பற்றில்லாத பாஸ்வேர்டு செய்வோம்.

Imageஇந்து மதத்தில் உங்களுக்கு நம்பிக்கை இருக்கலாம், இல்லாமல் போகலாம். ஆனால் அதன் பற்றில்லாத தன்மை கொள்கை பாஸ்வேர்டு விஷயத்தில் பின்பற்றத்தக்கது. ஆய்வாளர்கள் அப்படி தான் சொல்கின்றனர். அதாவது பற்றில்லாத தன்மையுடன் பாஸ்வேர்டை உருவாக்க வேண்டும் என்கின்றனர்.

பாஸ்வேர்டில் என்ன பற்றும் பற்றில்லா தன்மையும் என்று கேட்கலாம். இதற்கு பதில் அறியும் முன் ஒரு நிமிடம் கண்களை மூடிக்கொண்டு புதிய பாஸ்வேர்டு ஒன்றை உருவாக்க பாருங்கள். நீங்கள் உருவாக்கிய பாஸ்வேர்டு எதுவாக இருதாலும் , அநேகமாக அது ஏதோ ஒரு விதத்தில் உங்களை சார்ந்ததாகவே இருக்கும். ஒன்று உங்கள் பெயர் அல்லது உங்கள் பிறந்த நாள் அல்லது உங்களுக்கு நெருக்கமானவர்களின் பெயர் … இப்படி உங்களை சார்ந்த விஷயங்கள் சார்ந்தே நீங்கள் பாஸ்வேர்டுக்கான எழுத்துக்களை தேர்வு செய்திருப்பீர்கள்.

இது இயல்பானது தான். தேர்வு செய்யப்பட்ட பாஸ்வேர்டு நினைவில் நிற்க பலரும் கையாளும் வழி இது. ஆனால் பாஸ்வேர்டு திருடர்களும் இவற்றை அறிந்திருப்பதா ல் , ஒருவரது தனிப்பட்ட விவரங்களை கொண்டு அவர்கள் பாஸ்வேர்டு என்னவாக இருக்கும் என யூகித்துவிட முடியும்.

இதை தடுக்க எளிய வழி இருக்கிறது. பாஸ்வேர்டுக்காக யோசிக்கும் போது உங்களை மறந்து விடுங்கள் ! உங்கள் தனிப்பட்ட விவரங்கள் மற்றும் நெருக்காமானவர்களின் விவரங்களை மனதில் கொள்ளாமல் யோசித்தீர்கள் என்றால் உருவாகும் பாஸ்வேர்டு உங்களோடு பற்றில்லாததாக இருக்கும். அப்போது அது களவாடப்பட முடியாததாகவும் இருக்கும்.

சும்மாயில்லை, தாக்காளர்கள் களவாடி வெளியிட்ட லட்சக்கணக்கான பாஸ்வேர்டுகளை ஆய்வு செய்து இந்த பற்றில்லாத வழியை கண்டுபிடித்துள்ளனர். பகிரங்கமான பயனாளிகளின் பாஸ்வேர்டுகளை பார்க்கும் போது அவற்றில் பளிச்சிடும் பொதுத்தன்மை அடிப்படையில் , பொதுவாக பாஸ்வேர்டு உருவாக்கத்தில் பெரும்பாலானோர் கடைபிடிக்கும் வழிகளை கண்டறிந்துள்ளனர்.

பெர் தோர்சியம் எனும் ஆய்வாளர் இந்த ஆய்வை மேற்கொண்டுள்ளார். இதன் மூலம் அவர் முன்வைக்கும் பாஸ்வேர்டு பொது தன்மைகள் சில ; ஆண்கள் பாஸ்வேர்டு உருவாக்கத்தில் பரவலான வேறுபாட்டை நாடுகின்றனர். பெண்கள் நீளமான பாஸ்வேர்டை நாடுகின்றனர்.

சிவப்பு முடி கொண்ட பெண்கள் மிகச்சிறந்த பாஸ்வேர்டை உருவாக்குகின்றனர். தாடி வளர்த்த தலைகலைந்த ஆண்கள் மோசமான பாஸ்வேர்டுக்கு சொந்தக்காரர்களாக இருக்கின்றனர்.

எப்படி இருக்கிறது ஆய்வு !

பெர் தோரிசியம் ஆய்வு பற்றி அறிய: http://securitynirvana.blogspot.co.uk/

அவரை அடையாளம் காட்டிய பிபிசி செய்திக்கு; http://www.bbc.co.uk/news/technology-24519306

மறுமொழியொன்றை இடுங்கள்

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  மாற்று )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  மாற்று )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  மாற்று )

Connecting to %s