அடுத்து என்ன புத்தகம் படிக்கலாம் ; வழிகாட்டும் இணையதளங்கள்.

அடுத்ததாக என்ன புத்தகம் படிக்கலாம் ? புத்தக பிரியர்களுக்கு இதைவிட ஆர்வத்தை தூண்டக்கூடிய கேள்வி வேறு இருக்க முடியாது. இந்த கேள்விக்கு பதிலாக அமையக்கூடிய சரியான புத்தகதை அறிமுகம் செய்து கொள்வதைவிட மகிழ்ச்சி தரக்கூடியதும் வேறு இருக்க முடியாது. புத்தக விமர்சனம், நண்பர்கள் பரிந்துரை ,இலக்கிய தேடல், சிறந்த புத்தகங்களின் பட்டியல் என இதற்கு பலவழிகள் இருக்கின்றன. ஆச்சர்யத்தையும் ஆனந்த்தையும் அளிக்ககூடிய அந்த அடுத்த புத்தகத்தை கண்டுகொள்ள உதவும் சுவாரஸ்யமான இணையதளங்களும் இருக்கின்றன தெரியுமா ? வழக்கமான விமர்சனம் மற்றும் முன்னணி புத்தகங்களின் பட்டியலை தாண்டி ,ஏற்கனவே படித்த புத்தகங்களின் அடிப்படையில் வாசகர்களின் ரசனைக்கேற்ற புத்தகங்களை முன்வைப்பதே இந்த இணையதளங்களின் சிறப்பு.

 

1.வாட் ஷுட் ரீட் நெக்ஸ்ட் (  http://www.whatshouldireadnext.com/)

 

அடுத்ததாக நான் என்ன புத்தகம் படிக்கலாம்? இந்த கேள்வியையே தலைப்பாக கொண்ட இந்த இணையதளம் அழகாக இதற்கான பதிலை அளிக்கிறது. இந்த இணையதளம் மூலம் புதிய புத்தகத்தை அறிமுகம் செய்து கொள்ள , ஒருவர் தனக்கு பிடித்தமான எழுத்தாளர் அல்லது புத்தகத்தை தெரிவிக்க வேண்டும். தளத்தில் நடுநாயகமாக இருக்கும் தேடல் கட்டத்தில் இந்த விவரத்தை சமர்பித்தவுடன் , அந்த எழுத்தாளர் அல்லது புத்தகத்திற்கு தொடர்புடைய மற்ற புத்தகங்களின் பட்டியல் வந்து நிற்கும். இந்த பட்டியலில் உள்ள புத்தகங்கள் அநேகமாக முதலில் சமர்பிக்கப்பட்ட புத்தகத்தின் தன்மைக்கு ஒத்ததாக இருக்கும். தேடியவரின் வாசிப்பு தன்மையின் அடிப்பைடயில் உருவாக்கப்பட்ட பட்டியல் என்பதால் இதில் உள்ள புத்தகங்கள் அநேகமாக அவருக்கு பிடித்திருக்க வாய்ப்புகள் அதிகம்.

பட்டியலில் உள்ள புத்தகம் பற்றிய கூடுதல்தகவல்களை பெறலாம் என்பதோடு இணையம் மூலமே வாங்கி கொள்ளலாம். புத்தக பரிந்துரை பட்டியலை பேஸ்புக், ட்விட்டர் மூலம் நண்பர்களிடம் பகிர்ந்து கொள்ளலாம்.

இந்த பரிந்துரைகள் வாசகர்கள் சமர்பித்த பிடித்தமான புத்தகங்களின் அடிப்படையில் தேர்வு செய்யப்பட்டவை. நீங்களும் விரும்பினால் உங்கள் அபிமான புத்தகங்களின் பட்டியலை இதில் சமர்பிக்கலாம்.

2. என்ன புத்தகம் (http://www.openingthebook.com/whichbook/)

அடுத்த்தாக படிக்கும் புத்தகம் பிடித்த்தாக இருக்க வேண்டும் ஆனால் முற்றிலும் எதிர்பாராத்தாக இருக்க வேண்டும் என நினைத்தால் இந்த இணையதளம் அந்த எதிர்பார்ப்பை கச்சிதமாக நிறைவேற்றும். எல்லோருக்குமே பிடித்தமான எழுத்தாளர்கள் இருக்கின்றனர். தேடி படிக்கும் புத்தக தலைப்புகள் இருக்கின்றன. ஆனால் இவை தவிர ஆயிரக்கணக்கான புத்தகங்கள் வெளியாகின்றனவே. அவற்றில் ஏதோ ஒன்று உங்களுக்கு பிடித்தமானதாக இருக்கலாம் அல்லவா? இப்படி கேட்பதோடு இவ்வாறு உங்களுக்கு பிடித்திருக்க கூடிய புத்தகத்தை இந்த தளம் அறிமுகம் செய்கிறது. இந்த தளத்தில் என்ன விஷேசன் என்றால் வசகர்கள் தங்கள் மனநிலைக்கு ஏற்ப புத்தகங்களை பரிந்துரைக்க கேட்கலாம். உதாரணமாக எளிதாக படிக்க கூடிய புத்தகம் தேவை என குறிப்பிட்டு தேடலாம். இல்லை என்றால் மனதை உலுக்கும் புத்தகம் தேவை என குறிப்பிடலாம். வழக்கமான புத்தகம் ,அசாதரணமான புத்தகம் , வன்முறையானது, கிளர்ச்சி ஊட்டக்கூடியது , சிறியது , பெரியது என பலவிதங்களில் புத்தகங்களை தேடலாம். இதற்கான குறிச்சொற்களின் பட்டியல் இட்து பக்கம் இருக்கிறது. தேவையான பிரிவை தேர்வு செய்த பின் பொருத்தமான புத்தகங்களின் பட்டியல் வருகிறது. புத்தகத்தின் தலைப்பு, எழுதிய எழுத்தாளர் மற்றும் சுருக்கமான அறிமுகத்துடன் தேவைப்பட்டால் அந்த புத்தகம் போன்ற பிற புத்தகங்களை தேடுவது உட்பட கூடுதல் வசதி கீழே கொடுக்கப்பட்டுள்ளது. இந்த புத்தகத்தை நண்பர்களுடன் பகிரும் வசதியும் உண்டு. முற்றிலும் எதிர்பாராத புதிய புத்தகங்களை அறிமுகம் செய்து கொள்ள இந்த தளம் சிறந்த வழி. வாசகர்கள் விரும்பினால் தங்களுக்கான புத்தக பட்டியலையும் உருவாக்கி கொள்ளலாம். ஏற்கனவே உருவாக்கப்பட்டுள்ள புத்தக பட்டியலையும் பார்க்கலாம். வாசகர்கள் எதிர்பார்க்கும் மனநிலைக்கு ஏற்ற புத்தகங்களை பரிந்துரை செய்வது தான் இந்த தளத்தின் சிறப்பம்சம் என்றாலும் வழக்கமான பாணியில் அகரவரிசையிலும் எழுத்தாளர்களை எழுதிய புத்தகங்களை காணலாம்.

3. புக் சீர் (http://bookseer.com/)

மிக எளிமையான புத்தக பரிந்துரை தளம். சமீபத்தில் படித்த புத்தகம் மற்றும் அதன் எழுத்தாளரின் பெயரை சமர்பித்து விட்டு அடுத்ததாக என்ன புத்தகம் படிக்கலாம் என கேட்டால் அதற்கான புத்தகங்களை இந்த தளம் முன்வைக்கிறது. ஆனால் இந்த பரிந்துரைகள் பிரபல மின்வணிக தளமான அமேசானின் பரிந்துரைகளாகவே இருக்கின்றன.

 

4. ஜிநூக்ஸ் (http://www.gnooks.com/ )

மிகவும் எளிமையான புத்தக பரிந்துரை இணையதளம் என்றாலும் புதிய புத்தகங்களை இந்த தளம் அறிமுகம் செய்யும் விதம் மெய்மறக்க வைத்துவிடும். காரணம் இந்த தளம் இலக்கிய வரைபட்தை உருவாக்கி அதில் எழுத்தாளர்களை பொருத்தி காட்டுகிறது. வாசகர்கள் தங்கள் அபிமான எழுத்தாளர்களின் பெயரை குறிப்பிட்டதுமே இந்த தளம் அந்த எழுத்தாளரை மையமாக கொண்டு அவருடன் தொடர்புடைய அல்லது அவர் எழுத்து பாணிக்கு தொடர்புடைய மற்ற எழுத்தாளர்களை அடையாளம் காட்டுகிறது. இப்படியாக எழுத்தாளரை சுற்றி தொடர்புடைய எழுத்தாளர்களின் பெயர்களை காணலாம். அருகே உள்ள எழுத்தாளர்கள் வாசகர் குறிப்பிட்ட எழுத்தாளருடன் நெருக்கமான தொடர்புடையவர். இந்த வரைபடத்தில் உள்ள எந்த எழுத்தாளர் பெயரை கிளிக் செய்தாலும் அவரை மையமாக கொண்டு எழுத்தாளர்கள் வரைபடத்தை காணலாம். அதில் இன்னொரு எழுத்தாளரை கிளிக் செய்தால் அவரை மையமாக கொண்ட எழுத்தாளர் வரைபடம் வரும் . இப்படி தொடர்புடைய எழுத்தாளர்களை தேடிக்கொண்டே போகலாம். ஒரே தன்மை கொண்ட எழுத்தாளர்களை அறிந்து கொள்ள முடிவதுடன் புதிய எழுத்தாளர்களையும் அறிமுகம் செய்து கொள்ளலாம். இதே போல பிடித்தமான மூன்று எழுத்தாளர்கள் பெயர்களை குறிப்பிட்டால் , இந்த தேர்வின் அடிப்படையில் புதிய புத்தகங்களை பரிந்துரைக்கிறது. இசை மற்றும் திரைப்படங்களுக்கும் இதே போன்ற சேவையை வழங்குகிறது.

 

5. புத்தக விளக்கு (http://booklamp.org/ )

 

பிடித்த புத்தகத்தின் அடிப்படையில் அடுத்த படிக்க கூடிய புத்தகத்தை பரிந்துரைக்கும் தளம் என்றாலும், புக்லாம்ப் இந்த பரிந்துரையை அறிவியல் துணையோடு அடுத்த கட்ட்த்திற்கு கொண்டு செல்கிறது. அதாவது ஒவ்வொரு புத்தகத்தின் வாசிப்பு மரபணுவையும் ஆய்வு செய்தே அதே போன்ற மரபணு கொண்ட பிற புத்தகங்களை படிக்க சொல்கிறது. இசை துறையில் இதே முறையில் பரிந்துரையை வழங்கும் பாண்டோரா(http://www.pandora.com/restricted )  போலவே இந்த தளம் புத்தகங்களுக்கான மரபணு கூறுகளை ஆய்வு செய்து அவற்றின் தன்மைகளை பட்டியலிட்டு தொடர்புடைய புத்தகங்களை முன் வைக்கிறது. பிடித்த எழுத்தாளர் அல்லது புத்தகத்தின் பெயரை குறிப்பிட்டு தேடலை துவங்கலாம். புத்தகங்களின் மரபணு கூறுகளின் அடிப்படையிலும் புத்தகங்களை தேடிப்பார்க்கலாம்.

 

இலக்கிய ஆர்வம் கொண்டவர்கள் முதல் சாதாரண வாசகர் வரை அனைவரையும் கவரக்கூடிய இந்த தளங்கள் சுவாரஸ்யமான வாசிப்பு அனுபவத்தை சாத்தியமாக்க குடியவை. இவை பெரும்பாலும் ஆங்கில புத்தகங்கள் சார்ந்தவை என்பது தமிழ் வாசகர்களை ஏக்க பெருமூச்சு விடவைக்கலாம். தமிழிலும் இது போன்ற இணையதளங்கள் உருவாக்கப்படுவதற்கான உந்துதலாகவும் அமையலாம்.

 

Advertisements

2 responses to “அடுத்து என்ன புத்தகம் படிக்கலாம் ; வழிகாட்டும் இணையதளங்கள்.

  • நான் மிகவும் ரசித்து எழுதிய பதிவு இது. தங்களுக்கும் பிடித்திருப்பது மகிழ்ச்சி. புத்தகங்களுக்கான வலைப்பின்னல் சேவையான லைப்ரரிதிங் மற்றும் குட்ரீட்ஸ் பற்றி எழுத வேண்டும் என எண்ணியுள்ளேன். உங்கள் கருத்து அதற்கு ஊக்கம் அளிக்கிறது.

   அன்புடன் சிம்மன்.

   ——–
   பதிவுகளை பிடித்திருப்பதாக சொன்னதற்கு நன்றி. முடிந்தால் எனது தொகுப்பு நூலான இணையத்தால் இணைவோம் படித்து பார்த்து கருத்து சொல்லவும். ; http://600024.com/store/inaiyathal-inaivom-mathi-nilayam

மறுமொழியொன்றை இடுங்கள்

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  மாற்று )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out /  மாற்று )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  மாற்று )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  மாற்று )

w

Connecting to %s