இமெயில் செய்திகளை பி.டி.எப் கோப்பாக மாற்ற உதவும் இணையசேவை.

எந்த வடிவிலான கோப்புகளையும் பி.டி.எப் வடிவில் மாற்றுவது எளிதானது தான் . இதற்காக என்றே பல இணையதளங்கள் இருக்கின்றன. சில நேரங்களில் இமெயிலில் வரும் முக்கிய தகவல்களை பி.டி.எப் வடிவில் மாற்றும் தேவை ஏற்படலாம். இத்தகைய தேவை ஏற்பட்டால் , இமெயில் செய்தியை டவுண்லோடு செய்து சேமித்து வைத்துக்கொண்டு அதன் பின்னர் பி.டி.எப் மாற்றி மூலம் மாற்றிக்கொள்ள வேண்டும். ஆனால் , இப்படி எல்லாம் கஷ்டப்படாமல் இமெயில் செய்தியை பி.டி.எப் கோப்பாக மாற்றித்தரும் அருமையான இணையதளம் இருக்கிறது தெரியுமா?

இமெயில் வழியே மாற்றம்!.

பி.டி.எப் கன்வெர்ட்.மீ  ( https://pdfconvert.me/) எனும் இந்த இணைதளம் மூலமாக இமெயிலில் வரும் எந்த செய்தியையும் பி.டி.எப் கோப்பாக மாற்றிக்கொள்ளலாம். இந்த சேவையை இமெயில் மூலமாகவே பயன்படுத்தலாம் என்பது தான் விஷேசமானது. ஆம், நீங்கள் மாற்ற விரும்பும் இமெயில் செய்தியை அப்படியே இந்த தளத்திற்கு பார்வேர்டு செய்தால் போதும் அதை பி.டி.எப் வடிவில் மாற்றி இமெயில் மூலமே அனுப்பி விடுகிறது. இதை பயன்படுத்த , இமெயில் செய்தியை pdfconvert@pdfconvert.me  என்ற முகவரிக்கு அனுப்பி வைக்க வேண்டும். சாதாரண செய்திகள் முதல் எச்.டி.எம்.எல் குறிப்புகள் கொண்ட செய்திகள் வரை எல்லாவற்றையும் பி.டி.எப் வடிவில் மாற்றித்தருகிறது. மாற்றப்பட்ட கோப்பு ஒரு சில நொடிகளில் வந்து சேர்ந்துவிடும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
இமெயில் செய்தி இணைப்புகளுடன் கூடியது என்றால் அந்த இணைப்புகளையும் பி.டி.எப் வடிவில் மாற்ற வேண்டும். இதற்கு attachconvert@pdfconvert.me என்ற முகவரிக்கு மெயிலை அனுப்ப வேண்டும். இதே போல இமெயில் செய்தியின் தலைப்பி இல்லாமலும் பி.டி.எப் கோப்பாக மாற்றித்ததர கோரலாம். இதற்கு noheaders@pdfconvert.me என்ற முகவரிக்கும் மெயில் அனுப்ப வேண்டும்.
கம்ப்யூட்டரில் தனியே எந்த சாப்ட்வேரையும் நிறுவும் தேவையில்லாமலேயே இந்த சேவையை பயன்படுத்தலான் என்பதோடு , சம்பந்தப்பட்ட இணையதளத்திற்கு கூட செல்ல வேண்டியதில்லை என்பது இந்த சேவையை மிகவும் பயனுள்ளதாக ஆக்குகிறது.
ஸ்மார்ட்போன் மற்றும் டேப்லெட்டில் இமெயிலை அணுகும் போது அவற்றைபி.டி,எப் கோப்பாக மாற்றிக்கொள்ள இந்த சேவை கைகொடுக்கும். இதன் மூலம் பி.டி.எப் வடிவில் அச்சிடு வசதியை எளிதாக பயன்படுத்திக்கொள்ளலாம்.
இமெயிலை மட்டும் அல்ல , எந்த ஒரு இணையதளத்தையும் பி.டி எப் கோப்பாக மாற்றவும் இந்த சேவையை பயன்படுத்திக்கொள்ளலாம். இதற்கும் மாற்ற வேண்டிய இணையதள முகவரியை இமெயில் வழியே அனுபினால் போதுமானது. முகவரி: webconvert@pdfconvert.me .

பாதுகாப்பு குறிப்பு!.

இந்த சேவையை எப்படி பயன்படுத்துவது என்பது தொடரபான விளக்கம் இணையதளத்தில் இடம்பெற்றுள்ளது. இதை பார்க்க வேண்டும் என்றால் தளத்திற்கு விஜயம் செய்தாக வேண்டும். இருப்பினும் இந்த சேவை தொடர்பாக ஏதேனும் கேள்விகள் இருந்தால் அவற்றுக்கு இமெயில் வாயிலாகவே விளக்கம் பெறலாம். முகவரி: support@pdfconvert.me.
அருமையான சேவை தான் ஆனால், இமெயில் செய்தியை இன்னொரு இணையதளத்திற்கு அனுப்பி வைத்து பி.டி.எப்பாக மாற்றுவது பாதுகாப்பு குறித்த சந்தேகத்தை எழுப்பலாம். ஆனால் இந்த தளம் அனுப்பபடும் இமெயில் செய்தி எதையும் தனது சர்வரில் சேமித்து வைத்துக்கொள்ளவில்லை என்று உறுதி அளிக்கிறது. எதற்கும் ஒரு முறை இந்த தளத்தின் அந்தரங்க கொள்கையை ( பிரைவசி பாலிசி) படித்துக்கொள்வது நல்லது.
இது வரை பீட்டா வடிவில் இருந்த இந்த சேவை தற்போது இலவச சேவையாக அறிமுகமாகியுள்ளது.

மேலும் ஒரு சேவை!

இதே போலவே ஜாம்ஜர் இணையதளம் மூலமாகவும் இமெயில் செய்திகளை பி.டி.எப் கோப்பாக மாற்றலாம். ஜாம்ஜர் இணையதளமும் எந்த சாப்ட்வேரையும் டவுன்லோடு செய்யாமல் கோப்புகளை மாற்றித்தருகிறது. கோப்புகள் மட்டும் அல்லாமல், இசை வடிவிலான கோப்புகள் ,புகைப்படங்கள் , விட்டியோ கோப்புகள், மின்புத்தகங்கள் உள்ளிட்டவற்றையும் விரும்பிய கோப்பு வடிவில் இது மாற்றித்தருகிறது. கோப்புகளை கம்ப்யூட்டரில் இருந்தும் பதிவேற்றலாம். இமெயில் மூலமும் அனுப்பி வைத்து மாற்றிக்கொள்ளலாம். ஒவ்வொரு சேவைக்கும் ஒரு முகவரி இருக்கிறது.  ஆனால் ஒன்று , இந்த தளம் மாற்றிய கோப்பை இமெயிலில் அனுப்புவதில்லை. நீங்கள் தான் இணையதளத்திற்கு சென்று பெற்றுக்கொள்ள வேண்டும்.
ஜாம்ஜர் இணையதளம் கொஞ்சம் சிக்கலாக காட்சி தருவதோடு அதில் விளம்பர தொல்லைகளும் அதிகம் உள்ளன . அது மட்டும் அல்ல, ஒரு எம்.பி அளவிலான கோப்புகளை ஒரே நேரத்தில் எந்த கோப்பு வ்டிவிலும் மாற்றிக்கொள்ளலாம். கூட்தல் கொள்லளவு வேண்டும் என்றால் கட்டண சேவையே ஏற்றதாக இருக்கும். அந்த விதத்தில் பார்த்தால் பி.டி.எப் கன்வெர்ட் இணையதளம் மிகவும் எளிமையானதாக சிக்கலில்லாமல் இருக்கிறது.

குரோம் தரும் வசதி!.

ஆனால் நீங்கள் கூகுல் குரோம் பயன்படுத்துபவர் என்றால் அதில் உள்ள பி.டி,எ. ரைட்டர் வசதியையே இதற்காக பயன்படுத்திக்கொள்ளலாம். இதற்கு தனியே எதையும் தரவிறக்கம் செய்யத்தேவையில்லை. காரணம் குரோம் உலாவியே பி.டி.எப் ரைட்டராக செயல்படுகிறது. இதற்கு  Ctrl+P  என டைப் செய்து அதன்பின் பி.டி.எப்பாக சேமிக்கவும் என் தெரிவித்து விட்டு அச்சிடவும் என கட்டளையிட்டால் பொதுமானது.
இதே முறையில் இணைய பக்கங்களையும் பி.டி.எப் கோப்பாக பெறலாம். உங்கள் கம்ப்யூட்டரில் இருக்கும் பலவித கோப்புகளையும் இந்த முறையில் பி.டி.எப் வடிவில் மாற்றுவதும் சுலபம்.

Advertisements

4 responses to “இமெயில் செய்திகளை பி.டி.எப் கோப்பாக மாற்ற உதவும் இணையசேவை.

  1. நல்ல தகவல்களை வழங்கி வருகிறீர்கள். நீங்கள் வெளியிடும் தகவல்கள் எவ்வளவு முக்கியம் என்பது உங்களுக்கு தெரியும். ஆனாலும், எங்களுக்கு தேவையான இணையம், மென்பொருள் தொடர்பான சந்தேகங்கள் வரும்போதுதாம், உங்களின் பதிவுகளில் விடையிருக்கும் என நம்பி படிக்கவேண்டிய சூழலும் உள்ளது.

    இதுபோல், இன்று இப்பதிவில் தீர்வும் கிடைத்தது. ஆதலால், ஒன்னொன்றுக்கும் பின்னூட்டமிடுவதில்லை. தொடர்ந்து அரிய பல தகவல்களை எழுதுங்கள்.

மறுமொழியொன்றை இடுங்கள்

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  மாற்று )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out /  மாற்று )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  மாற்று )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  மாற்று )

w

Connecting to %s