லினக்ஸ் பற்றி நீங்கள் அறிந்திராத 10 விஷயங்கள்

linux_runs_supercomputersநீங்கள் தவிர்க்க இயலாமல் விண்டோஸ் ஆப்பரேட்டிங் சிஸ்டத்தை பயன்படுத்தலாம். ஆனால் நீங்கள் நிச்சயமாக லினக்சையும் அறிந்திருப்பீர்கள். ஓபன் சோர்ஸ் என்ப்படும் திறவு மூலம் இயக்கத்தின் நன்கறியப்பட்ட உதாரணமாக இருக்கும் லின்க்ஸ் பரவலாக கருதப்படுவது போல ஏதோ மாற்று ஆப்பரேட்டிங் சிஸ்டமோ அல்லது விண்டோஸ் பிடிக்காத தொழில்நுட்ப பித்தர்கள் பயன்படுத்துவது என்றோ நினைத்து விட வேண்டாம்.

ஒரு இயங்கு தளமாக (ஆப்பரேட்டிங் சிஸ்டம்) லினக்ஸ் நாம் நினைத்துக்கொண்டிருப்பதை எல்லாம் விட பிரபலமாகவும் பரவலாகவும் இருக்கிறது. உண்மையில் எங்கும் லினக்ஸ் எதிலும் லினக்ஸ் என்று சொல்லக்கூடிய வகையில் லின்கஸ் பயன்பாடு இருப்பதை தொழில்நுட்ப தளமான மேக் யூஸ் ஆப் , கட்டுரை அழகாக உணர்த்துகிறது. சூப்பர் கம்ப்யூட்டர்கள் முதல் கூகுலின் தானியங்கி கார் வரை எல்லாவற்றிலும் லினக்ஸ் பயன்படுத்தப்படுத்தப்படுதவதாக இந்த கட்டுரை உணர்த்துகிறது.

லின்கஸ் பற்றி நீங்கள் அறிந்திறாத பத்து விஷயங்கள் எனும் தலைப்பிலான் இந்த கட்டுரை , உங்களுக்கு தெரிந்திருந்தாலும் தெரியாவிட்டாலும் ,லினக்ஸ் எங்கும் இருக்கிறது என்கிறது. ஓபன் சோர்ஸ் என்பதால் வளைந்து கொடுக்க கூடியது, எந்த அமைப்பிற்கும் மாற்றக்கூடியது மற்றும் எந்த ஹார்ட்வேரிலும் செயல்படக்கூடியது ஆகியவற்றை லின்கசின் நீக்கமற நிறைந்திருக்கும் தன்மைக்கான காரணங்களாக இந்த கட்டுரை குறிப்பிடுகிறது. எல்லாவற்றுக்கும் மேல் லினக்ஸ் இலவசமானது.

சரி லினக்ஸ் அப்படி எங்கெல்லாம் பயன்படுகிறது ? பார்க்கலாம்;

சூப்பர் கம்ப்யூட்டர்கள்

சூப்பர் கம்ப்யூட்டர் எனப்படும் உலகின் அதிவேக கப்யூட்டர்கள் பற்றி அடிக்கட்டி கேள்விபட்டிருக்கிறீர்கள் இல்லையா? நம்பர் ஓன் அந்தஸ்து மாறுவது போல ,சூப்பர் கம்ப்யூட்டரும் அடிக்கடி மாறிக்கொண்டே இருக்கும்? இவ்வளவு ஏன் ? உலகின் முன்னணி 500 சூப்பர் கம்ப்யூட்டர்களை பட்டியலிடுவதற்கு என்றே ஒரு இணையதளம் இருக்கிறது ( http://www.top500.org/). அதைவிட முக்கியம் இவற்றில் பெரும்பாலான சூப்பர் கம்ப்யூட்டர்கள் லினக்சில் தான் இயங்குகின்றன. 2013 நவம்பரில் வெளியான சூப்பர் கம்ப்யூட்டர்கள் பட்டியல்படி உலகின் 482 முன்னணி சூப்பர் கம்ப்யூட்டர்களை லின்கஸ் சார்ந்தவை. சதவீதப்படி இது 96.4 சதவீதம்! இந்த பட்டயலில் விண்டோசுக்கு கொஞ்சுண்டு இடம் தான். நாமெல்லாம் , டெஸ்க்டாப்பில் லின்க்ஸ் பயன்படுத்தவோ யோசித்துக்கொண்டிருக்கிறோம் ,ஆனால் சூப்பர் கம்ப்யூட்டர்களே லின்க்சை தான் நம்புகின்றன பாருங்கள்!

விமானங்களில்

விமான பயணங்களில் டிவி பார்க்கவும் திரைப்படங்களை கண்டு ரசிக்கவும் வசதி இருக்கிறது . இணையததையும் பயன்படுத்த்லாம், வீடியோ கேம் ஆடலாம். இவற்றுக்கெல்லாம் எது அடிப்படை என்று நினைக்கிறீர்கள்? லினக்ஸ் தான். லின்கஸ் சுலபமானது மற்றும் இலவசமானது என்பதால் விமான சேவை நிறுவனங்கள் தங்களுக்கு ஏற்ற அமைப்புகளை உருவாக்கி கொள்ளலாம் என்பதால் ஆகாயத்தில் லின்க்ஸ் கோலோச்சுகிறது. யுனைடெட்,ஏர் டெல்டா, வர்ஜின் என எல்லா விமான சேவை நிறுவனங்களும் லின்க்சை தான் பயன்படுத்துகின்றன.

ஸ்மார்ட் பிரிட்ஜ்

போனில் இருந்து வாட்ச், டி.வி  என எல்லாமே ஸ்மார்ட் ஆகி கொண்டிருக்கும் காலம் இது. பிரிட்ஜிலும் கூட ஸ்மார்ட் பிரிட்ஜ் வந்துவிட்டது. ஸ்மார்ட் பிரிட்ஜ் என்றால் இணைய வசதி கொண்ட பிரிட்ஜ்!. கொஞ்சம் பழைய கருத்தாக்கம் என்றாலும் இப்போது தான் பிரபலமாக துவங்கியிருக்கிறது. சாம்சங் உள்ளிட்ட பலநிறுவனங்கள் இந்த பிரிவில் பல முயற்சிகளில் ஈடுபட்டுள்ளன. எலக்ட்ரோலெக்ஸ் நிறுவனம் பிரேசிலில் ஐ-கிட்சன் எனும் ஸ்மார்ட் பிரிட்ஜை அறிமுகம் செய்துள்ளது .இணைய வசதி மற்றும் பல்வேறு செயலிகள் இயங்க கூடிய இந்த பிரிட்ஜ் லின்கசால் இயங்குகிறது. ஸ்மார்ட் பிரிட்ஜ் மட்டும் அல்ல, தெர்மோஸ்டாட் எனப்படும் பருவநிலையை கண்காணிக்கும் தொழில்நுட்ப சாதனமும் லினக்சால் தான் இயங்கிறது.linux_runs_supercomputers

linux_runs_cow_milking

கடவுள் துகளுக்கும் லின்கஸ்

ஹாட்ர்ன் கொல்லைடர் நினைவிருக்கிறதா? ஸ்விட்சலாந்தில் செர்ன் ஆய்வகத்தில் இருக்கும் மிகப்பெரிய சோதனை கூடம். மகத்தான கண்டுபிடிப்பான கடவுள் துகளை கண்டறிவதற்கான ஆய்வு இந்த சாதனத்தில் தான் மேற்கொள்ளப்பட்டது. கடவுள் துகளை கண்டுபிடிக்க உதவியதும் லின்கஸ் தான்! அதே போல விண்வெளியில் அமைக்கப்பட்டு வரும் சர்வதேச விண்வெளி ஆய்வு மையமும்  இதற்கு முன்னர் விண்டோசில் செயல்பட்டு வந்த நிலை மாறி லினக்சிற்கு மாறியிருக்கிறது.

ஸ்மார்ட் துப்பாக்கி

இலக்கை குறி வைப்பது, சரியாக குறி வைத்தவுடன் சுடுவது என வியக்க வைக்கும் ஸ்மார்ட் துப்பாக்கி உருவாக்கப்பட்டுள்ளது. இதுவும் லினக்ஸ் சார்ந்தது தான். அமெரிக்காவின் ஆஸ்டினை சேர்ந்த டிராகிங் பாயிண்ட் எனும் நிறுவனம் இந்த துப்பாக்கியை உருவாக்கியுள்ளது. இந்த துப்பாக்கி செயல்படும் விதம் பற்றி சுவையான தகவல்கள் இங்கே; http://arstechnica.com/gadgets/2013/01/17000-linux-powered-rifle-brings-auto-aim-to-the-real-world/

தானியங்கி கார்கள்

தேடியந்திர நிறுவனமான கூகுல் சமீபத்தில் தானியங்கி கார் மாதிரியை அறிமுகம் செய்து பரபரப்பை ஏற்படுத்தியது. எதிர்கால போக்குவரத்துக்கான முதல் படியாக இது கருதப்படுகிறது. இப்போதைக்கும் பல வரம்புகள் இருந்தாலும் வருங்காலத்தில் பொது போக்குவரத்தையே தானியங்கி கார்கள் மாற்ற்போகின்றன. கூகுல் மட்டும் அல்ல கார் தயாரிப்பு நிறுவனங்களும் தானியங்கி கார் ஆய்வில் ஈடுபட்டுள்ளன. சமீபத்திய செய்தி இண்டெல் நிறுவத்தத்திற்கும் தானியங்கி கார் திட்டம் இருப்பது.

இதே போல விமான கட்டுப்பாட்டு அமைப்பு மற்றும் பசுக்களிடம் பால் கறப்பதற்கான தானியங்கி முறையும் லினக்சை தான் சார்ந்துள்ளன. ஆக, லின்கசுக்கு ஜே. முடிந்தால் உங்கள் டெஸ்க்டாப் அல்லது லேப்டாப்பில்ம் லின்கஸ் மாற்றத்தை கொண்டு வாருங்கள்!

—-

லின்கஸ் பயன்பாடு பற்றி மேலும் அறிய ஆர்வம் இருக்கிறதா என்றும் குறிப்பிடவும்.

 

 

 

 

 

Advertisements

14 responses to “லினக்ஸ் பற்றி நீங்கள் அறிந்திராத 10 விஷயங்கள்

 1. எதிர்கால கணினி உலகம் லினக்ஸிற்கானதுதான். நமது மக்களும் லினக்ஸிற்கு கொஞ்சம் கொஞ்சமாக மாறி வருகின்றனர். உலக அளவில் லினக்ஸ் எங்கெல்லாம் பயன்படுத்தப்பட்டு வருகிறது என்பதை மிகவும் அழகாக பட்டிகலிட்டுள்ளீர்கள். நமது இந்தியாவில் கீழகாணும் துறைகளில் லினக்ஸ் பயன்படுத்தப்படுகிறது.
  1. இந்தியாவின் உச்சநீதி மன்றம், அனைத்து மாநிலங்களிலும் உள்ள உயர்நீதி மன்றம்.(Ubuntu 10.04 LTS)
  2. LIC(இந்தியா முழுவதும்).(Redhat)
  3. தமிழ்நாட்டில் உள்ள அனைத்து மாவட்ட ஆட்சியர் அலுவலகங்களிலும்.(Ubuntu 10.04 LTS)
  4. ST Courier Service(Mandriva Linux)
  5. தமிழ்நாடு மின்சார வாரியம்(Redhat Linux)
  6. ELCOT(Suse Enterprise Desktop and Server).
  7. கேரளாவில் அனைத்து துறைகளிலும்.
  இத்தனை துறைகளும் லின்க்சை தான் நம்புகின்றன. நீங்கள் குறிப்பிட்டுள்ளது போல நாமெல்லாம் டெஸ்க்டாப்பில் லின்க்ஸை பயன்படுத்தவே யோசித்துக்கொண்டிருக்கிறோம்

  • இந்தியல் லினக்ஸ் பயன்பாடு பற்றிய தகவல்களுக்கு மிகுந்த நன்றி. தமிழக லினக்ஸ் பயன்பாடு பற்றி மேலும் தகவல் இருந்தால் தெரிவிக்கவும்.

   அன்புடன் சிம்மன்

 2. லினக்ஸ் ப்ற்றிய நல்ல தகவல்கள் கட்டுரையில் அளித்தமைக்கு நன்றி! லினக்ஸ் கதிர்வேல் தமிழகத்தில் லினக்ஸ் பயன்பாடு குறித்து ஒரு பட்டியலே அளித்துள்ளார். சமீபத்தில் தமிழக அரசே சமீபத்தில் விண்டோஸ் எக்ஸ்பி காலாவதியாவதால் இனி அரசு அலுவலகங்களில் லினக்ஸ் பயன்படுத்த துவங்குமாறு ஒரு சுற்றரிக்கையும் அனுப்பியுள்ளது. விரைவில் பயன்பாடு அதிகமாகலாம். தமிழில் லினக்ஸ் பற்றி அறிய ஒரு கட்டுரை அளித்தால் நன்றாக இருக்கும் வாழ்த்துக்கள்

 3. லினக்ஸ் ஃபார் யூ என்ற மாத இதழ் ஒன்றில் இது படித்த ஞாபகம். தகவல்கள் இந்த காலகட்டத்திற்கு மிகவும் பயனுள்ளதாகவே உள்ளன.
  மேலும் தகவல்களை தமிழில் எதிபார்க்கிறேன்.
  கே.எம்.அபுபக்கர்
  கல்லிடைக்குறிச்சி 627416

 4. நான் கடந்த மூன்று வருடமாக லினக்ஸ் மற்றும் உபுண்டு இரண்டையும் உபயோகிக்கிறேன் ,என் மகளுக்கு ஒரு கணினி வாங்கி அதில் உபுண்டு மற்றும் விண்டோஸ் இரண்டையும் இன்ஸ்டால் பண்ணி கொடுத்தேன் .அதில் என் மகளுக்கு உபுண்டு உபயோகிப்பது தான் சுலபமாக இருக்கிறது என்று சொல்கிறாள்.ஆனால் அவள் கல்லூரி நண்பர்கள் நீ அவ்ளோ பெரிய பிரிலியன்டா என்று கேட்டு கிண்டல் அடிக்கிறார்கள் .எவ்வளவு சுலபம் மற்றும் பாதுகாப்பு என்று உபயோகப்படுத்தி பார்பவர்களுக்கு தான் தெரியும். நல்ல பதிவு தொடர்ந்து இது சம்மந்தமான விபரங்களை பதியவும் .நன்றி.
  முரளி
  ஆஸ்திரேலியா

 5. திரு முரளி ,
  வணக்கம்.
  தங்கள் குறிப்புரைக்கு மிக்க நன்றி.
  நானும் லினக்ஸ் – உபண்டோ உபயோகப்படுத்த முடிவு செய்துவிட்டேன்.

மறுமொழியொன்றை இடுங்கள்

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  மாற்று )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out /  மாற்று )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  மாற்று )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  மாற்று )

w

Connecting to %s