சாலெட் கோரிக்கையால் இணைய நட்சத்திரமான வாலிபர்

கிக்ஸ்டார்ட்டரை நீங்கள் அறிந்திருக்கலாம். இல்லை என்றால் தெரிந்து கொள்ளுங்கள். கிக்ஸ்டார்ட்டர் (www.kickstarter.com ) கிரவுட்ஃபண்டிங் இணையதளம். அதாவது புதிய திட்டங்கள் அல்லது நிறுவனங்களை துவக்க இணையவாசிகளிடம் இருந்து நிதி திரட்ட கைகொடுக்கும் இணைய மேடை.

மனதில் நல்ல ஐடியா இருந்து ,அது நடைமுறையில் நிச்சயம் ஒர்க் அவுட் ஆகும் என்ற நம்பிக்கை இருந்தால் கிக்ஸ்டார்ட்டரில் நுழைந்து ஆதரவு கேட்கலாம். ஐடியாவை விவரித்து ,நிதி தாரீர் என வேண்கோள் வைக்கலாம். கிக்ஸ்டார்ட்டர் சமூகத்துக்கு அது பிடித்து போய்விட்டால் டாலர்களை அள்ளிக்கொடுப்பார்கள். முதலீட்டுக்காக அங்கும் இங்கும் அல்லாடாமல், பயனாளிகளிடமே கேட்டுப்பெறுவது தான் கிக்ஸ்டார்ட்டரின் அடிப்படை தத்துவம். கிக்ஸ்டார்ட்டரில் எத்தனையோ வெற்றிக்கதைகள் இருக்கின்றன. சாம்பிளுக்கு ஒன்று வேண்டும் என்றால் ஸ்மார்ட் வாட்ச் மோகத்தை துவக்கி வைட்த பெபில் வாட்சை சொல்லலாம்.

கிக்ஸ்டார்ட்டர் புராணம் இருக்கட்டும், இப்போது லேட்டஸ்ட் பரபரப்பு என்ன என்றால் , கிக்ஸ்டார்ட்டரில் அமெரிக்க வாலிபர் ஒருவருக்கு உருளைக்கிழங்கு மூலம் ஜாக்பெட் அடித்திருக்கிறது என்பது தான்!

வாலிபரின் பெயர் ஜேக் டேஞ்சர் பிரவுன். ஓஹியோவின் கொலம்பசில் வசிக்கிறார். பலரும் கணவு திட்டங்களுக்கு நிதி கேட்டு கிக்ஸ்டார்ட்டருக்கு வருகின்றனர் என்றால் பிரவுன் , உருளைக்கிழங்கு சாலெட் செய்ய வேண்டும் எனும் எளிய கோரிக்கையோடு கிக்ஸ்டார்ட்டரில் தனக்காக பக்கத்தை உருவாக்கினார். நான் உருளைக்கிழங்கு சாலெட் செய்யப்போகிறேன் என்று மட்டும் குறிப்பிட்டு அதற்காக நிதி கேட்டிருந்தார். இன்னும் என்ன வகையான சாலெட் என்று கூட முடிவு செய்யவில்லை என்றும் குறிப்பிட்டிருந்தார். அவர் கேட்டது பத்து டாலர்கள் தான்! சாலெட் செய்ய நிதி உதவியா? என ஏளனமாக நினைக்காதீர்கள். பிரவுனுக்கு கேட்ட பணம் மட்டும் அல்ல கேட்டதற்கு மேலும் கிடைத்திருக்கிறது. அதாவது குறைந்த பட்சம் தலா ஒரு டாலராக பத்து டாலர் கேட்டது போக இப்போது 36 ஆயிரம் டாலர்களுக்கு மேல் கிடைத்திருக்கிறது.3,500 பேருக்கு மேல் நிதி அளித்துள்ளனர். இன்னும் கிடைத்துக்கொண்டே இருக்கிறது. ஆக்ஸ்ட் 2 ம் தேதி வரை இந்த திட்டத்திற்கு நிதி அளிக்க கெடு இருக்கிறது!

நிற்க, கிக்ஸ்டாரட்டரில் இதே போல லைட்டான நோக்கம் கொண்ட திட்டங்களும் தலைகாட்டுவது உண்டு என்றாலும் உருளை சாலெட்டுக்கு கிடைத்துள்ள வரவேற்பு ஆச்சர்யம் அளிக்கிறது. இந்த வெற்றிக்கு பின்னே உள்ள காரணங்களை அறிய இணைய ஆய்வே நடத்தலாம். ஆனால் ஒன்று பிரவுன் தனக்கு கிடைத்த எதிர்பாரா வரவேற்பை பயன்படுத்திக்கொண்ட் விதம் அவரை கில்லாடி என புகழ வைக்கிறது. ஆரம்ப இலக்கான பத்து டாலர் எளிதில் நிறைவேறியதுமே தனது இலக்கை 35 டாலர் என மாற்றிக்கொண்டார். அதுவும் எளிதில் சேரவே 75 டாலர் அடுத்த இலக்கு என்றார். அடுதடுத்து ஆதரவு குவிய இலக்கை அதிகமாக்கி கொண்டே இருந்தார். அதற்கேற்ப ஆதரவு அளிப்பவர்களுக்கு தருவதாக கூறிய பரிசுகளையும் அதிகமாக்கி கொண்டே போனார். ஆரம்ப்பதில் ஒரு டாலர் அளிப்பவருக்கு , சாலெட் செய்யும் போது அவர்கள் பெயரை உரக்க சொல்வேன் மற்றும் தனது இணையதளத்தில் அவர்கள் பெயரை பொறித்து வைப்பேன் என்றும் உறுதி அளித்திருந்தார். 2 டாலருக்கு சாலெட் படமும் 3 டாலருக்கு சாலெட்டில் பங்கும் அனுப்பி வைப்பேன் என்று கூறியிருந்தார்.

நிதி நூறு டாலர்களை கடந்த பிறகு, சாலெட் விருந்து வைப்பேன், ஒரு சமையல் கலைஞரை அழைப்பேன் என்றெல்லாம் கூறியவர், ஆயிரம் டாலர்கள் சேர்ந்த பிறகு சாலெட் தயாரிப்பை நேரடியாக இணைய ஒளிபரப்பு செய்வேன் என்றும் தெரிவித்திருந்தார்.

இப்போதோ 36,000 டாலர்களை கடந்து பின்னிக்கொண்டிருக்கிறார். பஸ்ஃபீட் உள்ளிட்ட இணையதளங்களில் அவரது பேட்டி வெளீயாகி இருக்கிறது.
பிரவுன் விளையாட்டாக செய்தாரா இல்லை லேசான மனதுடன் முயன்றாரா? எனத்தெரியவில்லை, ஆனால் உருளை சாலெட் அவரை மினி இணைய நட்சத்திரமாக்கி இருக்கிறது.

நிதி உதவிக்காக சமர்பிக்கப்படும் திட்டங்களை எல்லாம் தனித்தனியே ஆய்வு செய்யப்போவதில்லை என கிக்ஸ்டார்ட்டர் கடந்த மாதம் அறிவித்ததன் பயனாக பிரவுனின் திட்டல் கிக்ஸ்டாரட்டரில் இடம் பிடித்ததாகவும் சொல்லப்படுகிறது. இருக்கட்டுமே அவர் கோரிக்கை வைத்த விதத்தில் ஏதோ ஒன்று இணையவாசிகளை கவர்ந்திருக்கிறது. அது தானே கிக்ஸ்டார்ட்டரின் வெற்றி ரகசியம்.
ஆனால் , இது ஒரு விதி விலக்கு தான். உண்மையில் கிக்ஸ்டார்ட்டரில் மகத்தான திட்டங்களும் முன்னோடி முயற்சிகளும் முன் வைக்கப்பட்டு ஆதரவை பெறுகின்றன.

பிரவுனின் கிக்ஸ்டார்ட்டர் பக்கம்; https://www.kickstarter.com/projects/324283889/potato-salad
——

நன்றி; விகடன்.காம்

———

வலைப்பயிற்சி பற்றி ஒரு அப்டேட்: http://valaipayirchi.wordpress.com/2014/07/11/%E0%AE%87%E0%AE%AE%E0%AF%86%E0%AE%AF%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%B5%E0%AE%B4%E0%AE%BF%E0%AE%AF%E0%AF%87-%E0%AE%AA%E0%AE%BE%E0%AE%9F%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D/

2 responses to “சாலெட் கோரிக்கையால் இணைய நட்சத்திரமான வாலிபர்

மறுமொழியொன்றை இடுங்கள்

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  மாற்று )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  மாற்று )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  மாற்று )

Connecting to %s