லிங்க்டு இன் வழங்கும் தன்னார்வ சேவை வசதி.

linkeinஒரே கல்லில் இரண்டு மாங்காய் அடிக்கும் வகையில், தன்னார்வ சேவைக்கான வசதியை தொழில்முறை வலைப்பின்னல் தளமான லிங்க்டு இன் அறிமுகம் செய்துள்ளது. தன்னார்வ சேவையில் ஈடுபட விரும்பும் தொழில்முறை நபர்கள் மற்றும் திறமை மிகுந்த தன்னார்வளர்களை தேடிக்கொண்டிருக்கும் தொண்டு நிறுவனங்கள் ஆகிய இரு தரப்பினருக்கும் பாலமாக விளங்கும் வகையில் லிங்க்டு இன் இந்த சேவையை (http://volunteer.linkedin.com/ ) அறிமுகம் செய்துள்ளது.
லிங்குடு இன் சமூக வலைப்பின்னல் சேவை பற்றி நீங்கள் அறிந்திருக்கலாம். இதுவும் பேஸ்புக் போன்றது தான். ஆனால் வேலை வாய்ப்பு மற்றும் தொழில்முறையிலான நட்புக்கானது. இதன் மூலம் புதிய வேலையை தேடிக்கொள்ளலாம். ஒரே துறையில் இருக்கும் நபர்களுடன் நட்பை ஏற்படுத்திக்கொள்ளலாம். பேஸ்புக்கிற்கு முந்தையது என்றாலும் பேஸ்புக் அள்விற்கு லிங்க்டு இன் பரவலாக அறியப்படவில்லை. பொழுதுபோக்கு எனும் பரந்துவிரிந்த வெளிக்கு மாறாக தொழில்முறை சார்ந்தவர்களுக்கானது என்பதாலோ என்னவோ லிங்க்டு இன் பேஸ்புக் அளவுக்கு பிரபலமாகவில்லை. ஆனால் தனது பிரிவில் லிங்குடு இன் தான் தனிக்காட்டு ராஜா. இது ஒருபுறம் இருக்க சமீபகாலங்களில் லிங்க்டு இன் தனது இருப்பை மேலும் விரிவாக்கும் கொள்ளும் முயற்சியில் ஈடுபட்டு வருகிறது. இதன் பயனாக புதிய வசதிகளையும் அறிமுகம் செய்து வருகிறது.
 
சேவை செய்வதே ஆனந்தம்!

இந்த வரிசையில் வந்திருப்பது தான் , தன்னார்வ சேவைக்கான லிங்க்டு இன் வால்யுண்டர் வசதி. அடிப்படையில் இந்த சேவை என்னவென்றால் , தன்னார்வ சேவையில் ஆர்வம் உள்ள லிங்கடு இன் உறுப்பினர்கள் அதற்கான வாய்ப்புகளை தேடி பங்கேற்க உதவுவதே . வாழ்க்கை என்பது வேலையும் பொழுதுபோக்கும் தானா என்ன? நாம் வாழும் சமூகத்திற்கு ஏதேனும் செய்ய வேண்டும் என்ற எண்ணம் பலருக்கு இருக்கலாம். ஆனால் இதற்கான வாய்ப்புகளை தேடிச்செல்ல முடியாமல் சேவை ஆர்வத்தை மனதுக்குள்ளேயே பூட்டி வைத்திருக்கலாம். அதிலும் பெரிய நிறுவனங்களில் நல்ல வேலையில் இருப்பவர்கள் கைநிறைய சம்பாதிக்கும் நிலையில் ஓய்வு நேரத்தில் தங்கள் திறமையை நல்ல செயலுக்காக பயன்படுத்த நினைக்கலாம். ஆனாலும் பணிச்சுமைக்கு நடுவே தங்கள் பங்கேற்பு தேவைப்படகூடிய தொண்டு நிறுவனங்கள் அல்லது சேவை அமைப்புகளை தேடி தொடர்பு கொள்ள முடியாமல் தவிக்கலாம். அதே நேரத்தில் தொண்டு நிறுவனங்கள் தங்களுக்கு உதவ தயராக இருக்கும் தன்னார்வளர்களை அடையாளம் காண்பதும் சிக்கலாக இருக்கிறது. இந்த இரண்டுக்கும் தீர்வாக தான் லின்க்டு இன் தன்னார்வ சேவை வசதியை அறிமுகம் செய்துள்ளது.

சேவை பாலம்

தன்னாரவ சேவையில் ஆர்வம் கொண்ட தொழில்முறை நபர்கள் மற்றும் தன்னார்வளர்களை எதிர்பார்த்திருக்கும் தொண்டு நிறுவனங்கள் என இரு தரப்பினரையும் இணைக்கும் வகையில் லிங்க்டு இன் தளத்தின் இந்த புதிய வசதி அமைந்துள்ளது. இந்த வசதியை பயன்படுத்தி கொள்ள விரும்பும் உறுப்பினர்கள் தங்களது லின்க்டு இன் பக்கத்தில் தன்னார்வ (Volunteer and Causes  ) தொண்டு பகுதியை சேர்த்துக்கொள்ளலாம். இதன் மூலம் உறுப்பினர்கள் தன்னார்வ பணிக்கு தாங்கள் தயாராக இருப்பதை தெரிவிக்கலாம். எந்த வகையான் தன்னார்வ பணிகளில் ஈடுபட விரும்புகிறோம் என்பதையும் தெளிவாக குறிப்பிடலாம். இதை பார்க்கும் தொண்டு நிறுவனங்கள் தொடர்பு கொண்டு சேவை வாய்ப்பை அளிக்கும். சேவையில் பங்கேற்ற பிறகு அந்த அனுபவம் பற்றியும் பகிர்ந்து கொள்ளலாம். சேவை செய்த ஆனந்தத்தை அளிப்பதுடன் , சேவை மனப்பான்மையை வெளிப்படுத்தி கொள்ளவும் இது கைகொடுக்கும். மேலும் உறுப்பினர்கள் தாங்கள் நம்பிக்கை கொண்டுள்ள நோக்கங்கள் குறித்தும் மற்றவர்களுக்கு உணர்த்த முடியும். அதே நோக்கத்தில் ஆர்வம் கொண்டவர்களின் புதிய நட்பை பெறவும் இது உதவியாக இருக்கும். ஏன் சேவையில் நேர்ந்து செயல்படகூடிய புதிய நண்பர்களும் கிடைக்கலாம். தொழில் சார்ந்த சாதனகளையும் அனுபவத்தையும் பகிர்ந்து கொள்வது போல சேவை சார்ந்த அனுபவ பகிர்வு ஒருவருக்கு கூடுதல் சமூக அந்தஸ்தை கொடுக்கும் அல்லவா ?

தன்னார்வ சேவைக்காக தனியே எதாவது செய்ய வேண்டும் என்றில்லை. உறுப்பினர்கள் தங்கள் துறை சார்ந்த அனுபவம் அல்லது திறமையையே சேவையாக வழங்கலாம். உதாரணமாக இணையதள வடிவமைப்பாளர்கள் தொண்டு நிறுவனங்களுக்கான இணையதளத்தை வடிவமைத்து தரலாம். மார்கெட்டிங் நிபுணர்கள் மார்க்கெட்டிங் சேவையை வழங்கலாம்.

தொண்டு நிறுவனங்கள்.

தொண்டு நிறுவனங்கள் இந்த சேவையை பயன்படுத்திக்கொள்ள தங்களுக்கான பக்கத்தை உருவாக்கி கொண்டு அதில் எந்த வகையான உதவியை எதிர்பார்க்கிறோம் என தெரிவிக்கலாம். கிட்டத்தட்ட வேலைவாய்ப்புக்கான அறிவிப்பு போன்றது தான் இதுவும் .ஆனால் தன்னார்வ பணிக்கானது. ஆர்வம் உள்ளவர்கள் இந்த பகுதி மூலமோ தொடர்பு கொண்டு விண்ணப்பிக்கலாம். அதே பக்கத்தில் தொடர்புடைய தன்னார்வ பணிகளுக்கான அறிவிப்புகளும் இடம்பெற்றுள்ளன. அதே போல இந்த அறிவிப்பை பார்த்தவர்கள் பார்த்த வேறு அறிவிப்புகளும் சுட்டிக்காட்டப்பட்டுள்ளன. உறுப்பினர்கள் அதிகம் தேவை தன்னார்வ பணிகளும் சுட்டிக்காட்டப்பட்டுள்ளன. ஆக தன்னார்வ தொண்டு நிறுவனங்களும் தங்களுக்கு தேவையான தொழில்முறை நிபுணர்கள் உதவியை எளிதாக பெற முடியும். ( முதல் கட்டமாக அமெரிக்கா சார்ந்த சேவை நிறுவனங்களே பட்டியலிடப்பட்டுள்ளன. ஆனால் படிப்படியாக இந்த சேவை விரிவுபடுத்தப்படுமெ என்று எதிர்பார்க்கலாம். ) . உறுப்பினர்கள் இந்த சேவையை பயன்படுத்த கட்டணம் இல்லை. ஆனால் சேவை நிறுவனங்கள் தங்கள் வாய்ப்புகளை பட்டியலிட கட்டணம் உண்டு.

சேவை ஏன் ?

பொதுவாக புதிய வேலை வாய்ப்புக்கானதாகவே அறியப்படும் லிங்க்டு இன், தன்னார்வ சேவை வசதியை அறிமுகம் செய்திருப்பது ஏன் என்று கேள்வி எழலாம். லிங்க்டு இன் தளமே இதற்கான பதிலை அளித்துள்ளது. அதன் உறுப்பினர்களில் 82 சதவீதம் பேர் தங்கள் நேரம் மற்றும் திறமையை தன்னார்வ பணிகளுக்கு செலவிட விரும்புவது ஒரு ஆய்வில் தெரிய வந்ததை அடுத்து , அந்த இலக்கை நிறைவேற்றி கொள்ள உதவுவதற்காக இந்த சேவையை அறிமுகம் செய்துள்ளதாக் தெரிவித்துள்ளது. அது மட்டும் அல்ல, தன்னார்வ சேவை என்பது ஒருவரது தொழில்முறை வாழ்க்கையை மேலும் மேம்படுத்தி கொள்வதற்கான வாய்ப்பு என்றும் ஊக்கம் அளித்துள்ளது. தன்னார்வ சேவையில் பங்கேற்பதன் மூலம் உறுப்பினர்கள் தாங்களது சமூக ஆர்வத்தை வெளிப்படுத்திக்கொள்ளலாம். பணி சார்ந்த திறமையை வெளிப்படுத்திக்கொள்வது போல தான் இதுவும். இதன் மூலம் நட்பு கிடைப்பதோடு புதிய வேலை வாய்ப்பும் கூட கிடைக்கலாம். குறிப்பாக தற்போது பார்த்து கொண்டிருக்கும் வேலையில் இருந்து விடுபட்டு தங்கள் ஆர்வம் சார்ந்த புதிய வேலையை தேடிக்கொண்டிருப்பவர்களுக்கு இந்த தொண்டு அதற்கான களமாக அமையலாம்.

இதற்கு ஆதாரம் இல்லாமல் இல்லை. தன்னார்வ தொண்டு பணி சார்ந்த பலன்களை தந்துள்ளதாக ஆய்வுகள் தெரிவிக்கின்றன. லிங்க்டு இன் மூலம் பணிக்கு அம்ர்த்திக்கொள்ளும் அதிகாரிகளில் 41 சதவீதம் பேர் மற்ற திறமைகளோடு தன்னார்வ பணிகளையும் முக்கியமாக கருதியதாக தெரிவித்துள்ளனர். உறுப்பினர் பக்கத்தில் தன்னார்வ பணிகள் பற்றிய ஆர்வமும் அனுபவமும் இருப்பது தொழில்முறையிலும் உதவும். அதிலும் குறிப்பாக வேலையில் இல்லாமல் இருப்பவர்களுக்கு தன்னார்வ பணி அனுபவம் மூலம் புதிய வேலை கிடைப்பதற்கான வாய்ப்பு அதிகம் என்று கூறப்படுகிறது. ஆக, நீங்களும் கூட லிங்க்டு இன் சேவையில் சேர்ந்து தொழில்முறையிலான உறவை வளர்த்துக்கொள்ளலாம். ஏற்கனவே உறுப்பினராக இருந்தால் அதில் உங்கள் பங்கேற்பை மேலும் தீவிரமாக்கி கொள்ளலாம்.

————

நன்றி; தமிழ் கம்ப்யூட்டர்

 

—————

குறிப்பு : இணையத்தால் இணைவோம் ; சைபர்சிம்மன் கையேடு -1 தொடர்பாக ஒரு விஷயத்தை பகிர்ந்து கொள்வது பொருத்தமாக இருக்கும் என நினைகிறேன்.

இந்த நூலில் மிகச்சிறந்த இணையதளங்கள் இடம்பெற்றுள்ளன. சமூகம், இலக்கிய செயலபாடு, இசை, சினிமா, பயன்பாடு, பொழுதுபோக்கு என பல்வேறு அம்சங்கள் அடிப்படையில் தேர்வு செய்யப்பட்ட இணையதளங்கள். இவற்றை தேர்வு செய்வதில் மிகுந்த கவனமும் உழைப்பும் செலுத்தியுள்ளேன். பொதுவாக கருதப்படக்கூடியது போல இந்த தேர்வு ,அறிமுகமும் மொழிபெயர்ப்பு அல்ல. சுயதேடலில் தேர்வு செய்த தளங்கள் தமிழ் சூழலுக்கு ஏற்ப தமிழில் விரிவாக அறிமுகம் செய்யப்படும் வகையில் அமைந்துள்ளன.

புத்தகம் இதை உறுதி செய்யும் என நம்புகிறேன்.

அன்புடன் சிம்மன்,

 

—————–

 புத்தகம் தொடர்பான விவரங்களுக்கு; 

விவேக் எண்டர்பிரைசஸ் .
2/3, 4வது தெரு
கோபாலபுரம்
சென்னை. -86
போன்; 044-28111506

 

 

மறுமொழியொன்றை இடுங்கள்

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out / மாற்று )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out / மாற்று )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out / மாற்று )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out / மாற்று )

Connecting to %s