ஹாஷ்டேக் மட்டும் போதுமா? உக்ரைன் மக்கள் பலரும் ஆவேசமாகவும் ஆற்றாமையுடனும் இப்படி தான் கேட்க நினைக்கின்றனர். காரணம் , சர்வதேச விவகாரங்களில் எல்லாம் சம்மன் இல்லாமல் மூக்கை நுழைந்து பஞ்சாயத்து செய்யும் உலகின் பெரியண்ணன் அமெரிக்கா , உக்ரைனின் கிரேமியா விவகாரத்தில் ஒரு ஹாஷ்டேகுடன் தனது பொறுப்பை கைகழுவ பார்த்திருப்பது தான்!
ஐரோப்பிய ஒன்றியம் பக்கம் சேர்வதா அல்லது ஒரு காலத்து வல்லரசு ரஷ்யாவின் பக்கம் சாய்வதா எனும் பிரச்சனையில் உக்ரைன் பற்றி எரிந்து கொண்டிருப்பது உங்களுக்கு தெரிந்திருக்கலாம். உக்ரைன் மக்களில் பெரும்பாலானோர் வீதியில் இறங்கு போராடிக்கொண்டிருக்கின்றனர். இந்த போராட்டத்திற்கு டிவிட்டர் உள்ளிட்ட சமூக ஊடகங்கள் தான் உந்துசக்தியாக இருக்கின்றன. இது ஒருபுறம் இருக்க யுக்ரைனின் அங்கமான கிரேமியா பகுதியை ரஷ்யா தன்னுடன் சேர்த்து கொள்ள உள்ளது. இதற்காக நடத்தப்பட்ட் பொது வாக்கெடுப்பில் அப்பகுதி மக்கள் ரஷ்யாவுடன் இணைய சம்மதம் தெரிவித்தனர். ஆனால் இது மக்கள் விருப்பமா? ரஷ்யாவின் அரசியலா என்றெல்லாம் பல கேள்விகள் இருக்கின்றன.
ரஷ்யா இப்போது கிரேமியாவை சேர்த்துக்கொள்ள ராணுவ ரீதியாக முயன்று வருகிறது. ரஷ்யாவின் இந்த முயற்சிக்கு ஐக்கிய நாடுகள் சபை அனுமதி அளிக்கவில்லை. கிரேமியாவில் ரஷ்யா அத்துமீறி செயல்படுகிறதா ?எ நும் கேள்விக்கான பதில் இந்த பிரச்சனையில் ஒருவர் எந்த பக்கம் நிற்கிறார் என்பதை பொறுத்தே அமையும். எது எப்படியே ரஷ்யா இதில் உறுதியாக இருக்கிறது. கிரேமியாவுக்காக உக்ரைன் துடிக்கிறது.
இவை பிரச்சனியின் பின்னணியை கோட்டிட்டு காட்ட மட்டுமே . இனி விஷயத்துக்கு வருவோம். உலகில் ஒரு நாடு அத்துமீறி நடக்க முற்பட்டால் அதை தட்டிக்கேட்பது வல்லரசான அமெரிக்காவின் பொறுப்பு இல்லையா? எனவே இந்த பிரச்சனையில் அமெரிக்க என்ன செய்யும் என்று உலகம் உன்னிப்பாக கவனித்துக்கொண்டிருந்தது. அமெரிக்கா இந்த பிரச்சனைக்கு ராஜாங்க ரீதியாக தீர்வு காண முயன்று வருகிறது. அமெரிக்க காங்கிரஸ் உக்ரைனுக்கு நிதி உதவி அளிக்க ஒப்புதல் அளித்துள்ளது.
அமெரிக்க ரஷ்யாவுக்கு வலுவான எச்சரிக்கை விடுக்கும் , இந்த பிரச்ச்னையில் உறுதியான நடவ்டிக்கையை அறிவிக்கும் என்றெல்லாம் எதிர்பார்க்கப்பட்ட நிலையில் அமெரிக்க உக்ரைனுக்கு ஆதரவாக டிவிட்டரில் ஒரு பிரச்சாரத்தை துவக்கியுள்ளது. நாங்கள் உக்ரைன் பக்கம் என்று உணர்த்துவதற்காக அமெரிக்கா யுனைடட் பார் உக்ரைன் ( #UnitedForUkraine,) எனும் ஹாஷ்டேகை உருவாக்கியுள்ளது. அமெரிக்க வெளியுறுத்துறை அமைச்சகம் சார்பில் இந்த ஹாஷ்டேக் உருவாக்கப்பட்டுள்ளது. ]
இந்த ஹாஷ்டேக் மூலம் ஒன்றுபட்ட உகரைனுக்காக குரல் கொடுத்து டிவிட்டரில் அமெரிக்கா ஆதரவு திரட்ட திட்டமிட்டுள்ளது. இந்த பிராச்சாரத்தை துவக்கி வைக்கும் வகையில் அமெரிக்க வெளியுறவுத்துறை முதன்மை செய்தி தொடர்பாளர் ஜென் சகி , இந்த ஹாஷ்டேக் எழுதப்பட்ட அட்டையுடன் போஸ் கொடுக்கும் புகைப்படத்துடன் டிவிட்டர் செய்தியை பகிர்ந்து கொண்டுள்ளார். மேலும் பல அரசு அதிகாரிகளும் இவ்வாறே செய்துள்ளனர்.
இந்த ஹாஷ்டேகிற்கு நல்ல பலன் என்று தான் சொல்ல வேண்டும். முதல் சில மணிநேரங்களிலேயே இந்த ஹாச்டேக் தாங்கி பத்தாயிரத்துக்கும் மேற்பட்ட குறும்பதிவுகள் வெளியாகி உள்ளன. தொடர்ந்து வெளியாக கூடும். உகரைன் ஒன்றுபட்டு இருக்க வேண்டும் என்று இந்த ஹாஷ்டேக் வாயிலாக வலியுறுத்தப்படலாம்.ஆனால் இதற்கு பலன் இருக்குமா?
ரஷ்யா பிடிவாதமாக இருக்கும் நிலையில் , அமெரிக்கா அதன் பிடிவாதததை தளர்த்த முயற்சிக்காமல் , உக்ரைனுக்கு ஆதரவாக ஒரு ஹாஷ்டேக் பிரச்சாரத்தை மட்டும் துவக்குவது போதுமானதா ? எனும் கேள்வியை பலரும் எழுப்பியுள்ளனர். குறிப்பாக உக்ரைனில் உள்ளவர்கள்.
ஹாஷ்டேக் அருமையான ஆன்லைன் ஆயுதம் தான். குறிப்பிட்ட தலைப்புகளின் குறும்ப்திவுகளை ஒன்று திரட்டி ஆன்லைன் இயக்கமாக ஹாஷ்டேக் உதவலாம். ஆனால் ஒரு அரசு ஹாஷ்டேகை மட்டுமே உருவாக்கி விட்டு ஒதுங்கி கொள்ள முடியுமா?
நல்ல கேள்வி இல்லையா?
உக்ரைனுக்கு ஆதரவான ஹாஷ்டேக் ; https://twitter.com/search?q=%23UnitedForUkraine&src=hash
——-
பி.கு; இந்த பிரச்சனையில் உள்ள சிக்கல்களை கவனிக்காமல் இருக்க முடியாது . அமெரிக்கா உகரைனுக்கு ஆதரவாக ரஷாயாவுக்கு எதிராக உறுதியாக் செயல்பட்டால் அதுவும் கூடு ஒரு வகை அத்துமீறல் தான் இல்லையா? அது மட்டுமா இது மூன்றாம் உலகப்போருக்கான அச்சுறுத்தலாகவும் அமையலாம். இருப்பினும் ஒரு ஹாஷ்டேக் வல்லரசின் கடமையை நிறைவேற்ற போதுமானதா?
* எது எப்படி இருந்தாலும் ஹாஷ்டேகின் ஆற்றலை குறைத்து மதிப்பிட்டுவிடக்கூடாது. ஹாஷ்டேக் பல மாயங்களை செய்திருக்கின்றன. இருந்தாலும் டிவிட்டர் ராஜாங்க நோக்கில் பலவிதங்களில் பயன்படுத்தப்பட்டு வரும் நிலையில் , இது தீவிரமான விவாதத்தை துவக்கியிருப்பதாகவே கருதலாம்.
* இந்த பதிவுடன் தொடர்புடைய முந்தை சில டிவிட்டர் பதிவுகள் : 1.
எதிர்கட்சிகளுக்கு டிவிட்டர் மூலம் பதிலடி!; https://cybersimman.wordpress.com/search/%E0%AE%9F%E0%AE%BF%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%B0%E0%AF%8D/page/18/
2.
டிவிட்டர் புரட்சி வெடித்தது பாரீர்.;https://cybersimman.wordpress.com/2009/04/11/twitter-5/
3.
டிவிட்டரில் நடந்த வியக்க வைக்கும் உரையாடல்.;https://cybersimman.wordpress.com/2013/10/24/twitter-197/
4.
டிவிட்டரில் பதிலடி கொடுத்த அதிபர்.;https://cybersimman.wordpress.com/2012/06/09/twitter-161/