மோடிக்கு எதிராக டிவிட்டரில் குட்டிக்கதை

modi long nose copyஎந்த நிகழ்ச்சியிலும் பேசினாலும் குட்டி கதை சொல்லும் பழக்கம் தமிழக முதல்வர் ஜெயலலிதாவுக்கு உண்டு. நடிகர் ரஜினிகாந்தும் பெரும்பாலான மேடைகளில் குட்டி கதை சொல்வது வழக்கம். திமுக தலைவை கருணாநிதி பற்றி சொல்லவே வேண்டாம். கதைக்கு கதையாலேயே பதில் சொல்லும் திறமை அவருக்குண்டு.

மேடையில் பேசும் போது சொல்ல வந்த செய்தியை கதையாக சொல்லும் பழக்கத்தை நமது தலைவர்கள் பலரிடம் பார்க்கலாம். ஆனால் காங்கிரஸ் பொதுச்செயலாளரரும் மத்திய பிரதேச முன்னாள் முதல்வருமான திக்விஜய் சிங் , டிவிட்டரில் குட்டிக்கதை சொல்லி இருக்கிறார். குஜராத் முதல்வரும் பாரதிய ஜனதா பிரதமர் வேட்பாளருமான நரேந்திர மோடியை விமர்சிக்கும் வகையில் கிண்டலாக இந்த கதையை சொல்லியிருக்கிறார்.

இணைய பயன்பாட்டை பொறுத்தவரை மற்ற இந்திய தலைவர்களை விட மோடி பல மைல் தூரம் முன்னிலையில் இருக்கிறார். மோடியின் இணைய செல்வாக்கும் மற்ற தலைவர்கள் பொறாமை படும் படி தான் இருக்கிறது. மோடியின் இந்த இணைய செல்வாக்கிற்கு காங்கிரஸ் தாமதமாக விழித்து கொண்டு பதிலடி கொடுக்க முயன்று வருகிறது. காங்கிரஸ்  சார்பில் மோடியோடு இணையத்தில் மல்லு கட்டுபவர்களில் திக்விஜய் சிங் முக்கியமானவர். சும்ம சொல்லக்கூடாது மனிதர் டிவிட்டர் ஊடகத்தின் தன்மையை சரியாக புரிந்து கொண்டு  குறும்பதிவுகளை வெளியிட்டு வருகிறார்.

அவரது குறும்பதிவுகள் துடிப்பாக உயிரோட்டமாக இருக்கின்றன. சமீப்த்தில் இதை இன்னொரு படி மேலே கொண்டு சென்றுள்ளார். மோடியை நய்மாக விமர்சிக்கும் வகையில் ஒரு குறும்பதிவை வெளியிட்டு , தொடர்புடைய குட்டிகதையை தனது இணையதளத்தில் படிக்குமாறு இணைப்பு கொடுத்துள்ளார்,.

அவரது இணையதளத்திற்கு போனால் அந்த குட்டி கதையை படிக்கலாம்: http://www.digvijayasingh.in/feku-and-fan.html

 

————

திக்விஜய் சிங்கை டிவிட்டரில் பின் தொடர: https://twitter.com/digvijaya_28

Advertisements

4 responses to “மோடிக்கு எதிராக டிவிட்டரில் குட்டிக்கதை

மறுமொழியொன்றை இடுங்கள்

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out / மாற்று )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out / மாற்று )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out / மாற்று )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out / மாற்று )

Connecting to %s