மின்னல் அட்டைகள் உங்களுக்கு தெரியுமா?

flஉங்களுக்கு மின்னல் அட்டைகள் பற்றித் தெரியுமா? அதென்ன மின்னல் அட்டைகள், புதிதாக இருக்கிறதே என்று நினைக்கிறீர்களா? ஆங்கிலத்தில் பிளாஷ் கார்ட்ஸ் என்று குறிப்பிடப்படும் மின்னல் அட்டைகளை வாசிப்புத்தோழன் என்று சொல்லலாம். தேர்வுக்கு தயாராகி கொண்டிருக்கும் போது சரி , புதிதாக ஒரு விஷயத்தை கற்றுக்கொள்ள முயற்சிக்கும் போது சரி, நீங்கள் படித்ததை நினைவில் வைத்துக்கொள்ள உதவும் அட்டைகளை தான் பிளாஷ் கார்ட்ஸ் அதாவது மின்னல் அட்டைகள் என்று சொல்கின்றனர்.

மின்னல் அட்டைகள் என்பவை சின்ன அட்டைகள் தான். இந்த  அட்டைகளில் படித்தவற்றில் நினைவில் கொள்ள வேண்டிய விஷயங்களை குறித்து வைத்துக்கொண்டு தேவைப்படும் போது பார்த்துக்கொள்ளலாம்.

ஆங்கில பாடம் என்றால் கடினமான சொற்களுக்கான அர்த்தம், அறிவியல் பாடம் என்றால் சம்பாடுகள் , கணிதம் என்றால் சூத்திரங்கள் ஆகியவற்றை இப்படி அட்டைகளில் எழுதி வைத்துக்கொள்ளலாம். வரலாறு பாடத்தில் முக்கிய நிகழ்வுகளின் வருடங்களை எழுதி வைத்துக்கொள்ளலாம். இந்த அட்டைகள் எளிமையான ஐடியா தான். ஆனால் படித்தவற்றை நினைவில் கொள்ள இவை சிறந்த வழி என்று நினைவாற்றல் நிபுணர்கள் சொல்கின்றனர்.

உங்களுக்கேத்தெரியும் படித்தால் மட்டும் போதாது. படித்தவை நினைவில் இருக்க வேண்டும். இல்லை என்றால்  தேர்வு அறையில் அமர்ந்திருக்கும் போது குழம்பி விடுவோம். ஆக, படித்தவற்றை மறக்காமல் இருக்க அவற்றை அவ்வப்போது நினைவு படுத்திப்பார்க்க வேண்டும். இதற்கான எளிய வழி தான் , நினைவில் நிற்க வேண்டியவற்றை அட்டைகளில் எழுதி வைத்துக்கொள்வது.

மின்னல் அட்டைகளின் பின்னே, இடைவெளி விட்டு தொடந்து நினைத்து பார்க்கும் உத்தி இருப்பதாக சொல்கின்றனர். அதாவது ஒரு விஷயத்தை கொஞ்சம் இடைவெளி விட்டு மீண்டும் மீண்டும் நினைவுபடுத்தி பார்ப்பது. உட்கார்ந்து மணிக்கணக்கில் மனனம் செய்து கொண்டிருப்பதை விட , இப்படி அழகாக அட்டைகளில் எழுதி வைத்துக்கொண்டு படித்து பார்ப்பதன் மூலம் படித்த விஷயங்கள் காலத்துக்கும் நினைவில் நிற்கும் என்றும் ஊக்கம் தருகின்றனர்.

அட, நன்றாக இருக்கிறதே நாமும் கூட மின்னல் அட்டைகளை பயன்படுத்திப்பார்க்கலாம் என்று நினைக்கிறீர்களா? மின்னல் அட்டைகளை தேடி எங்கும் போக வேண்டாம். இணையத்திலேயே தேவையான மின்னல் அட்டைகளை எளிதில் உருவாக்கி கொள்ளலாம். இதற்கு உதவும் அட்டகாசமான இணையதளங்களில் சிலவற்றை பார்ப்போம்.

முதலில் கார்ட்விக்கி.காம் (http://cardkiwi.com/ ) .மின்னல் அட்டை உருவாக்க உதவும் இணையதளங்களில் இது தான் மிகவும் எளிதானது. இந்த தளத்தை பயன்படுத்த முதலில் உறுப்பினராக பதிவு செய்து கொள்ள வேண்டும். அது எளிதானது தான். உறுப்பினரான பின், நீங்கள் படிக்க விரும்பும் தலைப்பு அல்லது பாடங்களில் இணைய அட்டைகளை உருவாக்கி கொள்ளலாம். அட்டைக்கான தலைப்பை கொடுத்து விட்டு , ஒரு பக்கத்தில் கேள்வி அல்லது குறிப்பை எழுது விட்டு மறு பக்கத்தில் அதற்கான பதிலை எழுத வேண்டும். இப்படி வரிசையாக எத்தனை கார்டுகளை வேண்டுமானாலும் உருவாக்கி கொள்ளலாம். இந்த கார்டுகளை கொஞ்சம் இடைவெளி விட்டு கிளிக் செய்து பார்த்து ,குறித்து வைத்தவை நினைவில் இருக்கிறதா என்று பார்க்க வேண்டும். எவ்வளவு கடினமான விஷயமாக இருந்தாலும் இப்படி அட்டைகள் மூலம் பார்க்கும் போது தானாக மனதில் பதிந்து விடும் என்கின்றனர். நீங்களே பயன்படுத்திப்பாருங்கள் தெரியும்!

மின்னல் அட்டைகளை பயன்படுத்தும் முறைப்பற்றி இந்த தளத்திலேயே அழகான வீடியோ விளக்கமும் இருக்கிறது. இந்த தளத்தில் கூடுதல் விஷேசம் என்ன என்றால் , நீங்கள் உருவாக்கிய அட்டைகளை பார்த்துக்கொண்டிருக்கும் போது , அவை எந்த அளவுக்கு நினைவில் இருக்கிறது என்பதையும் நீங்கள் குறிப்பிடலாம். இதற்காகவே கட்டை விரலை உயர்த்தும் அல்லது கீழே காட்டும் வகையிலான செய்கை குறிப்பு கொடுக்கப்பட்டுள்ளன. அவற்றை கிளிக் செய்யலாம். ஆக அடுத்த முறை நீங்கள் படிக்க வரும் போது , இந்த தளமே , உங்களுக்கு அதிகம் நினவில் இல்லாத அட்டைகளை முதலில் காட்டும்.

நீங்கள் உருவாக்கி அட்டைகளை நண்பர்களோடும் இனையம் வழியே பகிர்ந்து கொள்ளலாம். இதன் மூலம் நண்பர்களிடையே கூட்டு வாசிப்பும் சாத்தியமாகும். அமெரிக்காவை சேர்ந்த இரண்டு மாணவர்கள் உருவாக்கிய இணையதளம் இது.

கிராம்.காம் (http://www.cram.com/ ) இணையதளமும் இதே போலவே மின்னல் அட்டைகள் மூலம் படிக்க கைகொடுக்கிறது. ஆனால் கார்ட்விக்கிவியை விட இந்த தளம் விரிவான வசதிகளை கொண்டிருக்கிறது. இந்த தளத்தில் நீங்கள் மின்னல் அட்டைகளை உருவாக்கி கொள்ளலாம் என்பதோடு மற்ற உறுப்பினர்கள் ஏற்கனவே உருவாக்கி வைத்துள்ள அட்டைகளையும் பார்த்து பயன்படுத்துக்கொள்ளலாம். சும்மாயில்லை, ஒரு லட்சத்திற்கும் மேற்பட்ட உறுப்பினர்கள் 70 லட்சத்திற்கும் மேற்பட்ட மின்னல் அட்டைகளை உருவாக்கி உள்ளனர். இந்த அட்டைகள் , மொழி, தேர்வு, கம்ப்யூட்டர், மருத்துவம், பொது அறிவு என பல்வேறு தலைப்புகளில் வகைப்படுத்தப்பட்டுள்ளன. தேவையான தலைப்பை கிளிக் செய்து அதில் உள்ள அட்டைகளில் பிடித்தவற்றை தேர்வு செய்து பயன்படுத்தலாம்.

நாமே அட்டைகளை உருவாக்கும் போது விரிவான வசதிகள் இருக்கின்றன. தலைப்பு மற்றும் பாடத்தை தனியே குறிப்பிட்டு அவற்றுக்கான விளக்கத்தையும் எழுதலாம். புகைப்படங்கள் மற்றும் ஆடியோ கோப்பை சேர்க்கும் வசதியும் இருக்கிறது. மூன்று பக்க அட்டைகளையும் கூட உருவாக்கி கொள்ளலாம். நீங்கள் விரும்பினால் இந்த அட்டைகளை மற்றவர்களோடு பகிர்ந்து கொள்ளவும் செய்யலாம். ஆண்ட்ராய்டு மற்றும் ஐபோன்களில் பயன்படும் செயலி வடிவமும் இருக்கிறது. பொது நுழைவுத்தேர்வு தொடர்பான இணைய அட்டைகள் இந்த தளத்தின் சிறப்பம்சம்.

கிளாஸ்மிண்ட் ( https://www.classmint.com/) இணையதளமும் மின்னல் அட்டைகளை தயாரித்து கொள்ள உதவுகிறது.  ஸ்டடி ஸ்டாக் ( http://www.studystack.com/) தளத்தையும் முயன்று பார்க்கலாம் . இந்த தளம் எண்ணற்ற தலைப்புகளில் மின்னல் அட்டைகளை வழங்குகிறது. பள்ளி தேர்வுக்கு தயாராகும் போதும் இந்த அட்டைகளை பயன்படுத்தலாம். தேர்வு முடிந்து விடுமுறையில் நுழைவுத்தேர்வுகளுக்கு தயாராகவும் இவற்றை பயன்படுத்தலாம். புதிய மொழி போன்றவற்றை கற்றுக்கொள்ளவும் இவை கைகொடுக்கும். பள்ளி மாணவர்களும் பயன்படுத்தலாம், கல்லூரி மாணவர்களும் பயன்படுத்தலாம்.

———

நன்றி;சுட்டி விகடன்

Advertisements

2 responses to “மின்னல் அட்டைகள் உங்களுக்கு தெரியுமா?

    • சிறுவர்களுக்காக எழுதப்பட்டது என்றாலும் எல்லோரும் பயன்படுத்தலாம். இது போன்ற இணைய வசதிகளை நாம் தினசரி வாழ்க்கையில் பயன்படுத்துவது நன்றாக இருக்கும். டு டு லிஸ்ட் செயலிகள் பற்றியும் படித்துப்பார்க்கலவும்.

மறுமொழியொன்றை இடுங்கள்

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out / மாற்று )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out / மாற்று )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out / மாற்று )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out / மாற்று )

Connecting to %s