காகித மைக்ராஸ்கோப் ; இந்திய அமெரிக்கரின் அற்புத கண்டுபிடிப்பு.

tedகாகிதத்தை விதவிதமாக மடித்து அழகான கலைப்பொருட்களையும் , விளையாட்டு சாதனங்களையும் உருவாக்கலாம். ஆனால் காகிதத்தில் மைக்ராஸ்கோப்பை உருவாக்க முடியும் என்று சொன்னால் நம்ப முடிகிறதா? மனு பிரகாஷ் எனும் இளம் விஞ்ஞானி காகித மைக்ராஸ்கோப்பை உருவாக்கி வியக்க வைத்திருக்கிறார். பெயரை பார்த்ததுமே இந்திய பெயராக இருக்கிறதே என வியக்க வேண்டாம், மனு நம்மூர்காரர் தான். உத்தரபிரதேசத்தின் மீரட்டைல் பிறந்தவர் கான்பூர் ஐ.ஐ.டியில் படித்து முடித்து அமெரிக்காவில் செட்டிலாகிவிட்டார். அங்குள்ள புகழ்பெற்ற ஸ்டான்போர்டு பல்கலைக்கழகத்தில் பயோஎஞ்சினியரிங் பேராசிரியராக இருக்கிறார்.

மனு பிரகாஷுக்கு டாலர்களை குவிப்பதை விட ஆய்வில் தான் ஆர்வம் அதிகம். அதிலும் நவீன தொழில்நுட்பத்தை ஏழைகள் பயன்பாட்டிற்கு ஏற்ப எளிமையாகவும் , செலவு குறைந்தாதாகவும் ஆக்கித்தரக்கூடிய வழிகளை கண்டறியும் ஆய்வு.

இத்தகைய நோக்குடன் மனு பிரகாஷ் மற்றும் அவரது படையினர் ( சீடர்கள்) ஈடுபட்டு வந்த ஆய்வின் பயன் தான் இந்த காகித மைக்ராஸ்கோப். மனு இதற்கு போல்ட்ஸ்கோப்( Foldscope)பெயரிட்டுள்ளார்.
சட்டை பையில் போட்டுக்கொள்ள கூடிய அளவுக்கு இருக்கும் அவரது காகித மைக்ராஸ்கோப்பை கொண்டு மலேரியா போன்ற பரவலாக காணப்படும் நோய்க்கிருமிகளை கண்டறிந்து விடலாம். அதோடு மலிவு விலையில் இவற்றை தயார் செய்து விநியோகமும் செய்யலாம்.

மனு பிரகாஷ் இந்த காகித மைக்ராஸ்கோப்பின் அருமையை விளக்கும் அழகை கேட்டால் இன்னும் வியப்பாக இருக்கும். இந்த மைக்ராச்கோப்பை தண்ணீரில் வீசி எறிந்தாலும் சரி, மூன்றாவது மாடியில் இருந்து வீசி எறிந்தாலும் சரி, இல்லை காலில் போட்டு மிதித்தாலும் ஒன்றுமே ஆகாதாம். அதன் பிறகு தூசி மட்டும் தட்டிவிட்டு இந்த மைக்ராஸ்கோப்பை பயன்படுத்தலாம் என்கிறார் மனு பிரகாஷ். அந்த அளவுக்கு எதையும் தாங்கும் இதயம் கொண்டதாக உருவாக்கப்பட்டுள்ளது. நவீன வசதிகள் இல்லாத ஏழை நாடுகளின் மிகவும் பின் தங்கிய பகுதிகளில் பயன்படுத்தப்பட உருவாக்கப்பட்டிருப்பதால் இவ்வாறு எந்த பாதிப்பையும் தாங்கக்கூடியதாக இவை உருவாக்கப்பட்டுள்ளன. ஜப்பானில் அறிமுகமாகி உலகம் முழுவதும் பிரபலமாகி இருக்கும் காகித மடிப்புக்கலையான ஆர்கமியின் அடிப்படையில் இந்த மைக்ராஸ்கோப் அமைந்திருக்கிறது. இதனால் தான் குறைந்த செலவில் தயார் செய்வதும் சாத்தியமாகியிருக்கிறது. எந்த சூழலிலும் செயல்படகூடியதாகவும் இருக்கிறது. சும்மா பத்து நிமிடத்தில் பொட்டலம் மடிப்பது போல இதை தயார் செய்து விடலாம். இதில் நகரக்கூடிய சிக்கலான பாகங்கள் எதுவும் கிடையாது. தனியே மின்சக்தி போன்றவையும் தேவையில்லை. பாட்டரி முதல் கொண்டு லென்ஸ் வரை எல்லாமே காகிதத்தில் பொருததப்பட்டுள்ளது.ted2

சோதனைக்கூடங்களில் பார்த்த நேர்த்தியான சாதனமான மைக்ராஸ்கோப்பை இப்படி சட்டை பாக்கெட்டில் மடித்து வைத்துக்கொள்ளக்கூடிய அளவுக்கு எளிமையானதாக உருவாக்கி இருப்பது சாதனை தான். இந்த சாதனையின் பின்னே இருப்பது பிரத்யேகமான வட்டவடிவ லென்ஸ் என்கிறார் மனு பிரகாஷ். பெரிய அளவில் உற்பத்தி செய்யக்கூடிய இந்த லென்சை காகித மைக்ராஸ்கோப் நடுவே பொருத்தி பயன்படுத்தலாம். மூர்த்தி சிறிதானாலும் கீர்த்தி பெரிது என்று சொல்லக்கூடியது போல இந்த லென்ஸ் மலிவானதே தவிர, பார்க்கப்படும் பொருளை 2,000 மடங்கு பெரிதாக்கி காட்டக்கூடியது. ஆகவே மலேரியா, டைபாய்டு போன்ற நோய் கிருமிகளை அடையாளம் கண்டுபிடித்துவிடலாம். ஆனால் ஒன்று , ஒவ்வொரு நோய்க்கிறுமிகளுக்கும் கொஞ்சம் பிரத்யேகமாக மைக்ராஸ்கோப்பை தயார் செய்ய வேண்டும். மனு பிரகாஷ் குழு மொத்தம் 30 வகையான மைக்ராஸ்கோப்புகள உருவாக்கியிருக்கிறது.

பொதுவாக ஒரு நல்ல மைக்ராஸ்கோப் பல ஆயிரம் ரூபாய்கள் மதிப்பு கொண்டவையாக இருக்கின்றன. சக்தி வாய்ந்தவை லட்சக்கணக்கில் கூட விலை கொண்டுள்ளன. பல எழை நாடுகளில் குறிப்பாக ஆப்பிரிக்க நாடுகளில் இத்தகைய விலை உயர்ந்த மைக்ராஸ்கோப்புகளை வாங்கி பயன்படுத்துவது சாத்தியமில்லை. விளைவு எளிதாக கண்டறிந்து குணப்படுத்தி விடக்கூடிய நோய்களுக்கு கூட முறையாக சிகிச்சை அளிக்க முடியாத நிலை. இதை மாற்ற ஆயிரக்கணக்கில் மைக்ராஸ்கோப்புகளை வாங்கி விநியோகிப்பது சாத்தியமில்லை.
இந்த குறையை போக்கும் வகையில் மனித்நேய மருத்துவ ஆய்வில் மனு பிரகாஷ் ஈடுபட்டதன் விளைவே காகித மைக்ராஸ்கோப்.

கென்யா போன்ற நாடுகளில் ஒரு பக்கம் போதுமான மலேரியா மருத்துகள் இல்லாத நிலை இருப்பதையும் அதே நேரத்தில் மலேரியா பாதிப்பு இருக்கிறதா என்பதை உறுதி செய்யமாலேயே மருந்துகள் கொடுப்பதையும் மனு பிரகாஷ் நேரில் பார்த்து நொந்து போயிருக்கிறார். மருத்துவ சோதனை வசதிகள் இல்லாததே இந்த பரிதாப நிலைக்கு காரணம் என்று உணர்ந்தவர், தனது மருத்துவ விஞ்ஞான ஆய்வை பயன்படுத்தி எவரும் எளிதாக பயன்படுத்தக்கூடிய போல்ட்ஸ்கோப் கருவியை உருவாக்கியுள்ளார். பில்கேட்ஸ் அறக்கட்டளையின் ஆதரவு மற்றும் நிதியுதவி இந்த கண்டுபிடிப்புக்கு கிடைத்துள்ளது. இதனை கொண்டு முதல் கட்டமாக கென்யா, உகாண்டா மற்றும் இந்தியா உள்ளிட்ட நாடுகளில் மருத்துவ வசதி இல்லாத பகுதிகளில் இதை சோதனை முறையில் பயன்படுத்த உள்ளனர். சோதனையின் முடிவு அடிப்படையில் அடுத்த கட்டமாக இவற்றை பெரிய அளவில் உற்பத்தி செய்து விநியோகிக்க உள்ளனர்.

ted3ஏழைகளுக்கு மருத்துவ சோதனையை சாத்தியமாக்குவதோடு கல்வி கூடங்களிலும் இந்த காகித மைக்ராஸ்கோப் பெரிய அளவில் பயன்படும் என்று பிரகாஷ் எதிர்பார்க்கிறார். மாண்வர்கள் மத்தியில் அறிவியல் மற்றும் ஆய்வு ஆர்வத்தை வளர்க்க இவை உதவும் என்று நம்புகிறார். ஸ்டான்போர்ட் பலகலையில் ஒரு வகுப்பின் போது, பிரகாஷ் மாணவர்களையே , இந்த மைக்ராஸ்கோப்பை உருவாக்கை பயன்படுத்த வைத்து ஆய்வுக்கட்டுரை எழுத வைத்துள்ளார்.

நடைமுறை வரம்புகளுக்கு ஏற்ப அறிவியலை வளைந்து கொடுக்க வைத்து ,எளிய தீர்வுகளை அளிக்கும் புதுமையான அறிவியல் கண்டுபிடிப்புகள் ஏழை மக்களுக்கு பேரூதவியாக இருக்கும் எனும் நம்பிக்கையின் அடிப்படையில் உருவாக்கப்பட்டு வரும் பல்வேறு சாதங்களில் மிகவும் நம்பிக்கை தருவதாக அமைந்துள்ள இந்த மடக்கும் மைக்ராஸ்கோப்பை உருவாக்கிய மனு பிரகாஷுக்கு மனதார சபாஷ் போடலாம்.

மனு பிரகாஷ் ஆய்வு பற்றி அறிய அவரது இணையதளம்; http://www.stanford.edu/~manup/
காகித மைக்ராஸ்கோப் பற்றி மனு பிரகாஷ் உற்சாகமாக விளக்கம் அளிக்கும் டெட் வீடியோ: http://www.ted.com/talks/manu_prakash_a_50_cent_microscope_that_folds_like_origami

 

2 responses to “காகித மைக்ராஸ்கோப் ; இந்திய அமெரிக்கரின் அற்புத கண்டுபிடிப்பு.

மறுமொழியொன்றை இடுங்கள்

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  மாற்று )

Google photo

You are commenting using your Google account. Log Out /  மாற்று )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  மாற்று )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  மாற்று )

Connecting to %s