விடுமுறையில் விளையாட்டாக விஞ்ஞானம்.

விடுமுறை நாட்கள் துவங்கியாச்சு. கோடைக்கால முகாம்கள், சுற்றுலா என பல விஷ்யங்கள் இருந்தாலும் விளையாட்டுகளில் ஈடுபடுவது போல குதூகுலமான விஷயம் வேறு கிடையாது இல்லையா? கிரிக்கெட்,கால்பந்து என அவுட்டோர் கேம்கள் பல இருந்தாலும் கொளுத்தும் வெய்யிலில் வீட்டிலேயே அடைந்து கிடக்கும் போது கம்பயூட்டர் கேம் உற்சாகம் தரலாம். சரி, வழக்கமான வீடியோ கேம்களும், ஆங்ரி பேர்டு விளையாட்டும் அலுத்து விட்டதா ? இணையத்தில் அற்புதமான விளையாட்டுகளை வழங்கும் பல இணையதளங்கள் இருக்கின்றன . அவற்றில் அசத்தலான ஒரு தளத்தை பார்க்கலாமா? http://education.jlab.org/indexpages/elementgames.html. இது அதான் அந்த இணையதளம். அமெரிக்காவில் உள்ள தேசிய ஆய்வுகூடமான ஜெபர்ஸன் லேப் சார்பில் சிறுவர் சிறுமிகளுக்காக அமைக்கப்பட்டுள்ள இந்த இணைய பகுதியில் விஞ்ஞான விளையாட்டுகளை ஆடி மகிழலாம்.

என்னது, விடுமுறையிலும் அறிவியலா என அலர வேண்டாம், இந்த தளத்தில் உள்ள விஞ்ஞான விளையாட்டுகள் உங்களை சுவாரஸ்யத்தில் ஆழ்த்தி விடும். அதே நேரத்தில் உங்களுக்கு அறிவியல் நோக்கிலான தகவல்களையும் தெரிந்து கொள்ளலாம்.
சந்தேகம் இருந்தால் முதலில் விஞ்ஞான லட்சாதிபாதியாக விருப்பமா? எனும் விளையாட்டை ஆடிப்பார்க்கலாமா? ( http://education.jlab.org/million/) . அமிதாப் நடத்திய குரோர்பதி நிகழ்ச்சி நினைவிருக்கிறதா ? அதே போன்ற இணைய விளையாட்டு இது. ஆனால் கேள்விகள் அனைத்தும் அறிவியல் தொடர்பானவை. ஒவ்வொரு கேள்வியாக வரிசையாக காண்பிக்கப்படும். அதற்கான சரியான விடை சொன்னால் அடுத்த கேள்விக்கு முன்னேறலாம். உதாரணத்திற்கு முதல் கேள்வியை பார்க்கலாம். ’ஒ’ எனும் ஆங்கில எழுத்து எந்த கணிமத்தை குறிக்கிறது எனும் கேள்விக்கு விடையாக நான்கு பதில்கள் தரப்பட்டுள்ளன. அவற்றில் சரியான பதிலை கிளிக் செய்ய வேண்டும். நன்றாக பதில் தெரிந்தால் உடனே கிளிக் செய்யலாம். அப்போது, இது தான் சரியான பதிலா, உறுதியாக தெரியுமா ? என்று குரோர்பதி பாணியிலேயே கேட்கப்படும். உறுதியாக தெரிந்தால் ஆம் என கிளிக் செய்யலாம். இல்லையா, வல்லுனரின் உதவிய நாடலாம், 50;50 வாய்ப்பை பயன்படுத்தலாம். இப்படி சுவாரஸ்யமாக ஒவ்வொரு கட்டமாக முன்னேறிச்சென்று வெற்றி பெற்றால் நீங்கள் விஞ்ஞ்சான லட்சாதிபதியாகலாம். ஆனால் நிஜமான பணம் கிடையாது. ஒரு ஊக்கத்திற்காக டாலர்களை வென்றதாக நினைத்துக்கொள்ளலாம்.

இந்த விளையாட்டின் போக்கிலேயே உங்கள் அறிவியல் அறிவையும் சோதித்துக்கொள்ளலாம், புதிய தகவல்களையும் தெரிந்து கொள்ளலாம்.
இதே போல இன்னும் பல விளையாட்டுக்கள் அறிவியல் பகுதியில் இருக்கின்றன. ஒவ்வொன்றும் சுவாரஸ்யமானவை. குறுக்கெழுத்து புதிர் தெரியும் அல்லவா? இந்த பகுதியில் பல விதமான குறுக்கெழுத்து புதிர்களை விடுவித்துப்பார்க்கலாம். எல்லாமே அறிவியல் குறுக்கெழுத்து புதிர்கள். அணுக்கள், சூரிய மண்டலம், உடல்கூறு, கண், மெடிரிக் அமைப்பு ,இயந்திரங்கள் என ஏதாவது ஒரு தலைப்பை தேர்வு செய்து கொண்டு குறுக்கெழுத்து புதிரை விடுவிக்கத்துவங்கலாம். – (http://education.jlab.org/sciencecrossword/ ) விரும்பினால் குறுக்கெழுத்து புதிர்களை பி.டி.எப் வடிவில் அச்சிட்டுக்கொண்டு நண்பர்களோடும் சேர்ந்து விளையாடலாம்.
அறிவியல் போலவே கணிதம் சார்ந்த விளையாட்டுகளும் இருக்கின்றன. புதிர் கணிதம் எனும் விளையாட்டு உங்கள் நண்பர்கள் மனதில் நினைக்கும் ரகசிய எண்ணை கண்டுபிடித்து அசத்தலாம் என்கிறது: ( http://education.jlab.org/mysterymath/) . மின்னல் வேக கணித விளையாட்டுகளும் உங்களை வியப்பில் ஆழ்த்தும்.
அறிவியல் குறுக்கெழுத்து புதிர் போலவே கணிமங்கள் சார்ந்த குறுக்கெழுத்து விளையாட்டும் இருக்கிறது.வார்த்தை விளையாட்டுகளும் உண்டு.

விஞ்ஞானம் என்று சொல்லி விட்டு பரிசோதனைகள் இல்லாவிட்டால் எப்படி? பிராஸ்ட்பைட் தியேட்டடில் சுவாரஸ்யமான பரிசோதனைகளை வீடியோவாக பார்க்கலாம். ( http://education.jlab.org/frost/) . காற்று அடைத்த பலூனை திரவ நைட்ரஜனில் அழுத்தினால் என்ன ஆகும் ? வீடியோவில் விளக்கமான பதில் இருக்கிறது. யூடியூப் வீடியோக்கள் போல இந்த பகுதியில் விஞ்ஞான விளக்க வீடியோக்களை பார்த்து ரசிக்கலாம். இந்த இணையதளத்தில் கொஞ்ச நேரம் உலா வந்தால் விஞ்ஞானம் இத்தனை சுவாரஸ்யமானதா என்ற எண்ணம் ஏற்படும். ஏற்கனவே அறிவியல் மீது ஆர்வம் உள்ளவர்கள் என்றால் இரட்டிப்பு கொண்டாட்டமாக இருக்கும்.
இந்த இணையதளத்தை மறக்காமல் புக்மார்க் செய்து கொள்ளுங்கள். விடுமுறை முடிந்து பள்ளி துவங்கியதும் கூட இந்த தளம் பயன்படும். இதில் உள்ள மாணவர் பகுதி அறிவியல் பாடங்களை பல்வேறு தலைப்புகளில் எளிதாகவும் சுவாரஸ்யமாகவும் விளக்குகிறது. உதாரணத்திற்கு அணுக்கள் பகுதியில், அணு என்றால் என்ன என்பதில் துவங்கி, அணுக்களின் உலகம் பற்றி முழுவதும் அறிந்து கொள்ளலாம். கூடவே ஒரு புரோட்டனுக்கு 1836 எல்க்ட்ரான்கள் சமம் என்பது சுவாரஸ்யமான விவரங்களையும் தெரிந்து கொள்ளலாம். அறிவியல் சொற்களுக்கான அர்த்தத்தை தரும் அகராதியும் இதில் இருக்கிறது. அணுக்களில் உள்ளே விஞ்ஞானிகள் எப்படி ஆய்வு செய்கின்றனர் என்ற விளக்கமும் சுவாரஸ்யத்தை அளிக்கும்.
இன்னும் விஞ்ஞான விளையாட்டுகள் வேண்டுமா ? இந்த தளத்திற்கு சென்று பாருங்கள் ;

http://www.lawrencehallofscience.org/kidsite/. விளையாட்டு மட்டும் அல்ல விஞ்ஞான விஷ்யங்களுக்கான செய்முறை விளக்கமும் இடம்பெற்றுள்ளன. சயின்ஸ் மியூசியம் தளத்திலும் (http://www.sciencemuseum.org.uk/onlinestuff/games.aspx) உற்சாகமான விளையாட்டுகள் இருக்கின்றன. ஆக் இந்த விடுமுறை உங்களை விஞ்ஞானத்தில் ஆர்வம் கொள்ள வைக்கட்டும்.

———
நன்றி;சுட்டி விகடன்

மறுமொழியொன்றை இடுங்கள்

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  மாற்று )

Google photo

You are commenting using your Google account. Log Out /  மாற்று )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  மாற்று )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  மாற்று )

Connecting to %s