கிறிஸ்துமஸ் மகிழ்ச்சி தந்த டிவிட்டர் நெகிழ்ச்சி.

BcWKTKSIEAAN9eTஉறவினர்களை விட நண்பர்களை நம்பலாம் என்று பலரும் பல நேரங்களில் சொல்வது எந்த அளவுக்கு உண்மையானது என்று தெரியாது.ஆனால், டிட்டர் பயனாளிகளை பொருத்தவரை பல நேரங்களில் தங்கள் டிவிட்டர் நண்பர்களிடம் உதவி கேட்பதே இயல்பானதாக இருக்கிறது. இதற்கான சமீபத்தில் உதாரணமாக இங்கிலாந்தை சேர்ந்த டிவிட்டர் பயனாளி ஒருவர் புயலில் சிக்க கொண்ட தனது தாத்தாவுக்கு உதவ முடியுமா ? என்று டிவிட்டரில் வேண்டுகோள் விடுத்து அதற்கான பலனையும் பெற்றிருக்கிறார்.
லண்டன் நகரில் வசிக்கும் அலெக்சிஸ் எனும் அந்த மனிதர் , கிறிஸ்துமஸ் பண்டிகைக்கு முந்தைய தினம் மிகுந்த மன உளைச்சலுக்கு இலக்கானார். டெவான் பகுதியில் உள்ள டைவர்டன் எனும் சிற்றூரில் வசிக்கும் அவரது தாத்தா புயலில் சிக்கி தவித்தது தான் இதற்கு காரணம். வெளியே புயல் வீசியதால் வீட்டுக்குள்ளேயே சிக்கி கொண்ட பெரியவர் உணவு இல்லாமல் அவதிப்பட்டிருக்கிறார். பேரன் அலெக்சியாலும் உடனடியாக சென்று தாத்தாவுக்கு உதவ முடியாத நிலை. இந்த இக்கட்டான நிலையில் அவருக்கு இயல்பாக ட்விட்டரில் உதவி கேட்கலாம் என்று தோன்றியது. உடனே ஒரு குறும்பதிவு மூலம் வேண்டுகோள் விடுத்தார். ’ டிவிட்டர் # உதவவும். என் தாத்தா புயல் காரணமாக டெவனில் தனியே சிக்கியிருக்கிறார். #டைவர்டன் அருகே உள்ள யாரேனும் அவருக்கு உணவு கொண்டு தர முடியுமா? ‘ இது தான் அந்த குறும்பதிவு.
அலெக்சிக்கு டிவிட்டரில் 3000 க்கும் அதிகமான நண்பர்கள் இருக்கின்றனர் ( பின் தொடர்பாளர்கள்). இந்த கோரிக்கையை பார்த்ததுமே அவர்களில் பலர் டிவிட்டர் வழக்கப்படி இந்த கோரிக்கையை தங்கள் டிவிட்டர் நண்பர்களுக்கு ரிடிவீட் செய்தனர். ஆக அலெக்சி தாத்தாவுக்கு உதவி தேவை எனும் செய்தி உடனடியாக டிவிட்டர்வெளியில் பரவியது.
இதனிடையே பிலேர் (https://twitter.com/red_hairy_blair ) என்பவர் இந்த செய்திக்கு தன்னால் உதவிக்கு ஏற்பாடு செய்ய முடியும் என பதில் அளித்தார். அலெக்சி தாத்தா வசிக்கும் பகுதியில் தான் தனது அம்மா வசிப்பதாகவும் அவரை கொண்டு உணவு வழங்க சொல்வதாகவும் கூறியிருந்தார்.அது மட்டும் அல்ல அடுத்த ஒரு மணி நேரத்தில் அதை நிறைவேற்றவும் செய்தார்.
டிவிட்டர் நண்பர்கள் மீது நம்பிக்கை வைத்து கேட்டதற்கு கைமேல் பலனாக உதவி கிடைத்ததும் அலெக்சி நெகிழ்ந்து போனார். இந்த மகிழ்ச்சியை டிவிட்டர் மூலம் பகிர்ந்து கொண்டார். ’ எல்லோருக்கும் நன்றி, இத்தகைய இதமான ஆதரவுக்கும் அற்புதமான மனிதர்களிடம் இருந்து வந்த ஆறுதலும் அருமையாக இருக்கிறது’ என்று அவர் கூறியிருந்தார்.
’ தாத்தாவுக்கு உணவு கிடைத்துவிட்டது. அந்த அழகான பெண்மணி மலர்களுடன் சென்று உதவியிருக்கிறார். இது எப்படி நிகழந்தது என்று தாத்தாவுக்கு தெரியாது’ என்று அடுத்த குறும்பதிவில் தெரிவித்திருந்தார். எல்லோருக்கும் கிறிஸ்துமஸ் வாழ்த்துக்கள் என்றும் மகிழ்ச்சியுடன் கூறியிருந்தார்.
இதற்கு ஏற்பாடு செய்திருந்த பிலேருக்கும் நன்றி கூறி குறும்பதிவிட்டார். ’ என் தாத்தா திகைத்து போயிருக்கிறார். உங்கள் அம்மா டெஸ்கோ நிறுவனத்தில் வேலை பார்ப்பதாக நினைத்து கொண்டிருக்கிறார் . உங்கள் அம்மா இணையத்தில் பிரபலமாகி விட்டார் ‘. உங்கள் அம்மா தான் என் தாத்தாவுக்கு உதவ வந்த கிறிஸ்துமஸ் தாத்தா என்றும் கூறியிருந்தார்.
டிவிட்டர் மூலம் வேண்டுகோள் விடுக்கப்பட்ட அதை பார்த்து யாரோ ஒருவரின் அம்மா உணவு கொண்டு வந்து கொடுத்த அற்புதம் அந்த பெரியவருக்கு புரியவில்லை. ஏதோ மாயம் நிகழ்ந்திருக்கிறது என்று மட்டும் உணர்ந்திருக்கிறார்.
டிவிட்டர் மூலம் உதவி கோரி அது சாத்தியமான சம்பவங்கள் நிறையவே இருக்கின்றன. இந்த சம்பவத்தை பொருத்தவரை கிறிஸ்துமஸ் பண்டிகைக்கு முந்தைய தினம் டிவிட்டரால் ஒரு பெரியவருக்கு முன் பின் தெரியாதவர்களின் உதவி சாத்தியமானது தான். இது கிறிஸ்துமஸ் கொண்டாட்டத்துக்கான கூடுதல் மகிழ்ச்சியையும் அளித்தது. பல டிவிட்டர் பயனாளிகளை இதை குறிப்பிட்டும் வாழ்த்துக்களை பரிமாறிக்கொண்டிருந்தனர்.

அலெக்சியின் டிவிட்டர் முகவரி; https://twitter.com/toddlerlex

அலெக்சிக்கு உதவிய பிலேர்; https://twitter.com/red_hairy_blair

2 responses to “கிறிஸ்துமஸ் மகிழ்ச்சி தந்த டிவிட்டர் நெகிழ்ச்சி.

மறுமொழியொன்றை இடுங்கள்

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  மாற்று )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  மாற்று )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  மாற்று )

Connecting to %s