விக்கிபீடியா தெரியும் ! விக்கி புதிர் தெரியுமா?

wikigameவிக்கிபீடியாவை நிச்சயம் உங்களுக்கு தெரிந்திருக்கும்.பிரபலமான இணைய களஞ்சியம் இது. பயனாளிகளே பங்கேற்று உருவாக்கலாம் என்பதால் கட்டற்ற களஞ்சியம் என்று அழைக்கப்படுகிறது. மாணவர்கள் முதல் ஆய்வாளர்கள் வரை குறிப்புகளுக்காக (Reference ) இணையத்தில் அதிகம் பயன்படுத்துவது விக்கிபீடியாவை தான். விக்கிபீடியாவில் உள்ள தகவல்களின் நம்பகத்தன்மை குறித்து கேள்விகள் உண்டே தவிர அதன் பயன்பாடு குறித்து எந்த சந்தேகமும் கிடையாது. நீங்களே கூட விக்கிபீடியாவில் தகவல்களை தேடியிருக்கலாம்.

விக்கிபீடியா சரி, விக்கி விளையாட்டு இருப்பது உங்களுக்குத்தெரியுமா?

விக்கி விளையாட்டா ? அது என்ன? என்று நீங்கள் ஆவலோடு கேட்பது புரிகிறது. விக்கிபீடியாவில் கட்டுரைகளை தேடுவதையே ஒரு இணைய விளையாட்டாக வடிவமைத்திருப்பதை தான் விக்கி விளையாட்டு என்று அழைக்கின்றனர். விக்கிபீடியேமேஸ்(http://wikipediamaze.com/ )  இணையதளம் இந்த விளையாட்டை வழங்குகிறது.

ஒரே கல்லில் இரண்டு மாங்காய் அடிப்பது என்பார்களே அதே போல , இந்த இணையதளம் ஒரு விளையாட்டின் சுவாரஸ்யத்தையும் அளிக்கிறது, அதே நேரத்தில் இணையகளஞ்சியமான விக்கிபீடியாவில் பல கட்டுரைகளையும் தேடிப்படிக்க வைக்கிறது. இந்த விளையாட்டில் ஈடுப்படும் ஒவ்வொரு முறையும் நீங்கள் இணையத்தில் புதிய விஷயங்களை தெரிந்து கொள்ளலாம்.

விக்கிபீடியாவில் எந்த தலைப்பிலும் கட்டுரைகளை பார்க்கலாம் இல்லையா? பொதுவாக நமக்கு ஏதாவது ஒரு தலைப்பில் தகவல் தேவை என்றால் விக்கிபீடியாவில் அதை தேடுவோம்.

இந்த தேடலையே விக்கிபுதிராக மாற்றித்தருகிறது , விக்கிபீடியாமேஸ் தளம். இந்த தளத்தில் கொடுக்கப்பட்டுள்ள ஒரு விக்கிபீடியா கட்டுரையில் இருந்து இன்னொரு விக்கிபீடியா கட்டுரைக்கு இணைப்புகளின் மூலம் தாவிச்செல்ல வேண்டும். இதற்காக எந்த அளவுக்கு குறைவான கிளிக்குகளை பயன்படுத்துகிறோம் என்பது தான் இந்த விளையாட்டின் சவால் .

உதாரணத்திற்கு இந்த புதிரை பாருங்கள். கெவின் பேக்கனில் இருந்து கனடியன் பேக்கனுக்கு செல்லுவது எப்படி ?அதாவது கெவின் பேக்கன் விக்கிபீடியா கட்டுரையில் இருந்து கனடியன் பேக்கன் கட்டுரைக்கு செல்ல வேண்டும். இதற்காக கெவின் பேக்கன் இணைப்பில் இருந்து துவங்கி , ஒவ்வொரு பொருத்தமான கட்டுரையாக கிளிக் செய்து போனால் கனடியன் பேக்கன் கட்டுரைக்கு சென்று விடலாம். ஆனால் அதிக கிளிக்களை பயன்படுத்தாமல் விரைவாக அந்த கட்டுரைக்கு செல்ல முடியுமா ? என்று பார்க்க வேண்டும்.

கெவின் பேக்கன் ஹாலிவுட் நடிகர் . கனடியன் பேக்கன் ஹாலிவுட் திரைப்படம், ஜான் கேண்டி எனும் நடிகர் நடித்த்து. ஜான் கேண்டியும் கெவின் பேக்கனும் , பிலேன்ஸ்,டிரைன்ஸ் அண்ட் ஆட்டோமொபைல்ஸ் படத்தில் இனைந்து நடித்துள்ளனர். ஆக கெவின் பேக்கனின் விக்கிபீடியா கட்டுரையில் ஆரம்பித்தால் , அதில் உள்ள பிலேன்ஸ்,டிரைன்ஸ் அண்ட் ஆட்டோமொபைல்ஸ் திரைப்பட இணைப்பை கிளிக் செய்தால் பேக்கனும் கேண்டியும் இணைந்து நடித்த படம் எனும் விவரம் வரும் . கேண்டி நடித்த படம் கனடியன் பேக்கன் என்பது நமக்கு தெரியும் என்பதால் , அவரது கட்டுரையில் இந்த படம் பற்றிய குறிப்பிள் கிளிக் செய்தால் அந்த கட்டுரைக்கு சென்றுவிடலாம். அவ்வளவு தான் விக்கி புதிரில் வெற்றி பெற்றாகிவிட்டது.

இப்படியே , இந்த தளத்தில் கொடுக்கப்பட்டுள்ள பல்வேறு விக்கிபுதிர்களை விடுவிக்க முயற்சிக்கலாம். ஜூல்ஸ் வர்னேவில் இருந்து பிலாட்டினமுக்கு செல்லவும், டாப் கன்னில் இருந்து ஜேம்ஸ் பாண்டிற்கு செல்லவும், எலிசிபெத் டெய்லரில் இருந்து எச்.எச்.ஹோம்சிற்கு செல்லவும் என வரிசையாக புதிர்கள் பட்டியலிடப்பட்டுள்ளன.

இவற்றை விளையாடுவதன் மூலம் குறைந்த இணைப்புகளில் செல்வதற்கான புள்ளிகளை பெறலாம். ஏற்கனவே விளையாடி வெற்றி பெற்றவர்களோடு நம்மை ஒப்பிட்டு பார்த்துக்கொள்ளலாம். அதிக புள்ளிகளுக்கு ஏற்ப இணைய பத்தக்கத்தையும் இந்த தளம் வழங்குகிறது. எனவே புதிர்களை விடுவிப்பது சுவாரஸ்யமாகவே இருக்கும். இந்த முயற்சியில் புதிய புதிய தலைப்புகளில் எல்லாம் விஷயங்களை தெரிந்து கொள்ளலாம். புதிர்களின் வகைகள் தனியே கொடுக்கப்பட்டுள்ளன. அவற்றில் இருந்து பிடித்தமான தலைப்பை தேர்வு செய்து கொள்ளலாம். அதே போல் அதிக புள்ளிகள் பெற்று  முன்னணியில் இருப்பவர்களின் பட்டியலும் முகப்பு பக்கத்திலேயே இருக்கிறது.இவ்வளவு ஏன் நீங்களே கூட இது போன்ற விக்கி புதிரை உருவாக்கி சமர்பிக்கவும் செய்யலாம்.

இந்த தளத்தை பயன்படுத்த உறுப்பினராக வேண்டும். இல்லை என்றால் கூகிள் அல்லது பேஸ்புக் கணக்கையே கூட பயன்படுத்திக்கொள்ளலாம்.

விக்கிகேம் தளமும் (http://thewikigame.com/) இதே போல விக்கி விளையாட்டை வழங்குகிறது. இலக்கு கட்டுரையை நோக்கி விரைவாக செல்வது, குறிந்த கிளிக்குகளில் செல்வது என பல வித விளையாட்டுகள் இருக்கின்றன. அதே போல , பிரபலமான ஆறு கோண தொடர்பு தெரியுமா? உலகில் உள்ள யாரும் , உலகின் எந்த பகுதியில் உள்ள எவருடனும் ஆறு தொடர்புகளில் தெரிந்தவர்களாக இருப்பார்கள் எனும் கோட்பாடே இவ்வாறு சொல்லப்படுகிறது. இந்த கோட்பாட்டின் அடிப்படையில் ஆறு தொடர்புகளில் இலக்கை அடையும் விளையாட்டும் இடம்பெற்றுள்ளது. விக்கிபீடியாரேஸ் (http://www.wikipediarace.com/) தளமும் இதே போன்ற விளையாட்டை வழங்குகிறது. ஆனால் , இதன் முகப்பு பக்கம் மிகவும் எளிமையாக இருக்கிர்றது. விக்கிபீடியாவில் ஒரு கட்டுரையில் இருந்து இன்னொரு கட்டுரைக்கு செல்லவும் எனுன் வாசகத்துடன் அந்த கட்டுரைகளுக்கான கட்டங்கள் மட்டுமே கொடுக்கப்பட்டுள்ளன.

ஆக , விக்கி விளையாட்டில் ஜாலியா ஈடுபட்டுப்பாருங்கள். அப்படியே புதிய விஷயங்களையும் தெரிந்து கொள்ளுங்கள். உங்களில் சிலருக்கு விக்கிபீடியாவில் உள்ள கட்டுரைகளின் ஆங்கிலம் கஷ்டமாக இருப்பதாக தோன்றலாம். கவலையேப்படாதீர்கள், எளிமையான ஆங்கிலத்தில் விக்கிபீடியா கட்டுரைகளை படிப்பதற்காக என்றே சிம்பில் இங்கிலீஷ் விக்கிப்பீடியா (http://simple.wikipedia.org/wiki/Main_Page ) உள்ளது. எளிமையான ஆங்கிலம் மற்றும் இலக்கணத்தில் இதில் கட்டுரைகள் இடம்பெற்றுள்ளன. தகவல்களையும் தெரிந்து கொள்வதோடு ஆங்கிலத்தையும் நட்பாக்கி கொள்ளலாம்.

———–

நன்றி;சுட்டி விகடன்

மறுமொழியொன்றை இடுங்கள்

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out / மாற்று )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out / மாற்று )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out / மாற்று )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out / மாற்று )

Connecting to %s