வேலுநாயக்கர் பேசும் வசனம் வரும் அல்லவா? அதே போல தான்,

’உங்கள் தகவல்கள் எல்லாம் தோண்டி எடுக்கப்பட்டு ஆய்வுக்குட்படுத்தப்பட்டால் எப்படி இருக்கும் என்பதை ஜக்கர்பர்கிற்கு காட்ட விரும்புவதாக ஜிம்மர் பாஸ்ட் கம்பெனிக்கு அளித்துள்ள பேட்டியில் குறிப்பிட்டுள்ளார்.’ நீங்கள் நினைத்து பகிர்ந்து கொண்டதற்கு மாறாக தகவல்கள் பயன்படுத்தப்பட்டால் எப்படி இருக்கும் என்பதையும் அவருக்கு புரிய வைத்தால் கொஞ்சம் வேடிக்கையாக இருக்கும் என்றும் கூறியுள்ளார்.

விஷயம் இது தான், பேஸ்புக்கில் நாம் எல்லோரும் தகவல்களை பகிர்ந்து கொள்கிறோம். அந்த தகவல் சுரங்கத்தை வைத்து கொண்டு பேஸ்புக் கோடிகளை சம்பாதிக்கிறது. பயனாளிகளின் தகவல்களை தேடி ரகம் பிரித்து விளம்பர நிறுவனங்களுக்கு விற்கிறது. இதில் பயனாளிகளின் அந்தரங்கம் பாதிப்புக்குள்ளாகிறது என்பது தான் 21 ம் நூற்றாண்டின் மிகப்பெரிய பிரச்சனை.

பேஸ்புக் பயனாளிகள் தங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளும் தனிப்பட்ட விஷயங்கள் பேஸ்புக்கிறகு சொந்தமாக இருக்கிறது. அந்த தகவல்களை தோண்டி எடுத்து , ஆய்வு செய்து பயன்படுத்தி கொள்கிறது பேஸ்புக்.

இதையே பேஸ்புக் நிறுவனருக்கு செய்து பார்ப்போமே என்கிறார் ஜிம்மர். இது ஏதோ விளையாட்டுத்தனமான நோக்கமோ அல்லது ஜக்கர்பர்க் மீது பொறாமை கொண்ட செயலோ அல்ல. இந்த காலத்திற்கான தார்மீக கேள்வி.

பேஸ்புக் வசம் பயனாளிகளின் அந்தரங்க தகவல்கள் குவிந்து கொண்டே வரும் நிலையில் அவற்றை பேஸ்புக் எப்படி கையாள்கிறது என்பது எல்லோருக்கும் முக்கியமானதாகிறது. அதை தெரிந்து கொள்ள ஜக்கர்பர்கிடம் நேரடியாக கேள்வி கேட்டு பதில் பெறுவது சாத்தியமல்ல. அவர் சொல்லும் பதில் திருப்திகரமாக இருக்க போவதில்லை. தவிர, அவர் சொல்வது தான் உண்மை என எப்படி நம்புவது.

பேஸ்புக் நோக்கில் தான் அவர் பதில் சொல்லப்போகிறார். பயனாளிகள் அந்தரங்கம் பற்றி அவருக்கு என்ன கவலை?

எனவே தான் பேஸ்புக் நிறுவனர் பொது வெளிகளில் என்ன சொல்கிறார் என்பதை கண் கொத்தி பாம்பாக கவனித்து அதன் உள்ளர்த்தங்களை தேடி புரிந்து கொள்ள வேண்டியிருக்கிறது. இத்தகைய ஆய்வுக்கு உதவி செய்வது தான் ஜக்கர்பர்க் பைல்ஸ் தளத்தின் நோக்கம் என்கிறார் ஜிம்மர்.

பேஸ்புக் நிறுவனரின் உரையாடல்களில் அந்தரங்கம் என்ற வார்த்தைக்கு பதிலாக, கட்டுப்பாடு மற்றும் அணுக முடிவது போன்ற வார்த்தைகளே அதிகம் இடம் பெறுவதை சுட்டிக்காட்டும் ஜிம்மர் , பேஸ்புக் நிறுவன ஊழியர்களிடம் பேசும் போதும் அவர்கள் மிகவும் கவனமாக அந்தரங்கம் என்ற வார்த்தையை தவிர்ப்பதாகவும் சொல்கிறார்.

பேஸ்புக் பகிர்வுகள் ஒரு நிறுவனத்தின் கட்டுப்பாட்டில் இருக்கும் நிலையில் அது தனிமனிதர்களுக்கு ஏற்படுத்தக்கூடிய பாதிப்புகளை புரிந்து கொள்வது அவசியம்தானே.

 

பி.கு: இந்த பதிவு பற்றி கொஞ்சம் தன்னிலை விளக்கம்; கொஞ்சம் தற்பெருமை என்றும் வைத்து கொள்ளுங்களேன். மேக் யூஸ் ஆப் தளத்தில் இன்றைய இனையதளங்கள் பகுதியில் ஜக்கர்பர்க் பைல்ஸ் பற்றி அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. இந்த பகுதியில் பார்க்கும் போது இதுவும் வழக்கமான இணையதளம் போல தோன்றும். அதாவது இந்த தளத்தின் உண்மையான நோக்கம் மற்றும் முக்கியத்துவம் குறித்து சட்டென விளங்கவில்லை. ஆனால் , ஜக்கர்பர்க் பைல்ஸ் தளத்திற்கு போய் பார்த்து விட்டு ,அதில் இருந்து பாஸ்ட் கம்பெனி செய்தி மற்றும் அர்ஸ் டெக்னிகா செய்தி இணைப்புகளை படிக்கும் போது தான் இந்த தளத்தின் பரிமானம் புரிகிறது. அதை தான் பதிவாக்கி இருக்கிறேன்.

 

பி கு.2; பேஸ்புக் போன்ற சமூக தளங்களில் பகிரப்படும் தகவல்களின் அந்தரங்கம் நம் காலத்தின் முக்கியமான பிரச்சனை என்பதால் , இந்த பதிவை தயவு செய்து உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொண்டு பரிந்துரையுங்கள்.

 

பி.கு 3: நம்மூரில் உள்ள ஆய்வு மாணவர்கள் பேஸ்புக் பயன்பாடு குறித்த ஆய்வை மேற்கொள்ளலாம். இங்கு பயனாளிகளும் அதிகம். பாதிப்பும் அதிகம்.

 

பி.கு4: விஸ்கான்சின் பல்கலையின் ஆதரவுடன் இந்த தளம் செய்லப்டுகிறது. தகவல்கள் டிஜிட்டல் காமென்ஸ் முறையில் பகிரப்படுகிறது.

பி.கு5 ; பேஸ்புக் தொடர்பாக இது எனது 50 வது பதிவு.

Advertisements

மறுமொழியொன்றை இடுங்கள்

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  மாற்று )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out /  மாற்று )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  மாற்று )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  மாற்று )

w

Connecting to %s