இது தான் இணையத்தின் சக்தி.

ar1உற்றாரோ உறவினரோ இல்லாத ராணுவ வீரர் ஒருவரின் இறுதிச்சடங்கு அந்த மனிதரின் ஆன்மாவுக்கு சாந்தி தரும் வகையில் நடைபெற்ற உருக்கமான கதை இது. இணையத்தின் ஆற்றலை உணர்த்தும் நெகிழ்ச்சியான கதையும் தான்!.

ஹெரால்டு ஜெல்லிகோ பெர்சிவல் எனும் அந்த முன்னாள் ராணுவ வீரர் சமீபத்தில் மரணமடைந்தார். 99 வய்தான அவருக்கு குடும்ப உறுப்பினர்களோ ,உறவினர்களோ நன்பர்களோ யாரும் கிடையாது. பெர்சிவல் இரண்டாம் உலக போரில் பங்கேற்றவர். நாட்டுக்காக சேவை செய்த அந்த மனிதரின் கடைசி பயணத்தில் யாரும் பங்கேற்க இல்லாத நிலை. உள்ளூர் நாளிதழில் இந்த செய்தியை பார்த்த சக ராணுவ வீரரான ரிக் கிளமண்ட் இந்த நிலை கண்டு வேதனை அடைந்தார். கிளமண்ட் ஆப்கன் போரில் பங்கேற்று இரு கால்களையும் இழந்தவர்.

பெரியவர் பெர்சிவலில் இறுதிசடங்கு அவருக்கு மரியாதை செய்யும் வகையில் நடைபெற வேண்டும் என விரும்பிய கிலம்ண்ட் இதற்காக பேஸ்புக் பக்கம் ஒன்றை அமைத்து வேண்டுகோள் விடுத்தார். 99 வயதான உறவினர் யாரும் இல்லாத இந்த முன்னாள் ராணுவ வீர்ரின் இறுதி சடங்கில் பங்கேற்க அருகாமையில் உள்ள ராணுவ அல்லது முன்னாள் ராணுவ வீர்ரர்களின் உதவியை நாடுகிறேன் என அவர் குறிப்பிட்டிருந்தார்.

அதன் பிறகு தான் அந்த அற்புதம் மெல்ல நிகழ்ந்தது. இந்த வேண்டுகோளை பார்த்த பலரும் அதை தங்கள் நண்பர்கள் வட்டத்தில் பகிர்ந்து கொண்டனர். பலர் டிவிட்டரிலும் இதை குறும்பதிவாக பகிர்ந்து கொண்டனர். மிகவும் வருத்தமாக இருக்கிறது, யாராவது வாருங்கள் என்று ஒரு குறும்பதிவு கேட்டுக்கொண்டது.ar2விளைவு இறுது சடங்கின் போது முன் பின் அறிமுகம் இல்லாத 300 பேர் அந்த முதியவருக்கு இறுதி அஞ்சலி செலுத்த திரண்டனர். 

லைதம் பார்க் எனும் இடத்தில் நடந்த இறுதிசடங்களில் அவர்கள் கொட்டும் மழையில் அஞ்சலில் செலுத்தினர். ஒரு சிலர் இந்த காட்சியை படம் பிடித்து ட்வீட் செய்தனர்.பெர்சிவலுக்கு அஞ்சலி செலுத்த கூட்டம் திரள்கிறது என்று புகைப்படத்துடன் ஒரு குறும்பதிவு வெளியானது.இது 165 முறை ரீடிவீட் செய்யப்பட்டது. 10 நிமிடங்கள் கழித்து , இறுதி அஞ்சலில் செலுத்த பெரியவர்களும் சிறியவர்களும் திரண்டிருக்கும் புகைப்படத்துடன் குறும்பதிவு பகிர்ந்து கொள்ளப்பட்டது.

5 நிமிடம் கழித்து வெளியான குறும்பதிவு அஞ்சலி செலுத்த நூற்றுக்கணக்கானோர் திரண்டு வருவதை உணர்த்தியது. அதனுடன் இணைக்கப்பட்ட புகைபடத்தில் பொதுமக்கள் குடைகளுடன் வரிசையில் காத்திருந்தனர். அடுத்த பதிவு ராணுவ வீரர்கள் பலர் அஞ்சலில் செலுத்த வருவதை தெரிவித்தது. 

அதற்கு அடுத்த குறும்பதிவு பெரியவரின் சவப்பெட்டையை பெற்றுக்கொள்ள ராணுவவீரர்கள் சீருடையில் காத்திருப்பதை காட்டியது.

இறுதியில் முழு மரியாதையுடன் அந்த பெரியவரின் இறுதிச்சடங்கு நடைபெற்றது. யாருமே இல்லாத ஒருவரின் மரணம் இணையம் மூலம் திரண்டவர்களின் மனித்நேயத்தால் மகத்தான நினைவாஞ்சலியாக அமைந்தது.

———-

 

 

இந்த குறும்பதிவுகளையும் புகைப்படங்களையும் பார்த்தால் நெகிழ்ச்சியாக இருக்கிரது. உணர்ச்சி பெருக்குடனே இந்த செய்தியை பதிவிடுகிறேன். இந்த செய்தையை வெளியிட்ட மாஷபில் தளத்திற்கு தலை வணங்குகிறேன்.:http://mashable.com/2013/11/11/internet-veterans-day-funeral/

 

 

Advertisements

மறுமொழியொன்றை இடுங்கள்

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  மாற்று )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out /  மாற்று )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  மாற்று )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  மாற்று )

w

Connecting to %s