மாயமான மலேசிய விமானத்தை நீங்களும் தேடலாம்

malayasiaநடுவானில் மாயமான மலேசிய விமானத்தை தேடும் பணியில் இந்தியாவும் ஈடுபட்டுள்ளது சமீபத்திய செய்தி. அதைவிட சமீபத்திய செய்தி , இந்த தேடலில் நீங்களும் பங்கேற்கலாம் என்பது தான்.

ரேடாரின் கண்களில் இருந்து விலகிச்சென்ற மலேசிய விமானம் எங்கு போனது , எந்த திசையில் போனது  என்று தெரியவில்லை. சீனாவை நோக்கி சென்ற விமானத்தை இப்போது அந்தமான் கடல் பகுதியில் தேடிக்கொண்டிருக்கின்றனர். கடற்படையினரோ , விமானப்படையினரோ இந்த தேடலில் உதவலாம். தேவையான கருவிகளும் உபகரணங்களும் இருக்கின்றன. ஆனால் , இணையவாசிகள் இந்த தேடலில் பங்கேற்பது எப்படி ?  செயற்கைகோள் இருக்க கவலையேன் என்பது தான் இந்த கேள்விக்கு பதில்.

ஆம், செயற்கைகோள் படங்களின் மூலம் காணாமல் போன் விமானம் அல்லது விமானத்தின் மிச்சம் கடல் பகுதியில் கண்ணில் படுகிறதா என இணையவாசிகள் தேடிப்பார்க்கலாம். உண்மையில் இது போன்ற தேடலில் இணையவாசிகளின் பங்களிப்பு தான் முக்கியமானது. எப்படி?

எல்லாவற்றுக்கும் தொழில்நுட்பம் இருக்கிறது. பூமியின் மேற்பரப்பை செயற்கைகோள்கள் புகைப்படம் எடுத்து அனுப்பிவைக்கின்றன. இந்த செயறகைகோள் படங்கள் தான் தேடலில் மிகப்பெரிய ஆயுதமாக இருக்கின்றன. விமானம் எங்கு போனது எனத்தெரியாத நிலையில் அது காணாமல் போயிருக்க கூடம் என சந்தேகிக்கும் பகுதிகளில் தேடிப்பார்க்கலாம். கடற்படையினர் இதை தான் செய்து கொண்டிருக்கின்றனர். இந்த தேடலுக்கு வரம்புகள் உண்டு.

அதனால் தான் இது போன்ற நேரங்களில் செயற்கைகோள் புகைப்படங்களை நாடுகின்றனர். சம்பவ இடத்தில் பதிவான தகவல்களை செயற்கைகோள் புகைப்படத்தில் பார்க்க முடியும் . இப்படி அல்சிப்பார்த்தால் விமானத்தின் தடயத்தை கண்டுபிடித்துவிடலாம். ஆனால் இந்த தேடல் சுலபமானது இல்லை. இன்ச் பை இன்ச் என்பார்களே அதே போல செயற்கைகோள் புகைப்படத்தை அதன் ஒவ்வொரு சதுர அடையையும் அலசிப்பார்த்தால் தான்  தடயங்கள் தெரியவரும். ஒருவரோ ஒரு சிலரோ இதை செய்ய முடியாது. ஆனால் ஒவ்வொருவராக கைகொடுத்தால் முழுவதும் தேடிப்பார்த்து விடலாம். இந்த உத்தி இணைய உலகில் கிரவுட் சோர்சிங் என்று சொல்லப்படுகிறது. அதாவது ஒரு பணியில் பலரும் பங்கேற்று பகுதி பகுதியாக நிறைவேற்றித்தருவது.

மலேசிய விமானத்துக்கான செயற்கைகோள் தேடலிலும் இப்படி தான் கிரவுட்சோர்சிங் முறையில் இணையவாசிகளை பங்கேற்க வைத்துள்ளனர்.

டிஜிட்டல் குளோப் எனும் செயற்கைகோள் வரைபட சேவை நிறுவனம் இந்த இணையதேடலுக்காக , டாம்நாட் எனும் இணையதளத்தை அமைத்துக்கொடுத்துள்ளது. இந்த தளத்தில் செயறகைகோள் புகைப்படம் கொடுக்கப்பட்டுள்ளது. அந்த வரைபடத்தை பெரிதாக்கி பார்த்து , விமானத்தின் மிச்சம் போன்ற பகுதி கண்ணி படுகிறதா என பார்க்க வேண்டும். ஏதேனும் கண்ணில் பட்டால் அதை டேக் செய்து சமர்பிக்க வேண்டும். எவ்வளவு பகுதி முடிகிறதோ அவ்வளவு பகுதியை பார்வையால் ஸ்கேன் செய்யலாம் . ஏற்கனவே மற்றவர்கள் பார்த்த இடத்தையும் ஆய்வு செய்யலாம் . புதிதாகவும் ஆய்வு செய்யலாம்.

டேக் செய்வதற்கான குறிப்புகளும் கொடுக்கப்ப்பட்டுள்ளன. இணையவாசிகள் சமர்பிக்கும் குறிப்புகளை இதற்காக என்று உருவாக்கப்பட்டுள்ள சாப்ட்வேர் பரிசிலித்து அவை பொருட்படுத்தக்கூடிய குறிப்புகளா என கண்டறிந்து தெரிவிக்கும்.அந்த இடங்களில் கூடுதல் கவனம் செலுத்தப்படும். இது வரை 60 மில்லியன் முறைகளுக்கு மேல் இந்த செயற்கைகோள் படங்கள் பார்க்கப்பட்டு தேடப்பட்டுள்ளது. 

டிஜிட்டல் குளோப் வர்த்தக நோக்கில் செயறகைகோள் புகைப்பட சேவையை வழங்கி வருகிறது. என்றாலும் இந்த விஷயத்தில் பொது நோக்குடன் பங்கேற்றுள்ளாது.விமானம் காணாமல் போன பிறகு தொடர்புடைய பகுதிகளை நோக்கி செயற்கைகோள் பார்வையை திருப்பி புகைப்படங்களை எடுத்து, விமானத்திற்கான டிஜிட்டல் தேடலில் ஈடுபட இந்த இணையதளத்தையும் அமைத்து இணையவாசிகள் பங்களிப்பையும் கோரியுள்ளது.

இதுவரை விமானத்தின் மிச்சத்தை அடையாளம் காணப்படவில்லை. ஆனால் , செயறகைகோள் படத்தை இணையவாசிகள் அங்குலம் அங்குலமாக அலசிப்பார்த்து கூட்டுத்தேடலில் ஈடுபடும் போது தடயம் இருந்தால் கிடைத்துவிடும் தானே.

நவீன தொழில்நுட்பம் ஏற்படுத்தி தந்துள்ள நம்பிக்கை இது. நாமும் கைகொடுப்போம். ; இணைய முகவரி: http://www.tomnod.com/nod/challenge/malaysiaairsar2014

 

——————


பி.கு:

தொழில்நுப்டத்தின் இத்தகைய சமூக பயன்பாட்டில் எனக்கு மிகுந்த ஈடுபாடு உண்டு. இந்த தேடல் பற்றி எழுதும் போது , ஏற்கனவே ஆண்டுகளுக்கு முன் கிரே எனும் கம்ப்யூட்டர் நிபுணர் காணாமல் போன போது, மாபெரும் இணைய தேடல் நடைபெற்றது நினைவுக்கு வருகிறது . அது பற்றிய பதிவு இங்கே : https://cybersimman.wordpress.com/2008/12/31/%E0%AE%A4%E0%AF%8B%E0%AE%B4%E0%AE%B0%E0%AF%81%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%BE%E0%AE%95-%E0%AE%A4%E0%AF%8A%E0%AE%B4%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D%E0%AE%A8%E0%AF%81%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%AE/

* கிரவுட்சோர்சிங் பற்றி குறிப்பிடும் போது அமேசானின்மெக்கானிகல் டர்க் முயற்சியும் நினைவுக்கு வருகிறது.

* பொதுவாகவே கிரவுட்சோர்சிங் முயற்சிகள் பற்றி தொகுத்து எழுத வேண்டும் என்பது என் விருப்பம். அறிய உஙக்ளுக்கும் விருப்பம் இருக்கிறதா?

* இந்த விமான தேடல் போலவே பேரிடர் காலங்களில் தொழில்நுட்பம் கைகொடுக்கும் விதம் பற்றொஇ கட்டுரைகள் அடங்கிய என புத்தகம் தயாராகி கொண்டிருக்கிறது . இது என் இரண்டாவது நூல். முதல் நூல், இணையத்தால் இணைவோம்; சைபர்சிம்மன் கையேடு-1, சில மாதங்களுக்கு முன் வெளியானது.

 

————

 

Advertisements

2 responses to “மாயமான மலேசிய விமானத்தை நீங்களும் தேடலாம்

மறுமொழியொன்றை இடுங்கள்

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  மாற்று )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out /  மாற்று )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  மாற்று )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  மாற்று )

w

Connecting to %s