பிண்டிரெஸ்ட் மூலம் கோடை விடுமுறையை திட்டமிடுவது எப்படி ?

pinகோடை விடுமுறை காலம். சுற்றுலா பயணங்களுக்கான காலம். இந்த ஆண்டு விடுமுறையை கழிக்க எங்கே செல்லலாம் என்பதை ஏற்கனவே தீர்மானித்திருந்தால் பயண டிக்கெட்டை முன்பதிவு செய்வது, தங்கிமிட வசதியை முன்பதிவு செய்வது போன்றவற்றை எல்லாம் இருந்த இடத்தில் இருந்தே இணையம் மூலம் செய்து விடலாம் என்பது உங்களுக்குத்தெரியும் . சுற்றுலா செல்லும் ஊர்களில் பார்க்க வேண்டிய இடங்கள் பற்றியும் அவற்றின் சிறப்புகள் பற்றியும் இணையம் மூலமே ஆய்வு செய்து தகவல்களை தெரிந்து கொள்ளலாம். இப்படி முன்கூட்டியே திட்டமிட்டு, முன்னதகாவே தகவல்களை தெரிந்து கொண்டு செல்லும் போது எந்த டென்ஷனும் இல்லாமல் சுற்றுலாவை அனுபவிக்கலாம்.

சுற்றுலா ஆய்வு

சரி,சுற்றுலா செல்வதற்கான இடத்தையே தேர்வு செய்ய முடியாமல் குழப்பமாக இருக்கிறதா? கவலையே வேண்டாம், நம் விருப்பத்திற்கு ஏற்ற சுற்றுலா தலங்களை தேர்வு செய்வதற்கான ஆய்வையும் இணையம் மூலமே மேற்கொள்ளலாம். இதற்காக என்றே பிரத்யேகமாக பல பயண இணையதளங்கள் இருக்கின்றன. இந்த ஆய்வை கொஞ்சம் சுவாரஸ்யமான முறையில் வண்ணமயமாக மேற்கொள்ள விரும்பினால் , இருக்கவே இருக்கிறது பிண்டிரெஸ்ட் சேவை.
பிண்டிரெஸ்ட் சேவை பற்றி நீங்கள் அறிந்திருக்கலாம். இதுவும் பேஸ்புக் போல சமூக வலைப்பின்னல் சேவை தான். ஆனால் கொஞ்சம் வித்தியாசமானது. இந்த சேவையில் புகைப்படங்கள் தான் எல்லாம். புகைப்படங்களை பின் செய்வதன் முலம் இதில் தகவல்களை தெரிந்து கொள்ளலாம்.பகிர்ந்து கொள்ளலாம்.
பிண்டிரெஸ்ட் பலவிதங்களில் பயன்பட்டு வருகிறது. இளம் பெண்கள் திருமண ஏற்பாடுகளை திட்டமிட பிண்ட்ரெஸ்ட்டை பயன்படுத்துகின்றனர். வீடுகளுக்கு உள் அலங்காரம் செய்ய தேவையான ஊக்கம் மற்றும் யோசனைகளை பெற பயன்படுத்துகின்றனர். இதே போலவே சுற்றுலா பயணங்களை திட்டமிடவும் பிண்டிரெஸ்ட்டை அழகாக பயன்படுத்தலாம்.
சுற்றுலா செல்வதற்கான இடத்தை தேர்வு செய்வதில் துவங்கி அந்த இட்த்தின் சிறப்புகளை தெரிந்து கொள்வது வரை அனைத்தையும் பிண்ட்ட்ரெஸ்ட் பலகை மூலமே செய்துவிடலாம்.

பிண்டிரெஸ்ட் ஒரு அறிமுகம்

முதலில் பிண்டிரெஸ் சேவை பற்றி சுருக்கமாக அறிமுக்ம் செய்து கொள்ளலாம். பிண்டிரெஸ்ட் இணைய குறிப்பு பலகை என்று குறிப்பிடப்படுகிறது. அதாவது இணையத்தில் நமக்கான பலகையை உருவாக்கி அதில் தேவையான விவரங்களை புகைப்படம் வாயிலாக குறித்து வைத்துக்கொள்ளலாம். இதை பின் செய்வது என பிண்டிரெஸ்ட் குறிப்பிடுகிறது. பள்ளி ,கல்லூரிகளில் அறிவிப்பு பலகையில் தகவல்க்ளை குறித்து வைப்பது போல இதில் நமக்கான பலகையில் புகைப்பட தகவல்களை குறித்து வைத்துக்கொள்ளலாம். எந்த தலைப்பின் கீழும் பலகையை உருவாக்கலாம். இந்த பலகையை மற்றவர்களிடன் பகிர்ந்து கொள்ளலாம். அவர்கள் பலகையில் பிடித்த தகவல்களை நாமும் பின் செய்து கொள்ளலாம். டிவிட்டர் போலவே இதிலும் சக உறுப்பினர்களை பின்தொடர்லாம். இப்படி புகைப்படம் சார்ந்த சுவாரஸ்யமான சமூக வலைப்பின்னல் சேவையாக பிண்டிரெஸ்ட் இருக்கிறது. சில மாதங்களுக்கு முன் இருப்பிடம் சார்ந்த தகவல் பரிமாற்றத்துக்கான பிலேஸ்பின்ஸ் வசதி அறிமுகம் செய்யபட்டது.

பிண்டெர்ஸ்ட் வழி திட்டமிடல்

பிண்டிரெஸ்ட் அறிமுகம் செய்துள்ள பிலேஸ்பின்ஸ் வசதி தான் இப்போது பயண திட்டமிடலுக்கு அருமையாக கைகொடுக்கிறது. பிண்டிரெஸ்ட்டில் வழக்கமாக புகைப்படங்களை பின் செய்து கொள்ளலாம். தொடர்புடை புகைப்படங்களையும் பின் செய்து கொள்ளலாம். இந்த புகைப்படங்களில் இருப்பிடம் சார்ந்த தகவல்களை இணைப்பதற்கும் அந்த புகைப்படங்களை வரைபட்த்தின் மீது பொறுத்தி பார்க்கவும் வழி செய்வதால் பிலேஸ்பின்ஸ் வசதியை பயண ஏற்பாட்டிற்கும் பயன்படுத்திக்கொள்ளலாம்.
எப்படி? விரிவாக பார்க்கலாம்.
இதற்கு முதலில் நீங்கள் பிண்டிரெஸ்ட்டில் உறுப்பினராக இருக்க வேண்டும். இதுவரை உறுப்பிராக இல்லை என்றால் இப்போது உறுப்பினராக சேர்ந்து கொள்ளுங்கள். பேஸ்புக்கில் உறுப்பினராவது போல இதிலும் உறுப்பினராவது எளிது தான்.பேஸ்புக் அல்லது ஜிமெயில் கணக்கை பயன்படுத்தி உறுப்பினராகும் வசதியும் இருக்கிறது. பிண்டிரெஸ்ட் இணையதளத்தில் இதற்கான வழிமுறைகள் உள்ளன.
இனி, பயண திட்டமிடலை துவக்கலாம்.

புதிய பலகை

பிண்டிரெஸ்ட் முகப்பு பக்கத்தில் வலது பக்கம் மேலே பார்த்தால், கூட்டல் (+) குறி காணப்படும். அதில் கிளிக் செய்தால் ,புதிய பின்’னை சேர்க்க, இணையத்தில் இருந்து சேர்க்க மற்றும் புதிய பலகையை உருவாக்க என்று மூன்று விதமான வாய்ப்புகள் தோன்றும் . இவற்றில் புதிய பலகையை உருவாக்க எனும் வாய்ப்பை கிளிக் செய்ய வேண்டும். உடனே புதிய பலகையை உருவாக்குவதற்கான சின்ன பெட்டி முகப்பு பக்கத்தில் தோன்றும். முதலில் நீங்கள் உருவாக்க விரும்பும் பயண பலகைக்கான தலைப்பை கொடுக்க வேண்டும். உதாரணத்திற்கு நீங்கள் செல்ல விரும்பும் இடத்தின் பெயரை கூட தலைப்பாக வைத்துக்கொள்ளலாம். அடுத்த்தாக அந்த இடம் பற்றிய அறிமுக குறிப்புகளை டைப் செய்ய வேண்டும். நீங்கள் சுற்றுலா செல்ல விரும்பும் இடம் எப்படி இருக்க வேண்டும் எனும் எதிர்பார்ப்பை கூட இடம்பெற வைக்கலாம். அடுத்த்தாக இந்த பலகையின் வகையை குறிப்பிட்டு (பயணம்) , அதற்கு வரைபட இணைப்பு தேவையா? என்றும் தீர்மானிக்கலாம். அவ்வளவு தான் உங்களுக்கான புதிய பலகை தயார். புதிய பலகையை உருவாக்கவும் என கிளிக் செய்வதற்கு முன் இந்த பலகையை பொதுவாக எல்லோருடனும் பகிர்ந்து கொள்ள விருப்பமா? அல்லது நீங்கள் விரும்பும் நட்பு வட்டத்தில் மட்டும் பகிர்ந்து கொள்ள விருப்பமா? என்றும் தீர்மானித்துக்கொள்ளலாம்.

pin2வரைபட உலகம்

இப்போது உங்களுக்கான புதிய பிண்டிரெஸ்ட் பலகை வந்து நிற்கும். பின்னணியில் உலக வரைபடம் தோன்ற நீங்கள் ஆய்வு செய்யும் இடங்களை பின் செய்வதற்கான வசதி அதன் மீது இருக்கும். இதை பார்க்கும் போதே உங்களுக்கு உற்சாகமாக இருக்கும். இடத்தை சேர்க்கவும் ( ) எனும் வசதியும் கூட்டல் குறியுடன் காணப்படும். அதில் கிளிக் செய்தால் புதிய இடத்தை சேர்க்கலாம். நீங்கள் செல்ல நினைத்திருக்கும் இடம் அல்லது உங்கள் மனதில் உள்ள இடத்தை குறிப்பிட்டு சேர்த்துக்கொள்ளலாம். உதாரணத்திற்கு இந்தியாவில் உள்ள டார்ஜிலிங் அல்லது சிம்லாவை குறிப்பிடலாம். இல்லை வெளிநாட்டு சுற்றுலா இடங்களான பாரீஸ் அல்லது சிட்னியை குறிப்பிடலாம். அல்லது கேள்விபட்ட நகரங்களை கூட குறிப்பிடலாம். இந்த இடங்கள் பற்றி அதிக விவரங்கள் தெரியாதே , நகரை மட்டும் குறிப்பிடுவதால் என்ன பயன் என்று நினைக்க வேண்டாம். தேவைப்படக்கூடிய விவரங்களை எல்லாம் தேடி சேர்த்துக்கொள்ளலாம். இடத்தை குறிப்பிட்டதுமே, இடது பக்கத்தில் அந்த குறிப்பிட்ட நகரத்தில் பார்க்க்கூடிய சுற்றுலா தலங்கள் மற்று தங்குமிடம் போன்றவற்றுக்கான பரிந்துரை பட்டியல் வந்து நிற்கும். அவற்றில் பயனுள்ளது என நீங்கள் கருதுவதை கிளிக் செய்தால் அவை உங்கள் பலகையில் சேர்க்கப்பட்டுவிடும். பிண்டிரெஸ்ட்டில் எல்லா விவரங்களுமே புகைப்படங்கள் மூலமானவை என்பதால் பரிந்துரைக்கப்படும் இடங்களையும் புகைப்படங்கள் வாயிலாக தெரிந்து கொள்ளலாம். ஆக , இதன் மூலமே பார்க்க வேண்டிய இடங்கள் மற்றும் தங்குமிட வசதி ஆகியவற்றை அறிந்து கொண்டு அவற்றை அழகாக புகைப்படமாக குறித்து வைத்துக்கொள்ளலாம்.

அடுத்த கட்ட ஆய்வு

நீங்கள் ஆய்வு செய்யும் இடம் வரைபடம் மீது சுட்டிக்காட்டப்படும் என்பதால் அங்கிருந்து செல்லகூடிய இடங்களையும் வரைபடம் மூலமே பார்த்து அந்த இடங்கள் பற்றிய விவரங்களையும் சேகரிக்கலாம். தொடர்புடைய தகவல்களை இணையத்தில் தனியே தேடி அந்த தகவல்களையும் புகைப்பட வடிவில் சேர்த்துக்கொள்ளலாம். விடுமுறை நாட்கள், பயணதூராம் போன்றவற்றை கணக்கிட்டு புதிய இடங்களை தெரிந்து கொண்டு முழு பயண அட்டவனையையே கூட உருவாக்கி கொண்டு விடலாம். உங்கள் திட்டமிடலை மேலும் செழுமையாக்கி கொள்ள தேடல் வசதியை பயன்படுத்திக்கொள்ளலாம். இடது பக்கம் மேலே உள்ள தேடல் கட்டத்தில் ஏதேனும் நகரின் பெயரை டைப் செய்தால் , அந்த இடம் தொடர்பாக சக பிண்டிரெஸ்ட் பயனாளிகள் உருவாக்கி வைத்திருக்கும் பயண பலகையை பார்க்கலாம். அதில் பயனுள்ள தகவல்கள் இருந்தால் அவற்றை அப்படியே நம்முடைய பலகையில் சேர்த்துக்கொண்டு விடலாம். இப்படி மற்றவர்களின் பயண அனுபவம் மற்றும் தேடலையும் பயன்படுத்திக்கொண்டு பயண திட்டத்தை மேமப்டுத்திக்கொள்ளலாம். உங்கள் அனுபவமும் மற்றவர்களுக்கு பயன்பட வேண்டும் என விரும்பினால் , நீங்கள் உருவாக்கும் பலகையை மற்றவர்களோடு பகிர்ந்து கொள்ளலாம். பின்பிலேசஸ் வசதியை பயண திட்டமிடலுக்காக உலகெங்கிலும் உள்ள பல்லாயிரக்க்ணக்கானோர் பயன்படுத்தி வருவதால், தேடல் வசதி மூலம் விதவிதமான பயண பலகைகளை அறிமுகம் செய்து கொள்ளலாம். புதுப்புது இடங்களையும் தெரிந்து கொள்ளலாம்.

pin1இணைந்து திட்டமிடலாம்.

சேகரிக்கும் தகவல்கள் எல்லாம் வரைபடம் மீது காண்பிக்கப்படும் என்பதால் இந்த திட்டமிடல் உருவாகும் விதமே சுவாரஸ்யமாக இருக்கும். நீங்கள் விரும்பினால் இந்த திட்டமிடலில் உங்கள் குடும்பத்தினர் மற்றும் உறவினர்களையும் சேர்த்துக்கொள்ளலாம். இதற்காக நீங்கள் உருவாக்கியுள்ள பலகையில் உள்ள எடிட் வசதியை கிளிக் செய்து அதில் , நண்பர் அல்லது உறவினர் பெயரை குறிப்பிட்டு அவர்கள் இமெயில் முகவரிக்கு அனுப்பி வைக்கலாம். பயண திட்டம் பற்றிய விவரத்தையும் பின்னூட்ட வடிவில் சேர்க்க முடியும் ,என்பதால் இந்த அழைப்பை பார்த்த்துமே அவர்களும் விஷயத்தை தெரிந்து கொண்டு இடங்களையும் பரிந்துரைகளையும் சேர்க்கலாம். இதன் மூலம் குழுவாக செல்பவர்கள் கூட்டாக திட்டமிடுவதையும் மேற்கொள்ளலாம். செல்போனிலும் பிண்டிரெஸ்ட்டை பயன்படுத்தும் வசதி இருப்பதால் கூட்டாக் திட்டமிடுவது எளிதானது தான். பிண்டிரெஸ்ட்டும் சமூகவலைப்பின்னல் சேவை தான். இப்படி கூட்டாக திட்டமிட்டுவது ,மற்றவர்கள் அனுபவங்களை பயன்படுத்திக்கொள்வது ,நம்முடைய அனுபவத்தை பகிர்ந்து கொள்வது உள்ளிட்ட செயல்கள் பிண்டிரெஸ்ட் பயன்பாட்டை மேலும் சுவாரஸ்யமாக்கும்.

கையில் வரைபடம்

பிண்டிரெஸ்ட் மூலம் இப்படி அழகாகவும் அருமையாகவு சுற்றுலா செல்லும் இடங்கள் பற்றிய ஆய்வில் ஈடுபட்டு தகவல்களை சேகரிக்கலாம். தேவையான தகவல்கள் சேர்ந்த பின் நீங்கள் உருவாக்கிய பலகையை செல்போனில் பதிவேற்றிக்கொண்டு உங்களுடன் வழிகாட்டியாக எடுத்துச்செல்ல்லாம். எப்போது வேண்டுமானாலும் இந்த பயன பலகையில் புதிய விவரங்களை சேர்க்கலாம். ஆக இந்த கோடை விடுமுறை சுற்றுலா பயணத்தை பிண்டிரெஸ்ட் மூலம் திட்டமிட்டு பாருங்கள் ,சுவாரஸ்யத்திற்கு குறைவிருக்காது.

இணைய முகவரி; https://www.pinterest.com/

 

——————-

நன்றி; தமிழ் கம்ப்யூட்டர்

 

 

Advertisements

2 responses to “பிண்டிரெஸ்ட் மூலம் கோடை விடுமுறையை திட்டமிடுவது எப்படி ?

மறுமொழியொன்றை இடுங்கள்

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out / மாற்று )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out / மாற்று )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out / மாற்று )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out / மாற்று )

Connecting to %s