பாஸ்வேர்டுக்கான இரண்டு அடுக்கு பாதுகாப்பு முறை.

twoபாஸ்வேர்டுகள் முழுவதும் பாதுகாப்பானவை அல்ல என்பதை பாஸ்வேர்டு திருட்டு மற்றும் பாஸ்வேர்டு கொள்ளை தொடர்பான செய்திகளில் இருந்து நீங்கள் புரிந்து கொண்டிருக்கலாம். தாக்காளர்கள் எனும் கம்ப்யூட்டர் கில்லாடிகள் நினைத்தால் இணையவாசிகளின் பாஸ்வேர்டை களவாடிவிடலாம் என்பது பலமுறை நிருபிக்கப்பட்டுள்ளது. இன்னும் சில நேரங்களில் இணைய நிறுவனங்களின் இணையதளத்திற்குள் நுழைந்து மொத்தமாக ஆயிரக்கணக்கில் பயனாளிகளின் பாஸ்வேர்டை கொள்ளையடித்து விடுகின்றனர்.

 அது மட்டுமா பாஸ்வேர்டுகளை களவாடுவதற்கு என்றே மால்வேர் எனும் விஷமத்தனமான ஆணைதொடர்களையும் பயன்படுத்துகின்றனர். நம்மை அறியாமலேயே கம்ப்யூட்டருக்குள் புகுந்து கொள்ளும் இந்த மால்வேர்கள், இமெயில் போன்றவற்றை நுழைய நாம் பாஸ்வேர்டை பயன்படுத்தும் போது உளவு பார்த்து தகவல் சொல்கின்றன. 

இத்தகைய ஆபத்துகள் இணைய உலகில் அதிகரித்து வருவதால் தான் பாஸ்வேர்டை மேலும் வலுவானதாக்க வேண்டும் என்று வலியுறுத்துகின்றனர். எவராலும் எளிதில் கண்டறிந்துவிட முடியாத வலுவான பாஸ்வேர்டை உருவாக்குவதற்காக என்று பலவித வழிகளும் முன்வைக்கப்படுகின்றன. வலுவான பாஸ்வேர்டை எத்தனை அரும்பாடு பட்டு உருவாக்கினாலும் சரி, அது முழுவதும் பாதுகாப்பானது அல்ல என்ற கருத்தும் வலுப்பெற்று வருகிறது. ஆம், இணைய நிறுவனமே தாக்குதலுக்கு ஆளாகி பயனாளிகளின் பாஸ்வேர்டுகள் கொத்து கொத்தாக திருடப்படும் போது தனிநபர்களால் என்ன செய்துவிட முடியும்?

அப்படி என்றல் பாஸ்வேர்டு பிரச்சனைக்கு என்ன தான் தீர்வு?

பலரும் ஆதங்கத்துடன் கேட்கும் இந்த கேள்விக்கு தான் நிபுணர்கள் , இரு வழி பாதுகாப்பு முறையை முன்வைக்கின்றனர். அது என்ன இரு வழி பாதுகாப்பு முறை?

பாஸ்வேர்டை மட்டும் நம்பாமல் அதனுடன் கூடுதலாக இன்னொரு சரி பார்க்கும் அடையாளத்தை பயன்படுத்துவதையே இரு வழி பாதுகாப்பு முறை என்கின்றனர். ஆங்கிலத்தில் இது டு ஸ்டெப் வெரிபிகேஷன் (Two-step verification  ) என்று சொல்லப்படுகிறது.

வீட்டில் கதவை பூட்டிவிட்டு அதற்கு மேல் சங்கிலியால் இன்னொரு பலமான பூட்டை பூட்டுவது உண்டல்லவா ? அதே போல தான் இணைய சேவைகளை பயன்படுத்தும் போது முதல் கட்டமாக பாஸ்வேர்டை வைத்துக்கொண்டு இரண்டாவது கட்டமாக இன்னொரு அடையாளத்தை வைத்துக்கொள்கின்றனர். உதாரணத்திற்கு , நீங்கள் பாஸ்வேர்டை டைப் செய்தவுடன், உங்கள் செல்போனுக்கு ஒரு குறியிட்டு எண் அனுப்பி வைக்கப்படும். அந்த எண்ணை நீங்கள் டைப் செய்தால் மட்டுமே மேற்கொண்டு உங்களால் உள்ளே நுழைய முடியும். உங்கள் செல்போன் உங்களிடம் மட்டுமே இருக்கும் என்பதால் இந்த குறியீட்டு எண்ணை நீங்கள் மட்டுமே உள்ளீடு செய்ய முடியும்.

ஆக, தப்பித்தவறி உங்கள் பாஸ்வேர்டு களவாடப்பட்டுவிட்டாலும் இந்த ரகசிய குறியீட்டு எண் தெரியாமல் யாரும் ஒன்றும் செய்துவிட முடியாது என்பதால் உங்கள் இணைய கணக்கு பாதுகாப்பானதாக இருக்கும். ஏனெனில் வேறு எந்த கம்ப்யூட்டரில் இருந்து பாஸ்வேர்டு பயன்படுத்தப்பட்டாலும் அது இரண்டாம் கட்ட அனுமதியை கேட்கும். கையில் உங்கள்  செல்போன் இல்லாவிட்டால் யாராலும் உங்கள் இணைய கணக்கிற்குள் நுழைய முடியாது.

’உங்களுக்கு தெரிந்த ஒன்று’ மற்றும் ’உங்களிடம் இருக்கும் ஒன்று’ என இந்த இரு வழி அல்லது இரண்டு அடுக்கு பாதுகாப்பு முறை பிரபலமாக குறிப்பிடப்படுகிறது. பொதுவாக செல்போன்களே இரண்டாவது அடுக்கு பாதுகாப்பினை உறுதி செய்ய பயன்படுத்தப்படுகிறது. பாஸ்வேர்டு பதிவு செய்யும் போதே உங்கள் செல்போன் எண்ணை சமர்பித்தால் , அந்த எண்ணுக்கு ரகசிய குறியீடு அனுப்பி வைக்கப்படும்.

இந்த முறை வங்கி ஏ.டி.எம்மில் பணம் எடுக்க பயன்படுத்தப்படும் கார்டு போன்றது தான். உங்களிடம் ஏ.டி.எம் கார்டு இருக்கிறது. அது இருந்தால் தான் பணம் எடுக்க முடியும். ஆனால் அடு மட்டும் போதாது, பணம் எடுக்க முயல்வது நீங்கள் தான் என நிருபிக்க ரகசிய பின் எண்ணையும் பயன்படுத்துகிறோம். இதே போலவே இரண்டு அடுக்கு பாஸ்வேர்டு முறையும் செயல்படுகிறது.

பாஸ்வேர்டு பாதுகாப்பானது இல்லை என்று அச்சத்தை எதிர்கொள்ள இந்த இரண்டு அடுக்கு பாதுகாப்பே சிறந்த வழி என்று பாஸ்வேர்டு நிபுணர்கள் சொல்கின்றனர்.

பாஸ்வேர்டு தாக்குதல் தொடர்பான செய்திகள் அதிகரித்து வரும் நிலையில் , இரண்டு அடுக்கு பாதுகாப்பு பற்றிய விழிப்புணர்வும் அதிகரித்து வருகிறது. இந்த முறை மிகவும் சிக்கலானது மற்றும் நமக்கு தேவையானது அல்ல என்று கருதியவர்கள் கூட இப்போது இதன் அவசியத்தை உணர்ந்திருக்கின்றனர். அதிலும் குறிப்பாக இணைய வங்கி சேவை மற்றும் கிரிடிட் கார்டை பயன்படுத்தும் தளங்களில் நிச்சயமாக இந்த இரண்டு அடுக்கு பாதுகாப்பு தேவை என பலரும் உணர்ந்துள்ளனர்.

இப்போது இரண்டு அடுக்கு பாதுகாப்பு முறையின் முக்கியத்துவம் உங்களுக்கும் புரிந்திருக்கும். இதை எப்படி பயன்படுத்துவது, எந்த எந்த இணையதளங்களில் பயன்படுத்துப்வது என அறிந்து கொள்ளும் ஆர்வம் உங்களுக்கு ஏற்பட்டிருக்கலாம்.

இரண்டு அடுக்கு பாதுகாப்பு முறையை பயன்படுத்துவதற்கான முதல் வழி, நீங்கள் பயன்படுத்தும் இணைய சேவை , இந்த வசதியை அளிக்கிறதா என தெரிந்து கொள்வது தான். இந்த வசதி இருந்தால் செல்போன் மூலம் இரண்டாவது அடுக்கு பாதுகாப்பை ஏற்படுத்திக்கொள்ளலாம். தேடியந்திரமான கூகிள் இந்த இரண்டு அடுக்கு பாதுகாப்பை வழங்குகிறது. இது தொடர்பான உங்கள் இமெயில் கணக்கிற்கு கூட அவப்போது தகவல் வந்திருக்கலாம். உண்மையில் கூகிள் தான் இந்த பாதுகாப்பை முதலில் வழங்கத்துவங்கியது. இதை நீங்களும் கூட உங்கள் ஜிமெயிலில் பயன்படுத்திக்கொள்ளலாம். கூகிள் இந்த சேவையை செயலி வடிவிலும் வழங்குகிறது. மற்ற இணைய நிறுவன்ங்கள் தங்கள் இணைய சேவைக்கான இரண்டு அடுக்கு பாதுகாப்பிற்காக இந்த செயலியை பயன்படுத்துகின்றன.

சமூக வலைப்பின்னல் சேவைகளான பேஸ்புக் , டிவிட்டர் ,லின்க்டுஇன் போன்றவையும் இரண்டு அடுக்கு பாதுகாப்பை அளிக்கின்றன. வலைப்பதிவு சேவைகளில் வேர்ட்பிரஸ் இதை தருகிறது. கோப்பு பகிர்வு சேவையான டிராப் பாக்சிலும் இந்த வசதி உண்டு.

இதே போல எந்த இணையதளங்கள் எல்லாம் இரண்டு அடுக்கு பாதுகாப்பு வச்தியை அறிந்து கொள்ள விரும்பினால் அதற்காக என்றே இணையதளங்களும் இருக்கின்றன. http://evanhahn.com/tape/two-factor-auth-list/ இணையதளம் , இரண்டு அடுக்கு பாதுகாப்பு அளிக்கும் இணைய சேவைகலை  பட்டியலிட்டு காட்டுகிறது. இந்த பட்டியலிலேயே அந்த சேவைகளை எப்படி பயன்படுத்துவது என்றும் குறிப்பிடப்பட்டுள்ளது. அவற்றை பயன்படுத்துவதற்கான இணைப்பும் இருக்கிறது.  http://twofactorauth.org/ இணையதளம் இந்த தகவல்களை இன்னும் விரிவாக அளிக்கிறது.

இரண்டு அடுக்கு பாதுகாப்பு வசதி அளிக்கும் இணையதளங்களை அவற்றின் வகைக்கேற்ப , தனித்தனி தலைப்புகளில் தொகுத்துள்ளதோடு, அவை எந்த விதமான இரண்டாம் அடுக்கு பாதுகாப்பை அளிக்கிறது என்ற விவரமும் தெரிவிக்கப்பட்டுள்ளது. இரண்டு அடுக்கு பாதுகாப்பு வசதியை அளிக்க புதிதாக முன்வந்துள்ள தளங்களும் இடம் பெற்றுள்ளன.

இந்த பட்டியலில் இடம்பெறத்தவறிய தளங்களை இணையவாசிகளே சமர்பிக்கலாம். குறிப்பிட்ட இனையதளம் இந்த வசதியை இது வரை வழங்காவிட்டால் இனியேனும் வழங்க வேண்டும் என்று வலியுறுத்துவதற்கான வாய்ப்பும் கொடுக்கப்பட்டுள்ளது. இந்த தளத்தில் உள்ள பட்டியலை ஒரு பார்வ பார்த்தாலே பாஸ்வேர்டுக்கான இரண்டு அடுக்கு பாதுகாப்பு முறையின் முக்கியத்துவத்தை எளிதாக புரிந்து கொள்ளலாம்.

3 responses to “பாஸ்வேர்டுக்கான இரண்டு அடுக்கு பாதுகாப்பு முறை.

  1. அன்பின் சைஃபர்சிம்மன் – அரிய தகவல் – ஏற்கனவே அறிந்த – சில தளங்களில் பயன் படுத்துகிற தகவல் தான் – அனைத்து இடங்களீலும் பயன் படுத்த முயல்கிறேன், – நல்வாழ்த்துகள் – நட்புடன் சீனா

  2. Pingback: ஹார்ட்பிலீட் அப்டேட் | Cybersimman's Blog·

மறுமொழியொன்றை இடுங்கள்

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  மாற்று )

Google photo

You are commenting using your Google account. Log Out /  மாற்று )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  மாற்று )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  மாற்று )

Connecting to %s