பிலிக்கர் சேவையை இப்படி எல்லாமும் பயன்படுத்தலாம்!

பேஸ்புக் அளவுக்கு இப்போது இணைய உலகில் பரபரப்பாக பேசப்படாவிட்டாலும் கூட புகைப்பட பிரியர்கள் மத்தியில் பிலிக்கர் தான் இன்னும் நம்பர் ஒன்னாக இருக்கிறது. இணையத்தில் புகைப்பட பகிர்வு மற்றும் புகைப்பட சேமிப்பு என்று வரும் போது பிலிக்கர் தான் விரும்பி பயன்படுத்தப்படும் சேவையாக இருக்கிறது.

பிலிக்கர் என்றதுமே அதில் கொட்டிக்கிடக்கும் அழகான புகைப்படங்கள் தான் நினைவுக்கு வரும். அழகிய புகைப்படங்களை பார்த்து ரசிக்க பிலிக்கர் தான் சிறந்த வழி. அதே போல புகைப்படங்களை பகிரவும் பிலிக்கருக்கு நிகர் பிலிக்கர் தான். ஆனால் , புகைப்பட பகிர்வுக்கு மட்டும் அல்லாமல் வேறு விதங்களிலும் பிலிக்கர் சேவையை பயன்படுத்தலாம் என்பது உங்களுக்கு தெரியுமா?

அவற்றில் சில வழிகளை இப்போது பார்க்கலாம்!.

புதிய காமிரா வாங்கும் முன்!


நீங்கள் புகைப்பட பிரியராக இருந்து புதிதாக காமிரா வாங்க விரும்புகிறீகள் என வைத்து கொள்வோம். என்ன காமிரா வாங்குவது என்று தீர்மானிப்பதற்கு முன்பாக பலவிதமான காமிரா மற்றும் அவற்றில் எடுக்கப்பட்ட புகைப்படங்கள் தொடர்பாக பிலிக்கரில் ஆயும் செய்து கொள்ளலாம். பிலிக்கர் தளத்தில் காமிரா பைண்டர் (http://www.flickr.com/cameras ) எனும் பகுதி இருக்கிறது. இந்த பகுதியில் அனைத்து விதான காமிரா தொடர்பான தகவல்களையும் பார்க்கலாம். காமிராவின் மாடல், அதன் லென்ஸ் ஆற்றல், எடை,இதர வசதிகள் ஆகியவற்றோடு அந்த காமிரா மூலம் எடுக்கப்பட்ட புகைப்படங்களையும் பார்க்கலாம். குறிப்பிட்ட அந்த காமிராவின் விலை, பிலிக்கர் பயனாளிகள் அந்த காமிரவைல் மொத்தம் எத்தனை படங்கள் எடுத்துள்ளனர் போன்ற விவரங்களையும் கூட தெரிந்து கொள்ள முடியும். பயனாளிகளின் மதிப்பீடும் பயனுள்ளதாக இருக்கும்.

இந்த பக்கத்திலேயே பிலிக்கர் சமுகத்தில் எந்த காமிரா பிரபலமாக இருக்கிறது என்பதையும் தெரிந்து கொள்ளலாம். கேனான்,நிக்கான் ஆகிட காமிராக்களோடு ஐபோனும் புகைப்படம் எடுக்க அதிகம் பயன்படுத்தப்படுகிறது என்பது ஆச்சர்யமான விஷயம்.

இதே போல காமிரா லென்சுகளுக்கு என்று தனி பகுதி இல்லாவிட்டாலும் கூட, உங்கள் மனதில் உள்ள் லென்ஸை குறிப்பிட்டு தேடி அது தொடர்பான தகவல்களை பெற முடியும்.

காமிராக்களுக்கு மட்டும் தான் என்றில்லை, நீங்கள் வாங்க உள்ள மற்ற பொருட்களுக்கான ஆய்வையும் கூட் இதே முறையில் மேற்கொள்ளலாம்.ஆனால் என்ன தகவல்கள் எல்லாம் புகைப்பட மயமாக இருக்கும். அவற்றில் இருந்து தேவையான விவரங்களை நீங்கள் தான் சேகரிக்க வேண்டும். உதாரணத்திற்கு புதிய சோஃபா வாங்குவதாக இருந்தால் பிலிக்கரில் சோஃபா என தேடிப்பார்த்தால் சோஃபா தொடர்புடைய புகைப்படங்களை காணலாம். சோஃபாக்களின் பல ரகங்களை பார்க்க முடிவதோடு சோஃபாக்களின் பயன்பாட்டை உள் அலங்கார நோக்கிலும் புரிந்து கொள்ளலாம். கொஞ்சம் கவனமாக தேடினால் சோஃபா தொடர்பான விலை விவரங்களையும் தேடி கண்டுபிடிக்கலாம்.

அதே போல புத்தக அலமாரி அல்லது மேஜை வாங்கும் முன் இவை தொடர்பான புகைப்படங்களை பார்த்தும் ஆயுவு செய்தால் எந்த மாதிரியான புத்தக அலமாரி அல்லது மேஜையை வாங்கலாம் என தெளிவான எண்ணம் உண்டாகும்.

உலகை உலா வரலாம்.

பிலிக்கர் மூலமாக உட்கார்ந்த இடத்தில் இருந்தே உலகை ஒரு வலம் வரலாம் தெரியுமா? பிலிக்கரில் ஜியோடேகிங் புகைப்படங்கள் இதற்கு வழி செய்கிறது. ஜியோடேகிங் என்றால், ஒரு புகைப்படன் எந்த இடத்தில் எடுக்கப்பட்டது என்ற இருப்பிடம் சார்ந்த தகவலை தரும் முறையாகும். பிலிக்கரில் உலக வரைபடத்தின் (http://www.flickr.com/map/ )  மீது புகைப்படங்களை காணும் வசதியில் இந்த ஜியோடாகிங் தகவல்கள் இருக்கின்றன. இந்த வரைபடத்தில் உங்களுக்கு பிடிததமான நாடு அல்லது நகரை கிளிக் செய்து அங்கு எடுக்கப்பட்ட வண்ணமயமான படங்களை பார்த்து ரசிக்கலாம். உலகின் எழில்மயனான இடங்களை புகைப்படங்களாக கண்டு களிக்க இதைவிட எளிதான வழி இல்லை என்பதை இதை பயன்படுத்தி பார்த்தால் புரிந்து கொள்ளலாம்.

விடுமுறைக்கு எந்த இடத்திற்கு செல்லலாம் என்னும் கேள்விக்கு விடை காணவும் இந்த வசதியை பயன்படுத்தி கொள்ளலாம். இந்தியாவில் உள்ள பார்க்காத அற்புதமான இடங்கள் தொடர்பான அழகழகான புகைப்படங்களையும் இங்கு பார்த்து ரசிக்கலாம். வழக்கமான சுற்றுலா வழிகாட்டி மற்றும் தளங்களில் கிடைக்காத விவரங்களை புகைப்படங்கள் வழியே தெரிந்து கொள்ளலாம்.

வரலாற்றை அறிய

பிலிக்கரில் பிலிக்கர் காமன்ஸ் எனும் பகுதி இருக்கிறது. ( http://www.flickr.com/commons) . இந்த பகுதியில் வரலாற்று புகப்படங்களை காணலாம் என்பதோடு அவை தொடர்பான வரலாற்று விவரங்களையும் தெரிந்து கொள்ளலாம். உலகின் புகழ்பெற்ற புகைப்பட ஆவண காப்பகங்கள் மற்றும் அருங்காட்சியட்கத்துடன் இணைந்து இந்த சேவையை பிலிக்கர் வழங்குகிறது. ஒரே இடத்தில் உலகின் மிகசிறந்த வரலாற்று புகைப்படங்களை இந்த பகுதியில் காண முடியும். அப்படியே வரலாற்றில் ஒரு உலா வரலாம்.

உள் அலங்கார வடிவமைப்புகள்.

பிலிக்கரில் இயற்கை எழில் சார்ந்த எண்ணற்ற புகைப்ப்டங்கள் இருப்பது போல வீடுகளின் உள்ளே எடுக்கப்பட்ட ஆயிரக்கணக்கான படங்களையும் காணலாம். இந்த புகைப்படங்கள் மூலமாக வீடுகளின் உட்புற அலங்கார முறைகள் தொடர்பான தகவல்கள் காட்சி ரீதியாக உங்களுக்கு கிடைக்கும். நம் வீட்டிற்கு எந்த வகையான அலங்காரம் செய்யமாம் என்பது தொடர்பான தெளிவான எண்ணத்தை பெற இந்த படங்கள் மூலமாக செலவில்லாத ஆய்வு மேற்கொள்ளலாம். இதே போலவே சமையல் குறிப்பு தொடர்பான புகைபப்டங்களையும் கூட பிலிக்கரில் தேடிப்பார்க்கலாம்.

பிலிக்கரில் புதிய வசதி.

பிலிக்கரை இன்னும் எத்தனையோ வழிகளில் பயன்படுத்தலாம். பிலிக்கர் பயனாளிகளுக்கு உற்சாகம் தரும் வகையில் பிலிக்கர் புதிய வசதிகளை அறிவித்துள்ளது.  மேமப்டுததப்பட்ட புதிய வடிவமைப்போடு இந்த வசதிகளை பிலிக்கர் சமீபத்தில் அறிமுகம் செய்துள்ளது. புகைப்பட சேமிப்புக்கான அளவை பிலிக்கர் ஒரு டெராபைடாக கூட்டியுள்ளது. ஒரெ டெரபைட் என்றால்  5 லட்சத்துக்கும் மேற்பட்ட 6.5 மெகாபிக்சல் புகைப்படங்களை சேமித்து கொள்ளலாம்.

அதே போலவே புகைப்படங்களை அவை எடுக்கப்பட்ட அளவிலேயே பகிர்ந்து கொள்ளும் வசதியும் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. இவற்றோடு புகைப்படங்களை ஸ்மார்ட்போன் வழியேவும் பகிர்ந்து கொள்ளும் வசதியும் அறிமுமாக இருக்கிறது.

மேலும் புகைப்படடத்தின் வலது பக்கத்திலேயே அந்த புகைப்ப்டம் எடுகப்பட்ட காமிரா, எந்த இடத்தில் இருந்து எடுக்கப்பட்டது, எத்தனை பேரால் பார்க்கப்பட்டுள்ளது போன்ற விவரங்களையும் ஒரே பார்வையில் பார்க்கும் வசதி இந்த ஆண்டு இறுதியில் அறிமுகமாக உள்ளது.

2 responses to “பிலிக்கர் சேவையை இப்படி எல்லாமும் பயன்படுத்தலாம்!

    • நன்றி நண்பரே. ப்ளிக்கர் சேவையை நீங்கள் பயனப்டுத்தும் விதம் பற்றியும் பகிர்ந்து கொள்ளலாம்.

      அன்புடன் சிம்மன்

மறுமொழியொன்றை இடுங்கள்

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  மாற்று )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  மாற்று )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  மாற்று )

Connecting to %s