தமிழ் இணைய உலகில் மகத்தான முயற்சி

EP_012014 இலக்கியமயமாக துவங்கியிருக்கிறது. நண்பர் அனுப்பிய இமெயில் வாயிலாகவே முதலில் அந்த தகவல் தெரிய வந்தது. எழுத்தாளர் ஜெயமோகன் புத்தாண்டில் இருந்து மகாபாரதத்தை நாவல் வடிவில் எழுத உள்ளார். தொடர்ந்து பத்தாண்டுகளுக்கு தினமும் எழுத இருப்பதாக அறிவித்துள்ளார். மொத்தம் பத்து நாவல்கள்!.

இதற்காக வெண்முரசு எனும் தனி தளத்தை அமைத்திருக்கிறார். நாவலின் முதல் பதிவு முதல் கணலாக ( முதல் நாவல்) வெளியாகி இருக்கிறது. இதற்கு முன்னோட்டமாக மகாபாரதத்தை நாவல் வடிவில் எழுதும் திட்டம் பற்றி விரிவாகவே குறிப்பிட்டுள்ளார். இது வரை நான் ஏற்றுக்கொண்டதிலேயே மிகப்பெரிய பணியை துவங்குகிறேன் என்று கூறியுள்ள ஜெயமோகன் மகாபாரத்ததை நாவாலாக எழுதும் வேட்கை மற்றும் சவால் பற்றி உணர்ச்சி மயமாக குறிப்பிட்டுள்ளார்.

இது மகத்தான முயற்சி என்பதில் சந்தேகமில்லை. ஜெய்மோகன் வாசகனாக, தமிழ் இலக்கிய வாசகனாக அதிகம் எதிர்பார்க்கும் முயற்சி. எனது கூடுதல் மகிழ்ச்சி இணையம் எனும் சாதனத்தை மிகச்சரியாக பயன்படுத்திக்கொள்ளும் வகையில் இது அமைந்துள்ளது. ஜெயமோகன் தனக்கென தனி வாசகர் பரப்பை பெற்றுள்ளார். தினமும் கூடிக்கொண்டே வரும் அந்த வாசகர்களுடன் தொடர்பு கொள்வதற்காக இனையம் வழியாகவே அதிகம் எழுதி வருகிறார்.

வாசகர்களுக்கும் தனக்கும் இடையே எந்த விதமான இடைத்தரகர்களும் தேவையில்லை. இணையம் வழியே அவரகளுடன் நேரடியாகவே தொடர்பு கொள்கிறேன் எனும் விதமாக அவர் செயல்பட்டு வரும் விதம் தொழில்நுட்பத்தின் சாத்தியங்களை ஒரு எழுத்தாளர் அழகாக பயனப்டுத்திக்கொள்வதற்க்கு உதாரணமாக இருக்கிறது.

இணையப்பசிக்கு தீனிப்போடும் வகையில் அவர் அசுரத்தனமாக எழுதி வருவது இன்னொரு ஆச்சர்யம். அந்த வகையில் பார்த்தால் இப்படி தினமும் எழுதுவது என்பது ஜெயமோகன் போன்றோருக்கு மட்டுமே சாத்தியம். ஒரு நாவலை தினமும் எழுதி வாசகர்களை படிக்க செய்வது இணையத்தில் மட்டுமே சாத்தியம். இந்த மகத்தான முயற்சி வெற்றி பெற என் வாழ்த்துக்கள்.

அமெரிக்கா போன்ற நாடுகள் எழுத்தாளர்கள் இணையத்தின் சாத்தியங்களை பயன்படுத்திக்கொண்டு மகத்தான பரிசோதனைகளையும் புதுமையான முயற்சிகளையும் மேற்கொண்டு வருகின்றனர். ஜெயமோகன் இவ்விதம் செய்வது எனக்கு எல்லையில்லா மகிழ்ச்சி.

வியாசனை ஜெயமோகன் வழியே அறிந்து கொள்ள ஆவலோடு உள்ளேன்.

முதல் கணலின் முதல் பதிவில் இருள் பற்றி ஜெயமோகன் விவரித்துள்ளதை பார்த்தால் , அறிவிய்ல உலகில் பெரிதாக பேசப்பட்டும் பிலாக் ஹோல் என்ப்படும் கருந்துளைகள் பற்றிய விளக்கம் போல தோன்றுகிறது.

இந்த முயற்சியை சுட்டிக்காட்டி சிலிகான் ஹெல்ப் வலைப்பதிவு மற்றும் அதை மெயில் வாயிலாக தெரிவித்த நண்பருக்கும் எனது நன்றிகள்.

வெண்முரசு ஒலிக்க; http://venmurasu.in/2014/01/01/%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%BE%E0%AE%9A%E0%AE%A9%E0%AE%BF%E0%AE%A9%E0%AF%8D-%E0%AE%AA%E0%AE%BE%E0%AE%A4%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B3%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D/

Advertisements

4 responses to “தமிழ் இணைய உலகில் மகத்தான முயற்சி

    • சரியாக சொன்னீர்கள். சர்ச்சைகள் இல்லாமல் இருக்க வேண்டும். இருந்தாலும் ஆரோக்கியமானதாக இருக்க வேண்டும்.
      அன்புடன் சிம்மன்

மறுமொழியொன்றை இடுங்கள்

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  மாற்று )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out /  மாற்று )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  மாற்று )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  மாற்று )

w

Connecting to %s