பிரசவத்தை நேரடியாக ட்வீட் செய்த பெண்மணி !

குழந்தை லூசியா பிறந்த போது உலகமே வாழ்த்து சொன்னது. லூசியா ட்விட்டர் குழந்தையாக பிறந்தது தான் காரணம். தனக்கென தனி ட்விட்டர் முகவரியோடும் (@lucia ) பிறந்தாள். பிறக்கும் போதே லுசியா தனக்கான ட்விட்டர் முகவரியோடு பிறந்தது ஆச்சர்யத்தை அளிக்கிறதா? அதைவிட ஆச்சர்யம்,லூசியாவின் அம்மா லூசியாவின் பிறப்பை டிவிட்டரில் நேரடியாக குறும்பதிவு செய்தது தான். ! ஆம், லுசியாவின் அம்மா கிளாரி டயஸ் , பிரசவ வலிக்கு நடுவே தனது பிரசவத்தை ட்விட்டரில் பகிர்ந்து கொண்டு உலகையே வியக்க வைத்தார். கடந்த ஏப்ரல் 5 ம் தேதி அவருக்கு முன்கூட்டியே பிரசவ வலி எடுத்து மருத்துவமனைக்கு செல்ல நேர்ந்தது. கணவரோடு மருத்துவமனைக்கு சென்ற கிளாரி , தனக்கு பிரசவ வலி எடுத்த செய்தியை ட்விட்டரில் பகிர்ந்து கொண்டதோடு, பிரசவத்தையும் குறும்பதிவுகளாக வெளியிட்டார். இந்த டிவிட்டர் பிரசவம் பற்றி தான் இப்போது இணைய உலகில் பேச்சாக இருந்தது.
எதையும் ட்விட்டரில் பகிர்ந்து கொள்வது இந்த காலத்து பழக்கம் தான் என்றாலும் , பிரசவ வலிக்கு நடுவிலும் கிளாரி , ட்விட்டரில் குறும்பதிவுகளை வெளியிட்டது வியப்பைத்தரலாம். ஆனால் கிளாரியை பொறுத்தவரை இது இயல்பானதாகவே இருக்கிறது. கிளாரி அர்ஜண்டைனா நாட்டில் வசிக்கிறார். அவர் டிவிட்டர் நிறுவன ஊழியர். ட்விட்டர் நிறுவனத்தில் புதுமைகளை செய்வது என் வேலை என அவரது ட்விட்டர் அறிமுகம் தெரிவிக்கிறது. டிவிட்டரில் பணியாற்றுவதோடு அல்லாமல் கிளாரி ,சமூக ஊடக நிபுணராகவும் இருக்கிறார். ட்விட்டர் பயன்பாடு பற்றிய புத்தகங்களையும் எழுதியிருக்கிறார். ட்விட்டர் போன்ற சமூக ஊடக சேவையை பயன்படுத்துவது தொடர்பான ஆலோசனைகளை வழங்குவதில் அவர் நிபுணராக கருதப்படுகிறார். கத்தோலிக்க மதத்தலைவரான போப்பை ட்விட்டருக்கு அழைத்து வந்தவராக அவர் வர்ணிக்கப்படுகிறார்.
ட்விட்டரின் அருமை பெருமைகளை வலியுறுத்தி வருபவர் என்ற முறையில் கிளாரிக்கு தனது பிரசவத்தையும் டிவிட்டரில் நேரடியாக பதிவு செய்தது இயல்பாக இருந்திருக்க வேண்டும். அதை தான் செய்திருக்கிறார். ஏப்ரல் 5 ந் தேதி , ’ இப்போது கூகிள் செய்து கொண்டிருக்கிறேன். என் பனிக்குடம் உடைந்து விட்டதா ? என்று அவர் பிரசவ வலி தொடர்பான முதல் குறும்பதிவை வெளியிட்டார். அடுத்த குறும்பதிவுகளில் தனக்கு ஏற்பட்டிருப்பது பிரசவ வலி தானா என உறுத்திப்படுத்த கூகிள் செய்வதாக கூறிய கிளாரி, 4 வது குறும்பதிவில் , அதை உறுதி செய்துவிட்டு மருத்துவனைக்கு சென்று கொண்டிருப்பதாக தெரிவித்தார். கூடவே தனது டிவிட்டர் முகவரி பின் பக்கம் பொறிக்கப்பட்ட புகைப்படத்தையும் வெளியிடிருந்தார்.
குறிப்பிட்ட காலத்திற்கு முன்னதாகவே பிரசவ வலி எடுத்துவிட்டதால் எதையும் தயார் செய்து கொள்ள முடியவில்லை என்றும் அடுத்த குறும்பதிவை வெளியிட்டார். இதனிடையே சோதனையாக அவ்ரது காரில் ஏதோ பழுது ஏற்பட , அடுத்த சில குறும்பதிவுகள் அது தொடர்பான பரபரப்பை வெளிப்படுத்தின. இத்தனைக்கு நடுவிலும் மறக்காமல் , #inlabor எனும் ஹாஷ்டேகையும் உருவாக்கியிருந்தார். நல்லவேளையாக டாக்சி கிடைத்து அதில் மருத்துவமனைக்கு விரைந்தவர், தொடர்ந்து தனது பிரசவ வலியை நேரடியாக ட்விட்டரில் பகிர்ந்து கொண்டார். பிரசவ வலி இப்படி தான் BLERGH!!!! இருக்கிறது என விவரித்திருந்தார். அடுத்த பதிவில் மழைக்கால ஏப்ரலில் திருமணம் நடந்தது. அதே மழைக்கால ஏப்ரிலில் குழந்தை பிறக்கப்போகிறது என்றும் தெரிவித்திருந்தார்.
இதனிடையே , கிளாரி பிரசவ வலிக்கு நடுவிலும் டிவிட்டர் செய்வதை பலரும் கவனித்து வியக்கத்துவங்கியிருந்தனர். “ டிவிட்டர் ஊழியரிடம் இருந்து தனது பிரசவத்தை நேரடியாக ட்வீட் செய்வதற்கு குறைவாக வேறு எதை எதிர்பார்ப்பது “ என ரச்சேல் ஜாரேல் எனும் குறும்பதிவாளர் ட்வீட் செய்திருந்தார். இதை கிளாரி மறக்காமல் ட்வீட் செய்திருந்தார். அடுத்ததாக பிரபமான இணைய செய்தி சேவையான பஸ்பீடும் (http://www.buzzfeed.com/ ) இதை கவனித்து , ‘ டிவிட்டர் ஊரியர் கிளாரி தனது பிரசவத்தை நேரடியாக ட்விட்டரில் பதிவு செய்து கொண்டிருகிறார் போலும், இது மிக விநோதம்’ என செய்தி வெளியிட்டது. மிக விரைவிலேயே பஸ்பீட் கிளாரியின் தந்தையை தொடர்பு கொண்டு இந்த செய்தியை உறுதி செய்தது.
அடுத்த நான்காவது குறும்பதிவில் கிளாரி தனக்கு பெண் குழந்தை பிறந்திருப்பதை பகிர்ந்து கொண்டார். சிறிது நேரத்தில் குழந்தை லூசியாவின் புகைப்படத்தையும் பகிர்ந்து கொண்டார். லூசியாவுக்கு என தனியே டிவிட்டர் முகவரியையும் உருவாக்கினார். இத்தனைக்கும் நடுவே கிளாரியின் கணவர் அவருக்கு பக்கபலமாக இருந்திருக்கிறார்.

கிளாரியின் டிவிட்டர் பக்கம்; https://twitter.com/claire, இணைய முகவரி; http://clairediazortiz.com/

மறுமொழியொன்றை இடுங்கள்

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out / மாற்று )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out / மாற்று )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out / மாற்று )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out / மாற்று )

Connecting to %s