லெகோ பயணங்களில் ! இணைய உலகம் ரசிக்கும் பயணம்

insஎப்படியும் உங்கள் பயணங்களை புகைப்படமாக்கி பேஸ்புக்கிலும் இன்ஸ்டாகிராமிலும் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளத்தான் போகிறீர்கள் . இந்த புகைப்படங்களை உலகமே பார்த்து ரசிக்க வேண்டும் என்றாலோ, உங்கள் பயணங்களை எல்லோரும் ஆர்வத்துடன் பின் தொடர வேண்டும் என்றால் நீங்கள் கொஞ்சம் புதுமையாக செயல்பட வேண்டும். இந்த ஸ்காட்லாந்து ஜோடியைப்போல !

கிரேக் மெக்கார்ட்னி மற்றும் அவரது காதலி லின்சே தான் அந்த ஜோடி. இப்போதைக்கு தங்கள் பயணங்களால் இணைய உலகை கலக்கும் ஜோடி!

மெக்கார்டினியும், லின்சேவும் தங்கள் பயணங்களின் போது எடுத்து வெளியிடும் புகைப்படங்களை ஆயிரக்கணக்கானோர் ஆர்வத்துடன் பார்த்து ரசித்து வருகின்றனர். பேஸ்புக்கிலும் , இன்ஸ்டாகிராமிலும் அவர்கள் பயணத்தை ஆயிரக்கணக்கானோர் புகைப்படங்களின் மூலம் பின் தொடர்கின்றனர். அந்த புகைப்படங்களை பார்ப்பவர்கள் எல்லோருமே , ஒரு புன்னகையோடு மனதுக்குள் அவற்றை பாராட்டி மகிழ்கின்றனர்.

மெக்கார்ட்னி ஜோடி எடுத்து மகிழும் புகைப்படங்களில் என்ன சிறப்பு என்றால் அவற்றில் மைய பாத்திரங்கள் தான். ஆம், அந்த படங்களில் அவர்கள் பயணிக்கும் அழகான இடங்களை பார்க்கலாம். ஆனால் அவற்றின் நடுவே அவர்களை பார்க்க முடியாது. அதற்கு பதிலாக அவர்களின் பிரதிநிதியான் லெலோ பொம்மைகளை தான் பார்க்கலாம். எல்லா இடங்களிலும் தங்களுக்கு பதிலாக லெகோ பொம்மைகளை நிறுத்தி வைத்து படம் எடுத்து பகிர்ந்து கொண்டு வருகின்றனர். அவர்களின் அடையாளமாக இருக்கும் லெகோ பொம்மைகள் ஒவ்வொரு இடத்திலும் ஒரு விதமான போஸ்களில் காட்சி அளிக்கின்றன.

எத்தனையோ அருமையான படங்களை பார்த்து ரசித்திருக்கிறோம். சுற்றுலா பயணிகள் எடுத்துக்கொண்ட படங்களில் அவற்றின் அழகை மீறி ஒரு தனிப்பட்ட தன்மை இருக்கும். அதே நேரத்தில் தொழில்முறை கலைஞர்கள் எடுக்கும் புகைப்படங்களில் அவற்றின் நேர்த்தி இயற்கை மீறிய அழகாக இருக்கும். ஆனால் இந்த புகைப்படங்களில் , பார்த்து ரசிக்க கூடிய இடங்களில் , லெகோ பொம்மைகளை பார்ப்பது ஒரு புதிய அனுபவமாக இருக்கிறது. இந்த படங்களுக்கு வழக்கத்தை மீறிய உயிரோட்டத்தை தருவதோடு , உலகையே லெகோ பொம்மைகள் வழியே பார்ப்பது போல இருக்கிறது.

ins2எல்லோரும் தங்களை முன்னிறுத்தி சுயபடங்கள் எடுத்துக்கொள்ளும் காலத்தில் , படம் எடுப்பவர் தன்னை பின்னுக்கு தள்ளிக்கொண்டு அந்த இடத்தில் லெகோ பொம்மையை நிறுத்தி வைப்பது வித்தியாசமானது தான். ஆனால் , இந்த லேகோ பொம்மைகள் தான் எத்தனை விதமாக இருக்கின்றன.

ஒரு புகைப்படடத்தில் பேக்பேக் மாட்டிய லெகோ ஆணும் ,கையில் காமிரா ஏந்திய லெகோ பெண்ணும் ஒன்றாக கைகோர்த்தபடி நடந்து செல்கின்றனர். இன்னொரு படத்தில் புல்வெளி நடுவே லகோ ஆண்ல் போஸ் கொடுக்க லெகோ பெண் படம் பிடிக்கிறாள். மற்றொரு படம், நீரூற்று நடுவே லேகோ ஜோடி சைக்கிள் ஓட்டிச்செல்கிறது. பாலத்தின் முன்னே லெகோ ஜோடி போஸ் கொடுப்பதாக இன்னொரு படம். இப்படி எல்லா புகைப்படங்களிலும் லெகோ பொம்மை வழியே அந்த இடங்களை பார்ப்பது தனியான அனுபவமாக இருக்கிறது.

அதனால் தான் இன்ஸ்டாகிராம் புகைப்பட பகிர்வு தளத்தில் இந்த ஜோடியின் கணக்கை பின்தொடர்பவர்களின் எண்ணிக்கை 5,000 தொட இருக்கிறது. இது தவிர பேஸ்புக்கில் சில ஆயிரம் பேர் பின் தொடர்கின்றனர். டிவிட்டர் பக்கத்தில் சில ஆயிரம் பேர் பின்தொடர்கின்றனர். எல்லா கணக்குகளுக்குமே லெகோ டிராவலர்ஸ் என்பது தான் முகவரி.

ins3இந்த ஜோடி தங்களை , லெகோ பயணிகள் என்று தான் அழைத்துக்கொள்கிறது. தங்கள் வாழ்க்கையை லெகோ வாழ்க்கை என குறிப்பிடுகிறது. ஸ்காட்லாந்தில் இருந்து புறப்பட்ட இந்த ஜோடி ஐரோப்பிய நாடுகளில் சுற்றி விட்டு இப்போது ஆஸ்திரேலியாவில் தங்கள் பயணத்தை பதிவு செய்து கொண்டிருக்கிறது.

எல்லாம் சரி, இந்த எண்ணம் உருவானது எப்படி? மெக்க்கார்டினியின் அம்மா கடந்த ஆண்டு , வீட்டை சுத்தம் செய்து கொண்டிருந்த போது , அவர் சிறுவனாக இருந்த போது விளையாடிய பழைய லெகோ பொம்மைகளை எடுத்து பார்த்திருக்கிறார். அந்த பொம்மைகளை பார்தததும் சிறுவயது நினைவுகளில் மூழ்கிய மெக்கார்ட்னி அவற்றை தனது காதலி லின்சேவுக்கு பரிசளித்திருக்கிறார். அந்த பொம்மைகளைல் இரண்டு பொம்மைகள் அவர்களது அடையாளமாக இருக்கவே பாரீஸ் நகரில் அவற்றை தங்கள் இடத்தில் நிற்க வைத்து புகைப்படம் எடுத்தனர். அப்போது விளையாட்டாக, இந்த லேகோ படத்திற்காகவே ஒரு பேஸ்புக் பக்கம் அமைப்பது பற்றி பேசியுள்ளனர். ஆனால் அந்த ஐடியா பிடித்துப்போகவே , அதன் பிறகு போகும் இடங்களிலும் எல்லாம் லெகோ பொம்மகளை நிறுத்தி வைத்து படம் எடுத்து பேஸ்புக் பக்கத்தில் பகிர்ந்து கொண்டனர்,.முதலில் நண்பர்களுக்கும் உறவினர்களுக்கும் என்று இருந்த இந்த பக்கம் படிப்படியாக எல்லோரும் பார்த்து ரசிக்கும் பக்கங்களாக மாறிவிட்டன. தொடர்ந்து இன்ஸ்டாகிராம் மற்றும் டிவிட்டர் பக்கங்களும் அமைக்கப்பட்டன.

இன்று அவர்களின் லெகோ பயணங்களை உலகமே பார்த்து ரசிக்கிறது.

 

——

லெகோ பயண பேஸ்புக் பக்கம் :https://www.facebook.com/LegoTravellers

இன்ஸ்டாகிராம் பக்கம்’; http://instagram.com/legotravellers

 

மறுமொழியொன்றை இடுங்கள்

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  மாற்று )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  மாற்று )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  மாற்று )

Connecting to %s