கூகிள் பூமியில் கதை சொல்லலாம் வாங்க !

கூகிளின் வரைபட சேவையான கூகிள் மேப் மற்றும் கூகிள் எர்த் பற்றி நீங்கள் கேள்விபட்டிருக்கலாம். கூகிள் மேப் உலகிற்கான டிஜிட்டல் வரைப்ட சேவை. கூகிள் எர்த் பூமியின் பறவைபார்வைத்தோற்றம். இரண்டு சேவைகளையும் எண்ணற்ற விதங்களில் பயன்படுத்தலாம். இணையத்தில் வரைபடம் சார்ந்த பலசேவைகள் கூகிள் வரைபடம் மீதே உருவாக்கப்படுகிறது. கூகிள் எர்த் மூலம் உட்கார்ந்த இடத்தில் இருந்தே உலகை வலம் வரலாம்.

இப்போது கூகிள் எர்த் சேவையை இணையவாசிகளுக்கு மேலும் நெருக்கமானதாக்க கூகிள் புதிய வசதியை அறிமுகம் செய்துள்ளது தெரியுமா? டூர் பில்டர் எனும் இந்த வசதி மூலம் கூகிள் எர்த் மீது தங்கள் கதையை இணையவாசிகள் பகிர்ந்து கொள்ளலாம். அதிலும் எப்படி தெரியுமா, முப்பரிமாண வசதியில்.!

கூகிள் எர்த் சேவையில் பூமி உருண்டையின் தோற்றத்தை விண்ணில இருந்து பார்ப்பது போன்ற உணர்வை பெறலாம். கூகிள் எர்த்தின் எந்த இடத்திலும் கிளிக் செய்து அந்த இடத்தை பெரிதாக்கி பார்க்கலாம். இப்படி உலகின் எந்த இடத்தையும் பார்த்து ரசிக்கலாம்.

இப்போது கூகிள் எர்த் சேவையை பார்த்து ரசிப்பதோடு கதை சொல்லவும் பயன்படுத்தலாம். இதற்கான டூர் பில்டர் வசதியை கூகிள் சோதனை முறையில் அறிமுகம் செய்துள்ளது. டுர் பில்டர் என்றால் கூகிள் பூமியின் மீது புள்ளிகளை குறிப்பிட்டு அந்த இடத்தில் பொறுத்தமான புகைப்படங்கள் மற்றும் தகவலை இடம்பெற வைக்கலாம். வீடியோவையும் இணைக்கலாம். உலக நாடுகளுக்கு சுற்றுலா சென்று விட்டு வந்தால் அந்த அனுபவத்தையும் புகைப்படங்களையும் நண்பர்களுடன் ஆரவத்தோடு பகிர்ந்து கொள்வோம் அல்லவா ? இமெயில் வழியே ,பேஸ்புக் பக்கத்தில் என பல விதங்களில் இந்த படங்களை பகிர்ந்து கொள்ளலாம். இன்னும் ஒரு படி மேலே போய் , பூமி உருணை மீதே நீங்கள் சென்று வந்த இடங்களை எல்லாம் சுட்டிக்காட்டி வரைபடமாக்கி கொள்ள டூர் பில்டர் உதவுகிறது. இப்படி உருவாக்கும் பாதையில் தேவையான இடத்தில் எல்லாம் புகைப்படங்களை பொருத்தலாம்.

கூகிள் இந்த வசதியை முதலில் அமெரிக்க ராணுவ வீரர்களுக்காக அறிமுகம் செய்தது. முன்னாள் ராணுவ வீரர்கள் தங்கள் பணி அனுபவத்தை வரைபடம் மூலமாக கதை போல சொல்ல உதவியாக இருக்கும் என கூகிள் கருதியது.

இதன் தொடர்ச்சியாக இந்த சேவை அமைப்புகள் மற்றும் பொதுமக்களுக்கும் திறந்து விடப்பட்டுள்ளது. கூகிளின் ஏதாவது ஒரு சேவையில் கணக்கு உள்ளவர்கள் இந்த வசதியை பயன்படுத்தி கதை சொல்லலாம். அதற்கு முன்பாக கூகிள் எர்த் பிளக் இன் வசதியை டவுண்லோடு செய்து கொள்ள வேண்டும்.

பயணக்கதை தவிர இந்த வசதியை பலவிதங்களில் பயன்படுத்திக்கொள்ளலாம். ஆசிரியர்கள் மாணவர்களுக்கு சுவாரஸ்யமான பாடங்களை உருவாக்கலாம். தொண்டு அமைப்புகளும் இந்த வசதியை தங்கள் நோக்கத்திற்கு ஏற்ப பயன்படுத்தலாம். பயண நிறுவனங்களும் கூட புதுமையான முறையில் பயன்படுத்திக்கொள்ளலாம்.

இந்த வசதியை எப்படி பயன்படுத்தலாம் என்று அறிந்து கொள்வதற்காக ஏற்கனவே டூர் பில்டர் மூலம் உருவாக்கப்பட்டுள்ள வரைபட கதைகளை பார்க்கலாம்.

https://tourbuilder.withgoogle.com/

வெனிஸ் நகரை பார்க்கலாம்!.

கூகிள் வழங்கும் மற்றொரு பிரபலமான சேவை கூகிள் ஸ்டிரீட்வியூ. இந்த சேவை சர்ச்சைக்குறியதாகவும் இருந்து வருகிறது. உலக நகரங்களின் சாலைகளையும் வீதிகளையும் காமிராவுடன் வலம் வந்து அதன் காட்சிகளை தெருப்பார்வையாக கூகிள் வழங்கி வருகிறது. எந்த நகரின் காட்சியையும் இதில் பார்க்கலாம். ஆனால் இது அந்தரங்க மீறலாகவும் பார்க்கப்படுகிறது. இதனால் கூகிள் ஸ்டிரீவியூ பல நகரங்களில் எதிர்ப்பை சந்தித்துள்ளது.

இந்த சேவை மூலம் பார்க்ககூடிய நகரங்களின் பட்டியலில் இத்தாலி நாட்டின் வெனிஸ் நகரும் சேர்ந்துள்ளது. வெனிஸ் மிகவும் பிரபலமான சுற்றுலா தலம். வெனிஸ் நகரின் தனிச்சிறப்பு அதன் நீர்போக்குவரத்து. வெனிஸ் நகரில் வீடுகளின் நடுவே தெருக்களில் எல்லாம் தண்ணீர் ஓடிக்கொண்டிருக்கும் என்பதால் வாகனங்களுக்கு பதிலாக படகில் தான் போய்வர வேண்டும்.

இந்த படகில் பிரத்யேக் காமிரா மூலம் காட்சிகளை பதிவு செய்து கூகிள் ஸ்டிரீட்வியூவுக்கு கொண்டு வந்துள்ளது. ஆக வெனிஸ் நகருக்கு போகும் ஆசை இருந்து பட்ஜெட் இடம் கொடுக்க விட்டால் ஸ்டிரீட்வியூ மூலமே வெனிஸ் நகரை சுற்றிப்பார்த்து ரசிக்கலாம்.

http://www.google.com/maps/about/behind-the-scenes/streetview/treks/venice/

தாஜ்மகாலையும் பார்க்கலாம்.

இன்னும் கொஞ்ச நாட்கள் கழித்து இந்தியாவின் தாஜ்மகால் நினைவுசின்னத்தையும் இப்படி கூகில் ஸ்டிரீட்வியூவில் பார்த்து ரசிக்கலாம் . இதற்கான பணிகளை அன்மையில் கூகிள் துவக்கியுள்ளது. இந்திய தொல்பொருள் ஆய்வுத்துறையுடன் இணைந்து கூகிள் காதல் சின்னமான தாஜ்மகால் காட்சிகள் படம் பிடிக்கத்துவங்கியுள்ளது. இந்த பணி முடிந்த பிறகு தாஜ்மகாலை இணையத்திலேயே 360 கோணத்தில் பார்த்து ரசிக்க முடியும். இது தவிர மேலும் 99 பாரம்பரிய சின்னங்களை கூகிள் டிஜிட்டல் பதிவாக்க உள்ளது.

கூகிள் வரைப்டம் மற்றும் கூகிளின் கலாசார மைய சேவை தளங்களில் இதை பார்க்கலாம் .: http://www.google.com/culturalinstitute/project/world-wonders?hl=en

கடந்த 2011 ம் ஆண்டு கூகிள் ஸ்டிரீட்வியூ சேவையை பெங்களூரில் அறிமுகம் செய்ய முயன்று பலத்த எதிர்ப்பு ஏற்பட்டதால் கைவிட்டது குறிப்பிடத்தக்கது

மறுமொழியொன்றை இடுங்கள்

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out / மாற்று )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out / மாற்று )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out / மாற்று )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out / மாற்று )

Connecting to %s