பாஸ்வேர்டு குறுக்கெழுத்து புதிர் !.

indexகுறுக்குழுத்து புதிர் ஆர்வத்தை ஏற்படுத்தும் ! விழிப்புணர்வை ஏற்படுத்துமா ? இந்த கேள்விக்கான பதிலாக பாஸ்வேர்ட் குறுக்கெழுத்து புதிர் உருவாகி இருக்கிறது. ஆம், இணையத்தில் கசிந்த பாஸ்வேர்டுகளை வைத்து சுவாரஸ்யமான குறுக்கெழுத்து புதிர் உருவாக்கப்பட்டுள்ளது.
புக்ழபெற்ற அடோப் நிறுவனம் சமீபத்தில் லட்சக்கணக்கான பயனாளிகளின் பாஸ்வேர்டை கோட்டை விட்டு நின்றது . 150 மில்லியன் பயனாளிகளின் பாஸ்வேர்டுகள் மற்றும் அவற்றுக்கான குறிச்சொற்கள் திருடப்பட்டு இணையத்தில் வெளியானது. இணைய நிறுனங்களின் பாஸ்வேர்டுகள் இப்படி திருட்டுக்கு ஆளாவது பற்றி அடிக்கடி செய்தி வெளியாகி கொண்டிருக்கின்றன. அடோப் சமீபத்தில் இந்த பட்டியலில் சேர்ந்த்துள்ளது.
பாஸ்வேர்டு பாதுகாப்பில் உள்ள போதாமைகளின் அடையாளம் இவை.
அடோபுக்கு மட்டும் உரிதான் பிரச்சனை அல்ல இது. தாக்காளர்கள் அவ்வப்போது இணைய நிறுவனங்களிடம் இப்படி கைவரிசை காட்டி பாஸ்வேர்டுகளை பகிரங்கமாக்கி வருகின்றனர்.
இப்போது பென் பால்க்னர் என்பவர் புதுமையான பாஸ்வேர்டு குறுக்கெழுத்து புதிரை உருவாக்கி உள்ளார். அடோப் பயனளிகளின் திருடப்பட்ட பாஸ்வேர்டுகளில் ஆயிரம் பாஸ்வேர்டுகளை வைத்து இந்த புதிரை உருவாக்கியுள்ளார். வழக்கமான ஆங்கில குறுக்கெழுத்து புதிர போல தான் இதுவும் இருக்கிறது. ஆனால் ஆங்கில சொற்களுக்கு பதிலாக பாஸ்வேர்டுகள் இடம்பெற்றுள்ளன. அந்த பாஸ்வேர்டை மறக்காமல் இருக்க சமர்பித்த குறிச்சொற்கள் அந்த வார்த்தைகளுக்கான வழிகாட்டி வாக்கியமாக கொடுக்கப்பட்டுள்ளன.
http://zed0.co.uk/crossword/ என்ற முகவரியில் இந்த பாஸ்வேர்டு குறுக்கெழுத்து விளையாட்டை ஆடிப்பார்க்கலாம்.
குப்பை போல இணையத்தில் கொட்டப்பட்ட இந்த பாஸ்வேர்டுகளை பார்த்த போது அவற்றோடு விளையாடிப்பார்க்கும் எண்ணம் ஏற்பட்டு இந்த புதிரை உருவாக்கியதாக பால்கன் கூறியுள்ளார். ஆனால் பாஸ்வேர்டுகள் இப்படி பகிரங்கமாக்கி, அவற்றை எப்படி கண்டுபிடிப்பது என்று அடையாளம் காட்டுவது ஆபாதானது இல்லையா ? என்று கேட்கலாம். ஆனால் பாஸ்வேர்டுகள் திருடப்பட்டு இணையத்தில்  வீசி எரியப்பட்ட பிறகு அவற்றில் எங்கே பாதுகாப்பு இருக்கிறது என்று அவர் கேட்கிறார். ஆக இந்த பட்டிஅய்லில் உங்கள் பாஸ்வேர்டை பார்த்தால் உடனடியாக அதை மாற்றுங்கள் ,வேறு வழியில்லை என்கிறார்.
இந்த பட்டியலில் இல்லாவிட்டாலும் கூட அடிக்கடி உங்கள் இணைய பாஸ்வேர்டை மாற்றிக்கொண்டே இருங்கள் அது தான் பாதுகாப்பானது.
பால்கனுக்கு நிச்சயம் சபாஷ் போட வேண்டும். வெறும் செய்தியாக மறந்துவிடக்கூடியத் பாஸ்வேர்டு திருட்டை அவர் குறுட்க்கெழுத்து புதிராக்கி கலைநயமாக ஆவணப்படுத்தி இருக்கிறார். பாஸ்வேர்ட் பயன்பாட்டில் உள்ள குறைகளை இதன் மூலம் சுட்டிக்காட்டியிருக்கிறார். இதிலிருந்து விழுப்புணர்வு பெறுவது அவரவர் பொறுப்பு.
ஆனால் பால்கனுக்கு முன்பாக ராண்டல் முன்ரோவுக்கு நன்றி சொல்ல வேண்டும்.http://www.xkcd.com/1286/   எனும் இணைய காமிக்கை நடத்தி வருபவர் முன்ரோ. அவர் தான் முதலில் அடோப் களவு கொடுத்த பாஸ்வேர்டுகளை கொண்டு குறுக்கெழுத்து புதிரை காமிக்காக வரைந்து காட்டினார். அதை பார்த்து ரசிக்கலாம், ஆனால் ஆட முடியது. இந்த காமிக்கை பார்த்து உந்துதல் பெற்ற பால்கன் உண்மையான குறுக்கெழுத்தை உருவாக்கினார்.

குறுக்கெழுத்து புதிர்: http://zed0.co.uk/crossword

பி.கு: பாஸ்வேர்டு பற்றி தொடரும் பதிவுகளில் சற்று இடைவெளி விட்டு இதை எழுதுகிறேன். நடுவே ஏன் பாஸ்வேர்டு பற்றி எழுதவில்லை என்று யாரேனும் கேட்டீர்கள் என்றால் உற்சாகமாக இருக்கும்.

2 responses to “பாஸ்வேர்டு குறுக்கெழுத்து புதிர் !.

  • பாஸ்வேர்டு பற்றி மட்டுமே எழுதினால் அலுத்தி விடுமே என்ற சந்தேகத்தில் தள்ளி வைத்தது. இடைவெளி விழுந்து விட்டது. கேட்டதற்கு நன்றி.
   பாஸ்வேர்ட் இணைய வாழ்க்கையில் மேலும் மேலும் முக்கியத்துவம் மிக்கதாக ஆகி வரும் நிலையில் மேலும் மேலும் பாதுகாப்பற்றதாகவும் ஆகி வருவதல் நாம் பாஸ்வேர்டு தொடர்பான விஷயங்களில் கூடுதல் கவனம் செலுத்த வேண்டும் என் நினைக்கிறேன்.
   சரி குறுக்கெழுத்து பிடித்திருந்ததா?

   அன்புடன் சிம்மன்

மறுமொழியொன்றை இடுங்கள்

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  மாற்று )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  மாற்று )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  மாற்று )

Connecting to %s