ட்விட்டரில் கதை சொன்ன நைஜிரிய எழுத்தாளர்.

நைஜிரிய எழுத்தாளரான டேஜு கோலோவை ( Teju Cole )  உங்களுக்கு தெரியுமா ? இது வரை தெரியாவிட்டால் இப்போது தெரிந்து கொள்ளுங்கள். கோலே எப்படி என்ன செய்துவிட்டார் என்று நீங்கள் கேட்கலாம். புதுயுக எழுத்தாளரான கோலே  டிவிட்டர் வழியே கதை சொல்வதில் புதுமையை உண்டாக்கி புதிய இலக்கிய வடிவத்தை உண்டாக்கியிருக்கிறார். அதாவது  கோலே குறும்பதிவுகள் மூலமாகவே கதை ஒன்றை சொல்லியிருக்கிறார். டிவிட்டரை நன்கறிந்தவர்கள் , குறும்பதிவுகளாகவே கதை சொல்வது ஏற்கனவே முயற்சிக்கப்பட்டுள்ள விஷயம் தான் என்று வாதிடலாம். உண்மை தான் , 140 எழுத்துக்கள் கொண்ட குறும்பதிவுகளாகவே கதை எழுதுவதை ஒரு சில எழுத்தாளர்கள் ஏற்கனவே ஒரு புதிய இலக்கிய வடிவமாக கையாண்டுள்ளனர். ஆனால் கோலே என்ன செய்திருக்கிறார் என்றால், கதையை குறும்பதிவுகளாக தான் எழுதாமல் குறும்பதிவுகளாக திரட்டி கதை சொல்லியிருக்கிறார். அதாவது மற்றவர்கள் எழுதிய குறும்பதிவுகளை ஒவ்வொன்றாக தனது ட்விட்டர் பகத்தில் மறுகுறும்பதிவு செய்து (ரிடிவீட்) முழு கதையையும் உருவாக்கியுள்ளார்.

இவ்வாறு மற்றவர்களையும் பங்கேற்க வைத்து மறுகுறும்பதிவுகளாக யாரும் இதற்கு முன்னர் ட்விட்டரில் கதை சொன்னதில்லை. கோலே தான் இதை முதலில் செய்திருக்கிறார். ட்விட்டர் இலக்கியத்தில் இது ஒரு ஆச்சர்யமான பயன்பாடு தான். பொதுவாக ரிடிவீட் எனும் மறுகுறும்பதிவுகள் ஒருவர் வெளியிட்ட குறும்பதிவுகளை ட்விட்டர் பயனாளிகள் தங்கள் ட்விட்டர் பயனாளிகளோடு பகிர்ந்து கொள்ள பயன்படுத்தப்படுகிறது. அந்த குறும்பதிவின் கருத்தை ஆதரிக்கும் வகையில் இவ்வாறு செய்யப்படுவதாகவும் கொள்ளலாம். விதிவிலக்காக சில நேரங்களில் சிலர் மறுகுறும்பதிவு செய்தாலும் , அதன் கருத்தை தாங்கள் ஆதரிக்கவில்லை என்றும் குறிப்பிடுவதுண்டு. ஒரு குறும்பதிவு எந்த அளவுக்கு மறுமுறை குறும்பதிவு செய்யப்படுகிறதோ அந்த அளவுக்கு அது அதிகமானோரை சென்றடைய வாய்ப்பிருப்பதாக கருதப்படுகிறது.

எது எப்படியோ, ஒரு கதையை மறுகுறும்பதிவுகளாகவே சொல்லலாம் என்று இதுவரை ஒருவருக்கும் தோன்றவில்லை. டேஜு கோலேவுக்கு தோன்றியிருக்கிறது.

அது தா பொது இடத்தில் ஒருவருக்கு மாரடைப்பு ஏற்படும் நிகழ்வை மையமாக கொண்டு ஒரு கதையை முழுவதும் மறுகுறும்பதிவுகளாகவே உருவாகியிருக்கிறார். அந்த குறும்பதிவுகள் ஒவ்வொன்றும் ஒருவரது ட்விட்டர் பக்கத்தில் பகிரப்பட்டவை. அவற்றை எல்லாம் கோலே தனது பக்கத்தில் எடுத்து மறுகுறும்பதிவுகளாக வெளியிட்டிருக்கிறார். இவற்றை தொடர்ச்சியாக படிக்கும் போது மெல்ல கதையின் நகர்வு புரியும். கடைசி குறும்பதிவை படிதத்தும் ஒரு அருமையான சிறுகதையை படித்த உணர்வு உண்டாகும். பொதுவாக ட்விட்டர் பக்கத்தில் வெவ்வேறு ட்விட்டர் முகவரிகளின் குறும்பதிவுகளை பார்க்கும் போது அவற்றில் அங்கும் இங்கும் அலைபாயும் ஒருவித தொடர்பில்லாத தன்மை இருக்கும். இதற்கு மாறாக பல முகவரிகளின் குறும்பதிவுகளை ஒரு ஒத்திசைவோடு படிப்பது புதுமையான அனுபவம் தான். நவீன கதைசொல்லியாகி கோலே இந்த அனுபவத்தை கொடுத்து ஒரு சிறுகதையையும் படிக்க வைத்திருக்கிறார்.

நான் ஒரு கதை எழுதினேன், நாம் அதை இணைந்து சொன்னோம் . இதில் பங்கேற்ற தாராள மனம் கொண்ட சுயநல்லதாவர்கள் அனைவருக்கும் நன்றி’என்று கதையின் முடிவு மறுகுறும்பதிவுக்கு பின் கேலோ தெரிவித்திருந்தார். ட்விட்டர் வழியிலான இந்த இலக்கிய கூட்டு முயற்சியில் பங்கேற்றவர்களை கோலே முன்கூட்டியே தொடர்பு கொண்டு கதைக்கான குறும்பதிவுகளை கோரியிருக்கிறார்.

‘ ஒரு மறுகுறும்பதிவு எத்தனை தூய்மையானதாக இருக்க கூடும் என்ற எண்னமும், மற்றவர்களை எப்படி உங்கள் ட்விட்டர் பக்கத்தில் இடம்பெற வைக்க முடியும் என்ற எண்ணமும் என்னை வசிகரித்த்து ‘ என்று கோலே இது தொடர்பான பேட்டியில் கூறியிருக்கிறார். மறுகுறும்பதிவு செய்வது உண்டாக்க்கூடிய தயக்கத்திற்கு மாறாக , பலரும் இணைந்து செயல்படுவதற்கான ஒரு நிகழ்வாக இருந்தால் எப்படி இருக்கும் என்று சிந்தித்து இந்த முயற்சியில் ஈடுபட்டதாக கோலே கூறியிருக்கிறார்.

இந்த ட்விட்டர் கூட்டு கதையில் என்ன விஷேசம் என்றால் இந்த தனி குறும்பதிவுகள் படிக்கும் போது துண்டு துண்டாக இருந்தாலும், அவற்றை மறுகுறும்பதிவுகளாக ஒருசேர படிக்கும் போது அவற்றை இணைக்கும் மைய சரடு விளங்கிவிடும். கதை சொல்லில் புதிய அனுபவம் தான்.

நைஜிரியாவில் பிறந்து வளர்ந்து அமெரிக்காவின் நியூயார்க்கில் வசிக்கும், டேஜு கோலே , நவீன தொழில்நுட்பம் சார்ந்த இது போன்ற புதிய இலக்கிய முயற்சிக்காக அறியப்படுபவர்.

இதற்கு முன்பாக அவர் , ஆளில்லா விமானங்களின் பாதிப்பு பற்றி குறும்பதிவு கதைகளை எழுதியிருக்கிறார். ட்ரோன்ஸ் என்று சொல்லப்படும் ஆளில்லா விமானங்கள் ,சூடான், யேமன்,பாகிஸ்தான் போன்ற நாடுகளில் அமெரிக்க ராணுவத்தால் பயன்படுத்தப்பட்டு அதன் பயனாக யாரேனும் கொல்லப்படுவது குறித்து விழிப்புணர்வை ஏற்படுத்தும் வகையில் , ட்ரோன் சிறுகதைகள் எனும் தலைப்பில் குறும்பதிவுகளாக அவை குறுங்கதைகளை வெளியிட்டார். புகழ்பெற்ற நாவல்களின் ஆரம்ப வரிகள் ட்ரோன்களின் தாக்குதலால் இடைமறிக்கப்படுவது போல இந்த குறுங்க்தைகள் அமைந்திருந்தன. ’திருமதி டோலவே தானே மலர்களை வாங்கி வருவதாக கூறினார். வழக்கமான (ட்ரோன்) தாக்குதல் மலர்வியாபாரியை சாக்டித்தது. புகழ்பெற்ற எழுத்தாளரான வர்ஜீனியா வுல்ப்  எழுதிய நாவலின் முதல் வரியை கொண்டு இந்த ட்ரோன் குறுங்கதை எழுதப்பட்டிருந்தது. இந்த கதைகள் ஆளில்லா விமான தாக்குதலில் அப்பாவிகள் கொல்லப்படுவதன் தீவிரத்தை ட்விட்டர் மூலம் உணர்த்தின. இந்த வரிசையில் எழு குறுங்கதைகளை எழுதினார்.

அதே போல நைஜிரியாவின் லாகோஸ் நகரை மையமாக கொண்டு அவர் எழுதும் புதிய புத்தகத்திற்காக ஸ்மால் ஃபிட்ஸ் பிராஜக்ட் எனும் தலைப்பின் கீழு தனியே குறும்பதிவுகளை வெளியிட்டு வந்தார். நைஜிரிய நாளிதழ்களில் பார்க்க கூடிய கிரைம் செய்திகளை எடுத்து சற்றே மாற்றி அதையே ஒரு குறுங்கதையாக டிவிட்டரில் அவர் பகிர்ந்து கொண்டார். நைஜிரியா வாழ்க்கை மற்றும் கலாச்சாரம் பற்றிய தெறிப்புகளை கொண்டதாக இந்த ட்விட்டர் கதைகள் அமைந்திருந்தன.

கோலாவின் முதல் நாவல் ஒபன் சிட்டி எனும் பெயரில் வெளியாகி வரவேற்பை பெற்றது. அமெரிக்காவின் முன்னணி இதழ்களில் எழுதிவரும் கோலே தேர்ந்த புகைப்பட கலைஞரும் கூட. இந்தியாவுடன் நெருக்கமான தொட்ர்பும் கொண்டவர் . அடிக்கடி இந்தியா வந்து செல்கிறார்.

நவீன தொழில்நுட்பத்தை கோலே நன்றாக புரிந்து கொண்டுள்ளதன் அடையாளமாக அவரது இந்த புதிய இலக்கிய முயற்சிகள் அமைந்துள்ளன.

 

கோலேவின் ட்விட்டர் முகவரி: https://twitter.com/tejucole

 

—————

நன்றி; தமிழ் இந்து நாளிதழ்

 

 

Advertisements

மறுமொழியொன்றை இடுங்கள்

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  மாற்று )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out /  மாற்று )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  மாற்று )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  மாற்று )

w

Connecting to %s