ஆண்ட்ராய்டு செயலிகளை பயன்படுத்தி பார்ப்பது எப்படி?

ஐபோனோ ,ஆண்ட்ராய்டு போனோ, ஸ்மார்ட்போன்களின் சிறப்பம்சம் அவற்றில் செயல்படகூடிய அப்கள் .அதாவது  செயலிகள் . இந்த சின்னஞ்சிரிய சாப்ட்வேர்கள் பல்வேறு மாயங்களை செய்ய வல்லவை. ஸ்மார்ட்போனில் புதிய பயன்பாட்டை தரக்கூடியவை. பிரச்சனைகளுக்கு தீர்வாக கூடியவை. ஜிமெயிலில் இருந்து , பேஸ்புக் ட்விட்டர் வரை எல்லாவற்றுக்குமான செயலிகள் இருக்கின்றன. இவை தவிர வாட்ஸ் அப் போன்ற பிரபலமான செயலிகளும் இருக்கின்றன. ரெயில் சேவைக்கான செயலிகள், டிக்கெட் முன்பதிவு செய்யும் செயலிகள் என்று பயனுள்ள செயலிகளை அடுக்கி கொண்டே போகலாம். இவை தவிர புதிய புதிய செயலிகளும் அறிமுகமாகி கொண்டே இருக்கின்றன. சும்மாவா என்ன? ஆண்ட்ராடு போன்களுக்காக மட்டும் 2 லட்சத்துக்கும் அதிகமான செயலிகள் உருவாக்கப்பட்டுள்ளன. இவற்றில் பல கட்டணமில்லாமல் பயன்படுத்தக்கூடியவை. அதாவது இலவசமாக தரவிறக்கம் செய்து கொள்ளலாம். ஆனால் மற்ற செயலிகளை கட்டணம் செலுத்தி வாங்க வேண்டும்.

செயலியின் பயன்கள்!

பயனுள்ள செயலி என்றால் அவற்றை கட்டணம் செலுத்தி வாங்கவும் பலர் தயாராக உள்ளனர். ஆனால் குறிப்பிட்ட செயலி பயனுள்ளது என்பதை எப்படி தெரிந்து கொள்வது? செயலிகளை அறிமுகம் செய்யவும் அவற்றை விமர்சனம்  செய்யவும் இணையதளங்கள் இருக்கின்றன. ஆண்ட்ராய்டு செயலிகளின் இருப்பிடமான கூகுல் பிலே ஸ்டோரிலே கூட செயலிகள் தொடர்பான விமர்சன கருத்துக்களை படித்து பார்க்கலாம் தான்.

ஆனால் என்ன தான் இருந்தாலும் ஒரு செயலியை பயன்படுத்தி பார்ப்பது போல வருமா? குறிப்பிட்ட ஒரு செயலியை தரவிறக்கம் செய்து அது எப்படி செயல்படுகிறது என்பதை பயனாளிகளே தெரிந்து கொள்ள முடிந்தால் நன்றாக தான் இருக்கும். அதிலும் கட்டண செயலிகளை வாங்கும் முன் அவற்றின் பயன்பாட்டை பரிசோதித்து பார்த்து விடுவது இன்னும் நல்லது. இதற்கு செயலியை வாங்கும் முன் அவற்றை பயன்படுத்தி பார்க்கும் வாய்ப்பு இருக்க வேண்டும். இது சாத்தியமா ?

அமேசான் தரும் வசதி!

ஆண்டார்ய்டு செயலிகளுக்காக அமேசான் நிறுவனம் அப் ஸ்டோர் ஒன்றை நடத்தி வருவதை நீங்கள் அறிந்திருக்கலாம். சரவதேச அளவில் செயல்படும் இந்த வசதி கடந்த சில மாதங்களுக்கு முன் இந்தியாவிலும் அறிமுகம் செய்யப்பட்டது. இதில் செயலிகளை வாங்கும் முன் பயன்படுத்தி பார்க்கலாம். ஆனால் கூகுல் பிலே ஸ்டோரில் இந்த வாங்கும் முன் பயன்படுத்தி பார்க்கும் வசதி இல்லை. அதனால் என்ன, நீங்கள் விரும்பினால் , கூகுல் பிலே ஸ்டோரிலும் ஆண்ட்ராய்டு செயலிகளை பயன்படுத்தி பார்க்கலாம். இதற்கு அழகான குறுக்கு வழி இருக்கிறது.

பரிசோதிக்க குறுக்கு வழி!

எந்த செயலியை பரிசோதிக்க விரும்புகிறீர்களோ அந்த செயலியை காசு கொடுத்து வாங்குவது தான் அந்த வழி.

காசு கொடுத்து வாங்கிய பின் செயலி திருப்தி இல்லாமல் இருந்தால் என்ன செய்வது என்று கேட்கலாம். அதை வேண்டாம் என்று திருப்பி கொடுத்து விடலாம் தெரியுமா? இப்படி பணத்தை திருப்பி பெறும் வசதி தரப்பட்டுள்ளது. கட்டண செயலிகளை இவ்வாறு திருப்பி ஒப்படைத்து பணத்தை திருப்பி தரும் வசது கூகுல் நிறுவனத்தால் அளிக்கப்பட்டுள்ளது. இந்த வசதியை செய்லியை பயன்படுத்தி பார்க்க பயன்படுத்தி கொள்ளலாம். செயலி பயனுள்ளதாக இருந்தால் அப்படியே விட்டுவிடலாம். எதிரபார்த்த வகையி இல்லாவிட்டால் திருப்பி கொடுத்த கட்டண தொகையை மீண்டும் பெற்றுக்கொள்ளாம். ஆனால் இந்த முறையில் ஒரே ஒரு குறை , செயலியை வாங்கிய 15 நிமிடத்திற்குள் அதை திருப்பி கொடுத்து விட வேண்டும் என்பது தான். ஆகையால செயலியை பரிசோதிக்க 15 நிமிடங்கள் தான் அவகாசம். 15 நிமிடங்களை கடந்து விட்டால் கூகுல் கைவிரித்து விடுகிறது. இருப்பினும் நேரடியாக செயலியை உருவாக்கியவரை தொடர்பு கொண்டு பேசிப்பார்க்கலாம் என்கிறது. ஆண்ட்ராய்டு செயலியை திரும்பித்தரும் வசதி பற்றி அறிய : https://support.google.com/googleplay/answer/134336?hl=en

அப்சர்பர் செயலி !

செயலியை வாங்கிவிட்டு திருப்பித்தருவது எல்லாம் சரியாக வராது என நீங்கள் நினைத்தால் , அப்சர்பர் எனும் செயலியை முயன்று பார்க்கலாம். எந்த செயலியையும் வாங்காமல் மட்டும் அல்ல அவற்றை தரவிறக்கம் செய்யாமலேயே பயன்படுத்தி பார்க்கும் வசதியை இந்த செயலி வழங்குகிறது. காரணம் புதிய செயலிகளை இந்த செயலிக்குள் இருந்தபடியே பரிசோதித்து விடலாம் என்பது தான்.

அப்சர்பர் செயலி உரிமையாளர்கள் தங்கள் செயலிகளுக்கான தனி பக்கத்தை உருவாக்கி கொள்ள வழி செய்கிறது. அதன் இந்த செயலி , வர்ச்சுவல் போன் எனப்படும் இணையத்தில் மட்டுமே இருக்கும் போனில் தோன்றும் . இந்த போனில் செயலி எப்படி எல்லாம் இருக்கும் என்பதை வாடிக்கையாளர்கள் பார்த்து கொள்ளலாம். இதே வசதியை வாடிக்கையாளர்கள் தாங்கள் வாங்க விரும்பும் செயலியை பரிசோதிக்க பயன்படுத்தி கொள்ளலாம்.

குறிப்பிட்ட செயலியை கிளிக் செய்ததும் அது பற்றிய விவரங்கள் மற்றும் விமர்சங்களை பார்த்து தெரிந்து கொள்ளலாம். அதன் பிறகு மேலே உள்ள மூன்று கோடுகள் கிளிக் செய்தால் , உண்மையில் அந்த செயலி போனில் எப்படி செயல்படும் என்று திரையில் உள்ள இணையபேசியில் பார்க்கலாம். அதன் பிறகு வாங்கலாமா வேண்டாமா என தீர்மானிக்கலாம். அப்சர்பர் பற்றி விவரமறிய:https://play.google.com/store/apps/details?id=main.java.com.appsurfer

2 responses to “ஆண்ட்ராய்டு செயலிகளை பயன்படுத்தி பார்ப்பது எப்படி?

மறுமொழியொன்றை இடுங்கள்

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out / மாற்று )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out / மாற்று )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out / மாற்று )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out / மாற்று )

Connecting to %s