வெப்கேம் மூலம் வன உலா செல்லலாம் வாருங்கள்.

eleகோடை விடுமுறை என்றதும் சுற்றுலா பயணம் தான் கட்டாயம் நினைவுக்கு வரும். சுற்றுலா பயணம் எந்த ஊருக்கு செல்வதாக இருந்தாலும் அதில் நிச்சயம் விலங்கியல் பூங்காக்களும் ,வனவிலங்கு சரணாலயங்களும் தவறாமல் இடம்பெற்றிருக்கும். வனவிலங்கு பூங்கா என்றவுடன் சென்னை வண்டலூரில் உள்ள அறிஞர் அண்ணா வனவிலங்கு பூங்கா நினைவுக்கு வரலாம் . சரணாலயம் என்றவுடன் முதுமலை புலிகள் சரணாலயத்தில் துவங்கி தமிழகத்திலும், இந்தியா முழுவதும் உள்ள பல புகழ்பெற்ற சராணலயங்கள் நினைவுக்கு வரலாம். இந்தியாவில் மட்டும் அல்ல, உலகம் முழுவதும் புகழ்பெற்ற வனவிலங்கு சரணாலயயங்களும் வனவிலங்கு பூங்காக்களும் இருப்பது உங்களுக்கு தெரிந்திருக்கலாம். இத்தகைய வனவிலங்கு சரணாலயங்களுக்கு எல்லாம் ஜாலியாக ஒரு விசிட் அடிக்க முடிந்தால் எப்படி இருக்கும் ? இதற்காக அந்த நாடுகளுக்கு எல்லாம் சுற்றுலா செல்ல வேண்டும் என்பது கூட அவசியம் இல்லை. இங்கிருந்தபடியே உலகில் உள்ள வனவிலங்கு சரணாலயங்களை எல்லாம் வெப்கேம் மூலம் பார்த்து ரசிக்கலாம் தெரியுமா? என்ன ஆச்சர்யமாக இருக்கிறதா? ஆனால் , இருந்த இடத்தில் இருந்தபடியே வெப்கேமிரா மூலமாக ஆப்பிரிக்காவிலும், ஆசிய நாடுகளிலும் உள்ள வனவிலங்கு சரணாலய விலங்குகளை பார்த்து ரசிக்கலாம்.

இதற்காக முதலில் வைல்டுஎர்த் ( http://lite.wildearth.tv/) இணையதளத்திற்கு செல்வோம் வாருங்கள். இந்த தளத்தில் நுழைந்ததுமே அதன் முகப்பு பக்கத்தில் விலங்குகளின் புகைப்படங்கள் கட்டம் கட்டமாக இருப்பதை பார்க்கலாம். ஒவ்வொரு படமும் ஒரு வனவிலங்கு வெப்கேமிற்கானது. மான்கள், கழுகுகள், யானைகள் என வரிசையாக இருக்கும் இந்த படங்களில் உங்களுக்கு விருப்பாமான விலங்கை கிளிக் செய்தால் போதும், நேராக அந்த விலங்கு உலாவிக்கொண்டிருக்கும் சரணாலயத்திற்கு போய்விடலாம். இதற்கென வந்து நிற்கும் இணைய பக்கத்தில் சராணலயத்தின் காட்சிகளை வெப்கேம் வழியே பார்க்கலாம். நேரடி காட்சிகளையும் பார்க்கலாம் ,இல்லை என்றால் பதிவு செய்யப்பட்ட காட்சிகளையும் பார்க்கலாம். அதே பக்கத்திலேயே அந்த வெப்கேம் அமைந்துள்ள இடம் மற்றும் அதில் காட்சி தரும் விலங்கு பற்றிய விவரங்களை தெரிந்து கொள்ளாலாம். இந்த பக்கத்தில் இருந்தே சக வனவிலங்கு ஆர்வலர்களோடு பேஸ்புக் வழியாக அரட்டையிலும் ஈடுபடலாம்.
அமெரிக்காவின் பெனிசல்வேனியாவில் உள்ள மான்கள் துவங்கி ருமேரியாவின் காரனியில் உள்ள நாரைகள், தென்னாப்பிரிக்க யானைகள் ,கனடாவில் உள்ள வெள்ளை கழுகுகள் என பலவகையான வனவிலங்குகளை வெப்கேமில் பார்த்து ரசிக்கலாம். தென்னாப்பிரிக்காவில் பார்க்க கூடிய பென்குவின் பறவைகளையும் வெப்கேம் வழியே கண்டு களிக்கலாம்.

உண்மையில் இந்த இணையதளம் வைல்டுஎர்த்.டிவி தளத்தின் (http://www.wildearth.tv/ ) பேக் அப்பாக அமைக்கப்பட்டுள்ளது. வனவிலங்குகளை வெம்கேம் மற்றும் வீடியோ காட்சிகளாக வழங்கும் இணைய டிவியாக வைல்டுஎர்த தளம் விளங்குகிறது. இந்த தளத்தில் ஏதேனும் பிரச்சனை என்றால் வெப்கேம் காட்சிகளை பேக் அப் தளத்தில் பார்த்துக்கொள்ளலாம். நீங்கள் விரும்பினால் நேரடியாக இந்த தளத்திற்கே சென்று வனவிலங்கு கேமிரா காட்சிகளை பார்க்கலாம். முகப்பு பக்கத்தில் பிரபலமான வெம்ப்கேம்கள் மற்றும் நேரடி காட்சி தரும் வெப்கேம்களின் பட்டியல் இருக்கிறது.

என்ன வனவிலங்குகளை பார்த்து ரசிக்கும் ஆர்வம் வந்துவிட்டதா? அடுத்ததாக ஆர்கிவ் (http://www.arkive.org/ ) இணையதளத்திற்கு செல்லலாம் வாருங்கள். வைல்டுஸ்கிரீன் எனும் வனவிலங்கு நலனுக்கான தன்னார்வ அமைப்பால் நடத்தப்படும் இந்த தளத்தில் உலக வனவிலங்கு தொடர்பான புகைப்படம் மற்றும் வீடியோக்களை பார்க்கலாம். இது வெறும் பொழுதுபோக்கு தளம் அல்ல. அழியும் நிலையில் இருக்கும் வனவிலங்குகள் பற்றிய விழிப்புணர்வை ஏற்படுத்தி அவற்றை பாதுக்காக்கும் நோக்கத்துடன் அமைக்கப்படுள்ள இணையதளம். இதில் உலகம் முழுவதும் அழியும் நிலையில் உள்ள விலங்குகளை அறிமுகம் செய்து கொள்ளலாம். விலங்குகளை அவற்றின் வகைகளுக்கு ஏற்ப தேடலாம். அதாவது பறவைகள், பாலூட்டிகள், மீன்கள் என வகைப்படுத்தப்பட்டுள்ளன. இதே போல விலங்குகளின் இருப்பிடம் சார்ந்தும் அவற்றை தேடலாம். விலங்குகள் மட்டும் அல்ல, தாவிரங்களையும் தேடலாம்.

விருப்பமான விலங்கை கிளி செய்ததும் அவை தொடர்பான வீடியோக்கள், புகைப்படங்கள், தகவல்கள் ஆகியவற்றை பார்க்கலாம். ஆக இந்த தளத்தில் வனவிலங்குகளை பார்த்து ரசிப்பதோடு , அவற்றை பாதுகாக்க வேண்டிய அவசியத்தையும் தெரிந்து கொள்ளலாம். பார்க்கவும், படிக்கவும் எண்ணற்ற தகவல்கள் இருப்பதால் இந்த தளத்தில் மணிக்கணக்கில் நேரத்தை செலவிடலாம். இதில் சிறுவர்களுக்கான தனிப்பகுதியில் இருக்கிறது. அதில வனவிலங்கு தொடர்பான விளையாட்டுகளும் இருக்கின்றன.

இதே போலவே உலக வனவிலங்கு நிதி அமைப்பின் இணையதளத்திலும் அரிய ரக வனவிலங்கு பற்றிய தகவல்களை சுவாரஸ்யமான முறையில் தெரிந்து கொள்ளலாம். வனவிலங்கு நலனுக்காக பாடுபடும் அமைப்பு இது என்பது உங்களுக்கு தெரிந்திருக்கலாம். இந்த தளத்தின் வனவிலங்கு கண்டுபிடி பகுதியில் (http://worldwildlife.org/pages/wildfinder ) பூமியில் உள்ள 26,000 க்கும் மேற்பட்ட வனவிலங்கு வகைகள் குறித்து உயிரோட்டமான தகவல்களை அறிந்து கொள்ளலாம். இதிலும் விலங்களை கொண்டு அல்லது அவற்றின் இருப்பிடங்களை கொண்டு தகவல்களை தேடலாம். பாண்டாக்கள், புலிகள், கடல் ஆமைகள் என அழியும் நிலக்கு தள்ளப்பட்ட பல விலங்குகள் தொடர்பான அரிய தகவல்கள் அழகிய புகைப்படங்களுடன் தொகுக்கப்பட்டுள்ளன. அமேசான் காடுகள் துவங்கி டார்வின் ஆய்வு செய்த கால்பகோ தீவுகள் வரை வனவிலங்கிற்கு புகழ்பெற்ற பசுமையான வனப்பகுதிகளுக்கும் சென்று வரலாம்.

ஒவ்வொரு விலங்கு தொடர்பான விரிவான அறிமுகம் , அவற்றின் குண்நலன்கள் உள்ளிட்ட தகவல்கள் கொடுக்கப்பட்டுள்ளன. வீடியோ காட்சி இணைப்புகளும் உண்டு.

எக்ஸ்பிலோர் (http://explore.org/ ) இணையதளத்திலும் வனவிலங்கு வீடியோ மற்றும் வெப்கேம் காட்சிகளை கண்டு ரசிக்கலாம். வனவிலங்கு மட்டும் அல்ல கடல்வாழு விலங்குகளையும் வெப்கேம் வழியே இதில் பார்க்க முடியும். பெலுலா திமிங்கலம், அழகான பாண்டா கரடி , அலற வைக்கும் ஆந்தை சுறுசுறுபான தேனிக்கள் ஆகியவற்றை வெப்கேம் வழியே பார்த்து அறிமுகம் செய்து கொள்ளலாம். இவற்றை பேஸ்புக் மற்றும் இமெயில் வாயிலாக நண்பர்களுடனும் பகிர்ந்து கொள்ளலாம்.
ஆக, இந்த விடுமுறை உங்களுக்கு போரடிக்கவே செய்யாது இல்லையா !

———-

சுட்டி விகடனில் வெளியானது.

 

 

மறுமொழியொன்றை இடுங்கள்

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  மாற்று )

Google photo

You are commenting using your Google account. Log Out /  மாற்று )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  மாற்று )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  மாற்று )

Connecting to %s