விக்கிபீடியாவை மேலும் சிறப்பாக பயன்படுத்துவதற்கான வழிகள்!

wi1இணையவாசிகளின் பங்களிப்பால் உருவாகும் கட்டற்ற கலைகளஞ்சியமான விக்கிபீடியாவை நீங்கள் விரும்பலாம், விரும்பாமல் போகலாம். ஆனால் அதை பயன்படுத்தாமல் இருக்க முடியாது. ஒன்று விக்கிபீடியாவை நீங்கள் தற்செயலாக பயன்படுத்தலாம் – எப்படியும், இணையத்தில் தகவல்களை தேடும் போது , உங்கள் குறிச்சொல் தொடர்பான விக்கிபீடியா பக்கம் வந்து நிற்கலாம். அல்லது நீங்களே விரும்பி விக்கிபீடியாவில் தகவல்களை தேடலாம். நம்பகத்தன்மை பற்றிய கேள்விகள், அதில் அரங்கேறும் திருத்தங்களின் அரசியல் ஆகியவற்றை மீறி விக்கிபீடியா மிகச்சிறந்த தகவல் சுரங்கம். அதிகம் பயன்படுத்தப்படும் இணையதளங்களின் பட்டியலில் அது ஆறாவது இடத்தில் இருப்பதற்கான காரணமும் அதுவே.

ஒரு முறை விக்கிபீடியாவை பயன்படுத்தினால் அதில் உள்ள ஏதவாது ஒரு அம்சம் உங்களை கவராமல் இருக்க வாய்ப்பில்லை. தகவல் களஞ்சியமாக விக்கிபீடியா பயன் மிக்கது என்றாலும் அதன் வடிவமைப்பு அத்தனை நேர்த்தியானது அல்ல. அதோடு விக்கிபீடியாவை பயனாளிகள் தங்கள் தேவைக்கேற்ப மாற்றியமைத்துக்கொள்ள முடியாது. இந்த குறைகளுக்கு தீர்வு காணவும், விக்கிபீடியாவை மேலும் சிறந்த முறையில் பயன்படுத்தவும் வழிகள் இல்லாமல் இல்லை. உங்கள் விக்கி அனுபவத்தை மேம்படுத்தக்கூடிய சில வழிகளையும் விக்கி சார்ந்த சேவைகளையும் இங்கே பார்க்கலாம்.

 

எளிய ஆங்கித்தில்!
எப்போதாவது விக்கிபீடியா கட்டுரைகள் கடினமாக இருப்பதாக உணர்ந்திருக்கிறீர்களா? கட்டுரையில் பயன்படுத்தப்படும் ஆங்கிலம் மற்றும் அதில் இடம்பெறும் கரடுமுரடான சொற்கள் இடையூறாக இருப்பதாக நினைத்திருக்கிறீர்களா? ஆம் எனில், கவலையேபடாதீர்கள், உங்களுக்காக என்றே எளிய ஆங்கில விக்கிபீடியா (http://simple.wikipedia.org/wiki/Main_Page ) இருக்கிறது. இங்கு விக்கிபீடியா கட்டுரைகளை எளிய ஆங்கிலத்தில் படிக்கலாம். அடிப்படையில் விக்கிபீடியாவில் உள்ள கட்டுரைகள் தான் இங்கும் இருக்கின்றன. ஆனால் அவை எல்லாமே சிக்கல் இல்லாமல் எளிய ஆங்கிலத்தில் எழுதப்பட்டுள்ளன. விக்கி கட்டுரைகளில் உள்ள கரடுமுரடான சொற்கள் நீக்கப்பட்டு அவற்றின் சாரம்சம் எளிதாக புரியும் வகையில் சிக்கலான விஷயங்கள் நீக்கப்பட்டு எளிதாக படிக்க கூடிய வகையில் திருத்தி எழுத்தப்பட்டுள்ளன. எளிய ஆங்கிலத்தில் எழுதப்பட்ட மூலக்கட்டுரைகளையும் இங்கு சமர்பிக்கலாம். அடிப்படையான ஆங்கில சொற்களை மட்டுமே பயன்படுத்த வேண்டும். விக்கிபீடியா கட்டுரைகள் எல்லோருக்குமானதாக இருக்க வேண்டும் எனும் நோக்கத்துடன் எளிமையான வடிவில் வழங்கப்பட்டு வருகின்றன. 2003 ம் ஆண்டு முதல் செயல்பட்டு வரும் இதில் ஒரு லட்சத்திற்கும் அதிகமான கட்டுரைகள் உள்ளன. குறிப்பாக மாணவர்களுக்கு மிகவும் பயனுள்ளதாக இருக்கும். ஆங்கிலத்தை தாய்மொழியாக கொள்ளாதவர்களுக்கும் ஏற்றதாக இருக்கும். இதே போலவே விக்கி அகராதியான விக்கிஷ்னரிக்கும் எளிய ஆங்கில வடிவம் இருக்கிறது – http://simple.wiktionary.org/wiki/Main_Page

 

செய்திகளை தொடர
செய்திகள் என்றதும் விக்கிபீடியா நினைவுக்கு வர வாய்ப்பில்லை. அதற்கு செய்தி தளங்களையோ அல்லது தேடியந்திரங்களையோ தான் தேடிச்செல்வோம். இருப்பினும் தவறவிட்ட முக்கிய செய்திகளை தெரிந்து கொள்ள விக்கிபீடியா சிறந்த இடம் என்பது உங்களுக்குத்தெரியுமா? இதற்காக நீங்கள் செய்ய வேண்டியதெல்லாம் , விக்கிபீடியா தளத்தில் , நீங்கள் எந்த மாதத்தின் நிகழ்வுகளை தெரிந்து கொள்ள விரும்புகிறீர்களோ , அந்த மாதத்தை விக்கிபீடியா தேடலில் கட்டத்தில் குறிப்பிட்டு தேடினால் , அந்த மாதத்தின் முக்கிய நிகழ்வுகளை எல்லாம் பட்டியலிட்டு காண்பிக்கும். அந்த மாத்தின் குறிப்பிட்ட நாளையும் தேர்வு செய்து நிகழ்வுகளை தெரிந்து கொள்ளலாம். குறிப்பிட்ட அந்த நிகழ்வுகள் பற்றி விரிவாகவும் தெரிந்து கொள்ளலாம்.
விக்கிபீடியா தகவல் களஞ்சியமே தவிர செய்தி களஞ்சியம் அல்ல; அதற்கு தான் விக்கிசெய்திகள் இருக்கின்றனவே . ஆனால் விக்கிபீடியாவில் இப்படி ,தேதி அடிப்படையிலான தகவல்களை தேடும் போது இரண்டு முக்கிய அணுகூலங்கள் உண்டு. ஒன்று தவறவிட்ட செய்திகளை தெரிந்து கொள்ளலாம். மற்றொன்று, தேவையற்றது, பயனற்றது என எல்லா செய்திகளும் வராமல் விக்கிபீடியா பதிவு செய்த முக்கிய நிகழ்வுகள் மட்டுமே பட்டியலிடப்படும்.

wi2எனவே நடுவே சில காலம் செய்திகள் பக்கமே போகாமல் இருந்திருந்தால் இந்த வசதியை பயன்படுத்தி முக்கிய நிகழ்வுகளை அறிந்து கொள்ளலாம். ஆங்கில விக்கிபீடியாவில் மட்டும் அல்லாமல் தமிழ் விக்கிபீடியா உட்பட மற்ற விக்கிபீடியாக்களிலும் இந்த வசதி இருக்கிறது.
பொதுவாகவே, விக்கிபீடியா முகப்பு பக்கத்தில் பார்த்தால் , செய்திகளில் எனும் தலைப்பின் கீழ் அன்றைய தின முக்கிய நிகழ்வுகளை தெரிந்து கொள்ளலாம். – கவனிக்க, செய்திகளை அல்ல, நிகழ்வுகளை ! அதாவது விக்கிபீடியாவில் பதிவு செய்யப்படும் அளவுக்கு முக்கியத்துவம் கொண்ட நிகழ்வுகள்.வருங்காலத்திலும் பயனுள்ள தகவலாக விளங்கக்கூடிய செய்திகள்.

 

முன்னோட்ட வசதி
விக்கிபீடியா கடந்த ஆண்டு முன்னோட்ட வசதியை அறிமுகம் செய்தது. இந்த வசதியின் மூலம் விக்கிபீடியா அறிமுகம் செய்ய உள்ள புதிய வசதிகளை பயனாளிகள் முன்னோடமாக பயன்படுத்திப்பார்க்கலாம் .
இந்த வகையான முன்னோட்ட வசதி மென்பொருள் உலகில் மிகவும் பிரபலமாக இருக்கிறது. இந்த முறை பீட்டா என்று அழைக்கப்படுகிறது. முழுவீச்சில் அறிமுகம் ஆகும் முன் மென்பொருளை குறிப்பிட்ட சிலருக்கு வழங்கி அவர்கள் பயன்பாட்டில் தெரிவிக்கும் கருத்துக்களுக்கு ஏற்ப குறைகள் நீக்கப்பட்டு மேம்படுத்தப்பட்ட நிலையில் புதிய மென்பொருள் அறிமுகமாக இந்த வசதி உதவுகிறது.
விக்கிபீடியாவில் அறிமுகமாகும் புதிய வசதிகளையும் பயனாளிகள் இப்படி முன்கூட்டியே பயன்படுத்தி பார்த்து அதன் குறை நிறைகளை தெரிவிக்கும் வகையில் விக்கிபீடியாவிலும் முன்னோட்ட வசதி கொண்டுவரப்பட்டுள்ளது. விக்கிபீடியா மட்டும் அல்லாமல் அதன் மற்ற துனண சேவைகளுக்கும் இது பொருந்தும். விக்கி சமூகத்தினர் பங்கேற்கும் டிஜிட்டல் சோதனை கூடமாக இதை கருதலாம் என்றும் விக்கிமீடியா அமைப்பு குறிப்பிட்டுள்ளது. பீட்டா ஃபீச்சரஸ் எனும் பெயரில் இந்த முன்னோட்ட வசதி அறிமுகமாகியுள்ளது.
ஆக, நீங்கள் விரும்பினால், பரவலாக எல்லோருக்கும் அறிமுகமாக உள்ள விக்கிபீடியா புதிய வசதிகளை முன்கூட்டியே பயன்படுத்திப்பார்க்கலாம்.

மீடியா வியூவர், விசுவல் எடிட்டர் உள்ளிட்ட வசதிகள் இப்போது முனோட்ட வடிவில் இருக்கின்றன. மீடியா வீயுவர் மல்டிமீடியா அனுபவம் தரும் வசதி. விசுவல் எடிட்டர், எடிட் செய்வதை எளிதாக்கும் வசதி. மேலும் புதிய முன்னோட்ட வசதிகளை அறிய : https://www.mediawiki.org/wiki/About_Beta_Features

 

இ-புக் வடிவில்

சில நேரங்களில் விக்கிபீடியா கட்டுரையை சேமித்து வைத்து பிறகு படிக்கலாம் என்று நீங்கள் நினைக்கலாம். அப்போது விக்கி கட்டுரைகளை சாதாரணமாக சேமித்து வைப்பதை விட அவற்றை இ-புக் வடிவில் சேமித்து வைக்க முடியும் தெரியுமா? சேமிக்க விரும்பும் விக்கிபீடியா கட்டுரையை தேர்வு செய்து அதன் மீது அச்சிடுக பகுதியை கிளிக் செய்து , அதில் வருல் புத்தகத்தை உருவாக்கவும் எனும் கட்டளையை கிளிக் செய்ய வேண்டும். அதன் பிறகு பி.டி.எப் அல்லது இ பப் வடிவில் மின்னூலாக சேமித்துக்கொள்ளலாம். எளிதாக படிக்கலாம் .இணைய இணைப்பு இல்லாமலும் படிக்கலாம். எத்தனை கட்டுரைகளை வேண்டுமானாலும் இப்படி மின்னுல் வடிவில் சேமிக்கலாம்.

 

இணைப்புகளை காண

விக்கி கட்டுரைகளின் பலம் அவற்றின் இணைப்புகள் தான். ஒரு தலைப்பில் கட்டுரையை படித்துக்கொண்டிருக்கும் போது, அந்த கட்டுரை தொடர்புடைய முக்கிய நிகழ்வுகள் அல்லது பொருட்கள் தொடர்பாக இணைப்புடன் தகவல்கள் இடம் பெற்றிருக்கும். இவற்றை கிளிக் செய்தால் மேலும் விவரங்களை தெரிந்து கொள்ளலாம். ஆனால் இதில் உள்ள ஒரே சங்கடம் படித்துக்கொண்டிருக்கும் மூலக்கட்டுரையில் இருந்து வேறு பக்கத்துக்கு சென்று திரும்பி வர வேண்டும். இது நேரத்தை விரயமாக்கலாம். இதற்கு மாறாக மூல கட்டுரையின் பக்கத்தில் இருந்து வெளியேறிச்செல்லாமல் இணைப்புகளை படிக்க விரும்பினால் , கூகுல் குரோ நீட்டிப்பாக வரும் குவிக் ஹிண்ட் சேவையை பயன்படுத்தலாம். இந்த நீட்டிப்பு இணைப்புகளை கிளி செய்யும் போது அவற்றை அதே பக்கத்தில் சின்ன பெட்டியாக தோன்றச்செய்கிறது. ( https://chrome.google.com/webstore/detail/wikipedia-quick-hints/ldnhgfghebflgcndlbppfanbchpgmkna?hl=en) . பயர்பாக்ஸ் பிரவுசரை பயன்படுத்துபவர்கள் விக்கிபீடியா அட்வான்ஸ்டு நீட்டிப்பு சேவையை பயன்படுத்தலாம்: https://addons.mozilla.org/en-US/firefox/addon/wikipedia-advanced/

எளிய வடிவில் படிக்க

விக்கிபீடியாவின் பயன்பாட்டுத்தன்மை பற்றி அதிக கேள்விகள் கிடையாது. இணையவாசிகளின் பங்களிப்பால் ஒவ்வொரு கட்டுரையும் தேவையான தகவல்களோடு விரிவாகவும்,ஆழமாகவும் இருக்கின்றன. ஆனால், விக்கிபீடியாவின் வடிவமைப்பு அத்தனை நேர்த்தியானதல்ல . கட்டுரைகள் நீளமாக துணைத்தலைப்புகளாக பிரிக்கப்பட்டுள்ள விதம் வாசிப்புக்கு இடையுறாகலாம். இதற்கு மாறாக இடையூறுகள் இல்லாமல் விக்கி கட்டுரைகளை நேர்த்தியான வடிவமைப்பில் படிக்க வழி செய்கிறது ,குவிக்விக்கி ( http://www.quickiwiki.com) . பத்தாண்டுகளாக வடிவமைப்பில் பெரிய மாற்றத்தை காணாமல் இருக்கும் விக்கிபீடியாவில் கட்டுரைகளை எளிதாக தேடவும் , அழகிய,எளிய வடிவமைப்பில் படிக்கவும் இந்த தளம் உதவுகிறது. அதாவது விக்கிபீடியாவை நவீன வடிவில் மாற்றித்தருகிறது. விக்கிபீடியா முகப்பு பக்கம் மற்றும் அதன் கட்டுரைகளை இது எளிய வடிவமைப்பில் வழங்கும் நேர்த்தியை நிச்சயம் நீங்கள் விரும்புவீர்கள்.

——

நன்றி; தமிழ் கம்ப்யூட்டர்

 

Advertisements

2 responses to “விக்கிபீடியாவை மேலும் சிறப்பாக பயன்படுத்துவதற்கான வழிகள்!

மறுமொழியொன்றை இடுங்கள்

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out / மாற்று )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out / மாற்று )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out / மாற்று )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out / மாற்று )

Connecting to %s