ரெயில் பயணங்களுக்கான விருப்ப உணவை ஆர்டர் செய்ய உதவும் இணையதளங்கள்

yatரெயில் பயண டிக்கெட்டை ஆன்லைனிலேயே புக் செய்ய முடிவது போல , இப்போது அந்த பயணங்களின் போது சுவைத்து மகிழ்வதற்கான உணவையும் ஆன்லைனிலேயே ஆர்டர் செய்ய முடியும் தெரியுமா? இல்லை, ரெயில்யேவே இணையதளத்தையோ , ரெயில்வே மூலம் வழங்கப்படும் உணவையோ குறிப்பிடவில்லை. ரெயில் பயணங்களின் போதும் உங்களுக்கு விருப்பமான உணவை சாப்பிட உதவும் புதிய இணையதள சேவைகளை பற்றி குறிப்பிடுகிறேன்.

ட்ராவல்கானா, யாத்ராசெஃப் ஆகிய இரண்டு இணையதளங்களும் தான் இந்த உணவு சேவைய வழங்குகின்றன.

ரெயில் பயணங்களில் எதிர்கொள்ளக்கூடிய சங்கடங்களில் , சரியான உணவு கிடைக்காமல் போவதை குறிப்பிடுவதில் பெரும்பாலானோருக்கு உடன்பாடு இருக்கலாம். ரெயிலில் கிடைக்ககூடிய உணவில் சுவை ,சுகாதாரம் இரண்டுமே பிரச்ச்னையாக இருப்பதாக பலரும் கருதுகின்றனர்.ரெயில் நிலையங்களில் கிடைக்கும் உணவு ஆரோக்கியத்துக்கு உகந்ததாக இல்லாமல் போகலாம். ரெயில்வே நிர்வாகம் வழங்கும் உணவும் கூட பலருக்கு திருப்தி இல்லாமல் இருக்கலாம். சுகாதாரம் பற்றிய பிரச்சனை இல்லாவிட்டாலும் சுவையில் பிரச்சனை இருக்கலாம். சுவை திருப்தியாக இருந்தால் கூட உணவில் தேர்வுகளை எதிர்பார்க்க முடியாது.

இப்படி ரெயில் பயணங்களின் போது கிடைக்ககூடிய உணவின் சுவை மற்றும் தரம் பற்றி புகார்களும் , ஏக்கமும் ,எதிர்பார்ப்பும் உங்களுக்கு இருந்தால் , அதற்கான தீர்வை தான் இந்த இரண்டு இணையதளங்களும் அளிக்கின்றன. டிராவ்ல்கானா, யாத்ராசெஃப் ஆகிய இரண்டு தளங்களுமே ரெயில் பயணங்களின் போது சுவைக்ககூடிய உணவை ஆன்லைனிலேயே ஆர்டர் செய்ய உதவுகின்றன. ஆன்லைனில் ரெயில் டிக்கெட் முன்பதிவு செயவ்து போலவே இந்த தளங்களில், நீங்கள் பயணம் செய்யும் ரெயிலை குறிப்பிட்டு உணவை புக் செய்து கொள்ளலாம். பயண நாள், ரெயிலின் பெயர் போன்றவற்றை குறிப்பிட்டு எந்த ரெயில் நிலையத்தில் உணவு தேவை என குறிப்பிட வேண்டும். அதன் பிறகு அந்த ரெயில் நிலையம் அருகே உள்ள ரெஸ்டாரண்ட்களின் பெயர்கள் மற்றும் அவற்றில் கிடைக்ககூடிய உணவு வகைகள் காண்பிக்கப்படும். அதிலிருந்து விருப்ப்மானதை தேர்வு செய்தால் , பயனத்தின் போது குறிப்பிட்ட அந்த ரெயில் நிலையத்தில் உங்களுக்கு விருப்பமான உணவு டெலிவரி செய்யப்படும்.

பயன்படுத்திப்பாருங்கள்; http://www.travelkhana.com/travelkhana/jsp/order.jsp

https://www.yatrachef.com/

மறுமொழியொன்றை இடுங்கள்

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  மாற்று )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  மாற்று )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  மாற்று )

Connecting to %s