இணையதளங்களை இமெயில் மூலம் பகிர சிறந்த வழி.

இணயதளங்களை இமெயில் மூலம் பகிர்ந்து கொள்வது ஒன்றும் பெரிய விஷயமல்ல. அதற்கு செய்ய வேண்டியதெல்லாம், பகிர விரும்பும் இணையதளத்தின் முகவரியை குறிப்பிடுவது மட்டும் தான். இமெயிலை பெறும் நண்பர் அந்த முகவரியை கிளிக் செய்து பார்த்துக்கொள்ளலாம். ஆனால் , இப்படி இணைய முகவரிகளை மட்டுமே அனுப்பி வைப்பதில் ஒரு சிக்கல் இருக்கிறது. அந்த முகவரிகளின் பின்னே உள்ள இணையதளங்கள் எப்படிப்பட்டவை என்பது அவற்றை கிளிக் செய்து பார்த்தால் மட்டுமே தெரியவரும். கிளிக் செய்யபடும் வரை அந்த முகவரிகள் வெறும் முகவரிகளாக மட்டுமே இருக்கும்.
நிச்சயம், மெயில் வாயிலாக பகிர்ந்து கொள்ளப்பட்டிருக்கின்றன என்றால் அந்த இணையதளம் பயனுள்ளதாக தான் இருக்க வேண்டும். அல்லது குறைந்தபட்சம் சுவாரஸ்யமானதாக இருக்க வேண்டும். ஆனால், இமெயிலை பெறுபவர் , இணைய முகரியை மட்டுமே வைத்துக்கொண்டு இவற்றை எல்லாம் யூகிக்க முடியாது அல்லவா? இணைய முகவரிகளை பகிர்பவர்கள் , அதற்கான காரணத்தை மெயிலில் குறிப்பிட்டிருக்கவே செய்வார்கள். ஆனா. அந்த அறிமுகமும் கூட எந்த அளவுக்கு முழுமையாக இருக்கும் என்று தெரியவில்லை. அதோடு , இணையதளங்களை சுட்டிக்காட்டும் போது விரிவான அறிமுகம் எழுத எத்தனை பேருக்கு நேரமும் பொறுமையும் இருக்கும்.
இதற்கு மாறாக இமெயிலில் உள்ள இணையதள முகவரி அவற்றுக்கான முன்னோட்டத்துடன் வந்து சேர்ந்தால் எப்படி இருக்கும் ? அதாவது இணைய முகவரி வெறும் இணைப்பாக மட்டும் இல்லாமல் , அந்த இணையதளத்தின் தோற்றம், அதன் தன்மையை குறிப்பிடும் தலைப்பு மற்றும் அதற்கான அறிமுக குறிப்புகளை கொண்டிருந்தால் எப்படி இருக்கும்? இத்தகைய முறையில் இணையதளங்களை இமெயில் வாயிலாக அனுப்பி வைக்கும் வசதியை வழங்குகிறது கிலிப்பெட்டர் இணையதளம் .
கிலிப்பெட்டர் மூலம் இணையதளங்களை அனுப்பி வைக்கும் போது அதை பெறும் நபா, மெயிலை கிளிக் செய்ததுமே அந்த இணையதளத்திற்கான முன்னோட்டத்தை பார்க்க முடியும். ஆகவே அந்த தளத்திற்கு சென்று பார்க்கமாலேயே அதன் தன்மையை தெரிந்து கொள்ள முடியும். இதன் மூலம் இணையதளத்திற்கு சென்று பார்ப்பதால் ஏற்படும் நேர விரயத்தையும் தவிர்க்கலாம். அதே போல அந்த இணையதளத்திற்கு சென்று பார்க்கலாமா வேண்டாமா எனூம் குழப்பத்தையும் தவிர்க்கலாம். மிகவும் முக்கியமான பணிகளில் ஈடுபாடிருக்கும் போது அலுவல் சார்ந்த இணையதளமா அல்லது , பொழுதுபோக்கு இணையதளமா என்பதை பார்த்தவுடன் தெரிந்து கொண்டு அதற்கேற்ப செயல்படலாம்.
அடிக்கடி இணையதள முகவரிகளை பகிர்ந்து கொள்பவ்ர்களுக்கு இந்த சேவை பயனுள்ளதாக இருக்கும் .முகவரிகளை பகிர்பவர்கள், இந்த முன்னோட்டத்தில் தங்கள் தனிப்பட்ட கருத்துக்களை இடம்பெற செய்வதற்கான வசதியும் இருக்கிறது. முன்னோட்ட குறிப்பில் திருத்தங்களையும் செய்யலாம். எல்லா இமெயில் சேவைகளிலும் செயல்படும் .தேவைப்பட்டால் வேர்டு கோப்பில் கூட பயன்படுத்தலாம்.
இந்த சேவை நான்கு விதங்களில் பயன்படுத்தலாம். கூகுளில் கூரோம் பிரவுசருக்கான நீட்டிப்பாக இதை டவுண்லோடு செய்து கொள்ளலாம். இதே போல ஐபோனுக்கான செயலியாகவோ அல்லது புக்மார்க்காகவோ டவுண்லோடு செய்து கொள்ளலாம்.
இப்படி டவுண்லோடு செய்யாமலும் பயன்படுத்த முடியும். அதற்கு பகிர விரும்பும் இணையதள முகவரிகளை இந்த தளத்திற்கு இம்யெஇல் மூலம் அனுப்பி வைத்தால் அதன் முன்னோட்ட வசதியுடன் அந்த இணைய முகவரி வந்து சேரும். அதை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளலாம்.

இணையதள முகவரி: http://info.clipbetter.com/

 

நன்றி ; தமிழ் கம்ப்யூட்டர்

—————————–

சைபர்சிமன் கையேடு -1

இந்த தொகுப்பில் 12 தலைப்புகளில் 98 இனையதளஙக்ள் பற்றிய விரிவான அறிமுகங்கள் உள்ளன. தொடட்புடை தளங்களை சேர்த்தால் 110 இருக்கும். எல்லாருடைய ஆர்வத்தையும் பூர்த்தி செய்யும் வகையில் தொகுப்பிற்கான தளங்களை தேர்வு செய்திருக்கிறேன்.

அன்புடன் சிம்மன்.

புத்தகம் தொடர்பான விவரங்களுக்கு; 

விவேக் எண்டர்பிரைசஸ் .

2/3, 4வது தெரு

கோபாலபுரம்

சென்னை. -86

போன்; 044-28111506

———–

 

 

 

Advertisements

மறுமொழியொன்றை இடுங்கள்

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  மாற்று )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out /  மாற்று )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  மாற்று )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  மாற்று )

w

Connecting to %s