உலக சாம்பியனோடு செஸ் ஆட ஆர்வமா? அழைக்கும் செயலி

PlayMagnusஉலக செஸ் சாம்பியனாக முடி சூடிக்கொண்டிருக்கும் நார்வே வீர்ர் மேக்னஸ் கார்ல்சனோடு செஸ் விளையாடும் வாய்ப்பு எல்லோருக்கும் கிடைத்துவிடுமா என்ன? ஆனால் இப்போது செஸ் விளையாட்டில் ஆர்வம் உள்ள யார் நினைத்தாலும் கார்ல்சனோடு மோதிப்பார்த்துவிடலாம். ஆம், இளம் செஸ் சாம்பியனான கார்லசனோடு செஸ் விளையாடலாம்.  இதற்கு உதவும் செல்போன் செயலி அறிமுகமாகியிருக்கிறது. ஐபோனில் செயல்படும் இந்த செயலியை கார்ல்சனே உருவாக்கி அறிமுகம் செய்திருக்கிறார். செயலியின் பெயர் பிலே மேக்ன்ஸ்.

கடந்த ஆண்டு சென்னையில் நடைபெற்ற உலக செஸ் சாம்பியன்ஷின் போட்டியில் இந்தியாவின் விஸ்வநாதன் ஆனந்தை தோற்கடித்து புதிய உலக சாம்பியனானார் கார்ல்சன். 23 வயதில் சாம்பியன் மகுடத்தை சூட்டிக்கொண்ட கார்ல்சனுக்கு ஸ்பான்சர்ஷிப் மூலம் டாலர்கள் கொட்டுகிறது. புதிய ஒப்பந்தகளும் தேடி வருகின்றன. புகழும்,பணமும் தேடி வந்துக்கொண்டிருக்கும் நிலையில், 23 வயதான கார்லசன் தன்னை வளர்ந்த்து விட்ட செஸ் விளையாட்டுக்கு கைமாறு செய்ய விரும்பியதன் அடையாளம் தான் பிலே மேக்னஸ் செஸ் விளையாட்டு செயலி. கார்ல்சன் அங்கம் வகிக்கும் நிறுவனம் சார்பில் இந்த செயலி உருவாக்கப்பட்டுள்ளது.

ஐபோனுக்கான இந்த செயலியை டவுண்லொடு செய்து கொண்டால் , செல்போனிலேயே கார்ல்சனோடு செஸ் விளையாடலாம். இணையத்தில் செஸ் விளையாடுவது போல , இந்த செயலியில் டிஜிட்டல் கார்ல்சனோடு செஸ் விளையாடலாம். இதில் புதுமையும் சுவாரஸ்யமும் என்ன என்றால் , கார்லசனோடு பல நிலைகளில் விளையாடலாம்! அதாவது , 5 வயது கார்லசனில் துவங்கி ,அவர் கிராண்ட்மாஸ்டராகி சாம்பியனான வரை 19 நிலைகளில் அவரோடு செஸ் ஆடலாம். ஒவ்வொரு நிலையில் அந்த வயதில் கார்ல்சனின் செஸ் ஆடும் திறனுக்கு ஏற்ப விளயாட்டும் வடிவமைக்கப்பட்டுள்ளது. ஆக ஐந்து வயது கார்லசனை எவரும் எளிதில் தோற்கடித்து விடலாம். ஆனால் போக போக அவரது செஸ் மேதமையின் வளர்ச்சிக்கு ஏற்ப விளையாட்டின் கடினத்தன்மையும் கூடிக்கொண்டே போகிறது. ஒவ்வொரு நிலையிலும் அந்த கட்டத்தில் கார்ல்சனின் ஆட்டத்திறமை பிரதிபலிப்பதோடு அந்த கட்டத்தின் அவர் பயன்படுத்திய செஸ் பாணியையும் தெரிந்து கொள்ளலாம். இதற்கு மேலும் உதவும் வகையில் அந்த அந்த கட்டங்களில் கார்ல்சனில் செஸ் பாணியை அறிமுகம் செய்யும் சிறிய வீடியோ விளக்கமும் இருக்கிறது.

சாம்பியனான கார்ல்சன் இது வரை பயன்படுத்தியுள்ள செஸ் விளையாட்டு பாணி மற்றும் அவரது காய் நகர்த்தும் முறைகளை உள்ளடக்கிய செஸ் இயந்திரம் இதன் பின்னே இருக்கிறது. எனவே, விளையாட்டின் போக்கிலேயே கார்ல்சனின் செஸ் வளர்ச்சியையும் , அவர் மேற்கொண்ட பாய்சல்களையும் தெரிந்து கொள்ளலாம். ஆக கார்லசனையும் நன்றாக் அறிமுகம் செய்து கொள்ளலாம், கூடவே செஸ் நுணுக்கங்களையும் கற்றுக்கொள்ளலாம். செஸ் விளையாட்டில் அர்வம் உள்ள எவரும் , இந்த செயலி மூலம் கார்ல்சனோடு செஸ் ஆடி மகிழலாம். ஆனால் உண்மையில் இந்த செயலில் செஸ் விளையாட்டில் ஆர்வம் கொண்ட சிறுவர் மற்றும் சிறுமியர்களை மனதில் கொண்டே உருவாக்கப்பட்டுள்ளது. தன்னை வளர்த்து விட்ட செஸ் விளையாட்டை இளம் உள்ளங்கள் மத்தியில் மேலும் பிரபலமாக்கவே இந்த செயலியை உருவாக்கி இருப்பதாக கார்ல்சன் கூறியுள்ளார்.

எனவே எதிர்கால செஸ் சாம்பியனாக விரும்பும் சிறுவர்கள் கார்ல்சனோடு செஸ் ஆடி மகிழ்வதோடு , அவரிடம் பயிற்சியும் பெறலாம். செயலியிலேயே பயிற்சி பெறுவதற்கான பகுதியும் இருக்கிறது. இதில் உள்ள வீடியோ மூலம் செஸ் நுணுக்கங்களை கற்கலாம். ஒரு சில வீடியோக்கள் இலவசமானவை . மற்றவற்றுக்கு கட்டணம் உண்டு. அடுத்த கட்டமாக பல வீரர்களோடு ஆன்லைனில் செஸ் ஆடிப்பார்க்கும் வசதியும் அறிமுகமாக உள்ளது.

இந்த செஸ் விளையாட்டு செயலியில் இன்னொரு சுவாரஸ்யமான விஷயம் இதில் உள்ள போட்டியில் பங்கேற்று அதிக புள்ளிகளோடு வெற்றி பெற்றால் , கார்லசனோடு நேரில் செஸ் ஆடும் வாய்ப்பை பெறலாம்.

இந்த செயலிக்காக உருவாக்கப்பட்டுள்ள இணையதளமும் எளிமையாக அழகாக இருக்கிறது. அதன் முகப்பு பக்கத்தில் கார்ல்சன் இந்த செயலி உருவாக்கும் பற்றி வீடியோவில் விளக்கம் அளிக்கிறார். அதன் கீழ் செயலியின் சிறப்பமசங்கள் கொடுக்கப்பட்டுள்ளன.

செஸ் ரசிர்களை கொண்டாட்டத்தில் ஆழ்த்தக்கூடிய செயலி. ஆண்ட்ராய்டு வடிவத்தையும் ரசிர்கள் எதிர்பார்ப்பார்கள்.

 

செயலிக்கான விவரங்கள் மற்றும் தரவிறக்கம் செய்ய : http://playmagnus.com/

 

Advertisements

மறுமொழியொன்றை இடுங்கள்

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  மாற்று )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out /  மாற்று )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  மாற்று )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  மாற்று )

w

Connecting to %s