கூகுலின் டிரைவர் இல்லாத கார் அறிமுகம்.

20140513-GOOGLE-CARS-0003edit-660x495ஊரறிந்த ரகசியம் என்பது போல , அது உலகறிந்த ரகசியம் தான். அதாவது தேடியந்திர நிறுவனமான கூகுல் தானியங்கி கார் ஆய்வில் ஈடுப்பட்டு வருவது. இந்த ஆய்வுன் பயனாக உருவாக்கப்பட்ட தானியங்கி கார் மாதிரியை கூகுல் அறிமுகம் செய்துள்ளது. செல்ஃப் டிரைவிங் கார் என்று சொல்லப்படும் சுயமாகவே இயங்ககூடிய கார்களில் பெரும் பாய்ச்சல் என்று சொல்லக்கூடிய வகையில் கூகுலின் தானியங்கி கார் , உண்மையிலேயே டிரைவர் இல்லாமல் அறிமுகமாகியுள்ளது.வழக்கமாக கார்களில் பார்க்க கூடிய ஸ்டியரிங் வீல், பிரேக் மற்றும் வேகத்துக்கான சாதனம் ஆகிய மூன்று முக்கிய அம்சங்கள் இல்லாமல் கூகுலின் தானியங்கி கார் மாதிரி அமைந்துள்ளது.

ஸ்டியரிங்கும் பிரேக்கும் இல்லாத கார், நம்ப முடியாத வியப்பை அளிக்கலாம். ஆனால் , தானியங்கி கார்களுக்கு இவை தேவையில்லாதது என கூகுல் சொல்கிறது. ஏனெனில் இந்த கார் தானாகவே தன்னை ஓட்டிச்செல்லும். கூகுலின் வரைபடம் தான் இதற்கு அடிப்படை. வரைபடம் மூலம் செல்ல வேண்டிய பாதையை தெரிந்து கொண்டு கார் முன்னேற்றிச்செல்லும். இதன் அதிகபட்ச வேகம் 40 கி.மீ. போக்குவரத்து மிக்க சாலையில் செல்லும் போது எதிரே வரும் வாகனம் அல்லது பின்னால் வரும் வாகனத்தை கார் எப்படி சமாளிக்கும் எனும் கேள்வி எழலாம். அந்த கவலையே வேண்டாம். காரில் பொறுத்தப்பட்டுள்ள சக்தி வாய்ந்த சென்சார்கள் இந்த பொறுப்பை ஏற்றுக்கொள்ளும். இந்த சென்சார்கள் காரின் பாதையில் வரும் மனிதர்கள் மற்றும் வாகனங்கள் உள்ளிட்ட இடையூறுகளை உணர்ந்து செயல்படக்கூடியது. ஆக வரைபடத்தை மனதில் நிறுத்திக்கொண்டு சாப்டேவேர் மூலம் இந்த கார் இயங்கும் -சென்சார்கள் தான் வழிகாட்டி. முற்றிலும் மனித தலையீடே தேவையில்லை;
மெரிஸ்டசின் சிறிய காரை போல குட்டியாக அடக்கமாக கூகுலின் கார் மாதிரி அமைந்துள்ளது. இதில் இருவர் அமர்ந்து செல்லலாம். காரில் அவசர கால உபயோகத்திற்கு என்று ஒரே ஒரு சிவப்பு பட்டன் மட்டுமே உள்ளது. எதிர்பாரா காரணத்தினால் கார் கட்டுப்பாட்டை இழக்கும் நிலை உருவானால் இந்த பட்டனை அழுத்தி காரை நிறுத்தலாம். சோதனை ஓட்டத்தில் கார் எந்த விபத்தும் இல்லாமல் செயல்பட்டிருக்கிறது. எனினும் நடைமுறை பாதுகாப்பிற்காக காரின் முன்பகுதி மெத்த போன்ற பொருளால் உருவாக்கப்பட்டுள்ளது. தப்பித்தவறி மனிதர்கள் மீது மோதினாலும் ஆபத்து இருக்காது.

கூகுலின் இணை நிறுவனரான செர்ஜி பிரைன் , கலிபோரினியாவில் நடைபெற்ற தொழில்நுட்ப மாநாட்டில் இந்த கார் மாதிரியை அறிமுகம் செய்துள்ளார். இதே போன்ற 100 கார் மாதிரிகளை தயாரிக்க திட்டம் இருப்பதாகவும் அவர் கூறினார். கலிபோர்னியாவில் இந்த ஆண்டு இறுதியில் இந்த கார் சோதனை ஓட்டம் மேற்கொள்ளப்படலாம் என்றும் அவர் கூறினார்.ROBOCAR-articleLarge
2009 ம் ஆண்டு முதல் கூகுல் தானியங்கி கார் ஆய்வில் ஈடுபட்டுள்ளது. கூகுல் நிறுவன ஊழியர்களை போக்குவரத்துக்கு பயன்படுத்தப்பட்டு இது சோதிக்கப்பட்டு வருகிறது. இது வரை 7 லட்சம் கிலோ மீட்டருக்கு மேல் சோதித்து பார்க்கப்பட்டுள்ளது. இது வரை எந்த விபத்தும் இல்லை என்பது சந்தோஷமான விஷயம். கூகுல் ஏற்கனவே உள்ள கார் மாதிரியை வாங்கி அதனை மேம்படுத்தி தானியங்கி கார் சோதனையை செய்து வந்தாலும் தற்போது அறிமுகம் செய்யப்பட்டுள்ள கார் மாதிரி முற்றிலும் சொந்தமாக கூகுலால் உருவாக்கப்பட்டது. இது பெரும் பாய்ச்சல் தான். கார் தயாரிப்பு நிறுவனங்கள் பல தானியங்கி கார் ஆய்வில் ஈடுபட்டு வந்தாலும் கூட , கூகுல் தான் முதன் முதலாக முழுவதும் டிரைவரே இல்லாத காரை அறிமுகம் செய்துள்ளது குறிப்பிடத்தக்கது.
பொதுவாக தானியங்கி கார்களில் என்ன கொள்கை என்றால், ஏதேனும் அசம்பாவிதம் நிகழலாம் என்றால், காரில் பயணிப்பவர் தானே காரை இயக்கத்துவங்கலாம் . பத்து விநாடிக்கு மேல் காரின் ஸ்டயிரிங் கட்டுப்பாட்டில் இருந்தால் தானியங்கி முறை தானாக நின்றுவிடும். ஒரு பாதுகாப்பிற்காக இவ்வாறு செய்யப்படுகிறது. ஆனால் காரில் பயணிப்பவர் , யோசித்திக்கொண்டோ , பகல கணவு கண்டபடிய்ப்ப் இருக்கலாம் என்பதால் இத்தகைய மனித தலையீட்டை எதிர்பார்ப்பது தானியங்கி காருக்கு ஏற்றதாக இருக்காது என்று கூகுல் வழக்கமான பாதையில் இருந்து விலகி டிரைவர் ,ஸ்டியரிங் மற்றும் பிரேக் இல்லாத முழு தானியங்கி காரை உருவாக்கியுள்ளது.

இந்த கார் நடைமுறையில் பழக்கத்திற்கு வர 5 அல்லது 10 ஆண்டு ஆகலாம் என்கின்றனர். ஆனால் மனித தவறுகளால் விபத்துகள் ஏற்படுவதை தவிர்த்து எதிர்கால போக்குவரத்தை பாதுகாப்பானதாக ஆக்கும் ஆய்வில் இது முக்கிய மைல்கல்லாக கருதப்படுகிறது.

Vehicle Prototype Image Banner Cropped 600pxகூகுல் தானியங்கி கார் திட்ட முக்கிய அம்சங்கள்;

* கூகுலின் தானியங்கி காரை ஸ்மார்ட் போன் செயலி மூலம் அழைத்து பயன்படுத்தலாம். ஒரு பட்டனை அழுத்தினால் கார் வந்து நாம் சொல்லும் இடத்திற்கு அழைத்து செல்லும். எதிர்காலத்தில் இப்படி தானியங்கி கால் டாக்சிகள் வரப்போவதாக ஆருடம் சொல்லப்படுகிறது. இதன் மூலம் விபத்தையும் தவிர்க்கலாம் , காத்திருப்பையும் குறைக்கலாம்.
* கூகுல் 100 தானியங்கி கார் மாதிரிகளை தயாரிக்க உள்ளது. ஆனால் இதன் விலை மற்றும் தயாரிப்பு நிறுவனம் பற்றி தெரிவிக்கவில்லை. இது சொந்த தயாரிப்பாக இருக்கமா அல்லது இந்த தொழில்நுட்பத்தை மட்டும் விற்பனை செய்யுமா என்றும் தெரிவிக்கப்படவில்லை. அது கூகுல் ரகசியம்
* கூகுலுக்கு இந்த தானியங்கி கார் மேல் ஏன் இத்தனை ஈடுபாடு என்று கேட்கலாம். உண்மையில் கூகுல் வருங்கால தொழில்நுட்பத்தில் கவனம் செலுத்தி வருகிறது. கூகுல் எக்ஸ் எனும் திட்டம் கீழ் ரகசிய ஆய்வகத்தில் கூகுல் ஏழு வருங்கால தொழில்நுட்ப ஆய்வில் ஈடுபட்டு வருகிறது. கூகுல் கிளாஸ், பலூன் இண்டெர்நெர் எல்லாம் இதன் கீழ் தான் வருகிறது. தானியங்கி காரும் இதன் ஒரு பகுதி. இன்னமும் வர்த்தக நோக்கில் சாத்தியமாகாத ஆனால் வருங்காலத்தில் செல்லுபடியாக கூடிய தொழில்நுட்பங்களை கவனிக்காமல் கோட்டை விடக்கூடாது எனும் முன்னெச்சரிக்கை கூகுலிட அதிகமாகவே உள்ளது.
* இந்த தானியங்கி கார்கள் சைக்களில் வருப்வர்கள் கண்டு கொள்ளும். சிக்னல் போன்றவற்றை மதித்து நடக்கும். இதற்கு சாலை விதிகளும் தெரியும் .அந்த அளவுக்கு ஸ்மார்ட். ஆனால் அணில் குறுக்கே வந்தால் திணறும் . அணிலையும் உணரக்கூடிய அளவுக்கு சென்சாரை வலுவாக்கும் முயற்சி நடந்து வருகிறது.

கூகுல் தானியங்கி கார் பற்றிய கூகுல் வலைப்பதிவு மற்றும் வீடியோ: http://googleblog.blogspot.in/2014/05/just-press-go-designing-self-driving.html

மறுமொழியொன்றை இடுங்கள்

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  மாற்று )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  மாற்று )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  மாற்று )

Connecting to %s